Difference between revisions of "26 November 2025 SPH Live Darshan"
Testkailasa (talk | contribs) (Created new satsang page) |
(No difference)
|
Latest revision as of 17:22, 7 December 2025
On this day, THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), BHAGAVAN SRI NITHYANANDA PARAMASHIVAM—the ultimate manifestation, Paramavatara of Paramashiva, the ultimate superconsciousness—gave a Live Darshan and delivered a Presidential Address attended by the founding fathers, diplomats, delegates, ministers, citizens, and e-citizens of the United States of KAILASA (USK).
Title
உண்மையான வெற்றி எது? பணமா? நிம்மதியா? | அருணாசலப் புராணம் | பாகம் 6
Link to Video
Transcript
ஓம்
நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம் நித்யானந்தேஶ்வரி பரமஶக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்
உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.
இதயத்தாலும், இணையத்தாலும் இணைந்து உலகம் முழுவதிலும் அமர்ந்திருக்கும் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், கைலாயத்தின் எல்லா கிளைகளிலும், குருகுலங்களிலும், ஆலயங்களிலும், பல்கலைக்கழகங்களிலும், கைலாஸா திருவண்ணாமலை, கைலாஸா St. Kitts அனைத்திலும் பரமஶிவ சேனை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அன்பர்களையும், கைலாஸாவின் திருக்கார்த்திகை ப்ரஹ்மோத்ஸவத்தில், திருவிழாவில் கலந்துகொள்வதற்காக கைலாயங்களுக்கு வந்து இங்கு ஸத்ஸங்கத்தில் இணைந்திருக்கும் அன்பர்களையும், உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். அமர்ந்திருக்கும் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.
ஆழ்ந்து கேளுங்கள், நான் ஒன்றும் பெரிய புரியாத கம்ப ஸூத்ரங்கள், பெரிய பெரிய தத்துவங்கள், அதெல்லாம் எதையுமே teach பண்ணுகிறேன் என்று நினைக்காதீர்கள். ரொம்ப சாதாரணமாக நிஜ ஸத்யங்கள், அதை மட்டும்தான் உங்களுக்குச் சொல்கிறேன். Just நீங்கள் எங்கெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு blind spot-டோடு life-ஐ run பண்ணுகிறீர்களோ, அங்கெல்லாம் உங்கள் கண்ணைத் திறந்துவிடுறேன், அவ்வளவுதான்.
அதனால், ரொம்ப relaxed-ஆக, வேண்டுமானால், ஒரு இரண்டு கப் டீ எடுத்து வைத்துக்கொள்ளுங்கள், நாம் இருவரும் தனியாக ஒரு ஆலமரத்திற்குக் கீழே உட்கார்ந்துகொண்டு, வேறு யாரும் இல்லாமல், ரொம்ப casual-ஆக, intimate-ஆக, உங்கள் வாழ்க்கைக் கதையை நீங்கள் சொல்ல, என்னை open பண்ணி என்னுடைய வாழ்க்கைக் கதையை நான் சொல்ல, அந்த மாதிரியான ஒரு personal chat தான் ஐயா இது. வேறு ஒன்றுமே இல்லை ஐயா.
ஏனென்றால், இந்த conversation முடிந்த பிறகு, எனக்கும் உங்களிடம் இருந்து ஆக வேண்டியது எதுவும் இல்லை. உங்களுக்கும் என்னிடமிருந்து ஆக வேண்டியது எதுவும் இல்லை. ஒரு sweet-ஆன friendship. ஒரு friend-டோடு உட்கார்ந்துகொண்டு chat பண்ணுகிற மாதிரி, உட்கார்ந்து relaxed-ஆக கேளுங்கள் ஐயா.
அது மாதிரி தான், எளிமையான... உங்களுடைய சாதாரண வாழ்க்கையிலே, நிஜ ஸத்யங்களை மட்டும்தான் சொல்கிறேன். பெரிய பெரிய ஶாஸ்த்ரங்கள், உபநிஷதங்கள், அதிலிருந்தெல்லாம் quote பண்ணுகிறேன். ஆனாலும், உங்களுக்குப் புரிகின்ற சாதாரண வார்த்தையில்தான், ரொம்ப sweet-ஆக, simple-ஆகதான் சொல்கிறேன். அதனால், relaxed-ஆக அமர்ந்து கேளுங்கள்.
பகவத் கீதையில் ரொம்ப அழகாகச் சொல்வார் பெருமான்... ஸ ஏவாயம் மயா தேSத்ய யோக: ப்ரோக்த: புராதந: பக்தோSஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம் அத்தியாயம் 4, ஸ்லோகம் 3
Hey! You are my friend. The Rahasyam> the secret which can be shared only with a close friend, I am sharing with you.
நான் அது மாதிரிதான் இப்பொழுது உட்கார்ந்து பேசிக்கொண்டிருகின்றேன் ஐயா. அதனால்தான் பெரிய வார்த்தை அலங்காரங்களோடு, வார்த்தை விளையாட்டுக்களோடு, even மரபு ஸத்பாஷையில் கூட பேசாமல், உங்களுக்குப் புரிகின்ற Gen Z தமிழில்தான் பேசிக்கொண்டிருகின்றேன் ஐயா.
அதனால், relaxed-ஆக உட்கார்ந்து, ஒரு friend-டோடு, over the cup of coffee, over a cup of tea, உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கின்ற மாதிரி, இதை relaxed-ஆக கேளுங்கள்.
உங்களுக்கு வேண்டும் என்றாலும், வேண்டாம் என்றாலும், ஸத்ஸங்கம் முடிந்து எழுந்து போகும்பொழுது, பரமானுபூதி, பரமஜ்ஞாநம் உங்களுக்குள் மலர ஆரம்பித்துவிடும். ஏனென்றால், நான் சொல்கின்ற எல்லா ஸத்யமும், என்னுடைய vibration ஐயா. I am resonating in it.. இது என்னுடைய vibration, என்னுடைய உயிர். அதைத் திறந்து வைக்கிறேன் ஐயா.
அதனால், இந்த வார்த்தைகள், நான் சொல்கின்ற இந்த ஸத்யங்கள், உங்கள் மனம், உடல், அதில் இருக்கும் சந்தேகம், வெறுப்பு, துக்கம், இதையெல்லாம் தாண்டி உள்ளே சென்று, உங்கள் உயிரை மலரச் செய்துவிடும். உங்கள் உயிரை மலரச் செய்துவிடும்.
ஆழ்ந்து கேளுங்கள்.
பகவத் கீதையில் இன்னொரு இடத்தில் பெருமான் சொல்கின்றார்…
ஸர்வகுஹ்யதமம் பூய ஶ்ரு'ணு மே பரமம் வச: இஷ்டோSஸி மே த்ரு'டமிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம் - 18.64
You are extremely dear to me!
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இப்பொழுது ஸத்ஸங்கத்தில் உட்கார்ந்து இருக்கின்ற நீங்கள் ஒவ்வொவருமே, You are extremely dear to me. I love you literally.
உங்கள் மீது ஒரு நேர்மையான அன்பும், ஶ்ரத்தையோடு கூடிய காதலும் உடையவன் நான். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: நீங்கள் எல்லோருமே, என்னை lovable-ஆகவும், loved-ஆகவும் feel பண்ண வைக்கின்றீர்கள். இத்தனை வதந்திகளையும், கொடுங்கதைகளையும், கொடும் பொய்களையும் கேட்ட பிறகும், 'இவர் என்னவோ சொல்றாரு, ஏதோ இவர்கிட்ட இருக்குப்பா' என்று scroll பண்ணாமல் உட்கார்ந்து கேட்கின்றீர்கள் அல்லவா, அதுவே You are making me feel I am loved and lovable.
அதனால், எனக்கு lovable> loved என்கின்ற இனிமைத்தன்மையை அளிப்பதனாலே, நீங்கள் ஸகா... என்னுடைய நெருக்கமான நண்பர்கள்.
'ஸர்வகுஹ்யதமம் பூய ஶ்ரு'ணு மேபரமம் வச: இஷ்டோSஸி மே...' You are extremely dear to me.
பகவான் க்ரு'ஷ்ணர் கீதையில் சொல்கின்ற மாதிரி, நீங்கள் எனக்கு மிகவும் இனிமையாகவும், நெருக்கமாகவும் ஆனவர்கள். அதனால், தோள் மீது கை போட்டு, over the cup of coffee, நாம் பேசிக்கொண்டிருக்கின்றோம். இதை நான் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கின்றேன். அதனால், relaxed-ஆக கேளுங்கள்.
முதலில் உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நினைப்பது, இன்று சொல்ல வேண்டியது: Spaceless in space. Space என்றால், அந்த வார்த்தையால் என்ன நான் சொல்கிறேன் என்றால், நீங்கள் move பண்ணிக்கொண்டே இருக்கின்ற வேறு வேறு 'உணர்வு நிலை'.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால்.. ஆழ்ந்த தூக்கம், கனவு, நனவு... சில பேர் இப்போழுது இருக்கின்றீர்கள் பாருங்கள், அதாவது அந்த கனவிற்கும் நனவிற்கும் நடுவில் ஒன்று. கொஞ்சம் இங்கேயும், கொஞ்சம் அங்கேயும்... அப்படியே திடீர் என்று அப்படி, அப்படி, அப்படியே கண் கொஞ்சம் சொக்கி ஏதாவது, பிறகு 'ஆ, எதோ சொல்றாரு, சொல்றாரு கேட்போம்' என்கின்ற அந்த state. உங்களுடைய space மொத்தமும் ஐயா, ஐந்து நிலைகளிலே இயங்குகின்றது.
புரிகின்ற மாதிரி சொல்கின்றேன். ஆழ்ந்த தூக்கம் - அதற்கு ஸுஷுப்தி என்று பெயர். கனவு நிலை- ஸ்வப்னம் என்று பெயர். இப்பொழுது நீங்கள் இருக்கின்ற சாதாரண இந்த நிலை, நனவு நிலை, விழிப்பு நிலை - இதற்கு ஜாக்ரத் என்று பெயர்.
ஆழ்ந்த த்யானத்திலே, ஸமாதியினுடைய glimpse கிடைக்கும். யாராவது இந்த தீக்ஷை எடுத்த சீடர்கள், ரொம்ப நாளாக த்யானம் செய்பவர்கள், ஆழ்ந்த த்யானத்தில் intense unclutching-ல், observer-ஐ observe பண்ணும்பொழுது, witness-ஐ witness பண்ணும்பொழுது, இந்த ஸமாதி நிலையினுடைய glimpse கிடைக்கும். அதுதான் 'துரியம்' என்று சொல்வது. அப்படியென்றால் என்னவென்றால், 'எண்ணம் இருக்காது - விழிப்பு இருக்கும்'. சொல்லாது நினைவோடு இருத்தல். 'சொலல்' இல்லாது நினைவோடு இருத்தல். 'ஸ்புரணம், ஸ்மரணம்' என்கின்ற வார்த்தையில் சொன்னேன் இல்லையா அதுதான். அதுதான் துரியம்.
அதற்கு அடுத்து, துரியாதீதம் - பரமானுபவத்திலே நிலைத்திரு. இந்த ஐந்தும்தான் ஐயா, நீங்கள் சாதாரணமாக அனுபவிக்கக் கூடிய space.
99% மனிதர்கள் இந்த மூன்றிலேயே முடிந்துவிடுகிறார்கள். அதாவது, ஆழ்ந்த தூக்கம், ஸ்வப்னம்-கனவு, நனவு. இந்த மூன்றிலேயே முடிந்து விடுகிறார்கள். 99.99999% people இந்த மூன்றிலேயே வாழ்க்கையை முடிந்துவிடுகிறார்கள்.
மிகவும் குறைவான... மிகப்பெரிய விஜ்ஞாநிகள், மிகப்பெரிய நிஜ வெற்றி பெற்றவர்கள்... நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... நிஜ வெற்றி வேறு, நீங்கள் நினைக்கின்ற நிழல் வெற்றி வேறு. மற்றவர்களோடு compare பண்ணி, அதைவிட நீங்கள் better-ஆக achieve பண்ணிவிடுகின்றீர்கள் என்று celebrate பண்ணுகின்ற எல்லா வெற்றியுமே நிழல் வெற்றி - ஒப்புமை வெற்றிகைகள்.
அரசியலில் எல்லோரையும் அடித்து பிடித்து மேலே வந்து ஒரு, ஒரு position-க்கு வந்துவிடுவது, ஒரு minister ஆகிவிடுவது அல்லது ஒரு chief minister ஆகிவிடுவது, ஏதோ ஒரு position-க்கு வந்துவிடுவது. இதெல்லாம் என்ன? அந்த comparative success.
ஒப்புமை வெற்றி, நிஜ வெற்றி கிடையாது. நிழல் உலகத்து வெற்றி. அதை நான் சொல்ல வரவில்லை.
நிஜ வெற்றி என்றால் என்னவென்றால், உண்மையிலேயே இந்த மனிதகுலத்திற்கு conscious breakthrough... அறிவியல் துறையிலேயோ, கலைத் துறையிலேயோ, ஆன்மிகத் துறையிலேயோ... ஏதோ ஒன்றில், மிகப்பெரிய breakthrough கொடுத்தவர்கள். அவர்கள் இந்த துரியத்தினுடைய glimpse-ஐ பார்க்கின்றார்கள்.
இந்த துரியம், நான்காவது நிலை. எண்ணம் இலாத விழிப்பு, 'சொலாது' இருக்கும் விழிப்பு. சொல்லல் இலாத விழிப்பு. அதைப் பார்க்கின்றார்கள்.
நானே ஒரு Nobel laureate-ஐ personal-ஆக meet பண்ணேன். அவர் actually பரமஹம்ஸ யோகானந்தருடைய disciple. நான் San-Jose சென்றிருந்தபொழுது, என்னைச் சந்திக்க வேண்டும் என்று வந்தார். 'Private-ஆக உட்கார்ந்து பேச முடியுமா ஸ்வாமிஜி' என்று கேட்டார். 'நன்றாக உட்காரந்து பேசலாம்' என்று walking போனோம். அவர் ஸத்ஸங்கம் attend பண்ணியிருந்தார், அதை முடித்துவிட்டு walking போனோம்.
உட்கார்ந்து பேசும்பொழுது சொன்னார், ஸ்வாமிஜி, நான் என்னுடைய வாழ்க்கையில் ஒரு மூன்று தருணங்களில், என்னைக் கடந்த எண்ணமில்லாத அந்த விழிப்பை அனுபவித்திருக்கின்றேன் ஸ்வாமிஜி. ஒருமுறை பரமஹம்ஸ யோகானந்தரிடமிருந்து தீக்ஷை பெற்றபோது, அந்த க்ரியா தீக்ஷை பெற்று, அந்த க்ரியையை practice பண்ண ஆரம்பிக்கும்பொழுது. இரண்டாவதுமுறை அது நடந்தபொழுதுதான், இந்த LASER, MASER பற்றிய இந்த truth எனக்கு reveal ஆனது. மூன்றாவதுமுறை இப்பொழுது உங்களோடு இந்த ஸத்ஸங்கத்தில் உட்கார்ந்திருக்கும்பொழுது அது நடந்தது சாமி என்றார். அவர் LASER, MASER என்கின்ற field-ல், அந்த Truth-க்காக நோபல் பரிசு வாங்கியவர். வேண்டுமானால் photo project பண்ணுகிறேன்.
நான் கேட்டேன், 'என்னங்கய்யா சொல்றீங்க? அப்பொழுது நீங்கள் think பண்ணி, இந்த Truth-ஐ கண்டுபிடிக்கவில்லையா?என்று கேட்டேன்.
'இல்லை சாமி... நான் எவ்வளவோ think பண்ணிக்கொண்டிருந்தேன், எனக்கு breakthrough-வே வரவில்லை. ஒருநாள் silent-ஆக அமர்ந்திருந்தேன், உட்கார்ந்திருந்தேன். திடீரென்று எண்ணமெல்லாம் விலகி, pure awareness மட்டும் இருந்தது. அதில் 'பளிச்' என்று இந்த ஸத்யம் reveal ஆச்சு! என்றார்.
உண்மையிலேயே, உண்மையிலேயே நான் அலண்டுவிட்டேன்!
ஏனென்றால், நம் உபநிஷதங்களில் நான் படித்திருக்கின்றேன், எனக்கும் சில அனுபவங்கள் இருக்கிறது, அனுபூதிகள் இருக்கிறது. அதாவது, 'எண்ணம் கடந்த துரிய நிலையிலே, மிகப்பெரிய வெளிப்பாடுகள் வெளிப்படும்' என்பது. நான் ஆனால் பெரும்பாலும் உள்ளுலகத்து வெளிப்பாடுகளைத்தான் பார்த்திருக்கின்றேன். Subjective reality சார்ந்த உள்ளுலக பர ஸத்யங்கள், பரம ஸத்யங்களைத்தான் பார்த்திருக்கின்றேன். உள்ளுலக பரம ஸத்யங்களைத்தான் நான் பார்த்திருக்கின்றேன்.
இவர்தான்… அவருடைய name வேண்டுமானாலும் google பண்ணி தெரிந்துகொள்ளுங்கள், ரொம்ப நாள் ஆனதனால் name மறந்துவிட்டது. LASER, MASER field-ல் research பண்ணி அந்த breakthrough-க்காக Nobel Prize வாங்கியவர். நோபல் பரிசு வாங்கியிருக்கின்றார்.
So அவர் சொல்கிறார், அந்த துரிய நிலை, எண்ணம் இல்லாத உணர்வு. அந்த நிலையை அவர் அடைந்து, அதில் இருந்துதான் இந்த ஸத்யம் வெளிப்பட்டதனால், அந்த Nobel Prize, அந்த Prize கொடுக்கின்றார்கள் இல்லையா, அதையே பரமஹம்ஸ யோகானந்தருடைய திருவடியில், அவருடைய படத்திற்குக் கீழே வைத்திருக்கின்றார். ரொம்ப தெளிவாக சொல்கிறார், அந்த நிலையில்தான் சாமி எனக்கு இந்த ஸத்யம் வெளிப்பட்டது என்று. அவருடைய பெயர் வந்து Nobel Laureate Dr. Charles Townes. Reference-ஐ கொடுத்திருக்கின்றார்கள். Dr. Charles Townes என்பது அவருடைய பெயர்.
Anyhow, இந்த மாதிரி என் வாழ்க்கையில் நான் சந்தித்த நிஜ வெற்றி பெற்றவர்கள்... நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நிழல் வெற்றி பெற்றவர்கள் பல பேரை சந்தித்திருக்கின்றேன். அந்த ஒப்புமை செய்து, ஒப்புமையின் மூலம் தன்னுடைய வெற்றியைக் கொண்டாடக்கூடிய, அளவிடக்கூடிய, அளகிட்டுக் கொள்ளக்கூடிய, அது எல்லாமே நிழல் வெற்றி. அதை விட்டுவிடுங்கள். 'மற்றவர்களை விட ஜாஸ்தியாக பணம் இருக்கிறது அல்லது மற்றவர்களை விட ஜாஸ்தியாக popularity இருக்கிறது, மற்றவர்களை விட ஜாஸ்தியாக subscriber இருக்கிறார்கள், மற்றவர்களை விட ஜாஸ்தியாக followers இருக்கிறார்கள் அல்லது மற்றவர்களைவிட பெரிய position> post-ல் இருக்கிறார்கள். மற்றவர்களைவிட பெரிய career-ல் இருக்கிறேன்' என்ற அந்த ஒப்புகையால் வருகின்ற, ஒப்புமையால் வருகின்ற எல்லா வெற்றியும் நிழல் வெற்றி. அதை நான் தவறு என்று சொல்ல வரவில்லை. ஆனால் அது நிழல் வெற்றி. அவ்வளவுதான்.
ஒப்பிட முடியாத, unique-ஆன, தன்னுடைய தனித்தன்மையிலிருந்து உலகத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை, தனக்கும், உலகத்திற்கும் மிகப்பெரும் பங்களிப்பை செய்தவர்கள்தான், 'நிஜ வெற்றி பெற்றவர்கள்' என்று சொல்கின்றேன்.
என் வாழ்க்கையில் நான் சந்தித்த நிஜ வெற்றி பெற்றவர்கள் அத்துனை பேரும்... something extraordinary creative> creativity-ஐ உருவாக்கியிருப்பவர்கள். Something extraordinary Spiritual truth-ஐ experience பண்ணி reveal பண்ணியிருக்க வேண்டும்.
இந்த மாதிரி பலபேரை நான் சந்திருக்கின்றேன். அத்துனை பேருமே, அவர்கள் அந்த வெற்றி எப்படி நிகழ்ந்தது என்று describe பண்ணும்பொழுது, அவர்களை அறியாமலேயே இந்த ஸத்யத்தைத்தான் மீண்டும், மீண்டும், மீண்டும் எனக்குச் சொல்லுகிறார்கள்.
யதி வித்யதே ஜகத் ஜத்யம் விநிவர்த்தேனன: ஸம்ஷய: மாயா மாத்ரம் இதம் த்வைதம் அத்வைதம் பரமார்த்தத: - மாண்டூக்ய காரிகையின் ஸ்லோகம் இது.
யதி வித்யதே ஜகத் ஜத்யம் விநிவர்த்தேனன: ஸம்ஷய: மாயா மாத்ரம் இதம் த்வைதம் அத்வைதம் பரமார்த்தத:
இந்த உலகம் உண்மையாக இருந்தால், இந்த காணும் உலகம் உண்மையாக இருந்தால், அது நிச்சயம் மறைந்து போகும். ஆனால் நாம் காணும் இந்த இரட்டை உலகம், மாயையின் வெறும் தோற்றம் மட்டுமே. முழுமையான உண்மை, பரமாத்வைத ஸத்யமே. அத்வைதம் பாரமார்த்தத:
மாண்டூக்ய காரிகையோட இன்னொரு ஸ்லோகத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்: கல்பயத்யாத்மானா ஆத்மானாத்மாத்மா தேவ: ஸ்வமாயயா ஸ விஸ்வானவ புத்யதே ஸ ஏஷாந்தர்பஹி ஸ்ம்ரு'த:
ஒளிமயமான ஆத்மா, தன் சுய மாயையின் ஶக்தியினால், தனக்குள்ளேயே தானாகவே அனைத்து உலகப் பொருட்களையும் கற்பனை செய்து, அதுவே உள்ளேயும் வெளியேயும் உள்ள அனைத்தையும் அறிபவராயும், அனைத்துப் பொருட்களையும் உணர்பவராயும், அனைத்துமாயும் இருக்கின்றது.
இப்பொழுது அந்த உண்மைகளைச் சொல்கின்றேன் கேளுங்கள். நான் வாழ்க்கையில் சந்தித்த ஒப்புமை வெற்றி, நிழல் வெற்றி அடைந்த மனிதர்கள் எல்லோருமே பார்த்தீர்களானால், அளவிற்கு மீறிய showing off இருக்கும்.
ஆனால் நிஜ வெற்றி அடைந்த மனிதர்கள் எல்லோருமே பார்த்தீர்களானால், மிகப்பெரிய... அவர்களுக்கு ஒரு தனித்துவமான... அவர்களுடைய vibe differentஆக இருக்கும். இந்த நிஜ வெற்றி அடைந்த மனிதர்கள் அத்தனை பேரும்... ஒரு மிகப்பெரிய dancer, நம் traditional dancer> Hindu traditional dancer... அமெரிக்காவில் settle ஆகியிருக்கின்றார்கள். அவர்களை meet பண்ணும்போது அதுதான் சொன்னார்கள், "இந்த… இந்த dance-ல் fluency, அதில் ஒரு extreme creativity, என்னுடைய 'சொலல்' நினைவு நின்று 'இருப்பு' இருக்கின்ற அந்த moments-ல் தான் எனக்கு reveal ஆனது ஸ்வாமிஜி" என்றார்கள்.
மிகப்பெரிய creative எழுத்தாளர்கள், நான் சந்தித்த நிஜ வெற்றி அடைந்த எல்லோருமே, இந்த 'துரியம்' என்கின்ற அந்த நிலையில் இருந்துதான் அவர்களுடைய வெற்றி மலர்ந்திருக்கின்றது. வெற்றிக்கான காரணம் மலர்ந்திருக்கின்றது. இதை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.
அதனால் யார் யாரெல்லாம் நிஜ வெற்றி வேண்டும் என்று நினைக்கிறீங்களோ, இந்த ஸத்யங்களை கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள்.
முதலில் ஆழ்ந்து கேளுங்கள்: நீங்கள் இரவு படுக்கைக்குப் போய் படுக்கின்றீர்கள். கனவில் ஒரு மிகப்பெரிய உலகத்தை உருவாக்கி, அதில் பல நபர்களையும் populate பண்ணி, ஒரு population-ஐ create பண்ணி, அவர்கள் எல்லோரையும் வேறு வேறு role play பண்ண வைத்து, பல பொருட்களை உருவாக்கி, அந்த நபர்களை, பொருட்களை எல்லாம் ஒரு ஒரு role play பண்ண வைத்து, ஒரு ஒரு விளையாட்டுகளை நடத்தி, அதையெல்லாம் பார்த்து, அனுபவித்து, எல்லாம் செய்துவிட்டு, காலையில் எழுந்த உடனே, எல்லாம் உங்களுக்குள்ளேயே ஒடுங்கிவிடுகின்றது. ஒடுக்கிக்கொண்டு எழுந்துவிடுகின்றீர்கள்.
இப்பொழுது இது மொத்தத்தையும் வேறு யாராவது வந்து உங்களுக்குள் செய்தார்களா? கட்டாயம் கிடையாது, நீங்கள்தான்.
நீங்களேதான் ஒரு உலகத்தை, உங்களுக்கு என்று ஒரு உடலை, மனதை, உலகத்தை, உலகத்து பொருட்கள், இடம் மட்டுமல்லாது, நபர்கள், population, அதை populate பண்ணி, அவர்களுக்கெல்லாம் உடல், மனம் இதையெல்லாம் உருவாக்கி, இது மொத்த விளையாட்டையும் நிகழ்த்திப் பார்த்து, அதில் சிலது wet dream-ஆகப்போய் அல்லது சிலது nightmare-ஆகப்போய், அது என்னமாதிரி போகுதோ போய், அதிலிருந்து விழித்து இப்பொழுது இங்கு உட்கார்ந்திருக்கின்றீர்கள்.
சற்றேத் திரும்பிப் பாருங்கள், நான் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை, சும்மா யோசித்துப் பாருங்கள். ஒருவேளை இப்பொழுது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்ற இந்த நனவுகூட, அதே அந்த கனவைத்தான் கொஞ்சம் larger scale-ல் நீங்கள் play பண்ணிக்கொண்டு இருக்கின்றீர்களோ? யாருக்குத் தெரியும்?
ஏனென்றால், நீங்கள், இல்லை, இல்லை சாமி, இப்பொழுது நான் உங்களைப் பார்க்கின்றேன், மற்றவர்களைப் பார்க்கின்றேன், என்னைச் சுற்றியிருப்பவர்களைப் பார்க்கின்றேன். இவர்கள் எல்லாமும் இதே மாதிரிதானே இந்த உலகத்ததைப் பார்க்கிறார்கள், இந்த பொருட்களை எல்லாம் பார்க்கிறார்கள், அவர்களுக்கும், எனக்கும் இந்த உலகம், இந்த பொருட்கள் எல்லாம் ஒரே மாதிரிதானே தெரிகிறது. இது shared reality ஆச்சே. இது எப்படி கனவு என்று சொல்ல முடியும்?" என்று சொல்லலாம்.
ஐயா, ஒரு சின்ன... இப்பொழுது நீங்கள் வைக்கின்ற அந்த பெரிய balloon-ஐ, ஒரு சின்ன ஊசியை வைத்துக் குத்துவோம். ராத்திரி கனவிலும், பலபேர் உங்களுடைய கனவில் வருகிறார்கள், அந்த நபர்கள் எல்லாருமே நீங்கள் பார்க்கின்ற அதே space, அதே இடத்தைத்தான், அந்த shared reality-ஐ தானே அவர்களும் பார்க்கிறார்கள்?
எல்லோரும் நீங்கள் ஒரு large crowd உட்கார்ந்து ஏதோ பேசிக்கொண்டிருக்கிறீர்கள், ஏதோ செய்துகொண்டிருக்கின்றீர்கள் என்றால், அப்பொழுது நீங்கள் ஒரு வீட்டில் இருக்கின்ற மாதிரி இருக்கிறது என்றால், நீங்கள் எல்லோரும் அதே வீட்டைத் தானே பார்க்கின்றீர்கள்? அதனால் அப்பொழுதும், உங்கள் கனவிலே நீங்கள் உருவாக்கியவர்கள் அத்தனை பேருக்கும், shared reality-யாக தானே reality இருக்கிறது. அதே வீடாகதானே experience பண்ணுகிறீர்கள், அதே space, அதே இடத்தைத் தானே experience பண்ணுகிறீர்கள்?
அதனால், இந்த shared reality-யை மட்டும் அளவுகோலாக வைத்துக்கொண்டு 'நாம் பார்ப்பது சத்தியம்' என்று முடிவுக்கு நாம் வர முடியாது. அதுதான் உண்மை.
கொஞ்சம் ஆழ்ந்து கேளுங்கள், ஆழ்ந்து கேளுங்கள்: இந்த shared reality என்கின்ற balloon-ஐ வைத்துக்கொண்டு, 'நான் பார்ப்பதையேத்தான் அவர்களும் பார்க்கிறார்கள். அவர்கள் பார்ப்பதையேத்தான் நாமும் பார்க்கின்றோம்' என்கின்ற பலூனை வைத்துக்கொண்டு, இப்பொழுது நாம் பார்ப்பது 'பரம், பரம ஸத்யம்' என்று சொல்ல முடியாது.
இன்னொரு balloon-ஐ தூக்கிக்கொண்டு வருவார்கள்: இல்லை இல்லை, நீண்ட காலத்திற்கு இது இருக்கிறதே. கனவில் போய்விட்டு போய்விட்டு வந்துவிடுகின்றோம். ஆனால் இது நீண்ட காலத்திற்கு இருக்கிறதே என்று.
எத்தனை பேர், ஒரு night கனவில் ஒரு 50, 60 years-ஐ அனுபவித்து, அனுபவித்தாக கனவு கண்டிருக்கின்றீர்கள்? அதாவது நீங்கள் examination எழுதுகின்ற மாதிரி கனவு வரும். அதே கனவிலேயே கல்யாணம் ஆகி, உங்கள் குழந்தைகள், உங்கள் பையன் எல்லாம் பெரிதாகி, உங்கள் பையனை நீங்கள் college-ல் கொண்டு போய் சேர்ப்பதெல்லாம் கனவில் வரும். இது மொத்தத்தையும், ஒரு 50 வருஷ span-ல் நடந்த நிகழ்வுகளை, ஒரு night கனவில் பார்த்துவிடுகின்றீர்களே!
அதனால், இந்த time dilation> time span-ம் time zone சம்பந்தப்பட்டதோ, அந்த balloon-ஐ கொண்டு வந்து 'இது பரம ஸத்யம்' என்று நிறுவ முடியாது. அதிலும், அந்த balloon-னிலும் ஊசி குத்திவிடலாம். 'டப்' என்று வெடித்துவிடும்.
நான் எப்போதுமே ஒரு கதை சொல்வதுண்டு.
ஒரு ஜ்ஞாநி காலையில் எழுந்து, ஓ… என்று அழ ஆரம்பித்துவிட்டாராம். சீடர்கள் எல்லாம் வந்து, ஏன் ஏன் சாமி ஏன் சாமி அழுகிறீர்கள்?" என்று கேட்டார்களாம். அவர், இல்லை இல்லை, நேத்து ராத்திரி, நான் கனவில் பட்டாம்பூச்சியாக மாறிட்டதாக கனவு கண்டேன் என்றாராம். அவர்கள் எல்லாம் சிரித்துவிட்டு, கனவுதானே சாமி, அதுக்குப்போய் ஏன் அழுகிறீர்கள், விடுங்க சாமி என்றார்களாம். அவர் சொன்னாராம், இல்லை இல்லை, நான் பட்டாம்பூச்சியானதாக கனவு கண்டேனா? இல்லை அந்த பட்டாம்பூச்சி இப்பொழுது இந்த ஜ்ஞாநியானதான கனவு கண்டுகொண்டிருக்கிறதா? என்று எனக்குப் புரியாததனால் அழுகின்றேன் என்றாராம்.
அது நம் எல்லோருக்கும் புரிவதற்கான ஒரு அழுகை!
ஞானசம்பந்தர் அழுததுபோல… அவருக்காக அழவில்லை அவர். நமக்காக அழுகின்றார். 'புனிதவாய் மலர்ந்து அழுத'... என்ன அழகான வார்த்தையை சேக்கிழார் பெருமான் உபயோகிக்கின்றார். 'புனிதவாய் மலர்ந்து அழுத'...அவருக்காக அழவில்லை அவர். நமக்காக அழுகின்றார்.
சற்றே ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை இப்பொழுது நாம் பார்த்துக்கொண்டிருப்பது எல்லாமே, பரம ஸத்யமாக இல்லாமல் போவதற்கான அதிக வாய்ப்புகள் உண்டு. வ்யாபகாரிக ஸத்யமாக வேண்டுமானால் இருக்கலாம், அதாவது shared reality - நாம் ஒருவரை ஒருவர் compare பண்ணிக்கொண்டு sharing, ஒரு shared reality-யாக வேண்டுமானால் இது இருக்கலாம். ஆனால், பாரமார்த்திக ஸத்யம், பரம ஸத்யம் இல்லை. இது புரிந்ததென்றால், இந்த shared reality-ல் ரொம்ப jolly-யாக விளையாடுவீர்கள் ஐயா.
ஒன்றும் பெரிதாக எல்லாம் ஒன்றும் கஷ்டப்பட்டு, worry பண்ணி, கவலைப்பட்டு, துக்கப்பட்டு, துயரப்பட்டு, அடைய வேண்டிய ஒரு துடைப்பக்கட்டையும் இங்கு இல்லை.
புடுங்கிக் கொண்டிருக்கின்ற எல்லா ஆணியுமே, தேவையில்லாத ஆணிதான். அது புரிந்துபோய்விடும் ஐயா. புடுங்கிக் கொண்டிருப்பது எல்லாமே தேவையில்லாத ஆணிதான். அது புரிந்ததென்றால், நீங்கள் விளையாடுவதைக்கூட, நன்றாக intense-ஆக விளையாடுவீர்கள். உடலையும் மனத்தையும் அழித்துக்கொள்ளாமல் வெற்றி அடைவீர்கள். அது நிழல் வெற்றியானாலும் சரி, நிஜ வெற்றியானாலும் சரி.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த நிழல் வெற்றி அடைந்த பலபேரை நான் பார்த்திருக்கின்றேன். அவர்களுக்கு இருக்கின்ற மிகப்பெரிய பிரச்சனை, அந்த நிழல் வெற்றியை அடைந்து முடிவதற்குள், உடலும் - மனதும் அழிந்து போய்விடுகிறது. உடலும் மனதும் சுத்தமாக அழிந்து போய்விடுகிறது. அதாவது இந்த உடல்-மனதை த்யாகம் பண்ணிதான், அந்த நிழல் வெற்றி அடைகின்றார்கள்.
அரசியல் ஆகட்டும், பணம் ஆகட்டும், கலை ஆகட்டும், சமூகம் ஆகட்டும், எந்த துறையாகட்டும்... இந்த நிழல் வெற்றி, 'ஒப்புகையால் வெற்றி' என்று விளக்கப்படுகின்ற, அளக்கப்படுகின்ற, புரிந்துகொள்ளப்படுகின்ற நிழல் வெற்றி அடைந்தவர்கள் அத்தனைபேரும், உடலையும்-மனதையும் இழந்து விடுகிறார்கள்.
நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்: நம்முடைய emotions-ஐ நம்முடைய organs store பண்ணுகிறது. நேற்று அதைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.. ஒரு 2 - 3 line, neuropeptides-என்று. இதை மீண்டும் மீண்டும் அறிவியல், பல்லாயிரக்கணக்கான ஆராய்ச்சிகள் மூலமாக நிரூபிக்கின்றது ஐயா.
நீங்கள் ஆழமாக, intense-ஆக go through பண்ணுகின்ற அந்த emotions எல்லாம், உங்களுடைய organs-ல் store ஆகிவிடுகிறது ஐயா. Heart-ல், liver-ல், kidney-ல், intestine-ல், organs-ல் store ஆகிவிடுகிறது.
அந்த நிழல் வெற்றிக்கு நீங்கள் ஓடும்பொழுது பார்த்தீர்களானால்... பணம், புகழ், பெயர், அந்தஸ்து, இது சார்ந்த வெற்றிகள் எல்லாம் நீங்கள் serious-ஆக எடுத்துக்கொண்டு ஓடும்பொழுது, நீங்கள் generate பண்ணுகின்ற அந்த emotions ஐயா, உங்கள் career success-க்காக உடலையும் மனத்தையும், இந்த இரண்டு நலத்தையும் த்யாகம் பண்ணிட வேண்டியதாக இருக்கிறது.
கண்ணை விற்று ஓவியம் வாங்கியவன்போலே, கால்களை விற்று நாட்டியம் கற்றுக்கொண்டவனைப்போலே, நாவை விற்று கவிதை பாட கற்றுக்கொண்டவனைப்போலே, அந்த comparative success, comparative reality-ல் success. ஒப்புநோக்கும் அளவிலே, நிஜத்திலே, ஒப்புநோக்கிய வெற்றி என்று சொல்லப்படுகின்றவற்றை அடைகின்ற மனிதன், அதை அடையும்பொழுது, இழக்கக்கூடாத உடல்நலம், மனநலத்தை இழந்து விடுகின்றான்.
அப்பொழுது என்ன ஆகின்றது என்றால், இந்த ஒப்புமை வெற்றியினுடைய ஆனந்தத்தை அனுபவிக்க முடியாமல், compare பண்ணி, ஆ... அதைவிட பெருசா பண்ணிட்டேன். அதனால் இது OK. வேறு என்ன பண்ணுவது? என்று நீங்கள் இழந்ததை, உங்களை நீங்களே மனதை ஆற்றிக் கொள்வதற்காக, தேற்றிக் கொள்வதற்காக, அதற்கு 'த்யாகம்' என்று பட்டம் வேறு கொடுத்துக் கொண்டு, ஐயோ.. ஐயோ... நான் த்யாகம் பண்ணிட்டேன், ஐயோ... ஐயோ... நான் த்யாகம் பண்ணிவிட்டேன். அதற்காகவாவது என்ன celebrate பண்ணுங்க என்று கத்திக்கொண்டு இருக்க வேண்டியதாக இருக்கிறது.
பாவம்.
இந்த ஒரு அடிப்படை ஸத்யத்தைச் சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள் ஐயா, மிகப்பெரிய ரகசியம். திரும்ப சொல்கிறேன், என்னுடைய நண்பர்கள், என்னுடைய மனதிற்கு இனிய, நெருக்கமான நண்பர்களாக உங்களை எண்ணி இந்த ஸத்யத்தைச் சொல்கிறேன், கேட்டுக்கொள்ளுங்கள்.
Actually என்னை, நான் அப்படியே நடந்து சென்றுகொண்டு இருக்கும்போது, 'நித்யானந்தா' என்று அழைத்தீர்களானால், திரும்பிப் பார்க்கமாட்டேன் ஐயா. ஒருவேளை, எனக்குப் பெற்றோர் இட்ட பெயரான அந்த ராஜசேகரன் என்று அதைச் சொல்லி அழைத்தீர்களானாலும், திரும்பிப் பார்க்க மாட்டேன் ஐயா.
ஏன் என்று சொல்கின்றேன், கேட்டுக்கொள்ளுங்கள். இந்த எந்தப் பெயரோடும் என்னுடைய உணர்வு இணைக்கப்படவே இல்லை. இப்பொழுது நான் என்னை அப்படியே திரும்பிப் பார்த்தேன் என்றால், எந்தப் பெயரோடும், ஒரு தொடர்புடைய identity-யோடும், connection-ஏ இல்லை ஐயா.
கொஞ்சம் ஆழ்ந்து கேளுங்கள், உங்கள் வாழ்க்கையில், உங்களுக்கு செய்யப்பட்ட மிகப்பெரிய மூளைச் சலவை என்னவென்றால், - உங்கள் பெயர். அந்த பெயர் இருப்பதனால், நீங்களும் தொடர்ந்து இருக்கின்றீர்கள், உங்கள் identity-யும் தொடர்ந்து இருக்கின்றது என்கின்ற ஒரு மூடநம்பிக்கை. ஐய்யோ!
உண்மையில், நீங்கள் பிறந்ததில் இருந்து பலமுறை உங்கள் உடல் முழுமையாக மாற்றப்பட்டுவிட்டது. உங்களுடைய எண்ணங்கள், emotions, உங்களைப் பற்றிய உங்களுடைய புரிதல், வாழ்க்கையைப் பற்றியப் புரிதல், நல்லது-கெட்டது, சரி-தவறு, இது அத்தனையும் பலமுறை மாறிவிட்டது, ஆனால், இந்த பெயர் மட்டும்தான் continuous-ஆக இருக்கிறது. அந்த ஒரே ஒரு காரணத்தினால், உங்கள் identity-யே continuous-ஆக இருக்கிறது என்கின்ற மாதிரி ஒரு மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறீர்கள் பாருங்கள், அதுதான் உங்களுக்கு நீங்களேவும், மற்றவர்களும் இழைத்த மிகப்பெரிய துரோகம், மூடநம்பிக்கை, மிகப்பெரிய கொடுமை!
இந்த பெயர், பெயர் மீது society வைக்கின்ற brand, அதனால் வருகின்ற நல்லது-கெட்டது, அந்த brand-ஐ காப்பாற்ற வேண்டுமே என்பதற்காக நீங்கள் ஒடுகின்ற ஓட்டம், ஆடுகின்ற ஆட்டம், கூடுகின்ற கூட்டம், அம்மா! உங்களுக்கு நீங்களே இழைத்துக்கொள்ளக்கூடியக் கொடுமைகள்... ஒருத்தனை சிக்கலில் சுற்ற விட்டால், அவன் தானாக அழிந்து போய்விடுவான் என்று சொல்கிறார்களே, அது வேறு ஒன்றும் இல்லை ஐயா, உங்கள் 'பெயர்'தான் உலகத்திலேயே மிகப்பெரிய சிக்கல் ஐயா.
என்னுடைய தனித்துவமான நிஜ வெற்றிக்கும், உடல் நலத்தையோ-மனநலத்தையோ த்யாகம் செய்யாமல், ஆனந்தமாக உடல் நலம், மன நலத்தோடு சேர்ந்து, உயிர்நலத்தோடு இருந்து, வாழுகின்ற இந்த வாழ்க்கைக்கான அடிப்படை காரணம், எனக்குள் எந்த பெயர், எதனுடனும் நான் associate ஆகிக்கொள்ளவே இல்லை ஐயா.
உண்மையிலேயே அனுபவமாகவே, அது எனக்கு ஒரு இதுவாகவே இல்லை. 'அது என்னைக் குறித்து சொல்லப்படுகின்ற வார்த்தை' என்றே இல்லை ஐயா.
நீங்கள் நினைக்கலாம், 'அப்பபொழுது எப்படி சாமி function ஆகிறீர்கள்?' என்று. Function ஆவதெல்லாம் ஆகிறது. இப்பொழுது என்ன செயல் செய்யவேண்டுமோ, செய்கிறேன்.
என்னுடைய life வந்து ரொம்ப organised, ரொம்ப disciplined life. Correct-டாக காலையில் ப்ரஹ்ம முஹுர்த்தத்தில் எழுந்துவிடுவேன். எழுந்து என்னுடைய இந்த பஞ்ச க்ரியை, என்னை நானே தூய்மைப்படுத்திக்கொள்கின்ற… அதாவது குளிப்பது, வயிற்றை clean பண்ணுவது, நேதி க்ரியை என்று மூக்கை நீர் மூலமாக clean பண்ணுவது, பல் துலக்குவது - தந்தக்ரியை - இதெல்லாம் perfect-டாக முடித்துவிட்டு, நான் பாட்டுக்கு Yoga பண்ண ஆரம்பித்துவிடுவேன். Yoga முடிந்த உடனே பூஜை.
ரொம்ப elaborate-டாக, detailed-டாக, ஆனந்தமாக உட்கார்ந்துகொண்டு… பூஜை பண்ணும்பொழுது, இந்த observer effect allow பண்ணமாட்டேன். observer effect என்றால் என்ன தெரியுமா? இந்த பணக்காரர்கள், VIP களை பூஜையைப் பார்க்க அனுமதித்தால் பெரிய தலைவலி. அவர்களுக்கு அதற்குப் பிறகு ஏதாவது appointment இருக்கும். வேலைக்குப் போகவேண்டும் என்பதற்காக, watch-ஐ பார்த்துக்கொண்டே உட்கார்ந்துகொண்டு இருப்பார்கள். 'எப்ப நான் முடிப்பேன்? எப்ப ஆசீர்வாதம் வாங்கலாம்? எப்ப விபூதி வாங்கலாம்?' என்று.
அதனால் சொல்லிவிடுவேன், நான் பூஜை பண்ணுவது, எனக்கும் பெருமானுக்கும் இருக்கின்ற personal time'. பூஜை பண்ண உட்காருவதே, பெருமானைப் பார்த்துத்தான் உட்காருவேன். யாராவது பூஜையைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால், எனக்குப் பின்னால் இருந்து வேண்டுமானால் பார்த்துவிட்டுப் போகலாம். அவர்கள் இருக்கிறார்கள் என்பதே தெரியக்கூடாது.
நான் பாட்டுக்கு உட்கார்ந்து, relaxed-ஆக… சில நேரத்தில் 2 மணிநேரம், 3 மணிநேரம்கூட ஆகும். பொறுமையாக அபிஷேகம் பண்ணி, அலங்காரம் பண்ணி, ஆபரணங்கள் சார்த்தி, பூமாலைகள் சார்த்தி, அது சரியாக உட்காரவில்லை என்றால், அதைத் திரும்ப எடுத்து correct பண்ணி, பொறுமையாக ஒரு ஶோடசோபசார பூஜை பண்ணுவேன். அந்த மந்த்ரங்களை பொறுமையாக சொல்லி, ஒன்வொன்றாக offer பண்ணி, மெதுவாக ஆரத்தி பண்ணி, பூஜை பண்ணி.. அது எனக்கும் அவருக்கும் இருக்கின்ற time. ரொம்ப organised-டான, discipline -ஆன life. ஆனால் உள்ளே பெயரே இல்லை. காலி!
இதைக் கொஞ்சம் புரிந்துகொண்டீர்களானால், ஒன்றும் இல்லை ஐயா... இந்த தீபம், இந்த 17 நாள் மட்டும் ஐயா, இன்னும் திருவிழா வந்து ஒரு 12 நாள் திருவிழா இருக்கிறது. டிசம்பர் 3ஆம் தேதி தீபம், அதற்குப் பிறகு 4 நாட்கள் திருவிழா. தெப்பல், சண்டிகேஶ்வர உத்ஸவத்தோடு. அதனால் டிசம்பர் 7ஆம் தேதி வரை திருவிழா என்று நினைக்கிறேன். ஏழோ, எட்டோ இருக்கும்.
இந்த 17 நாள் மட்டும் அப்படியே relaxed-டாக பெயர் இல்லாமல், பெயர் சம்மந்தமாக நீங்கள் உருவாக்குகின்ற இந்த stress, 'உங்களுடைய பெயரை காப்பாற்ற வேண்டும், அந்த பேர் சார்ந்த brand-ஐ காப்பாற்ற வேண்டும், அது சார்ந்த expectations-ஐ காப்பாற்ற வேண்டும்' என்று இந்த தரித்தரம் பிடித்த.. அதாவது ஓடிக்கொண்டே இருக்கின்றீர்களே, உங்களை ஓட வைத்துக்கொண்டு இருக்கிறதே, அந்த மாயை stress-ஐ, relaxed-டாக அதை விட்டுவிட்டு, just இந்த 17 நாள் மட்டும் try பண்ணி பாருங்களேன்.
கப்பல் எல்லாம் கவிழ்ந்துவிடாது ஐயா, ஒன்றையும் இழந்துவிடமாட்டீர்கள். நான் ரொம்ப practical-லான advice தான் சொல்வேன். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
வீணான பயங்கள், 'அய்யய்யோ... இல்லை இல்லை, அப்படி எல்லாம் இந்த சாமியார் சொல்கின்ற மாதிரி, நித்யானந்தர் சொல்கின்ற மாதிரி நீ எதையாவது ஒன்றை try பண்ணிணால், அது crisis வந்துரும். அதெல்லாம் யாரும் handle பண்ண முடியாது' என்று பயப்படாதீர்கள்.
ஒரு தொடப்பக்கட்ட crisis-ம் வராது. இந்த பயம் வந்து பெரிய bubble மாதிரி புப்பு..புபு..புப்பு என்று குதிக்கும். அப்படியே பாருங்கள்.
இந்த ஒரே ஒரு ஸத்யத்தைப் புரிந்துகொண்டீர்களானால், இரண்டு விஷயங்கள் நடக்கும். இரண்டு விஷயங்கள்… நான் promise பண்ணுகின்றேன்... என்னுடைய நேசத்திற்குரிய, நேர்மையான நேசத்திற்குரிய நண்பர்கள் என்பதனால், உங்களுக்கு சத்தியம் செய்து சொல்கிறேன் ஐயா... ரெண்டு விஷயங்கள் நடக்கும்.
ஒன்று: வெறும் இந்த நிழல் வெற்றி... ஒப்புமை, அளவீட்டால் அளக்கப்படுகின்ற வெற்றி மட்டும் இல்லாமல், தனித்துவமான வெற்றி அடைகின்ற ஸத்யங்கள், ஶக்தி, சாத்தியங்கள் உங்களுக்குள் திறக்க ஆரம்பித்துவிடும் ஐயா. அது ஒன்று.
இரண்டாவது: உடல் முழுவதும் ஒரு ஒரு organ-ம் உங்களுடைய toxic emotion-ஐ neuropeptides-ஆக, விஷமாக்கி வைத்திருக்கின்றீர்கள் பாருங்கள், அந்த toxins எல்லாம் வெளியில் போய்விட்டு health recover ஆகிவிடும் ஐயா. அந்த toxins-ஐ திரும்பத் திரும்ப organs மீது dump பண்ணுவதை விட்டீர்கள் என்றால், உடலும் மனமும் recover ஆகிவிடும் ஐயா. ஏனென்றால், அது தானாக கரைந்து எல்லாமே வெளியில் போய்விடும் ஐயா.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், எப்பேற்பட்ட சரியான காரணத்தைச் சொன்னாலும், உங்கள் கோபத்தின் வெடிப்பு, இந்த flare up ஆவது, mood swing-க்கு போவது, அதனால் உங்களுடைய organs direct-ஆக damage ஆகிறது ஐயா.
Mood swing-க்கு போகிறப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொண்டல், மகனுங்களா செத்தீங்கடா, நரகம் தான்டா.
'அய்யோ சாமி mood swing-க்கு போகாத பெண்ணை எங்க சாமி கண்டுபிடிக்கிறது?' என்றால்... கண்டுபிடிக்க முடியவில்லையா, அப்பொழுது சும்மா இரு. ஏன் வேலியில் போகின்ற ஓணானை எடுத்து, மடியில் விட்டுக்கிட்டு, 'கொடையுதே கொடையுதே' என்று கத்திககொண்டு இருப்பானேன். நிம்மதியா இரு.
கல்யாணம் செய்துகொண்டாலே, யாராக இருந்தாலும், psychological-லாக அர்தாங்கிநி. Psychological-லாக உங்களுடைய வாழ்க்கையின் பாதி. அது mood swing-க்கு போகின்ற மூதேவியாக பிடித்துவிட்டீர்களானால், போச்சு! அதே மாதிரிதான் பெண்களுக்கும், எங்கு பார்த்தாலும் வாயை வைக்கின்ற பொறுக்கிப் பையானாகப் பிடித்துவிட்டீர்களானால், போச்சு!
சற்றேப் பொறுமையோடு கேளுங்கள். சற்றேப் பொறுமையோடு கேளுங்கள். உங்களையே handle பண்ணிக்க முடியாதபொழுது, இன்னொரு load-யும் தலைமீது கட்டிக்கொண்டீர்களானால், எங்கே போவது?
உடனே ரொம்ப புத்திசாலி மாதிரி சிலபேர் கேள்வி கேட்பார்கள், சாமி, நீங்கள் சொல்வதைக் கேட்டு எல்லோரும் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருந்துவிட்டால், உலகத்தில், ப்ரபஞ்சத்தில், population எப்படி ஆகும்? அடுத்து எப்படி அடுத்த தலைமுறை எப்படி உருவாகும்? என்று.
என்னய்யா லூசுத்தனமான கேள்வி! இந்த கேள்வி கேட்பது எப்படி தெரியுமா இருக்கிறது? 'உலகத்தில் இருக்கின்ற எல்லோரும் புத்திசாலியாகிவிட்டால் என்ன பண்ணுவது?' என்று கேட்பதுபோல் இருக்கிறது.
முதலில் அந்த மாதிரி ஆக மாட்டார்கள் ஐயா, அது உண்மை! அதுதான் அடிப்படை. ஒருவேளை ஆகிவிட்டால், அப்பொழுது வருகின்ற பிரச்சினையை அப்பொழுது face பண்ணிக்கலாம். இப்பொழுதே test-tube babies வந்துவிட்டதல்லவா? Society-ல் already marriage-ம், குழந்தை வளர்ப்பும் பிரிந்துவிட்டது அல்லவா?
ஏனென்றால், அந்த Gay couples> transgender couples எல்லாம் adopt பண்ணி குழந்தையை வளர்க்கலாம் அல்லது artificial -லாக குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றுதான் இப்பொழுது methodology எல்லாம் வந்துவிட்டதே. ஏற்கனவே laboratory> lab produced children, குழந்தைங்கள் வர ஆரம்பித்துவிட்டார்கள்.
அதனால், அப்பொழுது வருகின்ற பிரச்சினையைப்பற்றி இப்பொழுது ஏன் பெரிதாக ஆட்டம் காட்டுகிறீர்கள்?
இப்பொழுது இருக்கின்ற நிஜமான பிரச்சினை, population பிரச்சினை. Population ஜாஸ்தியாக இருக்கின்ற பிரச்சினை இருக்கின்ற சமூகத்தில் உட்கார்ந்துகொண்டு, 'மனுஷங்களே பொறக்காம போயி, குழந்தையே பொறக்காம போயிட்டா என்ன ஆகப்போகுது?' என்கின்ற ஒரு லூசுத்தனமான கற்பனைப் பிரச்சினையைக் கொண்டு வருகிறாய் என்றால், உனக்கு ஒன்று இல்லை, உனக்கு இரண்டாக அமையட்டும் போடா! Face பண்ணு!
அதிலும் அந்த இரண்டிற்கும், ஒன்று இருப்பது இன்னொன்றிற்குத் தெரியாத மாதிரி இருக்கட்டும் போ. அப்பொழுதுதான் real toxic drama life-ல் நடக்கும். இரண்டு பேருக்கும் ஒன்றுக்கு ஒன்று தெரிந்துவிட்டால்கூட, உனக்குப் பிரச்சினை குறைந்துவிடும். ஒன்றுக்கு ஒன்று தெரியாத மாதிரி சிக்கிட்டு மாய் போ!
சற்றேப் பொறுமையோடு கேளுங்கள்: இந்த பெயர் சார்ந்த stress-ல் இருந்து மட்டும் கொஞ்சம் வெளியில் வந்தீர்களானால், உங்கள் உடல் முழுவதும் 10 நாட்களில் detox ஆகிவிடும் ஐயா.
சொன்னால் கேளுங்கள், பொய் சொல்ல மாட்டேன். 'பக்தோSஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம் ...' நீ என் அன்புக்கும், இனிமையான நட்புக்கும், நேர்மையான நேசத்திற்கும், ஶ்ரத்தையான காதலுக்கும் உரியவன் என்பதனால், என் வாழ்க்கையின் ஸுக்ஷுமமான ரஹஸ்யங்களை சொல்லுகின்றேன், கேளுங்கள்.
பெயர் சார்ந்து ஒரு எந்த தொடப்பக்கட்டையும், seriousness-ஓ, ஒன்றும் இல்லாமல் இருப்பதனால்தான் நிம்மதியாக இருக்கின்றேன் ஐயா.
அதனால்தான், என் மீது தொடுக்கப்பட்டப் போர் பார்த்தீர்களானால், சாதாரணப் போர் இல்லை ஐயா. ரொம்ப கொடூரமான ராக்ஷஸர்கள் சேர்ந்து செய்த சதி அது. Multi-pronged attack என்று சொல்வார்கள். அதாவது, social media, ஊடகங்கள்... Social media அந்த காலத்தில் கிடையாது. அந்த காலத்தில் ஊடகம் - இந்த TV channels> newspaper> print media> electronic media என்று சொல்கிறார்கள், அந்த ஊடகங்கள். Social media -வையும் உபயோகித்தார்கள். அந்த time-ல், அப்பொழுதெல்லாம் social media அவ்வளவு popular கிடையாது.
அது மூலமாக முதலில் தாக்குதல், மிகப்பெரிய தாக்குதலை நடத்தி, அவர்களுடைய கூலிப்படையையே வைத்து ஆஶ்ரமங்களை எல்லாம் அடித்து, உடைத்து, கொளுத்தி, ஆதீனவாசிகள், ஸந்ந்யாஸிகள்... பெண் ஸந்ந்யாஸிகளுடைய புடவைகளை உருவி, அவர்களையெல்லாம் ஓடவிட்டு, அவர்களையெல்லாம் தப்பித்து ஓடவிட்டு, ஸந்ந்யாஸிகளை அடித்து.... என்ன சொல்வது? கொடூரமானக் கொலைவெறி தாக்குதல் பண்ணி, ஆஶ்ரமத்தைக் கொளுத்தி… இதில் கொடுமை என்னவென்றால், இதெல்லாம், இதெல்லாம் public செய்த மாதிரி news-ஐ project பண்ணி, public anger generate ஆன மாதிரி காட்டி... இது ஒரு நிலை.
அதாவது ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மூலமாக தாக்குதல். கொடுமையான வெறுப்பைப் பிரச்சாரம் பண்ணுவது - அது முதலாவது.
இரண்டாவது: Public anger generate ஆகிவிட்ட மாதிரியும், நாங்கள் ஏதோ ஒரு சமூக விரோத இயக்கம் மாதிரியும், வெறும் 24 மணி நேரத்தில் 890 இடத்தில் அடித்து உடைத்திருக்கிறார்கள் ஐயா. எங்களுடைய ஆஶ்ரமங்கள், ஆதீனங்கள், centers--ஐ அடித்து உடைத்துக் கொளுத்தி, பெண் ஸந்ந்யாஸிகளை மானபங்கப்படுத்தி… அதை TV-ல் காட்டுகிறார்கள். என்னுடைய ஸந்ந்யாஸினி, பெண் ஸந்ந்யாஸினி ஒருவர், அவர்கள் வந்து B.E படித்த Engineer அந்த அம்மா. அவர்களுடைய புடவையை உருவுகிறான், உருவிட்டு சொல்கிறான், 'என்ன நித்யானந்தா கிட்ட மட்டும்தான் போவீங்களா? நாங்க கூப்பிட்டா வர மாட்டீங்களா?' என்று. அதை தொலைக்காட்சியிலே நேரலையில் காட்டுகின்றார்கள்.
அடுத்து, இன்னொரு தொலைக்காட்சியில், என்னை விரட்டி, நான் தங்கியிருக்கின்ற அந்த குடிசைக்குள் துரத்தி, வெளியில் கதவைப் பூட்டுகிறார்கள். அதை Live-ல் காட்டுகிறார்கள். என் குடிசைக்கு நெருப்பு வைக்கின்றார்கள்.. அப்படியென்றால், என்னால் வெளியில வர முடியாது. அப்படியே எரிந்து உள்ளே சாம்பல் ஆவதுதான் அவர்களுடைய plan. அதை Live-ல் காட்டுகிறார்கள். ஒரு National... ஒன்று இல்லை, 2 -3 channels-ல் காட்டினார்கள். videos இருக்கிறது, வேண்டுமானாலும் காட்டுகின்றேன் பாருங்கள். Live-ல் காட்டி இருக்கிறார்கள். என்னை அந்த குடிசைக்குள் விரட்டிப் பூட்டுவதையும், நெருப்பு வைப்பதையும் Live-ல் காட்டுகிறார்கள்.
ஆனால் பரமஶிவன் அருளால்… அக்னி ஸ்வரூபியை அக்னியில் எரிக்க முடியுமா? பரமஶிவன் அருளால், அங்கு அதன் பின்பக்கம் bathroom-ல் இருந்த அந்த ஜாளி என்று சொல்வார்கள், அது கொஞ்சம் சுலபமாக இருந்ததனால், என் கூட அங்கு இருந்த ஒரு ப்ரஹ்மசாரி, ஸந்ந்யாஸி, அது மேல எட்டி ஓடிப்போய் அதை அடித்த உடனே அது திறந்துவிட்டது, அது உடைந்துவிட்டது. அந்த சுவர் உடைந்து விழுந்துவிட்டது. அதனால் அப்படியே பின்பக்கமாக வெளியில் போய்விட்டோம். ஏனென்றால், அங்கேயும் பின்பக்கமும் இருந்து நெருப்பு போடுவதற்கு ready-யாக இருந்தார்கள். அவர்கள் கண்ணில் படாமல் வெளியில் போய்விட்டோம்.
Anyhow, பரமஶிவன் காப்பாற்றிவிட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனால் பிரச்சினை இல்லை. பெருமானே வந்துதான் அந்த சீடனுக்குள் புகுந்து, அளவில்லாத ஶக்தியோடு, அந்த சுவரை உடைத்து, வெளியில் அழைத்து வந்து காப்பாற்றினார். அது ஒன்று. அந்த கொலைவெறி தாக்குதல், ஆஶ்ரமங்களை எரித்தது அதெல்லாம் ஒன்று.
அடுத்தது lawfare - இந்த பொய் வழக்குகள். நீங்கள் யார் வேண்டுமானாலும் google பண்ணுங்கள், AI-ல் போட்டு பாருங்கள். இந்தியாவிலேயே, 'நான் கற்பழிக்கப்பட்டேன்' என்று எந்த ஒரு ஆணோ, பெண்ணோ குற்றம் சாட்டாமல், complaint-ல் அந்த மாதிரி எதுவுமே இல்லாமல், rape charge-கற்பழிப்பு வழக்குப் போடப்பட்ட, கற்பழிப்பு section 375, 376, 377.. இந்த section-க்கு கீழ் FIR பதியப்பட்ட, வழக்குப் போடப்பட்ட வழக்குகள் ஏதாவது இருக்கிறதா என்று தேடுங்கள்.
மொத்தமாக Independence-ல் இருந்து... 1947 Independence-ல் இருந்து இப்பொழுது 2025 வரைக்கும் ஒரே ஒரு case தான் இருக்கும். அது 2010-ல் நித்யானந்தா மீது போடப்பட்ட, சென்னையில் போடப்பட்ட FIR.
Complaint-ல் யாருமே 'தான் கற்பழிக்கப்பட்டதாக அல்லது இன்னொருவர் கற்பழிக்கப்பட்டதை நான் பார்த்தேன்' என்றுகூட, அந்த மாதிரிகூட சொல்லாமல், ஆனால் FIR-ல் amazing creativity... 375, 376, 377... lawfare அதுதான். சட்டத்தை உபயோகப்படுத்திப் போர் தொடுத்தல்.
இந்த மாதிரி multi-pronged attack- ஐயா. சும்மா சாதாரண attack இல்லை. தொடர்ந்த attack.
அந்த காலகட்டத்தில் இந்த ரத, பத, கஜ சேனை என்பார்கள். ஆனைப்படை, குதிரைப்படை, காலாட்படை, பீரங்கிப் படை என்றெல்லாம் சொல்வார்கள். இந்த காலத்தில் என்ன படை? இந்த ஊடகப்படை, rowdy கும்பல் படை, சட்டம்… அந்த காவல்துறை, காவல்துறைப்படை - இந்த மாதிரி இருக்கின்ற அத்தனைப் படைகளையும் ஏவி விட்டு...
இதில் passport-ஐ முடக்குவது, காரணமே இல்லாமல். Court convict பண்ணாமல் passport-ஐ முடக்க முடியாது. 'Passport -ஐ முடக்கு' என்று Officials-ஐ ஏவி விடுவது.
இந்த மாதிரி அத்தனை department, அத்தனை fields... அதாவது ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் என்று சொல்கிறார்கள் இல்லையா - Judiciary> Media> Executive> Legislative - இந்த நான்கையும் ஏவிவிட்டு நடத்தப்பட்ட போர் ஐயா. என் மீது தொடுக்கப்பட்டப் போர், தாக்குதல்.
ஒரே ஒரு காரணம்தான். பரமஶிவன் அருளால் நான் இதில் மொத்தத்தையும் ஜெயித்து வெளியில் வந்து, இதைத் தாண்டி... தனித்துவமான வெற்றியடைந்ததற்குக் காரணம், தனித்துவமான வெற்றியோடும் முழுமையோடும் வாழ்வதற்குக் காரணம், உடல் நலம், மன நலத்தை இழக்காமல்… 15, 16 வயதில் என் பொதுவாழ்க்கையை ஆரம்பிக்கும்பொழுது என்ன jolly-யாக இருந்தனோ... 15, 16 வயதில்தான் என்னுடைய குருமார்கள் எல்லாம் ஜீவ ஸமாதி அடைந்துவிட்டார்கள். அவர்கள் என்னைப் பீடத்தில் அமரவைத்து, யோக பட்டாபிஷேகம் செய்துவைத்துவிட்டு ஸமாதி அடைந்துவிட்டார்கள். 1995-இல் அவர்கள் எல்லோரும் ஜீவ ஸமாதியில் அமர்ந்துவிட்டார்கள்.
அப்பொழுது எப்படி.. அதாவது என்னுடைய பொது வாழ்க்கையை ஆரம்பிக்கும்பொழுது என்ன happy-யாக, fresh-ஆக, ஒரு fresh out-of-the-box new kid ஆக ஆரம்பித்தேனோ, அதே jolly-யாக, happy ஆக, blissful-ஆக, sweet-ஆக, ரம்யமாக, உடலாலும், மனதாலும், உணர்வாலும், healthy-யாக, optimum energy-ல் peak energy-ல் function ஆகிக்கொண்டு இருக்கிறேன், வாழ்கின்றேன், function ஆகின்றேன்.
ஒரே ஒரு ரகசியம், புரிந்துகொள்ளுங்கள்… பெயர், பெயர் சார்ந்து சமூகம் உருவாக்கின்ற brand, அந்த brand-ஐ நாம் keep up பண்ணவேண்டும் என்று சமூகம் நமக்குக் கொடுக்கின்ற pressure, இது ஒரு தொடப்பக்கட்டையும் எனக்குள் இல்லை. இதை நான் அனுமதிக்கவே இல்லை. இதைப் புரிந்துகொள்ளுங்கள். இதை சுத்தமாக உள்ளே விடவில்லை.
சின்ன வயதில் இருந்தே, பெற்றோர்கள் வைத்த அந்த 'ராஜசேகரன்' என்கின்ற பெயருடன்கூட என்னை நான் associate பண்ணிக்கொள்ளவில்லை. அப்படியே வளர்ந்து, குரு பரம்பரை கொடுத்த இந்த 'நித்யானந்தா' என்ற பெயரோடும் associate பண்ணிக்கொள்ளவே இல்லை. பெயருடன் association-ஏ இல்லை ஐயா. அப்படியே காலியாக இருக்கும். அது பாட்டுக்கு செய்யும்.
Personal life-ல் ரொம்ப sweet-ஆக, jolly-யாக, சிறுபிள்ளை மாதிரிதான் இருப்பேன் ஐயா. குழந்தை மாதிரிதான் வாழ்வேன். கெக்க புக்க, கெக்க புக்க என்று சிரிச்சு... சிரிச்சபடியே இருப்பேன். சுற்றி யார் வந்தாலும் சரி… ஒரே ஒரு விஷயத்தை மட்டும்தான் கிண்டல் பண்ணமாட்டேன். மொத்த life-லயும், அண்ணாமலையார் மட்டும்தான் exemption! ஏனென்றால், அவதைப் பார்த்த உடனே தன்னை அறியாது உயிர், உணர்வு, உடலெல்லாம் உருகிக் கரைந்து, அந்த இனிமையிலும் பக்தியிலும் கரைந்து போய்விடுவதனால், அவரை மட்டும்தான் கிண்டல் பண்ண மாட்டேன். அது தவிர யார் வந்தாலும், எது முன்னாடி வந்தாலும் சரி… என்னையே மதிக்க மாட்டேன் ஐயா. என்னையே நான் serious-ஆக எடுத்துக்கொள்ள மாட்டேன்.
ஒரு இன்னொரு ரகசியமும் சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். இது எப்படி reaction வரும் என்று எனக்குத் தெரியாது, ஆனால் சொல்லிவிடுகின்றேன். அவ்வளவுதான்.... சொல்ல வேண்டும் என்று நினைத்தேன், சொல்லிவிடுகின்றேன்.
என்னை மாதிரியே character-ஐ create பண்ணி இந்த சினிமாவில், TV Serials-ல், இல்லை இந்த YouTube-ல் எல்லாம் comedy எல்லாம் பண்ணி போடுகிறார்கள் இல்லையா.. அதாவது வில்லன் மாதிரி காட்டி, ரொம்ப கொடுமையாக, ரொம்ப அவதூறு பண்ணி, toxic-ஆக project பண்ணி, அந்த மாதிரி எல்லாம் பண்ணுகிறார்கள் இல்லையா, அதையெல்லாம் எடுத்துவந்து காட்டினால், உட்கார்ந்துப் பார்த்து சிரி சிரி என்று சிரித்துக்கொண்டு இருப்பேன்.
இப்பொழுது 2 வருடமாகத்தான் time இல்லாமல் போய்விட்டது. Actual-லாக அதெல்லாம் miss பண்ணுகிறேன். 2 வருஷமாக அந்த Nithyananda AI work பண்ணுவதனால் அதற்கெல்லாம் எதுவும் time இல்லாமல் போய்விட்டது.
2 வருடங்களுக்கு முன்பு வரைக்கும் அதெல்லாம் உட்கார்ந்து பார்த்துக்கொண்டு, நான் கிண்டல் செய்துகொண்டிருப்பேன். என்னடா இதை இந்த மாதிரி பண்ணி வச்சிருக்காங்க? இதை கொஞ்சம் இப்படி மாற்றி இருக்கணும் இல்ல? videos ஒழுங்கா பார்க்காமல் இருந்திருக்கின்றார்கள். என்னுடைய videos ஒழுங்காகப் பார்த்து replicate பண்ணாம இருந்திருக்காங்க என்று கிண்டல் செய்துகொண்டிருப்பேன்.
ஏனென்றால், ஒரு கொடுமை என்னவென்றால்... இது fact ஐயா, நானும் ஆராய்ந்து பார்த்துவிட்டேன்... ஏறத்தாழ 180 படங்களில், என்னை மாதிரி character காட்டி ரொம்ப toxic-ஆக, abusive-ஆக வில்லத்தனமாக காட்டி, ஒரு negative image-ஐ create, generate பண்ணி project பண்ணியிருக்கிறார்கள். 180 movie-யும் flop ஐயா. ஒன்றுகூட hit ஆகவில்லை. அந்த character பண்ண actor-க்கும் ஒரு name வாங்கிக் கொடுக்கவில்லை அல்லது அந்தப் படமும் ஒரு hit ஆகி அந்த hero-வுக்கும் ஒரு success கொடுக்கவில்லை, அத்தனையும் flop.
உட்கார்ந்து பார்த்து கிண்டல் செய்து கொண்டிருப்பேன்... ஏய் ஏய் என்னய்யா இது.. இந்த வீடியோவை ஒழுங்காகப் பார்த்து கொஞ்சம் homework பண்ணிட்டு பண்ண வேண்டாமா? என்று கிண்டலடிப்பேன்.
உண்மையில், ரொம்ப கஷ்டப்பட்டு, என்னை ஏதோ hurt பண்ணுவதாக நினைத்துக்கொண்டு, அந்த மாதிரி எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு video எடுத்து போட்டவங்க, இதைக் கேட்டால் ரொம்ப நொந்துவிடுவார்கள்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், யார் யாருக்கெல்லாம் தனித்துவமான வெற்றியும், உடல் நலம், மன நலம், உணர்வு நலத்தை இழக்காமல், ஒப்பீடு அளவிலான நிழல் வெற்றி, தனித்துவமான நிஜ வெற்றி, இந்த இரண்டும் வேண்டும் என்று நினைக்கிறீங்களோ, இந்த ஒரே ஒரு ஸத்யத்தைப் புரிந்துகொள்ளுங்கள், 'பெயர்' என்பதுதான் சமூகம் உங்கள்மீது செய்கின்ற மிகப்பெரிய brainwash.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இந்த மொத்தத் தாக்குதல்… என் மீது தொடுக்கப்பட்டப் போரிலும் இந்த 'பெயர், identity’ இது சார்ந்த stress-ஓ, எந்த மாயையோ, மூடத்தனமோ எனக்குள் இல்லாததனால், அமைதியாக பிரச்சினையை, reality-ஐ அப்படியேப் பார்த்து analyse பண்ண முடிந்தது.
நிஜத்திலே தீர்க்க வேண்டிய பிரச்சினை எது? சும்மா விட்டாலே தானாக காணாமல் போய்விடப் போகின்ற பிரச்சினை எது? என்றெல்லாம் தெளிவாக எனக்குத் தெரிந்தது ஐயா. Attend பண்ண வேண்டியதை மட்டும் attend பண்ணேன். என்னுடையenergy> time> treasure> talent> resource, இவை எல்லாவற்றையும் வைத்து, எதை attend பண்ண வேண்டுமோ அதெல்லாம் attend பண்ணேன். மொத்தமாக எல்லா பிரச்சினையுமே, அதாவது நாங்கள் ஜெயித்தது மட்டுமல்ல, எல்லா பிரச்சினையுமே irrelevant-ஆக போய்விட்டது, redundant-ஆக போய்விட்டது.
என் மீது போர் தொடுத்த இந்த Deep state... Deep state- என்றால் என்னவென்று சொல்ல வருகிறேன் என்றால், எல்லா நாட்டிலும் யார் அரசாண்டாலும், எந்த government-டாக இருந்தாலும், அவர்களை எல்லாம்விட powerful-லான ஒரு mafia, ஒரு gang இருக்கும்.
என் மீது போர் தொடுத்த deep state, இந்த deep state usual-லாக பர்த்தீர்களானால் எல்லா ideology-யும்... across the ideology> political parties> they will have the people. That is what is the deep state. அந்த Deep state-ஏ நொந்து போய்விட்டார்கள், 'என்னடா இவனை ஒன்னுமே பண்ண முடியல? யாருடா இவனுங்களுடைய strategist? இவனுக்குப் பின்னாடி யாருடா இருக்காங்க?' என்று நொந்து போய்விட்டார்கள்.
திரும்பவும் ஒரே answer தான். நமக்குப் பின்னாடி யார் இருக்கிறார்கள் என்று பார்க்கிறீர்களா? பார்த்துககொள்ளுங்கள்! பெருமானும், தாயாரும் தான்!
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இந்த 'பெயர்' என்பதுதான் மிகப்பெரிய உங்களுக்கு எதிராக செய்யப்பட்ட சதி, மாய வலை, சூக்ஷி, conspiracy, மூளைச் சலவை. இதை மட்டும் விட்டு relaxed-ஆக ஒதுக்கினீர்களானால், நான் இப்பொழுது சொல்கின்ற இந்த மிகப்பெரிய ஸத்யம்,
யதா ஸ்வப்னிய த்வயம் த்ருஷ்டம், கந்தர்வ நகரம் யதா. ததா விஸ்வமிதம் த்ருஷ்டம், வேதாந்தேஷு விஷக்ஷணைஹி.
மாண்டுக்ய காரிகை சொல்கிறது.
'எப்படி கனவில் காணும் பொருட்கள் உண்மையற்றனவோ, ஆகாயத்தில் தோன்றுகின்ற மேகக் கூட்டம், நகரம்போல தோன்றும் மேகக் கூட்டங்கள் நிகழ்த்தும் மாயக்காட்சி பொய்யானதோ, அதுபோலவே இந்த உலகமும்' என்று வேதாந்தத்தில் தேர்வடைந்த பரமாத்வைதிகள் தெளிவாகக் காண்கின்றார்கள்.
இது சத்தியமாகப் புரியும். இரண்டே இரண்டு… அதாவது, நடைமுறையாக என்ன செய்ய வேண்டும் என்று சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள்.
இரவு தூங்கும்பொழுது, படுக்கைக்குப் போகும்பொழுது, அப்படியே உங்களுக்கு நீங்களே சொல்லுங்கள், ஆஹா! ஒரு உலகத்தையே உருவாக்கி நான் நினைக்கின்ற character, பல்வேறு விதமான character-ஐ உருவாக்கி, populate பண்ணி, உலகம், நபர்கள் எல்லாவற்றையும் உருவாக்கி, அதை நடத்திப் பார்த்து, ரசித்துப் பார்த்து, அனுபவித்துப் பார்க்கின்ற ஒரு மிகப்பெரிய ஶக்தி உடைய ஒரு space-க்குள் நான் நுழைகின்றேன் என்கின்ற தெளிவோடு நுழையுங்கள் ஐயா.
ஸத்யம் சொல்லுகின்றேன், சந்தேகம் இல்லை. என் பக்தர்களே, என் அன்பர்களே, என் சீடர்களே, என் அன்புக்கு உரியவர்களே, நான் நேசிப்பவர்களே, என்னை 'நான் நேசிக்கப்படுகின்றேன்' என்று உணர வைக்கின்றவர்களே, உணர்ந்துகொள்ளுங்கள். ஸத்யம் சொல்லுகின்றேன்.
கனவுக்குள் போகும்பொழுது மட்டும், இந்தத் தெளிவோடு செல்லுங்கள்.
சரிங்கைய்யா, வெறும் இந்த அடுத்த 10 நாள், டிசம்பர் 7 ஆம் தேதி என்று சொல்கிறேன் இல்லையா, திருவிழா இந்த தீபம். தீபம் வரைக்கும் இதைச் செய்யுங்கள் ஐயா. டிசம்பர் 7ஆம் தேதிவரை ஐயா. இரவு தூங்கும்பொழுது, 'ஆஹா! ஒரு உலகத்தையே உருவாக்கிப் பார்க்கக்கூடிய ஶக்தி உடைய, நான் என்ன வேண்டுமானாலும் உருவாக்கிப் பார்க்கிற ஒரு ஶக்தி உடைய ஒரு space-க்குள் நான் நுழைகின்றேன். என்னுடைய மிகப்பெரிய ஶக்தி உடைய ஒரு space-க்குள் நான் நுழைகின்றேன்' என்கின்ற தெளிவோடு தூக்கத்தில் விழுங்கள். பத்தே பத்து நாட்களில் புரிந்துவிடும், கனவு காணும்பொழுதே, உங்களால் கனவுவில் இருக்கின்ற, நடக்கின்ற விஷயங்களை alter பண்ணுகின்ற ஶக்தி உங்களுக்கு இருக்கிறது என்று புரியும் ஐயா.
அது கனவில் காணும்பொழுதே, உங்களுக்கு விருப்பமான ஒரு நபரை பார்க்கிறீர்கள், அவரோடு ரொம்ப நேரம் spend பண்ணுவதற்கு, அவரோடு இருப்பதற்கும், அவரை இருக்க வைப்பதற்கும் அல்லது உங்களை பயமுறுத்துகின்ற ஏதாவது ஒரு scene வருதுகிறது என்றால், அதிலிருந்து விலக்கி வேறொன்றை மாற்றுவது. இதை உங்களால் செய்ய முடியுகிறது என்றால்… அதாவது கனவிலும் நீங்கள் அப்படியே உணருவீர்கள் ஐயா, ஒரு nightmare, கொடுமையான பயம் கொடுக்கின்ற கனவு வந்தால், கனவிலேயே அதை alter பண்ணிவிட்டு, விழித்து எழாமலேயே வேறு கனவு, உங்களுக்குப் பிடித்த மாதிரி கனவை continue பண்ணுவீர்கள். இந்த அனுபவம் வரத் துவங்கும். பத்தே நாளில் வந்துவிடும் ஐயா. பத்து நாட்களுக்குமேல் தேவைப்படாது.
என்னவர்களே! நான் சொல்லுகின்ற ஸத்யம். கேளுங்கள்...செய்யுங்கள்... அனுபூதி நிச்சயம்.
பத்தே நாட்களில் வர ஆரம்பித்துவிடும். அது வந்த உடனே என்ன ஆகும் என்றால், இந்த நிஜ உலகம் என்று சொல்லிக்கொள்கின்ற இந்த உலகம் இருக்கிறது இல்லையா, இதிலும் நீங்கள் அதே game-ஐ விளையாட முடியும் ஐயா. அதே மாதிரி இந்த உலகத்திலும் manifest பண்ண முடியும் ஐயா.
யதி வித்யதேவ ஜகத் ஸத்யம் விநிவர்த்தேதன ஸம்ஷய. மாயா மாத்ரமிதம் த்வைதம் அத்வைதம் பரமார்த்தத: கல்பயத்யத்மனா ஆத்மனாத்மாத்மா தேவ: ஸ்வமாயயாச. விஸ்வானவ புத்யதேஸ, ஏஷோந்தர் வஹி ஸ்மிருத:
அதாவது, கனவிலே எல்லாவற்றையும் உருவாக்கி, பொருட்களையும், நபர்களையும் இயக்கி அனைத்தையும் உணருகின்றவனே, உணருகின்றவனாகிய நானேதான், இந்த நனவிலும் அதேபோல் அனைத்தையும் உருவாக்கி விளையாடிக் கொண்டிருக்கின்றேன்.
ஐயா, இது புரிந்ததென்றால், toxic emotions-ஐ உங்களுடைய organs-ல் store பண்ண மாட்டீர்கள். Jolly-யாக விளையாடுவீர்கள் ஐயா! நித்ய நிகழ்விலே இருந்துகொண்டு மொத்தத்தையும் jolly-யாக விளையாடுவீர்கள் ஐயா!
இன்னொரு ரகசியம், என்னுடைய mind voice சொல்லிவிடுகின்றேன்... என் மிது ரொம்ப ஶ்ரத்தை உடைய, என்னுடைய நன்மையிலே விருப்பமுடைய ஒரு மிகப்பெரிய அரசியல்வாதி. ஒரு அரசியல் தலைவர், என்னுடைய நன்மையில் ரொம்ப விருப்பமுடையவர். அவர் ஒரு தடவை என்னை பார்த்துப் பேசும்பொழுது, அவர் ரொம்ப நாள் பக்தர்... ரொம்ப நாள் பக்தர். கண்ணெல்லாம் கலங்கி, 'பாவம் சாமி நீங்கள், தனி ஆளாக இவ்வளவு பெரிய போரை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கே சாமி. Unfair war சாமி' என்றார்.
நான் சரி அவர் மனம் கஷ்டப்பட வேண்டாம் என்று, 'ஆமாம், ஆமாம் ஐயா' என்று polite-ஆக silent-ஆக இருந்து பேசி அவரை அனுப்பிட்டேன். ஆனால் மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்... இது திமிரோ, அஹங்காரமோ இல்லை ஐயா, நான் மனதிற்குள் என்ன நினைத்தேனோ, என் mind voice-ல் என்ன ஓடியதோ அதை அப்படியே சொல்லிவிடுறேன். நான் நினைத்தேன், 'ஆமா ஆமா, இது unfair தான். மனுஷங்க ஒரு 4-5 பேர் சேர்ந்துகிட்டு, பெருமான் யாருக்கு துணை இருக்காரோ, அவர் மேல போய் சண்டையை போடுகிறார்களே' என்று நினைத்தேன்.
டேய், எனக்கு பின்னாடி யார் இருக்கிறார்கள் என்று தெரியாமல்… தயவுசெய்து திமிர் அஹங்காரம் என்றெல்லாம் நினைக்காதீர்கள். அது பெருமான் கொடுத்த தைரியம், அவர் கொடுத்த, அவர் மீது இருக்கின்ற பக்தியினாலே வந்த ஶ்ரத்தை, 'அவர் என்னைக் காப்பாற்றுகிறார், ரொம்ப தெளிவாக என்னைப் பாதுகாக்கின்றார், காப்பாற்றுகின்றார், எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கின்றார்' என்கின்ற தெளிவினால் வந்த தைரியம்.
இது தயவுசெய்து திமிர், அஹங்காரம் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். ஆனால், நான் அப்படித்தான் நினைத்துச் சிரித்தேன், 'ஆமா மா, unfair-தான். என்ன பண்றது? பாவம் 4-5 மனுஷங்க சேர்ந்துகிட்டு, பெருமான் யாரை பாதுகாக்கிறாரோ, பரம்பொருள் யாரை பாதுகாக்கிறாரோ, அவர்கிட்ட போய் விளையாடிட்டு இருக்காங்க, அவரைப் போய் வம்பு பண்ணிட்டு இருக்காங்களே, இது unfair தான்' என்று. அதுதான் எனக்கு mind voice-ஆக ஓடியது.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த ஸத்யங்களை மட்டும் புரிந்துகொண்டீர்களானால்… இந்த இரண்டே இரண்டு ஸத்யம்: 1) இரவு தூங்கும்பொழுது, நீங்கள்தான் மொத்தத்தையும் உருவாக்கி விளையாடுகிறீர்கள்' என்பதைத் தெரிந்துகொண்டு மெதுவாக உறக்கத்திற்குள் நுழையுங்கள்.
2) நாள் முழுவதும் உங்கள் பெயரை, அந்த idea-வை, identity-ஐ தூக்கிப்போட்டுட்டு, அப்படியே சும்மா இருங்கள். உங்கள் பெயரோடு associate பண்ணிக்கொண்டு, உங்களுக்குள் gush பண்ணுகிறதல்லவா - Emotions> toxins, அதை drop பண்ணிவிட்டு அப்படியே சும்மா இருங்கள்.
உங்கள் பெயர், உங்கள் life-லேயே இருக்கின்ற worst toxic girl friend> boy friend ஐயா. அதைப் பிடித்தீர்களானால், society-யினுடைய மொத்த toxin-னும் உங்கள் மீது வேலை செய்ய ஆரம்பித்துவிடும். Society-யினுடைய மொத்த pressure, stress-ஐயும் எடுத்துக்கொண்டு வாழ வேண்டியதாக இருக்கும் ஐயா.
Relaxed-ஆக விட்டுட்டு அமைதியாக இருங்கள் ஐயா. செய்ய வேண்டியது எது என்று உங்களுடைய புத்தி தெளிவாகக் காட்டும் ஐயா. உங்களுடைய வியாபாரத்தில் செய்ய வேண்டியது…. Unnecessary பயமோ, blind spot-ஓ, ஆசை அச்சமோ, துக்கமோ அல்லது கொஞ்சம் நீங்கள் ஆசைப்படுகின்ற ஆளாக இருந்தால், யார் வேண்டுமானாலும் உங்களை ஏமாற்றிவிட முடியும் ஐயா. உங்கள் ஆசையின் மீது கோட்டைக் கட்டி, வார்த்தை ஜாலத்தாலேயே உங்களை ஏமாற்றிவிட முடியும்.
இந்த மாதிரியெல்லாம் எதுவும் இல்லாமல், simple> straight> fresh-ஆன கண்களோடு உலகத்தைப் பார்த்து, business-ல் எடுக்கின்ற முடிவுகள். அதே மாதிரி உறவுகளில், யார் எந்த மாதிரி என்று fresh-ஆன கண்களோடுப் பார்த்து எடுக்கின்ற முடிவுகள். அதே மாதிரி உங்கள் உடல் நலம், உண்மையில் உடல் நலம் எப்படி இருக்கிறது? எதைச் செய்தால் எப்படி உங்கள் உடலை மாற்ற முடியும்? அதில் involve ஆவதற்கான energy…
இங்கு பலபேர் பார்த்தீர்களானால், உடலை, வீட்டைப் பெருக்குகின்ற தொடப்ப கட்டையைவிட மோசமாக treat பண்ணுகிறீர்கள் ஐயா. அந்த வேலைக்கு use பண்ணிட்டு அப்படியேப் போடுவது.
அது என்ன? அதற்குள் என்ன நடக்கிறது? அது ஏன் கத்துகிறது, ஏன் கதறுகிறது? ஏன் எதாவது ஒரு பிரச்சினை வருகிறது?
ஒரு diabetes வருகிறது என்றால், blood pressure வருகிறது என்றால், gas trouble வருகிறது என்றால், உடம்பு ஏதோ ஒரு நமக்கு message சொல்லுகிறது: 'இதைத் திண்பதை நிறுத்துடா' என்று சொல்கிறது. 'இந்த மாதிரி rest எடுக்காமல் இருப்பதை நிறுத்து' என்று உடல் ஏதோ message சொல்கிறது. அதை கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கள். கேட்டு அந்த lifestyle change-ஐ எடுத்து வாருங்கள்.
பன்றி மாதிரி கொட்டி, சாக்குப் பையில் கொட்டுகின்ற மாதிரி கொட்டி, மூட்டை கட்டி வைப்பதற்கு அது என்ன உடலா அல்லது dust bin-னா?
'இல்லை இல்லை சாமி, என்னால் non-veg எல்லாம்விட முடிவில்லை. இவ்வளவு சாப்பிடுவதை விட முடிவில்லை சாமி' என்றால், அப்பொழுது Will எழுதி வைத்துவிட்டுச் செத்து போ! Will எழுதியாவது வைத்துவிடு, 'எப்பொழுது வேண்டுமானாலும் போய்விடும், போய்விட்டால் இந்தந்த சொத்தெல்லாம் இவர்களுக்குப் போகட்டும், இந்தந்த கடன் எல்லாம் இவர்களுக்கு அடைக்கட்டும்' என்று எல்லாவற்றையும் எழுதியாவது வைத்துத் தொலை. ஏனென்றால், எப்பொழுது வேண்டுமானாலும் புடுங்கிக்கிட்டு போய்விடும். அதனால் அதற்காவது தயாராகிவிடு. Blind spot-லயே வாழ்ந்துகொண்டிருக்காதீர்கள்.
Sorry, 'செத்து போ' என்று சொன்னது உண்மையிலே literal meaning கிடையாது. சொந்தம், நெருங்கிய என் உணர்வில் நிறைந்த அன்பர்கள் என்பதனால், புரிய வைப்பதற்காக அந்த வார்த்தையை உபயோகித்தேன். வாழ்வாங்கு வாழ்வீர்கள், சாகமாட்டீர்கள்.
'நமே பக்த ப்ரணஶ்யதி' அருமையான ஸ்லோகம்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், என்னுடைய பக்தன் என்றும் அழிவதில்லை.
பகவத் கீதை தெளிவாகச் சொல்கிறது, 'ந மே பக்த: ப்ரணஶ்யதி' என் பக்தன் என்றும் அழிவதில்லை.
என் அன்புக்குரியவர்களே, உங்களுக்கு அழிவில்லை. நன்றாக வாழ்வீர்கள், வாழ்வாங்கு வாழ்வீர்கள். நித்ய வாழ்வை அடைந்து வாழ்வீர்கள். உங்களுக்கு அழிவில்லை. புரிவதற்காக அந்த வார்த்தையை வேகமாக உபயோகித்தேன்.
ஆழ்ந்து கேளுங்கள். இந்த இரண்டு ஸத்யத்தை உள்வாங்கிவிடுங்கள்: ஐயா, நான் இந்த nail polish போட்டுவிட்டு, உங்கள் skin-ஐ நல்லா shining-ஆக மாற்றிவிட்டு make-up போடுகின்ற அந்த மாதிரி குரு கிடையாது.
உங்கள் உயிரை மலர வைத்து பரமஶிவமாக்கும், அந்த மாதிரியான குரு என்பதனால், கொஞ்சம் வேகமாகச் சொல்கின்றேன். ஸத்யம் இதுதான்.
ஒரு இரண்டுபேர் right now comments-ல் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்: ‘'சாமி இரண்டு வருஷத்துக்கு முன்னாடி உங்கள் ஸத்ஸங்கத்தைக் கேட்காமல் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். பரிகாரம் என்ன சாமி? என்று கேட்கிறார்கள்.
ஒரே ஒரு பரிகாரம் இருக்கிறது. அவர்களையும் அழைத்துக்கொண்டு, இரண்டு பேரும் இந்த பரமஶிவ சேனை program attend பண்ணி, இந்த ஸத்யங்களை எல்லாம் புரிந்துகொண்டு, இந்த பரம ஸத்யங்கள் மீது உங்கள் உறவை உருவாக்கிக் கொண்டீர்களானால், best life ஐயா.
அதாவது 'ageing together' என்பதே ஒரு அருமையான விஷயம் ஐயா. வெறும் lust சார்ந்த relationship-என்றால், இரண்டு வருடத்தில் bore அடித்துவிடும் ஐயா. இரண்டு வருடம் ஜாஸ்தி என்று நினைக்கிறேன். Bore அடித்துவிடும் ஐயா. அதற்குப் பிறகு tired-ஆக இருக்கும், bored-ஆக இருக்கும், irritated-ஆக இருக்கும். Natural-ஆக hotel சாப்பாடு தேடி போவார்கள். இந்த பக்கம் அங்க, அந்த பக்கம் இங்க, இது mood swing. அதற்குப் பிறகு social pressure, குழந்தைகள் என்று வேறு ஏதாவது காரணங்களுக்காக வேண்டுமானால் ஒன்றாக இருக்கிறோமே தவிர, 'திருமணம்' செத்து விட்டது.
Marriage is dead. Legal contract marriage is still alive.. அதாவது சட்ட ரீதியான marriage -என்கின்ற contract இன்னும் உயிரோடு இருக்கிறது, Divorce ஆகவில்லை. ஆனால் marriage is dead. அந்த மாதிரிதான் பலபேர் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் ஐயா. இதற்குத் தீர்வு வந்து ஆளை மாற்றுவது இல்லை. Space-ஐ மாற்றுவது. Space-ஐ மாற்றுவது. உங்களுடைய space-ஐ மாற்றுங்கள்.
@_rules005 என்ற ID-யில் இருந்து இந்த question கேட்டிருக்கின்றீர்கள். Relationship advice... ‘I get stuck on this each time...' என்று Youtube shot-ல் இருந்து கேட்டிருக்கிறீர்கள்.
நன்றாகக் கேளுங்கள், உங்களுடைய space-ஐ மாற்றுங்கள். அவருக்கு... கணவனோ, மனைவிக்கோ, அந்த space-ஐ மாற்றுவதற்கான opportunities-ஐ உருவாக்கிவிடுங்கள்.
ஒரு மாதம், முழுக்க முழுக்க இலவசமாக எந்த பணமும் இல்லாமல், 5 லக்ஷம் ரூபாய் worth உடைய program-ஐ உணவு, தங்குமிடத்தோடு இலவசமாக கொடுக்கின்றோம். கைலாஸா திருவண்ணாமலைக்கு வந்து attend பண்ணுங்கள்.
எப்படி நாம் இந்த பெயரைத் தாண்டி, emotional கொந்தளிப்புகளைத் தாண்டி, உயிர் மலர வாழ்வது. இதைக் கற்றுக்கொண்டு செல்லுங்கள். நீங்கள் புது ஆளாக மாறிவிட்டு இருப்பீர்கள். உங்கள் மனைவி புது நபராக மாறிவிட்டு இருப்பார்கள்.
அதே மாதிரி 'Dating பண்ணிட்டு இருக்கேன். இன்னும் கல்யாணம் செய்துகொள்ளவில்லை' என்றாலும், வந்து இருவரும் சேர்ந்து ஒரு தரம் program attend பண்ணிவிடுங்கள். அப்பொழுது இருவருடைய compatibility -யும் புரிபட்டுவிடும். இருவருக்கும் இந்த வாழ்க்கையினுடைய அடிப்படை ஸத்யங்களின் மீது விருப்பமும் புரிதலும் இருக்கிறதா? அதைச் சார்ந்து உங்கள் வாழ்க்கையை build பண்ண முடியுமா? என்று புரிந்துகொள்ளலாம்.
இல்லையென்றால், இரண்டும்.. பேய் பிசாசை பிடிக்க, பிசாசு பேயை பிடிக்க என்று, இதற்கு நடுவில் பிள்ளையை வேறு பெற்றுக்கொண்டீர்களானால்...போச்சு. அந்த பிள்ளை என்ன பண்ணும்? தள்ளி நின்றுகொண்டு 'பேய்க்கும் பிசாசுக்கும் சண்டை, அடிச்சிட்டு மாயட்டும் நமக்கு என்னப்பா?' என்று இருக்கும்.
தயவுசெய்து அழிந்து போகாதீர்கள்.
'ந மே பக்த: ப்ரணஶ்யதி' - எனது பக்தன் ஒருபோதும் அழிவதில்லை' என்று பகவத் கீதையில் சொல்கிறார் க்ரு'ஷ்ணர். அந்த அன்போடு சொல்லுகின்றேன். இந்த ஸத்யங்களை மட்டும் இனிமையோடு கேளுங்கள்.
உங்களுக்கு அழிவு இல்லை.
'இந்த ஒரு வருஷம் பரிவ்ராஜக யாத்ரை போங்க போங்க' என்று சொல்கிறேன். இல்லையா, அதுகூட வேறு ஒன்றும் இல்லை ஐயா, அப்படிப் போனீர்களானால், சூழ்நிலை மாற்றத்தினால், இந்த பெயரின் தேவை இல்லாமல் வாழ முடியும் ஐயா.
பெயர் மீது இருக்கின்ற pressure இல்லாமல், அங்கங்கு அங்கங்கு அப்படி அப்படியே புது புது நபர்களை பார்த்து, புது புது உறவுகளை உருவாக்கி, புது புது சூழல்களை எதிர்கொண்டு அப்படியே வாழ்ந்துகொண்டு போகும்பொழுது, உடல் முழுவதும் சேர்த்து வைத்திருப்பது… neuropeptides-என்பது உடல் முழுவதும் இந்த organs-ல் எல்லாம் store பண்ணி வைத்திருக்கின்ற அந்த emotions> toxic emotions மொத்தமும் melt down ஆகிவிடும். உடல் detox ஆகி, fresh ஆகிவிடும் ஐயா.
இந்த ஒரே வாழ்க்கை... அதாவது காலையில் எழுந்து அதே வீடு, அதே வீட்டுக்காரி, அதே கார், அதே driver, அதே வேலை, அதே பசங்க, அதே boss, அதே team, அதே தலைவலி, அதே சண்டைகள், அதே பிரச்சினைகள், அதே சங்கடங்கள். திரும்ப வந்தால், evening அதே மாதிரி மொத்த routine.
பல நேரத்தில் பார்த்தீர்களானால், உங்கள் வீட்டிற்குள்ளேயே நீங்கள் எந்த வழியாக நடந்து போகிறீர்களோ, அதே மாதிரி போய்விட்டு, அதே மாதிரி வந்து… உங்கள் வீட்டிலேயே பல rooms-ஐ போய் திறந்து பார்த்திருக்க மாட்டீர்கள். மாசக்கணக்காக! பல வாங்கிப் போட்ட பொருட்களை, திறந்து use பண்ணி கூட இருக்கமாட்டீர்கள்.
பைத்தியம் மாதிரி shopping பண்ணுவது. shopping பண்ணி, shopping பண்ணி, shopping பண்ணி... சும்மா ஒரு morning jogging போவதைப்பற்றி ஒரு reels பார்த்த உடனே, அவன் போட்டிருக்கின்ற dress, shoe அத்தனையும் order பண்ணுவது. ஆனால் அது என்ன ஆகும்? வந்து seal கூட பிரிக்காமல் மாடிப்படிக்குக் கீழே விழுந்து கிடக்கும்.
எத்தனை பேர் நான் சொல்வது அனுபவமாக உங்கள் வீட்டில் இருக்கிறது? கை உயர்த்துங்கள். இந்த மாதிரி எல்லாம் சுற்றிப் பாருங்கள் ஐயா. எப்படி stuck ஆகிப் போய்க் கிடக்கின்றீர்கள் என்று.
தயவுசெய்து ஒரு வருடத்தை எனக்குக் கொடுங்கள், உங்களுக்கு குறைந்தபட்சம் 50 ஆண்டுகளை உங்களுடைய வாழ்க்கையில் நான் சேர்க்கின்றேன். இது சத்தியம். சந்தேகம் இல்லை, பொய் சொல்லமாட்டேன். நான் சும்மா உட்கார்ந்துகொண்டு கத்திக்கொண்டு இல்லை ஐயா.
சேக்கிழார் சொல்கிறார் இல்லையா, 'பூதப் பரம்பரைப் பொலிய, புனிதவாய் மலர்ந்தழுத' என்று. இந்த ஜ்ஞாநப் பரம்பரை வாழையடி வாழையென, ஶிவ பூதப் பரம்பரைப் பொலிவதற்காகத்தான், ஞானசம்பந்தப் பெருமான் புனிதவாய் மலர்ந்து அழுகின்றார்.
வேதநெறி தழைத்தோங்க
மிகுசைவத் துறைவிளங்க
பூதப்பரம் பரைபொலியப்
புனிதவாய் மலர்ந்தழுத,
சீதவள வயற்புகலித்
திருஞானசம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு
திருத்தொண்டு பரவுவாம் என்று அவருடைய குரு பரம்பரையில் வந்தவன் ஐயா நான்.
அதனால், இந்த பூதப்பரம்பரைப் பொலிவதற்காகவே அழுது கொண்டிருக்கின்றேன், கத்திக் கொண்டிருக்கின்றேன், சொல்லிக் கொண்டிருக்கின்றேன். பொய் புகலேன்.
ஒரு வருடத்தை தைரியமாக risk எடுத்து, எல்லாவற்றிலிருந்தும் உடைத்து, இந்த toxic, stuck-ஆன life style-ல் இருந்து வெளியில் வாருங்கள்.
செத்தெல்லாம் போக மாட்டீர்கள் ஐயா. Cell phone வைத்துக்கொள்ளுங்கள், யாரோடு வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள். ஏதாவது ஒரு emergency என்றால், hospital-க்குப் போய்க்கொள்ளுங்கள். ஒன்றும் செத்துப் போக மாட்டீர்கள்.
நான் பரிவ்ராஜகம் பண்ண, அந்த காலம் மாதிரி எல்லாம் இப்பொழுது உங்களுக்குக் கிடையாது. இப்பொழுது ரொம்ப சுலபம், easy. V-log செய்துகொண்டே, jolly-யாக புதிது புதிதான friends-ஐ பார்த்துக்கொண்டு, சூழ்நிலைகளைப் பார்த்துக்கொண்டு, jolly-யாக எல்லாவற்றையும் handle பண்ணிக்கொண்டு, உடம்பில் store பண்ணி வைத்திருக்கின்ற emotions-ஐ, toxic emotions-ஐ detox பண்ணும் ஐயா.
முக்கியமாக... இப்பொழுது Gen Z kids எல்லாம், பிறப்பிலிருந்தே அந்த toxic emotions-ஐ store பண்ண ஆரம்பித்துவிடுகிறார்களாம். நான் சொல்லவில்லை, scientific research சொல்கிறது.
எங்கள் காலத்தில் எல்லாமாவது, இந்த toxic emotions build ஆக ஆரம்பிப்பது, இந்த வாழ்க்கையில் responsibility எடுக்கின்ற வயது… எங்கள் generation எல்லாம் பொதுவாக 25 வயதில்தான் responsibility, அதாவது கல்யாணம் ஆன பிறகுதான் அவரவர்கள் வாழ்க்கைக்கு responsibility எடுப்பார்கள். அதுவரைக்கும் அப்பா, அம்மாகூட அவர்கள் சம்பாத்யத்தில் வண்டி ஓட்டிக்கொண்டு, கலாட்டா பண்ணிகக்கொண்டு, jolly-யாக இருப்பதுதான்.
இந்த generation, சம்பாதிக்கின்றீர்களோ இல்லையோ, இந்த peer pressure, comparison, அந்த toxins எல்லாம் extreme-மாக போவதனால், performance, தரித்திரம் பிடித்த இந்த examinations, எவனுக்காகடா exam எழுதுறீங்க? எனக்கு ஒன்றுமேப் புரியவில்லை. அதிலும் இந்த Macaulay -வோட clerk producing education system... அதற்குள் போய், அவன் clerk-அ produce பண்ண வேண்டும் என்பதற்காக, அவன் கழிந்து வைத்துவிட்டுப் போனதை, இன்னமும் திண்றுகொண்டு... ஐயோ!
இந்த outer knowledge-ல் Macaulay கும்பலினுடைய நாத்தமும், தொல்லையும், இந்த inner knowledge-ல் Max Müllerian கும்பலினுடைய தொல்லையும், ஐயோ எம்மா...
Max Mullerian கும்பல் என்றால் யாரைச் சொல்கிறேன் என்றால், முறையாக ஸம்ஸ்க்ரு'தத்தையும் ஶாஸ்த்ர ங்களையும் படிக்காமல், 'இந்த ஜ்ஞாந அனுபூதி, ஆன்மீக அனுபூதி, யோகா, த்யானம்' என்று ஊரெல்லாம் கலாட்டா செய்துகாண்டு திரிகிறது பாருங்கள் அந்த கும்பல்.
இங்கிலீஷில் ஏதாவது இந்த translations books எல்லாம், Max Mullerian translation books, அந்த ஸம்ப்ரதாயத்து, அவர்களுடைய ஆட்கள் translate பண்ண, இங்கிலீஷில் translate பண்ண book எல்லாம் படித்து முடித்துவிட்டு, எதையாவது அரைகுறையாக சுத்திக்கொண்டு, இந்த technical terms-ஐ வைத்து விளையாடிக்கொண்டிருப்பது... யம்மா... இவர்கள் பண்ணுகிற அலப்பரை இருக்கிறது பாருங்கள்! இவர்கள பண்ணுகின்ற rowdism-மும், கூத்தும் அலப்பரையும்... ஐயோ! இது எல்லாமே இந்த Gen Z-க்கு, உங்கள் organs முழுக்க toxic emotions-ஐ store பண்ண வைத்துவிடுகிறது ஐயா.
அதனால், இந்த பரிவ்ராஜக யாத்ரை செய்தீர்களானால், முதலில் உங்கள் உடலும்-மனமும் detox ஆகும் ஐயா.
பொதுவாக ஒரு நாட்டினுடைய Human resource department பண்ண வேண்டிய first வேலை, அந்த நாட்டினுடைய Gen Z இளைஞர்கள் detox ஆகின்றது. அவர்களுடைய உடலிற்குள்ளும், மனதிற்குள்ளும் toxic emotions store ஆகாமல், detox பண்ணிவிடுகிறது ஐயா.
நம் பாரதத்தில், இந்தியாவில், அருமையான methodology இருக்கிறது ஐயா. அந்த மாதிரி detox ஆவதற்கு. இந்தியா முழுக்க ஆலயங்களுக்கெல்லாம் யாத்ரை செய்தீர்களாலே, நம்முடைய கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு இதைப் பற்றி ஒரு செறிவார்ந்த புரிதலும், ஈடுபாடும், நன்மையும் வரும்.
அதுபோக உடல், மனம் detox ஆகி, fresh-ஆக ஒரு குழந்தை மாதிரி ஆகிவிடுவீர்கள் ஐயா. life-ஐ restart பண்ணுகின்ற அந்த energy வந்துவிடும் ஐயா.
எந்த நாட்டினுடைய human resource department-ம், இதைத்தான் first பண்ண வேண்டும். கைலாஸா உலகத்திற்கே human resource department.
நீங்கள் கைலாஸத்திற்கு வருவது, வராததெல்லாம் உங்கள் விருப்பம். ஆனால் யார் யாரெல்லாம் இந்தமாதிரி ஒரு வருஷம் யாத்ரை செய்கின்றீர்களோ, நீங்கள் இந்த யாத்ரைக்குப் பிறகு எந்த நாட்டில் போய் settle ஆனீர்களானாலும், அந்த நாட்டுக்கு உபயோகமாகின்ற, அதாவது உங்களுக்கும் அந்த நாட்டிற்கும், உங்களுக்கும் அந்த சமுதாயத்திற்கும் உபயோகமாகின்ற ஒரு நல்ல வெற்றிக்குடிமகனாக மாறுவீர்கள் ஐயா. அதனால், இதை ஒரு சேவையாகச் செய்கின்றோம்.
யார் யாரெல்லாம் இந்த மாதிரி ஒரு வருஷம் பரிவ்ராஜக யாத்ரை செய்கின்றீர்களோ, அவர்களுக்கெல்லாம், கைலாஸத்தில் இருந்து 1 லக்ஷ ரூபாய் grant கொடுக்கின்றேன் ஐயா.
5 லக்ஷம் ரூபாய் பெருமானம் உள்ள program, பரமஶிவ சேனை program, one month training. அதில் யோகா, மல்லக்கம்பம் என்று சொல்கின்ற, அந்த கம்பத்தின்மீது ஶிவ ஸ்தம்பத்தின் மீது ஏறி செய்கின்ற யோகா, rope-ல் தொங்கி செய்கின்ற அந்த rope யோகா, இந்த மாதிரியான training, அது வந்து உடம்பைத் தயார் பண்ணுவது, detox பண்ணுவது, fresh ஆக்குவது.
ப்ராணாயாமம், த்யானம் - மனதை detox பண்ணுவது.
இந்த completion என்கின்ற இந்த ஸத்யம், ஜ்ஞாந தத்துவம் - உயிரை detox பண்ணுவது.
உங்களை மொத்தமாக detox பண்ணி, ஒரு மாசம் இந்த 5 லக்ஷ ரூபாய் பெருமானம் உள்ள பரமஶிவ சேனா program-ம் இலவசமாகக் கொடுக்கிறேன். அதற்குப் பிறகு பரிவ்ராஜகம் போவதற்காக, இந்த யாத்ரை பண்ணுவதற்காக உங்களுக்கு என்னென்ன details, எந்தெந்த இடத்திற்கு எல்லாம் போனால் உங்களுக்கு நன்றாக இருக்கும், வாழ்க்கையைக் கற்றுக்கொள்வீர்கள்... இந்த மாதிரி details எல்லாம், அது ஒரு 200 இடம் select பண்ணி வைத்திருக்கின்றேன்.
பாண்டிச்சேயில் இருக்கின்ற ஆரோவில், தமிழ்நாட்டில் இருக்கின்ற மெய்வழிச் சாலை… இந்த மாதிரி ஒரு பெரிய list. கல்கத்தாவில் பேலூரில் இருக்கின்ற ராமகிருஷ்ண மடம், தக்ஷிணேஷ்வரில் அந்தப் பக்கம் இருக்கின்ற சாரதா மடம், இந்த மாதிரி ஒரு 200 இடம் select பண்ணி வைத்திருக்கின்றேன். நன்றாகச் செல்லுங்கள், பாருங்கள். வாழ்க்கையை வேறு வேறு பரிமாணத்தில் அனுபவியுங்கள்.
இந்த மாதிரி போகின்றவர்களுக்கு 1 லக்ஷ ரூபாய் grant கொடுக்கின்றேன் ஐயா. நீங்கள் அதை வைத்து ஆரம்பித்தீர்களானால் போதும். அதற்குப் பிறகு தானாக பணம் வர ஆரம்பித்துவிடும் ஐயா.
Youtube channel நடத்திக்கொள்ளலாம், travel V-log பண்ணிவிடலாம், நிறைய பணம் வர ஆரம்பித்துவிடும், அங்கங்கு support கிடைக்கும்.
சும்மா இல்லை ஐயா… உலகம் நல்லது ஐயா... அதிலும் பாரதம் நல்ல நாடு ஐயா.
அண்ணாமலையான் இருக்கும் திருவண்ணாமலை வாழ்க! திருவண்ணாமலை இருக்கும் தமிழகம் வாழ்க! தமிழகம் இருக்கும் தென்னாடு வாழ்க! தென்னாடு இருக்கும் பாரதம் வாழ்க! பாரதம் இருக்கும் அகண்ட பாரதமே நீ வாழ்க! வாழ்க! வாழ்க!
நல்ல நாடு ஐயா, அதை நடந்து யாத்ரை பண்ணி அனுபவியுங்கள் ஐயா. அனுபவித்தீர்களானால், உடல்-மம் எல்லாம் detox-ஆகி... சத்தியமாக சொல்கிறேன் உங்கள் வாழ்க்கையில் 50 வருஷம் add ஆகிவிடும் ஐயா. Health, longevity, உயிரினுடைய freshness, மனதினுடைய freshness, experience, expertise…
உடல் நலம், மனநலம் மட்டும் இல்லை ஐயா… தைரியம், life-ஐ face பண்ணுகின்ற confidence.
பொருளை, செல்வத்தை உருவாக்குவது ரொம்ப casual-ஆக, jolly-யாக விளையாட்டுத்தனமாக செய்துவிடுவீர்கள் ஐயா. சின்னப்பிள்ளைத்தனமாக, விளையாட்டுத்தனமாக பொருளை, செல்வத்தை உருவாக்கிவிடுவீர்கள் ஐயா.
அவ்வளவு sweet-டான நட்புகள், relationships... ஐயா... showing off, இந்த internet-ல் வெறும் showing off பண்ணி உருவாக்குகின்ற friends, followers எல்லாம் நிற்காது ஐயா. ஒரு ஒரு இடமாகப் போய் showing up பண்ணி உருவாக்குகின்ற friends, relationship நிரந்தரமாக நிற்கின்றார்கள் ஐயா.
வாழ்க்கையில் எந்த சூழ்நிலையை வேண்டுமானாலும் handle பண்ணுகின்ற ஶக்தியையும், சாத்தியத்தையும் கொடுத்துவிடும் ஐயா. அதனால், அதனால்தான் திரும்பத் திரும்ப வாயைத் திறந்தால் 'பரிவ்ராஜகம் போ, பரிவ்ராஜகம் போ' என்று சொல்லிக்கொண்டிருக்கின்றேன்.
உங்களை ஏதோ துரத்திவிடவில்லை ஐயா… வாழ்க்கையின் ஒரு மிகப்பெரிய பரிமாணத்தை, உங்களுக்கு அனுபவமாகக் காட்டுவதற்காக அனுப்புகின்றேன் ஐயா. சென்றீர்களானால், இப்பொழுது நான் சொல்கின்ற இந்த ஸத்யங்களை எல்லாம், அப்படியே வாழ்ந்து பார்த்துவிடலாம் ஐயா. வாழ்ந்து பார்த்து அது நிஜம் என்று புரியும் ஐயா.
First, இந்த Gen Z-க்கு Face Book friends-ஐ மட்டும்தான் உருவாக்குகின்ற capacity இருக்கிறது. நேரில் ஒரு friendship-ஓ, relationship-ஓ உருவாக்குகின்ற capacity-யே இல்லை ஐயா. நேரில் யாரையாவது மக்களைப் பார்த்தால்கூட இந்த Face Book, internet-ஐ உட்கார்ந்து நோண்டிக்கொண்டு உட்கார்ந்துகொண்டு இருக்கிறார்கள். நேரில் relationship பண்ணாமல், நேரில் பேசாமல், பழகாமல், மலர்ந்து, கனிந்து, இனிமை மலராமல், இதை உட்கார்ந்து நோண்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
அளவுக்கு மீறிய distraction-ல்… Distraction-ஐ pleasure-என்று நம்புகின்றீர்கள். பயத்தைப் பாதுகாப்பு என்று நம்புகின்றீர்கள் ஐயா. 'பயம் பாதுகாப்பு கிடையாது. distraction pleasure கிடையாது', என்பது அனுபவ ஸத்யமாக, இந்த பரிவ்ராஜகம் சென்றீர்களானால் புரிந்துவிடும்.
இப்பொழுது நான் சொல்றேன் இல்லையா? உணர்வோடு கனவு நிலைக்குச் செல்லுங்கள், அதனால் நனவு நிலையில் பல ஸத்யங்கள் புரிந்து, சாத்தியங்கள் மலர்ந்து, ஶக்திகள் வெளிப்படத் துவங்கும். அது அடுத்தது, துரியமாக, துரியாதீதமாக மலரும்.
அது எப்படி? என்பதை நாளைய ஸத்ஸங்கத்தில் காண்போம்.
அதனால்... வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க பூதப் பரம்பரை பொலிய புனிதவாய் மலர்ந்து அழுதுவிட்டேன்.
புனிதவாய் மலர்ந்து அழுத - சீத வள வயர் புகலி திருஞான சம்பந்தரின் குரு பரம்பரையில் வந்ததனால், அவருடைய வாழும் வாரிசாக, பூதப் பரம்பரைப் பொலிய புனிதவாய் மலர்ந்து அழுகின்றேன். கேளுங்கள். இந்த ஸத்யங்களை வாழுங்கள்.
வாழ்வில் முழுமையும், வெற்றியும், ஆனந்தமும், பரமானுபூதியும் அடையுங்கள்.
பரமாத்வைத ப்ராப்திரஸ்து.
நித்யானந்தத்தில் நிலைத்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, எல்லோரும் நித்யானந்தமாகிட, ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள்.
Event Photos
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |



















































