Difference between revisions of "Jun 11 2025"
Testkailasa (talk | contribs) (Page created by automation script) |
Testkailasa (talk | contribs) |
||
| Line 6: | Line 6: | ||
==Transcript== | ==Transcript== | ||
| − | + | "ஒம் ஒம் | |
| − | + | நித்யானந்தேஷ்வர பரமசிவ சமாரம்பாம் | |
| + | நித்யானந்தேஷ்வரி பரமசிவசக்தி மத்யமாம் | ||
| + | அஸ்மதாசார்ய பர்யந்தாம் | ||
| + | வந்தே குருபரம்பராம் | ||
| − | + | ஒம் ஒம் ஒம் | |
| − | + | உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். | |
| − | + | உலகம் முழுவதிலும் இதயத்தாலும் இணையத்தாலும் இணைந்திருக்கும் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், கைலாஸவாசிகள், பல்துறை சிறப்பு சாதனையாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பல்வேறு தொலைக்காட்சிகள் வழியாக இணையத்தின் மூலமாகவும், இதயத்தின் மூலமாகவும் இணைந்திருக்கும் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கிறேன். | |
| − | + | இன்றைய தினம் - நித்யானந்த பௌர்ணமி. 36 ஆண்டுகளுக்கு முன்பு இதே நன்னாளில், | |
| + | 1989-இல் வைகாசி மாதம் - விசாக நக்ஷத்திரம் - பௌர்ணமி திதியோடு கூடிய நன்னாளில், மாலை நேரத்தில், பவழக்குன்றில்… திருவண்ணாமலையில் பவழக்குன்றில் அமர்ந்து, எனக்குள் என் மூலத்தை ஆழ்ந்து தேடிக்கொண்டிருக்கும்பொழுது, பரமசிவப் பரம்பொருள் தன்னையே வெளிப்படுத்தி என்னை அவருக்குள் ஈர்த்துக்கொண்டு, 'தான்' தானாய் விளங்கி பரமாத்வைதத்தை வெளிப்படுத்திய நன்னாள். பரமாத்வைதத்தை வெளிப்படுத்திய திருநாள். | ||
| − | + | இந்த நன்னாளில் கைலாயத்திருந்து எல்லோருக்கும் பரமசிவப் பரம்பொருளின் நேரடிச் செய்தி. | |
| − | + | பரமாத்வைதப் பிராப்திரஸ்து… | |
| − | அதுதான் உண்மை. சரியான ஆச்சாரியர்கள் சரியாக வருவார்கள். சரியான சித்தர்கள், ஞானிகள் சரியாக உங்கள் வாழ்க்கையில் வருவார்கள். யார் வரவேண்டுமோ வருவார்கள், எந்த சத்தியத்தை உங்களுக்குச் சொல்லவேண்டுமோ அதைச் சரியாகச் சொல்வார்கள். அதற்குப்பிறகு அவர் திடீரென்று இருக்கக்கூட மாட்டார்கள். சில நேரங்களில் அசரீரி மாதிரி வருவார்கள், உங்களுக்குச் சொல்ல வேண்டிய சத்தியத்தைச் சொல்வார்கள், அடுத்த ஒரு 5 நிமிடம், 10 நிமிடத்தில் திரும்பிச் சுற்றிப் பார்த்தீர்களானால் இருக்க மாட்டார்கள். இதெல்லாம் நிதர்சனமாக திருவண்ணாமலையிலே நடக்கின்ற ஒன்று. இன்னமும் நடந்துகொண்டே இருக்கின்ற ஒன்று. காலாவதி தேதியே (expiry date) இல்லாத பரமசிவப் பரம்பொருள் கொடுத்திருக்கின்ற உறுதி. அருணாசல புராணத்திலே, ''இந்த எல்லைக்குள்ளே… திருவண்ணாமலையில் வாழுகின்ற எல்லோருக்கும் பரமாத்வைத நிலையை அடைந்திட, அந்த அனுபூதியை அடைந்திட, என்னென்ன வேண்டுமோ சகலத்தையும் அவரே கொண்டுவந்து, என்னென்ன சாதனைகள் செய்ய வேண்டுமோ, அதற்குத் தேவையானவற்றையும் அவரே கொண்டுவந்து, அவரே அளித்து பரமாத்வைதத்தையும் அளித்து விடுவார்''. அதனால்தான் சொல்கிறேன், பரமாத்வைத நிலையை அடைய வேண்டும் என்று நினைக்கின்ற எல்லோரும், திருவண்ணாமலையில் சென்று வாழத்துவங்குங்கள். அருணாச்சல வாசம் மிக உயர்ந்த நன்மையை அளிக்கும். பலபேர் என்னுடைய பக்தர்கள்கூட என்னுடைய கைலாஸத்தில் வந்து இருக்க முடியவில்லை, வேறு வேறு காரணங்களுக்காக என்னுடைய கைலாஸ சங்கத்தோடு இருக்க முடியவில்லை என்றால்கூட, அவர்களுக்கு நான் சொல்வேன், ''அப்பொழுது அடுத்த choice, next choice என்னவென்றால், நேராக திருவண்ணாமலையில் சென்று இருங்கள். எக்காரணம் கொண்டும் திருவண்ணாமலை எல்லை தாண்டாதீர்கள்''. திருவண்ணாமலை எல்லை என்பது மூன்று யோஜனை தூரம், அண்ணாமலையார் ஆலயத்திலிருந்து மூன்று யோஜனை சுற்றளவு, அதுதான் திருவண்ணாமலை எல்லை. அதை தாண்டாதீர்கள். உங்களுக்குத் தேவையான அனைத்தையும் பெருமான் கொண்டுவந்து, அளித்து, அன்பாலும் அளித்து, அறக்கருணையும் தந்து, மரக்கருணையும் தந்து, தேவைப்பட்டால் மரக்கருணையும் காட்டுவார். அதாவது ferocious ஆகப் புரியவைப்பார். தாயைப்போல் கருணையும் காட்டி, தந்தையைப்போல் பாடமும் சொல்லி, அறக்கருணையும் காட்டி, மரக்கருணையும் காட்டி, சரியான தேவையான ஆன்மீக நூல்களை எடுத்து வருவார், ஆன்மீக குருமார்களை எடுத்து வருவார், தீக்ஷைக்கு சரியான தேவையானவைகளை எல்லாம் கொண்டு வருவார், முழுஞான இரசவாதத்தையும் அவரே செய்வார். ஆலயத்தை மையமாக வைத்து மூன்று யோஜனை தூரத்திற்குள் வாழத்துவங்குங்கள். அதைத் தாண்டாதீர்கள். பரமாத்வைத நிலைக்குத் தேவையான அத்துனையையும் அவர் கொண்டுவந்து கொடுத்து, பரமாத்வைதத்தையும் அவரே அளித்து விடுவார். | + | எல்லோருக்குள்ளும் பரமாத்வைதம் மலரட்டும், பரமாத்வைதம் மலரட்டும். |
| + | |||
| + | ஒம் ஒம் ஒம் | ||
| + | |||
| + | பரமாத்வைதப் பிராப்திரஸ்து... | ||
| + | |||
| + | ஒம் ஒம் ஒம் | ||
| + | |||
| + | பரமாத்வைதப் பிராப்திரஸ்து…. | ||
| + | |||
| + | உங்கள் எல்லோருக்குள்ளும் பரமாத்வைதம் மலரட்டும். | ||
| + | |||
| + | பரமாத்வைதம் என்றால் என்ன? | ||
| + | சற்று ஆழ்ந்து கேளுங்கள், இந்த பரமாத்வைதத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளுங்கள். | ||
| + | |||
| + | ஜீவன் - உங்களுடைய ஜீவன், உங்கள் உயிர் - ஜீவாத்மா | ||
| + | ஈஸ்வரன் - பரம்பொருள், பரமாத்மா | ||
| + | ஜகத் - இந்தப் பிரபஞ்சம். | ||
| + | ஜீவ, ஈஸ்வர, ஜகத். | ||
| + | |||
| + | வேறு வேறு சம்பிரதாயங்கள் இந்த ஜீவ, ஈஸ்வர, ஜகத்தைப் பற்றி வேறு வேறு விளக்கங்கள் அளிக்கின்றன. இவை மூன்றிற்கும் இருக்கின்ற உறவை, இவை மூன்றைப் பற்றிய அறிவை வேறு வேறு வார்த்தைகளால் வேறு வேறு விதத்தில் விளக்குகின்றன. வேறு வேறு விதமான தர்க்கம், தத்துவம் இவைகள் மூலமாக இந்த மூன்றைப் பற்றியும் விளக்க முயற்சிக்கின்றன. | ||
| + | |||
| + | ஒவ்வொரு சம்பிரதாயமும் சில தெளிவுகளை அளிக்கின்றது, சில கேள்விகளுக்கு பதிலளிக்கின்றது, பல பதில்களை கேள்வி கேட்கின்றது, சில பதில்களைத் தருகின்றது, பல கேள்விகளைத் தருகின்றன. அந்த கேள்விகளைத் தாங்கிக்கொண்டு நாம் நமக்குள் தேடும்பொழுதுதான், பரமசத்தியம் என்ன என்பது நமக்குள் அனுபூதியாக விளங்கும். | ||
| + | |||
| + | பரமாத்வைதம் என்பது முடிந்த முடிவாக, பரமசத்தியம் - அதாவது எவ்வாறு ஜீவன், ஈஸ்வரன், ஜகத் உள்ளது? | ||
| + | அவைகளுக்கு இடையிலே இருக்கின்ற உறவு என்ன? | ||
| + | இந்த சத்தியத்தை எப்படி அடைவது? | ||
| + | ஒவ்வொரு நிலையில்... வேறு வேறு நிலையில் இருக்கின்ற மனிதர்கள், அவரவர்கள் நிலையிலிருந்து எந்தெந்த சாதனைகள் வழியாக, என்ன மார்கத்தின் வழியாக, உயர்ந்து உயர்ந்து உயர்ந்து இந்த அறுதியான, உறுதியான, இறுதியான சத்தியமான பரமாத்வைதத்தை அனுபூதியாய் அடைந்து, அதை வெளிப்படுத்தி, அதிலேயே நிறைந்து வாழ முடியும்? என்கின்ற இந்த மொத்தமும் சேர்ந்ததைத்தான் 'பரமாத்வைதம்' என்று அழைக்கின்றேன். | ||
| + | |||
| + | ஆழ்ந்து கேளுங்கள்... ஜீவ, ஈஸ்வர, ஜகத் இந்த மூன்றிற்கும் இடையிலே இருக்கின்ற தொடர்பு, | ||
| + | இந்த மூன்றைப் பற்றியும் தெளிவான பரம சத்தியங்கள். அவைகளின் இருப்பு - தன்மை – வெளிப்பாடு, எவ்வாறு ஒன்றோடு ஒன்று இயங்குகிறது, இணைகின்றது, அவைகளின் இருப்பு எவ்வாறு இருக்கின்றது, இவைகளைப் பற்றிய அத்துனை பரம சத்தியங்கள் மற்றும் நீங்கள் இருக்கின்ற நிலையிலிருந்து மேம்பட்டு, மேம்பட்டு, மேம்பட்டு, இந்த இறுதி சத்தியமான அறுதி சத்தியமான பரமசத்திய நிலையை அடைவதற்கான வழிகள், நுட்பங்கள் இவை அனைத்தும் சேர்ந்து, இந்த முழுமையையும் ஒன்றாக 'பரமாத்தைவம்' என்கின்ற பெயரால் அழைக்கின்றேன். | ||
| + | |||
| + | அறுதியாக இறுதியாக இந்த மூன்றும் ஜீவ, ஈஸ்வர, ஜகத் - ஜீவாத்மா, பரமாத்மா, பிரபஞ்சம் இந்த மூன்றும், 'வேறுபாடு, ஒன்றாயிருத்தல்' என்கின்ற நிலைகளைக் கடந்த ஒரு | ||
| + | ஒருமைத்தன்மையில் இருக்கின்றது. 'வேறாய் இருப்பது, ஒன்றாய் இருப்பது' என்கின்ற வார்த்தைகளால்கூட விளக்க முடியாத, விளக்க இயலாத, இந்த வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட, | ||
| + | 'வாங் மனாதி கோசரம் ச நேதி நேதி பாவிதம்' - வாங் மன கோசங்களாலே சிந்திக்கவும், விளக்கவும், விவரிக்கவும் என்கின்ற நிலைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதாகவும், இவைகள் எல்லாவற்றிற்கும் மூலமானதாகவும், ஒருமைத்தன்மையாக இருக்கின்றது பரம்பொருள். | ||
| + | |||
| + | இன்னும் சில வார்த்தைகள் மூலமாக, ஆழ்ந்து சில சத்தியங்களை உங்களுக்குள் உள்வாங்கினீர்களானால், பரம்பொருளை அனுபூதியாகப் பற்ற இயலும். | ||
| + | |||
| + | உங்களுக்குப் பரம்பொருளை அனுபூதியாகக் காட்டக் கூடிய சில வார்த்தைகளை, | ||
| + | சில சத்தியங்களை இப்பொழுது உங்களோடுப் பகிர்ந்துகொள்கின்றேன், கேளுங்கள். | ||
| + | |||
| + | எனக்கு என்ன நடந்தது என்பதைப் பலமுறை விளக்கியிருக்கின்றேன். 1989 ஆம் ஆண்டு, வைகாசி மாதம் - விசாக நக்ஷத்திரம் - பௌர்ணமி திதியில், எனக்கு என்ன நடந்தது என்பதை பலவிதத்தில் பலவார்த்தைகளாலே, பல்வேறு தருணங்களில் விளக்கியிருக்கின்றேன். | ||
| + | |||
| + | இப்போது மீண்டும், இன்னும் ஆழமான சில சத்தியங்களின் மூலமாக, வார்த்தைகளின் மூலமாக விளக்க முயற்சிக்கின்றேன். அமைதியாக அமர்ந்து ஆழ்ந்து இதைக் கேளுங்கள். வார்த்தைகளைத் தாண்டி நான் வெளிப்படுத்துகின்ற இந்த சத்தியம், இந்த உணர்வு அலைகள் மூலமாக, இந்த உயிர் அலைகள் மூலமாக, இந்த ஆன்ம சக்தியின் மூலமாக, வார்த்தைகளை தாண்டி உங்களுக்குள் வந்து சேரும். | ||
| + | |||
| + | வார்த்தைகள் இங்கு பாத்திரம்தான் (container). அதற்குள் இந்த அனுபூதிதான் அமிர்தம் (content). அனுபூதி என்கின்ற அமிர்தத்தை, வார்த்தைகள் என்கின்ற பாத்திரத்திற்குள் வைத்து அனுப்புகின்றேன். ஆழ்ந்து அமைதியோடு கேளுங்கள், இந்த பாத்திரம் உள்ளே வரும்போது அமிர்தத்தை அது உங்களுக்குள் கொடுத்துவிடும். அந்த அனுபூதி தானாகவே மலர்ந்துவிடும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், 1989 ஆம் ஆண்டு, வைகாசி விசாகம், பௌர்ணமி திதி அன்று என்ன நடந்தது என்கின்ற தெளிந்த விளக்கத்தைச் சொல்கின்றேன். | ||
| + | |||
| + | அந்த நாளுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு, அந்த வைகாசி விசாகம் - அதாவது நாங்கள் இப்பொழுது நித்யானந்த பௌர்ணமி என்று கொண்டாடுகின்ற இந்த பௌர்ணமிக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக, இரமண மகரிஷியினுடைய ஞானமடைந்த சீடர்களில் ஒருவரான அண்ணாமலை சுவாமிகளுடைய சத்சங்கம். சத்சங்கம் என்றால் சென்று அமர்வோம். யாராவது கேள்வி கேட்பார்கள், அவருக்குத் தோன்றும்பொழுது பதில் சொல்வார். இல்லையென்றால் அமைதியாக அமர்ந்திருப்பார். அந்த மாதிரி ஒரு intimate ஆன talks. | ||
| + | |||
| + | அருகாமையிலிருந்து, அவர்கள் திருவடியில் அமர்ந்து அவர்களிடமிருந்து நேரடியாக இந்த ஞானக்கருத்துக்களை, சத்தியத்தைக் கேட்கின்ற பாக்கியத்தை அண்ணாமலையான் அளித்தான். அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், திருவண்ணாமலை ஒரு சாதாரண ஊர் இல்லை. அது பரமசிவப் பரம்பொருளின் திருமேனி. அவரே பிரத்யக்ஷமாக இருக்கின்றார். அவருடைய breathing space அது. அவருடைய ஞானச்சூழல், அவருடைய இருப்பு. | ||
| + | |||
| + | எத்துனைமுறை விவரித்தாலும், எத்துனைமுறை வர்ணித்தாலும், எத்துனை வார்த்தைகளால் சொல்ல முயற்சித்தாலும் விளக்கவொண்ணாத, சொல்லவொண்ணாத ஸ்வயம்பிரகாசப் பரஞ்ஜோதிப் பரம்பொருள். அண்ணாமலையானே, அந்த மலையே பரமசிவப் பரம்பொருளின் திருமேனி. ஒரு வாழ்கின்ற ஞானகுருவைவிட அதிகமான நன்மை அளிக்கக்கூடியது திருவண்ணாமலையின் எல்லைக்குள்ளே வாழ்வது. காரணம் என்னவென்றால், நமக்கு என்ன வேண்டுமோ... நம்முடைய சாதனையிலே, நாம் அந்த பரமாத்வைத நிலையை அடைவதற்கு, நமக்கு நாம் இருக்கின்ற நிலையிலிருந்து, அடுத்த நிலைக்குச் செல்வதற்கு நமக்கு என்ன வேண்டுமோ, அது குருமார்களோ, புத்தகங்களோ, ஆச்சாரியர்களோ, சூழ்நிலையோ என நமக்கு என்ன வேண்டுமோ, பெருமானே correct ஆக அதை எடுத்து வந்துக் கொடுத்து, சரியான அந்த ஞான இரசவாதத்தை நமக்குள் நிகழவைத்து, அவரே பரமாத்வைதத்தை மலரச்செய்து விடுவார். | ||
| + | |||
| + | அதனால் திருவண்ணாமலையில் வாழுகின்ற எல்லோரும் புரிந்துகொள்ளுங்கள், பிரத்யக்ஷமாக பரமசிவப் பரம்பொருள் அருணாச்சலமாக வீற்றிருக்கின்றார். அதனால்தான் அவர் சொல்கிறார் அருணாச்சல புராணத்தில், ''இந்த எல்லைக்குள்ளே இருப்பவர்களுக்கு தனியாக தீக்ஷை போன்ற வேற எதுவுமே தேவையில்லை. எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்கின்றார். அதுதான் உண்மை. சரியான ஆச்சாரியர்கள் சரியாக வருவார்கள். சரியான சித்தர்கள், ஞானிகள் சரியாக உங்கள் வாழ்க்கையில் வருவார்கள். யார் வரவேண்டுமோ வருவார்கள், எந்த சத்தியத்தை உங்களுக்குச் சொல்லவேண்டுமோ அதைச் சரியாகச் சொல்வார்கள். அதற்குப்பிறகு அவர் திடீரென்று இருக்கக்கூட மாட்டார்கள். சில நேரங்களில் அசரீரி மாதிரி வருவார்கள், உங்களுக்குச் சொல்ல வேண்டிய சத்தியத்தைச் சொல்வார்கள், அடுத்த ஒரு 5 நிமிடம், 10 நிமிடத்தில் திரும்பிச் சுற்றிப் பார்த்தீர்களானால் இருக்க மாட்டார்கள். இதெல்லாம் நிதர்சனமாக திருவண்ணாமலையிலே நடக்கின்ற ஒன்று. இன்னமும் நடந்துகொண்டே இருக்கின்ற ஒன்று. | ||
| + | காலாவதி தேதியே (expiry date) இல்லாத பரமசிவப் பரம்பொருள் கொடுத்திருக்கின்ற உறுதி. அருணாசல புராணத்திலே, ''இந்த எல்லைக்குள்ளே… திருவண்ணாமலையில் வாழுகின்ற எல்லோருக்கும் பரமாத்வைத நிலையை அடைந்திட, அந்த அனுபூதியை அடைந்திட, என்னென்ன வேண்டுமோ சகலத்தையும் அவரே கொண்டுவந்து, என்னென்ன சாதனைகள் செய்ய வேண்டுமோ, அதற்குத் தேவையானவற்றையும் அவரே கொண்டுவந்து, அவரே அளித்து பரமாத்வைதத்தையும் அளித்து விடுவார்''. | ||
| + | |||
| + | அதனால்தான் சொல்கிறேன், பரமாத்வைத நிலையை அடைய வேண்டும் என்று நினைக்கின்ற எல்லோரும், திருவண்ணாமலையில் சென்று வாழத்துவங்குங்கள். அருணாச்சல வாசம் மிக உயர்ந்த நன்மையை அளிக்கும். பலபேர் என்னுடைய பக்தர்கள்கூட என்னுடைய கைலாஸத்தில் வந்து இருக்க முடியவில்லை, வேறு வேறு காரணங்களுக்காக என்னுடைய கைலாஸ சங்கத்தோடு இருக்க முடியவில்லை என்றால்கூட, அவர்களுக்கு நான் சொல்வேன், ''அப்பொழுது அடுத்த choice, next choice என்னவென்றால், நேராக திருவண்ணாமலையில் சென்று இருங்கள். எக்காரணம் கொண்டும் திருவண்ணாமலை எல்லை தாண்டாதீர்கள்''. திருவண்ணாமலை எல்லை என்பது மூன்று யோஜனை தூரம், அண்ணாமலையார் ஆலயத்திலிருந்து மூன்று யோஜனை சுற்றளவு, அதுதான் திருவண்ணாமலை எல்லை. அதை தாண்டாதீர்கள். உங்களுக்குத் தேவையான அனைத்தையும் பெருமான் கொண்டுவந்து, அளித்து, அன்பாலும் அளித்து, அறக்கருணையும் தந்து, மரக்கருணையும் தந்து, தேவைப்பட்டால் மரக்கருணையும் காட்டுவார். அதாவது ferocious ஆகப் புரியவைப்பார். தாயைப்போல் கருணையும் காட்டி, தந்தையைப்போல் பாடமும் சொல்லி, அறக்கருணையும் காட்டி, மரக்கருணையும் காட்டி, சரியான தேவையான ஆன்மீக நூல்களை எடுத்து வருவார், ஆன்மீக குருமார்களை எடுத்து வருவார், தீக்ஷைக்கு சரியான தேவையானவைகளை எல்லாம் கொண்டு வருவார், முழுஞான இரசவாதத்தையும் அவரே செய்வார். ஆலயத்தை மையமாக வைத்து மூன்று யோஜனை தூரத்திற்குள் வாழத்துவங்குங்கள். அதைத் தாண்டாதீர்கள். பரமாத்வைத நிலைக்குத் தேவையான அத்துனையையும் அவர் கொண்டுவந்து கொடுத்து, பரமாத்வைதத்தையும் அவரே அளித்து விடுவார். | ||
| + | பிரத்யஷமாக பெருமான் வாழுகின்ற, திருமேனி தாங்கி வாழுகின்ற ஸ்தலம் - அருணாச்சலம். | ||
| + | இதை பலமுறை சொல்லியிருக்கின்றேன், மீண்டும் ஒருமுறை சொல்கின்றேன், | ||
| + | அருணாச்சல வாசமே பரமாத்வைதத்தை அளித்து விடும். | ||
| + | |||
| + | அண்ணாமலையான், அருணாச்சல பரம்பொருள், எனக்கு என்னென்னெல்லாம் எந்தந்த நேரத்தில் வேண்டுமோ, அதாவது யோகத்தின் மூலமாக என் உடலை தயார்படுத்துவதற்கு சரியான யோககுருவை கொண்டு வருவார். வேதாந்தத்தைக் கற்றுக்கொடுக்க சரியான குருவைக் கொண்டு வருவார். எந்தெந்த சாஸ்த்திரங்களை எந்தெந்த ஞானத்தை எனக்கு அளிக்க வேண்டுமோ, பரமாத்வைதத்தை நான் அனுபூதியாக அடைய என்னவெல்லாம் கொடுக்க வேண்டுமோ, அந்தந்த குருமார்களை - சரியான குருமார்களை சரியாகக் கொண்டுவந்து, முறையாகப் பயிற்றுவித்து, அந்த இரசவாதங்களை நிகழ்த்தி, அந்த ஞானத்தையும் மலரச் செய்துவிடுவார். என் வாழ்க்கையில் அதைத்தான் செய்தார். | ||
| + | |||
| + | திரும்பிப் பார்த்து என்னுடைய வாழ்க்கையை ஒரு வார்த்தையில் எழுத வேண்டுமென்றால், 'அருணாச்சலம்'. இந்த ஒரு வார்த்தையில் மொத்தத்தையும் எழுதிவிடலாம். | ||
| + | |||
| + | இன்னமும் பெருமான் பிரத்யக்ஷமாக இருந்துகொண்டு, ஆன்மீக சாதகர்களுக்கு என்னென்னவெல்லாம் வேண்டுமோ, அதாவது ஞானக்கருத்துக்கள், ஞானகுருமார்கள் ஞானரசவாதத்தை அளிக்கும் சித்தர்கள் என யார் யார் வரவேண்டுமோ, அவர்களை சரியாக அழைத்துவந்து, ஒரு சாதகனுக்கு அந்தந்த சூழ்நிலைகளிலே அந்தந்த தேவைப்பட்டதை எல்லாம் கொடுத்து, தாயினும் சாலப்பரிந்து, கொடுத்து, அவனை பரமாத்வைத நிலைக்கு உயர்த்தி, பரமாத்வைதத்தை அளித்து விடுகின்றார். அதில் சந்தேகமே இல்லை. | ||
| + | |||
| + | யாருக்கெல்லாம் என் வார்த்தைகள் மீது நம்பிக்கையோ, சிரத்தையோ, மரியாதையோ இருக்கின்றதோ, அவர்கள் எல்லோருக்கும் சொல்கின்றேன், ''வேறு வேறு காரணங்களினால் கைலாயத்தில் வந்து என்னுடைய கைலாய சங்கம் - நித்யானந்த சங்கத்தோடு வாழ இயலவில்லை'' என்று நினைப்பவர்கள் எல்லோரும் கவலையேப்படாதீர்கள். திருவண்ணாமலைக்குச் சென்று மூன்று யோசனை தூரத்திற்குள்ளாக, மூன்று யோசனை சுற்றளவு அதற்குள்ளாக வாழுங்கள். பரமசிவப் பரம்பொருள் அங்கு பிரத்யக்ஷமாக இருந்து அத்துனை நன்மையும் உங்களுக்குச் செய்துவிடுவார். | ||
| + | |||
| + | எந்தெந்த விதத்திலெல்லாம் என்னென்னவெல்லாம் உங்களுக்குக் கொண்டுவந்து கொடுக்க வேண்டுமோ, அத்துனையையும் கொண்டுவந்து உங்களுக்குப் பரமாத்வைத நிலையை அளித்துவிடுவார். அது ஜீவன் முக்தபுரி. பெருமான், கேட்ட வரமெலாம் கொடுக்கவும், எதுவும் கேளாத ஜீவன் முக்த நிலையைக் கொடுக்கவும், பரமாத்வைதத்தை எல்லோருக்கும் அளிக்க, அவர் பிரத்யக்ஷமாக விளங்குகின்ற ஷேத்திரம் திருவண்ணாமலை. | ||
| + | |||
| + | என் வாழ்க்கையில் நடந்த எல்லா நன்மைக்கும் காரணம் என்று நான் திரும்பிப் பார்தேன் என்றால், ஒரே ஒரு காரணம்தான் நான் சொல்லவேண்டும் என்று நீங்கள் கேட்டால், அது 'திருவண்ணாமலை' என்ற வார்த்தையைத்தான் நான் சொல்வேன். 'அருணாச்சலம்' என்பதுதான் ஒரே காரணம். ஏனென்றால், என் வாழ்க்கையில் நடந்த எல்லா நன்மைகளையும் எனக்கு அளித்த எல்லா குருமார்களும், ஞானப் பரம்பரையும், தானாகவே சரியான நேரத்திற்கு திருவண்ணாமலைக்கு வந்து எனக்கு அளித்தார்கள். | ||
| + | |||
| + | சில நேரத்தில் ஏதோ ஒரு ஊரிலிருந்து, ஏதோ ஒரு வடதேசத்திலிருந்து அல்லது ஏதோ ஒரு பக்கத்திலிருந்து வந்து, எனக்குத் தேவையான அந்த தீக்ஷைகளைக் கொடுத்து, அனுபூதியைக் கொடுத்து, என்னை அடுத்த நிலைக்குக்கொண்டு சென்றுவிட்டு, மறுநாள் சென்று அவர்களைத் தேடினால் இருக்க மாட்டார்கள், காணாமல் போயிருப்பார்கள். எங்கு சென்றார்கள் என்று தெரியாது. | ||
| + | |||
| + | சில நேரத்தில் கண் முன்னால் தோன்றி… இது உண்மையிலேயே நடந்த ஒரு நிகழ்வு. கௌதம மகரிஷி கண் முன்னால் தோன்றி அருளாசிகளைத் தந்துவிட்டு, கண் முன்னாலேயே மறைந்தார்! | ||
| + | சத்தியம் சொல்கின்றேன், பொய் புகலேன்! | ||
| + | |||
| + | நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களை எந்தவிதத்திலும் பொய் சொல்லி ஏமாற்றவேண்டிய எந்த அவசியமும் எனக்கில்லை. | ||
| + | உங்கள் பணம் எனக்குத் தேவையில்லை, | ||
| + | உங்கள் ஓட்டு எனக்குத் தேவையில்லை. | ||
| + | ஒருவேளை எனக்கு உங்கள் ஓட்டு வேண்டாம் என்றால்கூட, யாராவது ஒரு கட்சிக்கோ அல்லது வேறு ஏதாவது ஒரு கருத்தியலிற்கு (ideology) நான் உங்களை உத்சாகப்படுத்தி, அந்தக் கட்சிக்கு ஓட்டு வாங்கித் தரவேண்டும் என்ற கட்டாயமும் எனக்கு இல்லை. அல்லது ஒரு கருத்தியல் - இடது சாரி, வலது சாரி, நடுநிலையாளர்கள் என்ற ஏதோ ஒரு கருத்தியலைப் பரப்ப வேண்டும் என்கின்ற கட்டாயமும் எனக்கு இல்லை, தேவையும் இல்லை. எதுவுமே எனக்குத் தேவையில்லை. நீங்கள் என்னை பயமுறுத்தவும் முடியாது, நீங்கள் எனக்கு எதுவும் கொடுக்கவும் முடியாது, என்னை பயமுறுத்தவும் முடியாது. | ||
| + | |||
| + | நாம் பேசுவதற்கான ஒரே காரணம், பரம சத்தியத்தை உள்ளது உள்ளபடி உலகத்திற்குச் சொல்லிவிட வேண்டும் என்பதற்காகத்தான். அதனால்தான் சொல்கிறேன் கேளுங்கள், நான் இப்பொழுது சொல்வது எல்லாமே பரம சத்தியம். | ||
| + | |||
| + | இப்பொழுது, ''கௌதம மகரிஷி நேரடியாக வந்தார், தரிசனம் கொடுத்துவிட்டு மறைந்தார்'' என்று நான் சொன்னேன் என்றால், நான்குபேர் ட்ரோல் செய்வார்களா, அதைப் பற்றிக் கவலையே கிடையாது. என்னை இதற்குமேல் என்ன ட்ரோல் செய்யமுடியும்? | ||
| + | |||
| + | எந்த கேலி - கிண்டல் எதற்கும் பயப்படவும் மாட்டேன், மயங்கவும் மாட்டேன். | ||
| + | ஆசை அச்சம் இரண்டுமே இல்லாத, இரண்டாலும் கட்டுப்படுத்த முடியாத பரம சத்தியத்தை உள்ளது உள்ளபடி சொல்வதற்காகவே பேசுகின்றேன். பூதப் பரம்பரை பொலியவே பெருமான் புனிதவாய் மலரவைக்கின்றார். | ||
| + | வேதநெறி தழைத்தோங்க | ||
| + | மிகுசைவதுறை விளங்க | ||
| + | பூதப் பரம்பரை பொலிய | ||
| + | பரம சத்தியங்கள் விளங்க… பெருமான் திருவாய்மலர்ந்து பேசவைக்கின்றார். எந்த ஆசையாலும், அச்சத்தாலும் கட்டுப்படுத்த முடியாதவன். | ||
| + | |||
| + | சத்தியத்தை அப்படியே சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள், யார் யாருக்கெல்லாம் ஜீவன் முக்தியும், பரமாத்வைதமும் மிகவும் தீவிரமான தேவையோ, அதாவது உங்களுடைய ஒரு ஞானத் தேடுதல் மிகவும் தீவிரமான விஷயம், நீங்கள் அதை மிகவும் தீவிரத்தன்மையுடன் எடுத்துக்கொள்கின்றீர்கள், உண்மையிலேயே இந்த ஜென்மத்திற்குள் அடைந்துவிடவேண்டும் என்று நினைக்கிறீர்கள், இந்தப் பிறவியில் தவறவிட்டுவிடக்கூடாது என்று நினைக்கின்றீர்கள் என்றால், ஜீவன் முக்தியும், பரமாத்வைதமும் உங்கள் வாழ்க்கையில் முதல் முன்னுரிமை (first priority) என்று நினைத்தீர்களென்றால் கவலையேப்படாதீர்கள், எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு திருவண்ணாமலைக்கு இடம்பெயர்ந்துவிடுங்கள். சென்று திருவண்ணாமலையின் மூன்று யோஜனை தூரத்திற்குள் வாழுங்கள். அது பெருமானுடைய breathing space, அவருடைய energy field, அவருடைய சக்தி மண்டலம். | ||
| + | |||
| + | வார்த்தைகள் பொங்குகின்றன… அதை முறையாக வடித்து உங்களுக்குச் சொல்வதற்காக, சில நிமிடங்கள் எடுத்துக்கொள்கின்றேன். அந்த உணர்வு பொங்குவது… அதை எத்துனை வார்த்தைகளால் வடிப்பது என்று பார்க்கிறேன். | ||
| + | |||
| + | அருணாச்சல ஷேத்திரத்தைப் பற்றி, திருவண்ணாமலைப் பற்றி நான் சொன்னால்தான், இந்த அனுபூதியைப் பற்றி என்னால் விளக்க முடியும். | ||
| + | |||
| + | வள்ளர் பெருமான், அவருடைய காலத்திற்குப் பிறகு அவரை எல்லாரும் 'வடலூர் வள்ளலார் வடலூர் வள்ளலார்' என்று அழைக்கின்றார்கள். அவர் இருந்த காலத்திலே எப்போதுமே 'சிதம்பரம் இராமலிங்கம், சிதம்பரம் இராமலிங்க அடிகள்' என்றுதான் கையெழுத்துப் போடுவார். நீங்கள் அவருடைய எந்த ஆவணத்தை வேண்டுமானாலும் எடுத்து புரட்டிப் பாருங்கள், 'சிதம்பரம் இராமலிங்கம்' என்று மட்டும்தான் அவர் கையெழுத்திட்டிருப்பார். அவர் காலத்திற்கு பிறகு அவரை மக்கள், பக்தர்கள், 'வடலூர் வள்ளலார்' என்று அழைக்கத் துவங்கிவிட்டார்கள். நான் ஒருமுறை யோசித்தேன், ''ஆஹா! நம்மையும் 'கைலாஸா நித்யானந்தா கைலாஸா நித்யானந்தா' என்று அழைக்கத் துவங்கிவிடுவார்களே'' என்று. பெருமான் உடனே சொன்னார், ''இல்லையப்பா கவலைப்படாதே அதனால்தான் உனக்கு இயற்பெயரிலேயே, அப்பா பெயர் அருணாச்சலம், அப்பாவினுடைய அப்பா – தகப்பனாருடையத் தகப்பனார், பாட்டனார் பெயர் அண்ணாமலை. 'அண்ணாமலை அருணாச்சலம்' இந்த இரண்டு வார்த்தையையும் என் பெயரிலிருந்து பிரிக்கவே முடியாதபடி, இயற்பெயரிலேயே இதை இணைத்து வைத்துவிட்டார். அதனால் பெருமான் கொடுத்த பெருவரம். எக்காலத்தும், 'அண்ணாமலை அருணாச்சலம் நித்யானந்தா' என்பதுதான் நிரந்தரமாக இருக்கும், அதை மாற்ற முடியாது. அருணாச்சலத்தாலே அருணாச்சலத்திருந்து அருணாச்சலமே உருவாக்கிக்கொண்டதுதான் - நித்யானந்தர். | ||
| + | |||
| + | ஜீவன்முக்தியும், பரமாத்வைதமும், ஞானமும் உங்கள் வாழ்க்கையில் ஒரு தீவிரமானத் தேடுதல் என்றால், தயவுசெய்து திருவண்ணாமலைக்கு இடம்பெயர்ந்து விடுங்கள். அந்த மூன்று யோஜனை தூரம் எல்லையைத் தாண்டாதீர்கள், தவறிக்கூட தாண்டாதீர்கள். என்ன வேண்டுமோ அதைக் கொடுத்து விடுவார். அந்த பரமாத்தைவ அனுபூதி வந்த பிறகு அவரையே வழிநடத்துவார். அதற்குப் பிறகு நீங்கள் எங்கு செல்லவேண்டும், எங்கு வரவேண்டும் அதெல்லாம் வழிநடத்துவார். அதற்குப் பிறகு செல்லாமல் இருக்கவேண்டும் என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். | ||
| + | |||
| + | அதற்குப் பிறகு, 'செல்வது, செல்வதில்லை' என்கின்ற அந்த இதுவே இருக்காது. ஏனென்றால் அவர் உங்களுக்குள் நிகழ்ந்து விடுவார். நீங்கள் எங்கு சென்றாலும் அண்ணாமலையைத் தூக்கிக்கொண்டேச் செல்வீர்கள். நீங்கள் எங்கு சென்றாலும் திருவண்ணாமலை உங்களுக்குள் இருக்கப்போகின்றார். அதனால் அதற்குப் பிறகு திருவண்ணாமலையை விட்டு விலகுவது என்ற பேச்சே இல்லை. | ||
| + | |||
| + | முதலில் நீங்கள் திருவண்ணாமலைக்குச் செல்லுங்கள், அதற்குப் பிறகு அவர் உங்களுக்குள் வந்துவிடுவார். அவர் உங்களுக்குள் வந்துவிட்டு இந்த பரமாத்வைதம் நிகழ்ந்துவிட்டால், அதற்குப் பிறகு நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள், எங்கு செல்கின்றீர்கள், எங்கு வருகின்றீர்கள் என்பதைப் பற்றி எந்த வேறுபாடும் இல்லை. ஏனென்றால், எங்கு உங்களுடைய உடல் நகர்ந்தாலும், அவரை நீங்கள் சுமந்துகொண்டு செல்கின்றீர்கள். அதனால் நீங்கள் இருக்கின்ற இடம் முன்று யோஜனை தூரம் அவருடைய எல்லையாக மாறிவிடுகின்றது. | ||
| + | |||
| + | அண்ணாமலை சுவாமிகள், ஒரு சாதாரணமான உரையாடலில் - நெருக்கமான உரையாடல் | ||
| + | (intimate talks) சத்சங்கத்தில், 'நாம் உடல் இல்லை, நாம் உடல் - மனம் கடந்த ஆன்மா' என்று சொல்லிக்கொண்டிருந்தார். | ||
| + | |||
| + | நான் சின்னப் பையன், அதனுடைய சத்தியத்தை உணரவேண்டும் என்கிற ஆழமானத் தேடுதல் இருந்தது, ஆனால் அதை எப்படி உணரவேண்டும் என்றுத் தெரியவில்லை. வீட்டுக்குச் சென்று அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தேன். ''நாம் உடல் இல்லை என்று சொல்கிறாரே, அப்பொழுது இந்த உடலை ஒரு வெட்டு வெட்டினால் அல்லது ஏதாவது செய்தால் வலிக்கிறதே, நாம் உடல் இல்லை என்றால் வலிக்கக் கூடாது தானே? சரி முயற்சி செய்து பார்ப்போம்'' என்று, 'நான் உடல் இல்லை' என்று ஆழமாக நினைத்துக்கொண்டே, வீட்டில் என் அப்பா - தந்தையார் சவரம் செய்வதற்காக வைத்திருந்த பிளேடை எடுத்து, 'சவரக் கத்தி' என்று சொல்வார்கள், அந்த காலத்திலெல்லாம் வீட்டில் சவரம் செய்வதற்கு உபயோகப்படுத்துவது. அதை எடுத்து தொடையில் கிழித்துப் பார்த்தேன். உண்மையை அப்படியேச் சொல்கிறேன், வலி இருந்தது, இரத்தம் வரத் துவங்கிவிட்டது. அம்மா பார்த்துவிட்டு, வீட்டிற்கு முன்பாகவே... வீட்டிற்கு எதிர்வீடே ஒரு மருத்துவர் இருந்தார். டாக்டர் திரு.கருணாநிதி என்பவர், இன்னமும் இருக்கின்றார், திருவண்ணாமலையில்தான் இருக்கிறார். அவரும், அவருடைய குடும்பம் எல்லோரும் இருக்கிறார்கள். அவரிடம்தான் அழைத்துச்சென்றார்கள். அவர் மருத்துவர் மட்டுமல்ல, குடும்ப நண்பரும்கூட. உடனே தையல் எல்லாம் போட்டு சரி செய்துவிட்டு, ''ஏன்டா இப்படி செய்தாய்?'' என்று பரிவோடு விசாரித்து மருத்துவரீதியாக என்ன செய்யவேண்டுமோ, செய்து அனுப்பிவிட்டார். ஆனால் எனக்கு இந்த சத்தியத் தேடுதல்… அது உள்ளுக்குள் உருத்திக்கொண்டே இருக்கிறது. ''இந்த உடல் நாம் இல்லை என்றால் வலி தெரியக்கூடாது தானே? வலி தெரிகிறதே, அப்படியென்றால் எப்படி, இது என்ன?'' என்று மீண்டும் அண்ணாமலை சுவாமியிடம் சென்றேன். அவர் ஒரு சிறு புன்னகை செய்துவிட்டு, ''தேடு, இந்த வலி எங்கிருந்து வருது? | ||
| + | இந்த வலி யாருக்கு? இந்த உடல் நாம் என்று நீ நினைக்கிறாயே அது யாரு? என்று தேடு, தெரியும்'' என்று சொல்லிவிட்டார். | ||
| + | |||
| + | முக்கியமாக அவர் சொன்ன அதே வார்த்தை, ''இந்த வலி யாருக்கு என்று தேடு, இந்த வலியை யார் உணர்கிறார்கள் என்று தேடு'' என்றார். அதையே உள்வாங்கிக்கொண்டு, குருவாக்காக உள்ளெடுத்துக்கொண்டு, இந்த பௌர்ணமி அன்று பவழக்குன்றிலே அமர்ந்து அதைத்தான் தேடிக்கொண்டு இருந்தேன். | ||
| + | |||
| + | 'நான் நான் நான்' என்று எனக்குள் விளங்குவது எது? | ||
| + | எது இந்த வலியையும், சுகத்தையும், இருப்பையும் உணருகின்றது? | ||
| + | ஒரு அழகான.. ஒரு வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால், ''வலது தொடையில் அடிபட்டு வீழ்ந்தான் துரியோதனன், வலது தொடையில் அடிபட்டு மரணமடைந்தான் துரியோதனன். | ||
| + | வலது தொடையை கிழித்து வாழ்ந்தார் நித்யானந்தர், வலது தொடையை கிழித்ததன் மூலமாக மரணமிலாப் பெருநிலையை அடைந்தார் நித்யானந்தர்'' என்று சொல்லலாம். | ||
| + | |||
| + | இன்னும் அந்த வலது தொடையில் அந்தக் காயம் இருக்கிறது, அதற்குத் தையல் போட்ட மருத்துவர் இன்னமும் இருக்கின்றார். திருவண்ணாமலையில் டாக்டர் திரு.கருணாநிதி அவர்கள். | ||
| + | அவருடைய மருத்துவமனை அதே இடத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை. நித்யானந்த ஜென்ம பூமி - நான் பிறந்த அந்த வீட்டிற்கு நேர் எதிரில் அவருடைய மருத்துவமனை இருந்தது. | ||
| + | |||
| + | வைகாசி விசாகப் பௌர்ணமி அன்று அமர்ந்து, 'எங்கிருந்து அது வருகின்றது, 'நான்' என்ற உணர்வு எங்கிருந்து வருகின்றது?' என்று ஆழ்ந்து நோக்கினேன். | ||
| + | |||
| + | பெருமானே, அண்ணாமலையானே, அருணாச்சலப் பரம்பொருளே, வெளியில் அண்ணாமலை சுவாமிகளாக - குருவாகத் தோன்றி எனை உள்ளே செலுத்தினார். உள்ளே அவரே இருந்து ஈர்த்துக்கொண்டு, ஈர்த்து எனை ஆண்டார். உள்ளே இழுத்துக்கொண்டு, என்னை விழுங்கி 'தான்' தானாய் நின்றார். 'தான்' தானாய் வெளிப்பட்டு, 'நான் - எனது' என்கின்ற உணர்வு இல்லாத 'தான்' எனும் பரமசிவப் பரம்பொருள் பரமாத்வைதத்தில் நிறைந்து நின்றார். | ||
| + | |||
| + | அந்த நிலை, அது ஒரு star gate மாதிரி just உள்ளே இழுக்கப்பட்டது. உங்களுக்கெல்லாம் புரிகின்ற விதத்திலே சில வார்த்தைகளைச் சொல்ல முயற்சிக்கின்றேன். இந்தத் திரைப்படங்களில் எல்லாம் காட்டுகிறார்கள் இல்லையா, வேறு ஒரு பரிமாணம் திறக்கின்றது, star gate dimension என்றெல்லாம் சொல்கிறார்கள் இல்லையா, அது மாதிரி இன்னோரு பரிமாணம் (dimension) திறந்தது. | ||
| + | |||
| + | நீங்கள் எப்படி கனவு நிலையிலே கண்ட எல்லாமும் நினைவில் இருக்காது, கனவிலிருந்து வெளியில் வரும்பொழுது கடைசியாக என்ன காண்கின்றீர்களோ, அந்த சிலதுதான் நினைவில் இருக்கும். அதை மட்டும்தான் சொல்ல முடியும். அதுமாதிரி அந்த அனுபூதியிலே முழுமையாக என்ன நடந்தது என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது, அதிலிருந்து மெதுவாக நான் settle ஆகும்பொழுது என்ன நடந்தது என்று சொல்கின்றேன். | ||
| + | |||
| + | நான் மலையில், அந்தப் பவழக்குன்று பாறையில் அமர்ந்துகொண்டிருந்தேன். எனக்கு முன்னால் அந்த பெரிய அண்ணாமலை, பின்பக்கம் பவழக்குன்று கோவில், பவழக்குன்று அர்த்தநாரீஸ்வரர் கோவில். இடதுகைப் பக்கம் அண்ணாமலையார் ஆலயம். இது மொத்தமும்… அந்தக் காலத்தில் அந்த இடம் காலியாக மலையாகத்தான் இருந்தது. அங்கு அவ்வளவு வீடுகள் நிறைய கிடையாது. ஒரே ஒரு கட்டிடம்தான் இருந்தது, அது என்னுடைய குரு இசக்கி சுவாமிகளும், குப்பம்மாளும் இரண்டு பேரும் சேர்ந்து எனக்காகக் கட்டிய ஒரு சிறு ஆசிரமம். அதாவது ஆசிரமம் என்றால் பெரிய கட்டிடம் எல்லாம் கிடையாது. என்னை சமாதியில், அதாவது எப்பொழுதும் நிர்விகல்ப சமாதியில் அமரவைப்பதற்கு, என்னைப் பயற்சி செய்வதற்காக ஒரு சிறிய கட்டிடத்தைக் கட்டினார்கள். அங்குதான் நீண்ட நாட்கள் சமாதியில் அமரவைத்துப் பயிற்சி செய்வதற்குப் பயிற்சி கொடுப்பார்கள். அங்கு வேறு எதுவும் இருக்காது, எல்லாம் வெட்ட வெளியாக இருக்கும். இந்த 8 திசையும்… அதற்குப் பிறகு நான் அமர்ந்திருந்தப் பாறையின் கீழே, மேலே ஆகாசம், இது அத்துனையும் 'நான் நான் நான்' என்றே உணர்ந்தேன். | ||
| + | |||
| + | அதாவது இந்த உடலிற்குள் நீங்கள் எல்லாம் எவ்வளவு அழமாக உங்களை உணர்கின்றீர்களோ, அதேபோல அதைவிட அழமாக, பல மடங்கு அதிகமாக, என் இருப்பை எல்லாவற்றிலும் உணர்ந்தேன். பெருமான் வந்து 'தானே எல்லாமாகவும் இருக்கின்றார்' எனும் தன் இருப்பை மொத்தமாகக் காட்டினார். அதாவது நான் கண்களை மூடியிருக்கின்றேன், ஆனால் சுற்றி 8 திசை, 360 டிகிரி மேலே, கீழே என மொத்தத்தையும் என்னால் பார்க்க முடிந்தது. பார்க்க முடிந்தது மட்டுமல்ல, உணர முடிந்தது. 'அது நான்' என்று உணர முடிந்தது. 'என்னை தவிர வேறொன்று' என்று எதையுமே உணராமல், 'இருக்கும் இருப்பு அனைத்தையும் தானே' என்று உணர்ந்தேன். | ||
| + | |||
| + | அதாவது 'இந்த உடல் மட்டும் நான்' என்கின்ற உணர்வு மறைந்து, இருக்கும் அத்துனையும்… அதாவது இந்த உடல், உடல் அமர்ந்திருக்கின்ற கல் - பாறை, சுற்றியிருக்கின்ற செடி கொடிகள், முன்னால் இருக்கும் அண்ணாமலை, பின்னால் இருக்கும் பவழக்குன்று ஆலயம், இடது பக்கம் இருக்கின்ற அண்ணாமலையார் ஆலயம் அத்துனையும், அந்த இடம்- வலம்- மேல்-கீழ் திசைகள் அதெல்லாம் எதுவும் இல்லாமல், 'அனைத்தும் தான்' என்கின்ற அந்த உயிர்ப்பாக இருந்தது. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்க முடிந்தது. கண்ணைத் திறக்காமல், கண்ணை உருட்டாமல், கண்ணைத் திருப்பாமல், கண்ணைச் சிமிட்டாமல், இருப்பது அத்துனையும் தன் இருப்பாக உணரவும், பார்க்கவும் இயன்றது. | ||
| + | |||
| + | இன்னும் சில வார்த்தைகளால் சொல்ல முயற்சி செய்கின்றேன்… பசி - தூக்கம் இவைகள் வரும்பொழுது உங்களுடைய இருப்பு, அந்த இருப்பினுடைய அலைவரிசை (frequency) மாறும். தூக்கத்தில் ஒரு அலைவரிசைக்குச் செல்வீர்கள், பசியில் ஒரு அலைவரிசைக்குச் செல்வீர்கள், மயக்கத்தில் ஒரு அலைவரிசைக்குச் செல்வீர்கள். உங்களுடைய அந்த தன்னிலை மாறும், உங்களுடைய இருப்பு மாறும். அவைகளை எல்லாம் தாண்டி, மிகப்பெரிய அந்த மலையின் இருப்பைப்போல, மலை, ஊர், உலகம், மேல், கீழ் இந்த வார்த்தைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட இருப்பாக பரம்பொருள் விளங்கினார். பரமாத்வைதம் விளங்கியது! | ||
| + | |||
| + | பரமசிவ பதம், பரமசிவ நிலை, பரமசிவ பக்தி, பரமசிவ ஞானம், பரமசிவ விஞ்ஞானம், | ||
| + | பரமசிவ சக்தி இப்படி பல்வேறு நிலைகளெல்லாம் ஒன்றாகச் சேர்ந்த, இப்போது சொன்ன வார்த்தைகள் மற்றும் இவைகளால் நீங்கள் புரிந்துகொள்வது, அதற்கும் அப்பாற்பட்டது அனைத்தும் ஒன்றாய் சேர்ந்த இந்த பரமாத்வைதம் இருப்பாய் விளங்கியது. இதை நான் என்னதான் வார்த்தைகளால் விளக்கினாலும், அனிமேஷன் போட்டுக் காட்டினாலும், அதைத் துல்லியமாகச் சொல்லிவிட முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. முயற்சி செய்துகொண்டே இருக்கிறேன். | ||
| + | |||
| + | இப்பொழுது இந்த வார்த்தைகளை நீங்கள் உள்வாங்கினீங்கள் என்றால், இந்த வார்த்தைகள் என்ற இந்த பாத்திரத்திற்குள் அந்த அனுபூதியை வைத்து அனுப்பிருக்கின்றேன். இதைக் கேட்டு உள்வாங்கினீர்களானால், அந்த அனுபூதி உங்களுக்குள்ளே மலர்ந்துவிடும். உங்களுக்கே இது அனுபூதியாக மாறும். அப்பொழுதுதான் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்குப் புரியும். | ||
| + | |||
| + | பரமாத்வைதம் - தீக்ஷைகளால், சாந்நித்யத்தினால், சக்திபாதத்தினால் அளிக்கப்படுவது. அருணாச்சலப் பரம்பொருள், அண்ணாமலையான் தானே விளங்கி, வெளியில் அண்ணாமலை சுவாமிகளாய் வந்து உள் செலுத்தி, உள்ளுக்குள் அண்ணாமலையான் தானே விளங்கி, அருணகிரியோகிஸ்வரனாய் உள்ளிருந்து உள்ளிழுத்துக்கொண்டு, தன் இருப்பைத் தானே விளக்கினார். | ||
| + | தான் தானாகவே விளங்கினார். இந்த பரமாத்வைத அனுபூதி எல்லோருக்குள்ளும் மலரட்டும். | ||
| + | |||
| + | பரமாத்வைதப் பிராப்திரஸ்து… | ||
| + | பரமாத்வைதப் பிராப்திரஸ்து… | ||
| + | பரமாத்வைதப் பிராப்திரஸ்து… | ||
| + | பரமாத்வைதப் பிராப்திரஸ்து… | ||
| + | |||
| + | எல்லோருக்குள்ளும் இந்த பரமாத்வைத நிலை மலரட்டும். | ||
| + | |||
| + | பரமாத்வைதப் பிராப்திரஸ்து… | ||
| + | |||
| + | யாருக்கெல்லாம் இந்த பரமாத்வைத அனுபூதி மலர வேண்டுமென்று நினைக்கின்றீர்களோ, இந்த சத்சங்கத்தை மீண்டும் மீண்டும் சிலமுறையாவது கேளுங்கள். இதில் வார்த்தைகளுக்கு நடுவிலே, வார்த்தைகளால் சொல்ல முடியாத பரமாத்வைத அனுபூதியையும் வைத்து அனுப்பியிருக்கின்றேன். பெற்றுக்கொள்ளுங்கள். பரமாத்வைத நிலையில் வாழுங்கள், பரமாத்வைதத்தை அடைந்து பரமாத்வைத நிலையை வாழுங்கள். | ||
| + | |||
| + | பரமாத்வைதப் பிராப்திரஸ்து… | ||
| + | |||
| + | எல்லோரும் பரமாத்வைத நிலையடைந்து, பரமாத்வைதத்தில் நிலைத்து, நித்யானந்தத்தில் நிறைந்து நித்யானந்தமாகிட ஆசீர்வதிகின்றேன். ஆனந்தமாக இருங்கள். " | ||
==Event Photos== | ==Event Photos== | ||
Latest revision as of 15:20, 25 July 2025
Title
நித்யானந்த பௌர்ணமி 2025 தமிழ் சிறப்பு சத்சங்கம் | Nithyananda Purnima 2025 Tamil Satsang
Link to Video
Transcript
"ஒம் ஒம்
நித்யானந்தேஷ்வர பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஷ்வரி பரமசிவசக்தி மத்யமாம் அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்
ஒம் ஒம் ஒம்
உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.
உலகம் முழுவதிலும் இதயத்தாலும் இணையத்தாலும் இணைந்திருக்கும் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், கைலாஸவாசிகள், பல்துறை சிறப்பு சாதனையாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பல்வேறு தொலைக்காட்சிகள் வழியாக இணையத்தின் மூலமாகவும், இதயத்தின் மூலமாகவும் இணைந்திருக்கும் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கிறேன்.
இன்றைய தினம் - நித்யானந்த பௌர்ணமி. 36 ஆண்டுகளுக்கு முன்பு இதே நன்னாளில், 1989-இல் வைகாசி மாதம் - விசாக நக்ஷத்திரம் - பௌர்ணமி திதியோடு கூடிய நன்னாளில், மாலை நேரத்தில், பவழக்குன்றில்… திருவண்ணாமலையில் பவழக்குன்றில் அமர்ந்து, எனக்குள் என் மூலத்தை ஆழ்ந்து தேடிக்கொண்டிருக்கும்பொழுது, பரமசிவப் பரம்பொருள் தன்னையே வெளிப்படுத்தி என்னை அவருக்குள் ஈர்த்துக்கொண்டு, 'தான்' தானாய் விளங்கி பரமாத்வைதத்தை வெளிப்படுத்திய நன்னாள். பரமாத்வைதத்தை வெளிப்படுத்திய திருநாள்.
இந்த நன்னாளில் கைலாயத்திருந்து எல்லோருக்கும் பரமசிவப் பரம்பொருளின் நேரடிச் செய்தி.
பரமாத்வைதப் பிராப்திரஸ்து…
எல்லோருக்குள்ளும் பரமாத்வைதம் மலரட்டும், பரமாத்வைதம் மலரட்டும்.
ஒம் ஒம் ஒம்
பரமாத்வைதப் பிராப்திரஸ்து...
ஒம் ஒம் ஒம்
பரமாத்வைதப் பிராப்திரஸ்து….
உங்கள் எல்லோருக்குள்ளும் பரமாத்வைதம் மலரட்டும்.
பரமாத்வைதம் என்றால் என்ன? சற்று ஆழ்ந்து கேளுங்கள், இந்த பரமாத்வைதத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளுங்கள்.
ஜீவன் - உங்களுடைய ஜீவன், உங்கள் உயிர் - ஜீவாத்மா ஈஸ்வரன் - பரம்பொருள், பரமாத்மா ஜகத் - இந்தப் பிரபஞ்சம். ஜீவ, ஈஸ்வர, ஜகத்.
வேறு வேறு சம்பிரதாயங்கள் இந்த ஜீவ, ஈஸ்வர, ஜகத்தைப் பற்றி வேறு வேறு விளக்கங்கள் அளிக்கின்றன. இவை மூன்றிற்கும் இருக்கின்ற உறவை, இவை மூன்றைப் பற்றிய அறிவை வேறு வேறு வார்த்தைகளால் வேறு வேறு விதத்தில் விளக்குகின்றன. வேறு வேறு விதமான தர்க்கம், தத்துவம் இவைகள் மூலமாக இந்த மூன்றைப் பற்றியும் விளக்க முயற்சிக்கின்றன.
ஒவ்வொரு சம்பிரதாயமும் சில தெளிவுகளை அளிக்கின்றது, சில கேள்விகளுக்கு பதிலளிக்கின்றது, பல பதில்களை கேள்வி கேட்கின்றது, சில பதில்களைத் தருகின்றது, பல கேள்விகளைத் தருகின்றன. அந்த கேள்விகளைத் தாங்கிக்கொண்டு நாம் நமக்குள் தேடும்பொழுதுதான், பரமசத்தியம் என்ன என்பது நமக்குள் அனுபூதியாக விளங்கும்.
பரமாத்வைதம் என்பது முடிந்த முடிவாக, பரமசத்தியம் - அதாவது எவ்வாறு ஜீவன், ஈஸ்வரன், ஜகத் உள்ளது? அவைகளுக்கு இடையிலே இருக்கின்ற உறவு என்ன? இந்த சத்தியத்தை எப்படி அடைவது? ஒவ்வொரு நிலையில்... வேறு வேறு நிலையில் இருக்கின்ற மனிதர்கள், அவரவர்கள் நிலையிலிருந்து எந்தெந்த சாதனைகள் வழியாக, என்ன மார்கத்தின் வழியாக, உயர்ந்து உயர்ந்து உயர்ந்து இந்த அறுதியான, உறுதியான, இறுதியான சத்தியமான பரமாத்வைதத்தை அனுபூதியாய் அடைந்து, அதை வெளிப்படுத்தி, அதிலேயே நிறைந்து வாழ முடியும்? என்கின்ற இந்த மொத்தமும் சேர்ந்ததைத்தான் 'பரமாத்வைதம்' என்று அழைக்கின்றேன்.
ஆழ்ந்து கேளுங்கள்... ஜீவ, ஈஸ்வர, ஜகத் இந்த மூன்றிற்கும் இடையிலே இருக்கின்ற தொடர்பு, இந்த மூன்றைப் பற்றியும் தெளிவான பரம சத்தியங்கள். அவைகளின் இருப்பு - தன்மை – வெளிப்பாடு, எவ்வாறு ஒன்றோடு ஒன்று இயங்குகிறது, இணைகின்றது, அவைகளின் இருப்பு எவ்வாறு இருக்கின்றது, இவைகளைப் பற்றிய அத்துனை பரம சத்தியங்கள் மற்றும் நீங்கள் இருக்கின்ற நிலையிலிருந்து மேம்பட்டு, மேம்பட்டு, மேம்பட்டு, இந்த இறுதி சத்தியமான அறுதி சத்தியமான பரமசத்திய நிலையை அடைவதற்கான வழிகள், நுட்பங்கள் இவை அனைத்தும் சேர்ந்து, இந்த முழுமையையும் ஒன்றாக 'பரமாத்தைவம்' என்கின்ற பெயரால் அழைக்கின்றேன்.
அறுதியாக இறுதியாக இந்த மூன்றும் ஜீவ, ஈஸ்வர, ஜகத் - ஜீவாத்மா, பரமாத்மா, பிரபஞ்சம் இந்த மூன்றும், 'வேறுபாடு, ஒன்றாயிருத்தல்' என்கின்ற நிலைகளைக் கடந்த ஒரு ஒருமைத்தன்மையில் இருக்கின்றது. 'வேறாய் இருப்பது, ஒன்றாய் இருப்பது' என்கின்ற வார்த்தைகளால்கூட விளக்க முடியாத, விளக்க இயலாத, இந்த வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட, 'வாங் மனாதி கோசரம் ச நேதி நேதி பாவிதம்' - வாங் மன கோசங்களாலே சிந்திக்கவும், விளக்கவும், விவரிக்கவும் என்கின்ற நிலைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதாகவும், இவைகள் எல்லாவற்றிற்கும் மூலமானதாகவும், ஒருமைத்தன்மையாக இருக்கின்றது பரம்பொருள்.
இன்னும் சில வார்த்தைகள் மூலமாக, ஆழ்ந்து சில சத்தியங்களை உங்களுக்குள் உள்வாங்கினீர்களானால், பரம்பொருளை அனுபூதியாகப் பற்ற இயலும்.
உங்களுக்குப் பரம்பொருளை அனுபூதியாகக் காட்டக் கூடிய சில வார்த்தைகளை, சில சத்தியங்களை இப்பொழுது உங்களோடுப் பகிர்ந்துகொள்கின்றேன், கேளுங்கள்.
எனக்கு என்ன நடந்தது என்பதைப் பலமுறை விளக்கியிருக்கின்றேன். 1989 ஆம் ஆண்டு, வைகாசி மாதம் - விசாக நக்ஷத்திரம் - பௌர்ணமி திதியில், எனக்கு என்ன நடந்தது என்பதை பலவிதத்தில் பலவார்த்தைகளாலே, பல்வேறு தருணங்களில் விளக்கியிருக்கின்றேன்.
இப்போது மீண்டும், இன்னும் ஆழமான சில சத்தியங்களின் மூலமாக, வார்த்தைகளின் மூலமாக விளக்க முயற்சிக்கின்றேன். அமைதியாக அமர்ந்து ஆழ்ந்து இதைக் கேளுங்கள். வார்த்தைகளைத் தாண்டி நான் வெளிப்படுத்துகின்ற இந்த சத்தியம், இந்த உணர்வு அலைகள் மூலமாக, இந்த உயிர் அலைகள் மூலமாக, இந்த ஆன்ம சக்தியின் மூலமாக, வார்த்தைகளை தாண்டி உங்களுக்குள் வந்து சேரும்.
வார்த்தைகள் இங்கு பாத்திரம்தான் (container). அதற்குள் இந்த அனுபூதிதான் அமிர்தம் (content). அனுபூதி என்கின்ற அமிர்தத்தை, வார்த்தைகள் என்கின்ற பாத்திரத்திற்குள் வைத்து அனுப்புகின்றேன். ஆழ்ந்து அமைதியோடு கேளுங்கள், இந்த பாத்திரம் உள்ளே வரும்போது அமிர்தத்தை அது உங்களுக்குள் கொடுத்துவிடும். அந்த அனுபூதி தானாகவே மலர்ந்துவிடும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், 1989 ஆம் ஆண்டு, வைகாசி விசாகம், பௌர்ணமி திதி அன்று என்ன நடந்தது என்கின்ற தெளிந்த விளக்கத்தைச் சொல்கின்றேன்.
அந்த நாளுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு, அந்த வைகாசி விசாகம் - அதாவது நாங்கள் இப்பொழுது நித்யானந்த பௌர்ணமி என்று கொண்டாடுகின்ற இந்த பௌர்ணமிக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக, இரமண மகரிஷியினுடைய ஞானமடைந்த சீடர்களில் ஒருவரான அண்ணாமலை சுவாமிகளுடைய சத்சங்கம். சத்சங்கம் என்றால் சென்று அமர்வோம். யாராவது கேள்வி கேட்பார்கள், அவருக்குத் தோன்றும்பொழுது பதில் சொல்வார். இல்லையென்றால் அமைதியாக அமர்ந்திருப்பார். அந்த மாதிரி ஒரு intimate ஆன talks.
அருகாமையிலிருந்து, அவர்கள் திருவடியில் அமர்ந்து அவர்களிடமிருந்து நேரடியாக இந்த ஞானக்கருத்துக்களை, சத்தியத்தைக் கேட்கின்ற பாக்கியத்தை அண்ணாமலையான் அளித்தான். அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், திருவண்ணாமலை ஒரு சாதாரண ஊர் இல்லை. அது பரமசிவப் பரம்பொருளின் திருமேனி. அவரே பிரத்யக்ஷமாக இருக்கின்றார். அவருடைய breathing space அது. அவருடைய ஞானச்சூழல், அவருடைய இருப்பு.
எத்துனைமுறை விவரித்தாலும், எத்துனைமுறை வர்ணித்தாலும், எத்துனை வார்த்தைகளால் சொல்ல முயற்சித்தாலும் விளக்கவொண்ணாத, சொல்லவொண்ணாத ஸ்வயம்பிரகாசப் பரஞ்ஜோதிப் பரம்பொருள். அண்ணாமலையானே, அந்த மலையே பரமசிவப் பரம்பொருளின் திருமேனி. ஒரு வாழ்கின்ற ஞானகுருவைவிட அதிகமான நன்மை அளிக்கக்கூடியது திருவண்ணாமலையின் எல்லைக்குள்ளே வாழ்வது. காரணம் என்னவென்றால், நமக்கு என்ன வேண்டுமோ... நம்முடைய சாதனையிலே, நாம் அந்த பரமாத்வைத நிலையை அடைவதற்கு, நமக்கு நாம் இருக்கின்ற நிலையிலிருந்து, அடுத்த நிலைக்குச் செல்வதற்கு நமக்கு என்ன வேண்டுமோ, அது குருமார்களோ, புத்தகங்களோ, ஆச்சாரியர்களோ, சூழ்நிலையோ என நமக்கு என்ன வேண்டுமோ, பெருமானே correct ஆக அதை எடுத்து வந்துக் கொடுத்து, சரியான அந்த ஞான இரசவாதத்தை நமக்குள் நிகழவைத்து, அவரே பரமாத்வைதத்தை மலரச்செய்து விடுவார்.
அதனால் திருவண்ணாமலையில் வாழுகின்ற எல்லோரும் புரிந்துகொள்ளுங்கள், பிரத்யக்ஷமாக பரமசிவப் பரம்பொருள் அருணாச்சலமாக வீற்றிருக்கின்றார். அதனால்தான் அவர் சொல்கிறார் அருணாச்சல புராணத்தில், இந்த எல்லைக்குள்ளே இருப்பவர்களுக்கு தனியாக தீக்ஷை போன்ற வேற எதுவுமே தேவையில்லை. எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்கின்றார். அதுதான் உண்மை. சரியான ஆச்சாரியர்கள் சரியாக வருவார்கள். சரியான சித்தர்கள், ஞானிகள் சரியாக உங்கள் வாழ்க்கையில் வருவார்கள். யார் வரவேண்டுமோ வருவார்கள், எந்த சத்தியத்தை உங்களுக்குச் சொல்லவேண்டுமோ அதைச் சரியாகச் சொல்வார்கள். அதற்குப்பிறகு அவர் திடீரென்று இருக்கக்கூட மாட்டார்கள். சில நேரங்களில் அசரீரி மாதிரி வருவார்கள், உங்களுக்குச் சொல்ல வேண்டிய சத்தியத்தைச் சொல்வார்கள், அடுத்த ஒரு 5 நிமிடம், 10 நிமிடத்தில் திரும்பிச் சுற்றிப் பார்த்தீர்களானால் இருக்க மாட்டார்கள். இதெல்லாம் நிதர்சனமாக திருவண்ணாமலையிலே நடக்கின்ற ஒன்று. இன்னமும் நடந்துகொண்டே இருக்கின்ற ஒன்று. காலாவதி தேதியே (expiry date) இல்லாத பரமசிவப் பரம்பொருள் கொடுத்திருக்கின்ற உறுதி. அருணாசல புராணத்திலே, இந்த எல்லைக்குள்ளே… திருவண்ணாமலையில் வாழுகின்ற எல்லோருக்கும் பரமாத்வைத நிலையை அடைந்திட, அந்த அனுபூதியை அடைந்திட, என்னென்ன வேண்டுமோ சகலத்தையும் அவரே கொண்டுவந்து, என்னென்ன சாதனைகள் செய்ய வேண்டுமோ, அதற்குத் தேவையானவற்றையும் அவரே கொண்டுவந்து, அவரே அளித்து பரமாத்வைதத்தையும் அளித்து விடுவார்.
அதனால்தான் சொல்கிறேன், பரமாத்வைத நிலையை அடைய வேண்டும் என்று நினைக்கின்ற எல்லோரும், திருவண்ணாமலையில் சென்று வாழத்துவங்குங்கள். அருணாச்சல வாசம் மிக உயர்ந்த நன்மையை அளிக்கும். பலபேர் என்னுடைய பக்தர்கள்கூட என்னுடைய கைலாஸத்தில் வந்து இருக்க முடியவில்லை, வேறு வேறு காரணங்களுக்காக என்னுடைய கைலாஸ சங்கத்தோடு இருக்க முடியவில்லை என்றால்கூட, அவர்களுக்கு நான் சொல்வேன், அப்பொழுது அடுத்த choice, next choice என்னவென்றால், நேராக திருவண்ணாமலையில் சென்று இருங்கள். எக்காரணம் கொண்டும் திருவண்ணாமலை எல்லை தாண்டாதீர்கள். திருவண்ணாமலை எல்லை என்பது மூன்று யோஜனை தூரம், அண்ணாமலையார் ஆலயத்திலிருந்து மூன்று யோஜனை சுற்றளவு, அதுதான் திருவண்ணாமலை எல்லை. அதை தாண்டாதீர்கள். உங்களுக்குத் தேவையான அனைத்தையும் பெருமான் கொண்டுவந்து, அளித்து, அன்பாலும் அளித்து, அறக்கருணையும் தந்து, மரக்கருணையும் தந்து, தேவைப்பட்டால் மரக்கருணையும் காட்டுவார். அதாவது ferocious ஆகப் புரியவைப்பார். தாயைப்போல் கருணையும் காட்டி, தந்தையைப்போல் பாடமும் சொல்லி, அறக்கருணையும் காட்டி, மரக்கருணையும் காட்டி, சரியான தேவையான ஆன்மீக நூல்களை எடுத்து வருவார், ஆன்மீக குருமார்களை எடுத்து வருவார், தீக்ஷைக்கு சரியான தேவையானவைகளை எல்லாம் கொண்டு வருவார், முழுஞான இரசவாதத்தையும் அவரே செய்வார். ஆலயத்தை மையமாக வைத்து மூன்று யோஜனை தூரத்திற்குள் வாழத்துவங்குங்கள். அதைத் தாண்டாதீர்கள். பரமாத்வைத நிலைக்குத் தேவையான அத்துனையையும் அவர் கொண்டுவந்து கொடுத்து, பரமாத்வைதத்தையும் அவரே அளித்து விடுவார். பிரத்யஷமாக பெருமான் வாழுகின்ற, திருமேனி தாங்கி வாழுகின்ற ஸ்தலம் - அருணாச்சலம். இதை பலமுறை சொல்லியிருக்கின்றேன், மீண்டும் ஒருமுறை சொல்கின்றேன், அருணாச்சல வாசமே பரமாத்வைதத்தை அளித்து விடும்.
அண்ணாமலையான், அருணாச்சல பரம்பொருள், எனக்கு என்னென்னெல்லாம் எந்தந்த நேரத்தில் வேண்டுமோ, அதாவது யோகத்தின் மூலமாக என் உடலை தயார்படுத்துவதற்கு சரியான யோககுருவை கொண்டு வருவார். வேதாந்தத்தைக் கற்றுக்கொடுக்க சரியான குருவைக் கொண்டு வருவார். எந்தெந்த சாஸ்த்திரங்களை எந்தெந்த ஞானத்தை எனக்கு அளிக்க வேண்டுமோ, பரமாத்வைதத்தை நான் அனுபூதியாக அடைய என்னவெல்லாம் கொடுக்க வேண்டுமோ, அந்தந்த குருமார்களை - சரியான குருமார்களை சரியாகக் கொண்டுவந்து, முறையாகப் பயிற்றுவித்து, அந்த இரசவாதங்களை நிகழ்த்தி, அந்த ஞானத்தையும் மலரச் செய்துவிடுவார். என் வாழ்க்கையில் அதைத்தான் செய்தார்.
திரும்பிப் பார்த்து என்னுடைய வாழ்க்கையை ஒரு வார்த்தையில் எழுத வேண்டுமென்றால், 'அருணாச்சலம்'. இந்த ஒரு வார்த்தையில் மொத்தத்தையும் எழுதிவிடலாம்.
இன்னமும் பெருமான் பிரத்யக்ஷமாக இருந்துகொண்டு, ஆன்மீக சாதகர்களுக்கு என்னென்னவெல்லாம் வேண்டுமோ, அதாவது ஞானக்கருத்துக்கள், ஞானகுருமார்கள் ஞானரசவாதத்தை அளிக்கும் சித்தர்கள் என யார் யார் வரவேண்டுமோ, அவர்களை சரியாக அழைத்துவந்து, ஒரு சாதகனுக்கு அந்தந்த சூழ்நிலைகளிலே அந்தந்த தேவைப்பட்டதை எல்லாம் கொடுத்து, தாயினும் சாலப்பரிந்து, கொடுத்து, அவனை பரமாத்வைத நிலைக்கு உயர்த்தி, பரமாத்வைதத்தை அளித்து விடுகின்றார். அதில் சந்தேகமே இல்லை.
யாருக்கெல்லாம் என் வார்த்தைகள் மீது நம்பிக்கையோ, சிரத்தையோ, மரியாதையோ இருக்கின்றதோ, அவர்கள் எல்லோருக்கும் சொல்கின்றேன், வேறு வேறு காரணங்களினால் கைலாயத்தில் வந்து என்னுடைய கைலாய சங்கம் - நித்யானந்த சங்கத்தோடு வாழ இயலவில்லை என்று நினைப்பவர்கள் எல்லோரும் கவலையேப்படாதீர்கள். திருவண்ணாமலைக்குச் சென்று மூன்று யோசனை தூரத்திற்குள்ளாக, மூன்று யோசனை சுற்றளவு அதற்குள்ளாக வாழுங்கள். பரமசிவப் பரம்பொருள் அங்கு பிரத்யக்ஷமாக இருந்து அத்துனை நன்மையும் உங்களுக்குச் செய்துவிடுவார்.
எந்தெந்த விதத்திலெல்லாம் என்னென்னவெல்லாம் உங்களுக்குக் கொண்டுவந்து கொடுக்க வேண்டுமோ, அத்துனையையும் கொண்டுவந்து உங்களுக்குப் பரமாத்வைத நிலையை அளித்துவிடுவார். அது ஜீவன் முக்தபுரி. பெருமான், கேட்ட வரமெலாம் கொடுக்கவும், எதுவும் கேளாத ஜீவன் முக்த நிலையைக் கொடுக்கவும், பரமாத்வைதத்தை எல்லோருக்கும் அளிக்க, அவர் பிரத்யக்ஷமாக விளங்குகின்ற ஷேத்திரம் திருவண்ணாமலை.
என் வாழ்க்கையில் நடந்த எல்லா நன்மைக்கும் காரணம் என்று நான் திரும்பிப் பார்தேன் என்றால், ஒரே ஒரு காரணம்தான் நான் சொல்லவேண்டும் என்று நீங்கள் கேட்டால், அது 'திருவண்ணாமலை' என்ற வார்த்தையைத்தான் நான் சொல்வேன். 'அருணாச்சலம்' என்பதுதான் ஒரே காரணம். ஏனென்றால், என் வாழ்க்கையில் நடந்த எல்லா நன்மைகளையும் எனக்கு அளித்த எல்லா குருமார்களும், ஞானப் பரம்பரையும், தானாகவே சரியான நேரத்திற்கு திருவண்ணாமலைக்கு வந்து எனக்கு அளித்தார்கள்.
சில நேரத்தில் ஏதோ ஒரு ஊரிலிருந்து, ஏதோ ஒரு வடதேசத்திலிருந்து அல்லது ஏதோ ஒரு பக்கத்திலிருந்து வந்து, எனக்குத் தேவையான அந்த தீக்ஷைகளைக் கொடுத்து, அனுபூதியைக் கொடுத்து, என்னை அடுத்த நிலைக்குக்கொண்டு சென்றுவிட்டு, மறுநாள் சென்று அவர்களைத் தேடினால் இருக்க மாட்டார்கள், காணாமல் போயிருப்பார்கள். எங்கு சென்றார்கள் என்று தெரியாது.
சில நேரத்தில் கண் முன்னால் தோன்றி… இது உண்மையிலேயே நடந்த ஒரு நிகழ்வு. கௌதம மகரிஷி கண் முன்னால் தோன்றி அருளாசிகளைத் தந்துவிட்டு, கண் முன்னாலேயே மறைந்தார்! சத்தியம் சொல்கின்றேன், பொய் புகலேன்!
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களை எந்தவிதத்திலும் பொய் சொல்லி ஏமாற்றவேண்டிய எந்த அவசியமும் எனக்கில்லை. உங்கள் பணம் எனக்குத் தேவையில்லை, உங்கள் ஓட்டு எனக்குத் தேவையில்லை. ஒருவேளை எனக்கு உங்கள் ஓட்டு வேண்டாம் என்றால்கூட, யாராவது ஒரு கட்சிக்கோ அல்லது வேறு ஏதாவது ஒரு கருத்தியலிற்கு (ideology) நான் உங்களை உத்சாகப்படுத்தி, அந்தக் கட்சிக்கு ஓட்டு வாங்கித் தரவேண்டும் என்ற கட்டாயமும் எனக்கு இல்லை. அல்லது ஒரு கருத்தியல் - இடது சாரி, வலது சாரி, நடுநிலையாளர்கள் என்ற ஏதோ ஒரு கருத்தியலைப் பரப்ப வேண்டும் என்கின்ற கட்டாயமும் எனக்கு இல்லை, தேவையும் இல்லை. எதுவுமே எனக்குத் தேவையில்லை. நீங்கள் என்னை பயமுறுத்தவும் முடியாது, நீங்கள் எனக்கு எதுவும் கொடுக்கவும் முடியாது, என்னை பயமுறுத்தவும் முடியாது.
நாம் பேசுவதற்கான ஒரே காரணம், பரம சத்தியத்தை உள்ளது உள்ளபடி உலகத்திற்குச் சொல்லிவிட வேண்டும் என்பதற்காகத்தான். அதனால்தான் சொல்கிறேன் கேளுங்கள், நான் இப்பொழுது சொல்வது எல்லாமே பரம சத்தியம்.
இப்பொழுது, கௌதம மகரிஷி நேரடியாக வந்தார், தரிசனம் கொடுத்துவிட்டு மறைந்தார் என்று நான் சொன்னேன் என்றால், நான்குபேர் ட்ரோல் செய்வார்களா, அதைப் பற்றிக் கவலையே கிடையாது. என்னை இதற்குமேல் என்ன ட்ரோல் செய்யமுடியும்?
எந்த கேலி - கிண்டல் எதற்கும் பயப்படவும் மாட்டேன், மயங்கவும் மாட்டேன். ஆசை அச்சம் இரண்டுமே இல்லாத, இரண்டாலும் கட்டுப்படுத்த முடியாத பரம சத்தியத்தை உள்ளது உள்ளபடி சொல்வதற்காகவே பேசுகின்றேன். பூதப் பரம்பரை பொலியவே பெருமான் புனிதவாய் மலரவைக்கின்றார். வேதநெறி தழைத்தோங்க மிகுசைவதுறை விளங்க பூதப் பரம்பரை பொலிய பரம சத்தியங்கள் விளங்க… பெருமான் திருவாய்மலர்ந்து பேசவைக்கின்றார். எந்த ஆசையாலும், அச்சத்தாலும் கட்டுப்படுத்த முடியாதவன்.
சத்தியத்தை அப்படியே சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள், யார் யாருக்கெல்லாம் ஜீவன் முக்தியும், பரமாத்வைதமும் மிகவும் தீவிரமான தேவையோ, அதாவது உங்களுடைய ஒரு ஞானத் தேடுதல் மிகவும் தீவிரமான விஷயம், நீங்கள் அதை மிகவும் தீவிரத்தன்மையுடன் எடுத்துக்கொள்கின்றீர்கள், உண்மையிலேயே இந்த ஜென்மத்திற்குள் அடைந்துவிடவேண்டும் என்று நினைக்கிறீர்கள், இந்தப் பிறவியில் தவறவிட்டுவிடக்கூடாது என்று நினைக்கின்றீர்கள் என்றால், ஜீவன் முக்தியும், பரமாத்வைதமும் உங்கள் வாழ்க்கையில் முதல் முன்னுரிமை (first priority) என்று நினைத்தீர்களென்றால் கவலையேப்படாதீர்கள், எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு திருவண்ணாமலைக்கு இடம்பெயர்ந்துவிடுங்கள். சென்று திருவண்ணாமலையின் மூன்று யோஜனை தூரத்திற்குள் வாழுங்கள். அது பெருமானுடைய breathing space, அவருடைய energy field, அவருடைய சக்தி மண்டலம்.
வார்த்தைகள் பொங்குகின்றன… அதை முறையாக வடித்து உங்களுக்குச் சொல்வதற்காக, சில நிமிடங்கள் எடுத்துக்கொள்கின்றேன். அந்த உணர்வு பொங்குவது… அதை எத்துனை வார்த்தைகளால் வடிப்பது என்று பார்க்கிறேன்.
அருணாச்சல ஷேத்திரத்தைப் பற்றி, திருவண்ணாமலைப் பற்றி நான் சொன்னால்தான், இந்த அனுபூதியைப் பற்றி என்னால் விளக்க முடியும்.
வள்ளர் பெருமான், அவருடைய காலத்திற்குப் பிறகு அவரை எல்லாரும் 'வடலூர் வள்ளலார் வடலூர் வள்ளலார்' என்று அழைக்கின்றார்கள். அவர் இருந்த காலத்திலே எப்போதுமே 'சிதம்பரம் இராமலிங்கம், சிதம்பரம் இராமலிங்க அடிகள்' என்றுதான் கையெழுத்துப் போடுவார். நீங்கள் அவருடைய எந்த ஆவணத்தை வேண்டுமானாலும் எடுத்து புரட்டிப் பாருங்கள், 'சிதம்பரம் இராமலிங்கம்' என்று மட்டும்தான் அவர் கையெழுத்திட்டிருப்பார். அவர் காலத்திற்கு பிறகு அவரை மக்கள், பக்தர்கள், 'வடலூர் வள்ளலார்' என்று அழைக்கத் துவங்கிவிட்டார்கள். நான் ஒருமுறை யோசித்தேன், ஆஹா! நம்மையும் 'கைலாஸா நித்யானந்தா கைலாஸா நித்யானந்தா' என்று அழைக்கத் துவங்கிவிடுவார்களே என்று. பெருமான் உடனே சொன்னார், இல்லையப்பா கவலைப்படாதே அதனால்தான் உனக்கு இயற்பெயரிலேயே, அப்பா பெயர் அருணாச்சலம், அப்பாவினுடைய அப்பா – தகப்பனாருடையத் தகப்பனார், பாட்டனார் பெயர் அண்ணாமலை. 'அண்ணாமலை அருணாச்சலம்' இந்த இரண்டு வார்த்தையையும் என் பெயரிலிருந்து பிரிக்கவே முடியாதபடி, இயற்பெயரிலேயே இதை இணைத்து வைத்துவிட்டார். அதனால் பெருமான் கொடுத்த பெருவரம். எக்காலத்தும், 'அண்ணாமலை அருணாச்சலம் நித்யானந்தா' என்பதுதான் நிரந்தரமாக இருக்கும், அதை மாற்ற முடியாது. அருணாச்சலத்தாலே அருணாச்சலத்திருந்து அருணாச்சலமே உருவாக்கிக்கொண்டதுதான் - நித்யானந்தர்.
ஜீவன்முக்தியும், பரமாத்வைதமும், ஞானமும் உங்கள் வாழ்க்கையில் ஒரு தீவிரமானத் தேடுதல் என்றால், தயவுசெய்து திருவண்ணாமலைக்கு இடம்பெயர்ந்து விடுங்கள். அந்த மூன்று யோஜனை தூரம் எல்லையைத் தாண்டாதீர்கள், தவறிக்கூட தாண்டாதீர்கள். என்ன வேண்டுமோ அதைக் கொடுத்து விடுவார். அந்த பரமாத்தைவ அனுபூதி வந்த பிறகு அவரையே வழிநடத்துவார். அதற்குப் பிறகு நீங்கள் எங்கு செல்லவேண்டும், எங்கு வரவேண்டும் அதெல்லாம் வழிநடத்துவார். அதற்குப் பிறகு செல்லாமல் இருக்கவேண்டும் என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன்.
அதற்குப் பிறகு, 'செல்வது, செல்வதில்லை' என்கின்ற அந்த இதுவே இருக்காது. ஏனென்றால் அவர் உங்களுக்குள் நிகழ்ந்து விடுவார். நீங்கள் எங்கு சென்றாலும் அண்ணாமலையைத் தூக்கிக்கொண்டேச் செல்வீர்கள். நீங்கள் எங்கு சென்றாலும் திருவண்ணாமலை உங்களுக்குள் இருக்கப்போகின்றார். அதனால் அதற்குப் பிறகு திருவண்ணாமலையை விட்டு விலகுவது என்ற பேச்சே இல்லை.
முதலில் நீங்கள் திருவண்ணாமலைக்குச் செல்லுங்கள், அதற்குப் பிறகு அவர் உங்களுக்குள் வந்துவிடுவார். அவர் உங்களுக்குள் வந்துவிட்டு இந்த பரமாத்வைதம் நிகழ்ந்துவிட்டால், அதற்குப் பிறகு நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள், எங்கு செல்கின்றீர்கள், எங்கு வருகின்றீர்கள் என்பதைப் பற்றி எந்த வேறுபாடும் இல்லை. ஏனென்றால், எங்கு உங்களுடைய உடல் நகர்ந்தாலும், அவரை நீங்கள் சுமந்துகொண்டு செல்கின்றீர்கள். அதனால் நீங்கள் இருக்கின்ற இடம் முன்று யோஜனை தூரம் அவருடைய எல்லையாக மாறிவிடுகின்றது.
அண்ணாமலை சுவாமிகள், ஒரு சாதாரணமான உரையாடலில் - நெருக்கமான உரையாடல் (intimate talks) சத்சங்கத்தில், 'நாம் உடல் இல்லை, நாம் உடல் - மனம் கடந்த ஆன்மா' என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
நான் சின்னப் பையன், அதனுடைய சத்தியத்தை உணரவேண்டும் என்கிற ஆழமானத் தேடுதல் இருந்தது, ஆனால் அதை எப்படி உணரவேண்டும் என்றுத் தெரியவில்லை. வீட்டுக்குச் சென்று அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தேன். நாம் உடல் இல்லை என்று சொல்கிறாரே, அப்பொழுது இந்த உடலை ஒரு வெட்டு வெட்டினால் அல்லது ஏதாவது செய்தால் வலிக்கிறதே, நாம் உடல் இல்லை என்றால் வலிக்கக் கூடாது தானே? சரி முயற்சி செய்து பார்ப்போம் என்று, 'நான் உடல் இல்லை' என்று ஆழமாக நினைத்துக்கொண்டே, வீட்டில் என் அப்பா - தந்தையார் சவரம் செய்வதற்காக வைத்திருந்த பிளேடை எடுத்து, 'சவரக் கத்தி' என்று சொல்வார்கள், அந்த காலத்திலெல்லாம் வீட்டில் சவரம் செய்வதற்கு உபயோகப்படுத்துவது. அதை எடுத்து தொடையில் கிழித்துப் பார்த்தேன். உண்மையை அப்படியேச் சொல்கிறேன், வலி இருந்தது, இரத்தம் வரத் துவங்கிவிட்டது. அம்மா பார்த்துவிட்டு, வீட்டிற்கு முன்பாகவே... வீட்டிற்கு எதிர்வீடே ஒரு மருத்துவர் இருந்தார். டாக்டர் திரு.கருணாநிதி என்பவர், இன்னமும் இருக்கின்றார், திருவண்ணாமலையில்தான் இருக்கிறார். அவரும், அவருடைய குடும்பம் எல்லோரும் இருக்கிறார்கள். அவரிடம்தான் அழைத்துச்சென்றார்கள். அவர் மருத்துவர் மட்டுமல்ல, குடும்ப நண்பரும்கூட. உடனே தையல் எல்லாம் போட்டு சரி செய்துவிட்டு, ஏன்டா இப்படி செய்தாய்? என்று பரிவோடு விசாரித்து மருத்துவரீதியாக என்ன செய்யவேண்டுமோ, செய்து அனுப்பிவிட்டார். ஆனால் எனக்கு இந்த சத்தியத் தேடுதல்… அது உள்ளுக்குள் உருத்திக்கொண்டே இருக்கிறது. இந்த உடல் நாம் இல்லை என்றால் வலி தெரியக்கூடாது தானே? வலி தெரிகிறதே, அப்படியென்றால் எப்படி, இது என்ன? என்று மீண்டும் அண்ணாமலை சுவாமியிடம் சென்றேன். அவர் ஒரு சிறு புன்னகை செய்துவிட்டு, தேடு, இந்த வலி எங்கிருந்து வருது? இந்த வலி யாருக்கு? இந்த உடல் நாம் என்று நீ நினைக்கிறாயே அது யாரு? என்று தேடு, தெரியும் என்று சொல்லிவிட்டார்.
முக்கியமாக அவர் சொன்ன அதே வார்த்தை, இந்த வலி யாருக்கு என்று தேடு, இந்த வலியை யார் உணர்கிறார்கள் என்று தேடு என்றார். அதையே உள்வாங்கிக்கொண்டு, குருவாக்காக உள்ளெடுத்துக்கொண்டு, இந்த பௌர்ணமி அன்று பவழக்குன்றிலே அமர்ந்து அதைத்தான் தேடிக்கொண்டு இருந்தேன்.
'நான் நான் நான்' என்று எனக்குள் விளங்குவது எது? எது இந்த வலியையும், சுகத்தையும், இருப்பையும் உணருகின்றது? ஒரு அழகான.. ஒரு வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால், வலது தொடையில் அடிபட்டு வீழ்ந்தான் துரியோதனன், வலது தொடையில் அடிபட்டு மரணமடைந்தான் துரியோதனன். வலது தொடையை கிழித்து வாழ்ந்தார் நித்யானந்தர், வலது தொடையை கிழித்ததன் மூலமாக மரணமிலாப் பெருநிலையை அடைந்தார் நித்யானந்தர் என்று சொல்லலாம்.
இன்னும் அந்த வலது தொடையில் அந்தக் காயம் இருக்கிறது, அதற்குத் தையல் போட்ட மருத்துவர் இன்னமும் இருக்கின்றார். திருவண்ணாமலையில் டாக்டர் திரு.கருணாநிதி அவர்கள். அவருடைய மருத்துவமனை அதே இடத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை. நித்யானந்த ஜென்ம பூமி - நான் பிறந்த அந்த வீட்டிற்கு நேர் எதிரில் அவருடைய மருத்துவமனை இருந்தது.
வைகாசி விசாகப் பௌர்ணமி அன்று அமர்ந்து, 'எங்கிருந்து அது வருகின்றது, 'நான்' என்ற உணர்வு எங்கிருந்து வருகின்றது?' என்று ஆழ்ந்து நோக்கினேன்.
பெருமானே, அண்ணாமலையானே, அருணாச்சலப் பரம்பொருளே, வெளியில் அண்ணாமலை சுவாமிகளாக - குருவாகத் தோன்றி எனை உள்ளே செலுத்தினார். உள்ளே அவரே இருந்து ஈர்த்துக்கொண்டு, ஈர்த்து எனை ஆண்டார். உள்ளே இழுத்துக்கொண்டு, என்னை விழுங்கி 'தான்' தானாய் நின்றார். 'தான்' தானாய் வெளிப்பட்டு, 'நான் - எனது' என்கின்ற உணர்வு இல்லாத 'தான்' எனும் பரமசிவப் பரம்பொருள் பரமாத்வைதத்தில் நிறைந்து நின்றார்.
அந்த நிலை, அது ஒரு star gate மாதிரி just உள்ளே இழுக்கப்பட்டது. உங்களுக்கெல்லாம் புரிகின்ற விதத்திலே சில வார்த்தைகளைச் சொல்ல முயற்சிக்கின்றேன். இந்தத் திரைப்படங்களில் எல்லாம் காட்டுகிறார்கள் இல்லையா, வேறு ஒரு பரிமாணம் திறக்கின்றது, star gate dimension என்றெல்லாம் சொல்கிறார்கள் இல்லையா, அது மாதிரி இன்னோரு பரிமாணம் (dimension) திறந்தது.
நீங்கள் எப்படி கனவு நிலையிலே கண்ட எல்லாமும் நினைவில் இருக்காது, கனவிலிருந்து வெளியில் வரும்பொழுது கடைசியாக என்ன காண்கின்றீர்களோ, அந்த சிலதுதான் நினைவில் இருக்கும். அதை மட்டும்தான் சொல்ல முடியும். அதுமாதிரி அந்த அனுபூதியிலே முழுமையாக என்ன நடந்தது என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது, அதிலிருந்து மெதுவாக நான் settle ஆகும்பொழுது என்ன நடந்தது என்று சொல்கின்றேன்.
நான் மலையில், அந்தப் பவழக்குன்று பாறையில் அமர்ந்துகொண்டிருந்தேன். எனக்கு முன்னால் அந்த பெரிய அண்ணாமலை, பின்பக்கம் பவழக்குன்று கோவில், பவழக்குன்று அர்த்தநாரீஸ்வரர் கோவில். இடதுகைப் பக்கம் அண்ணாமலையார் ஆலயம். இது மொத்தமும்… அந்தக் காலத்தில் அந்த இடம் காலியாக மலையாகத்தான் இருந்தது. அங்கு அவ்வளவு வீடுகள் நிறைய கிடையாது. ஒரே ஒரு கட்டிடம்தான் இருந்தது, அது என்னுடைய குரு இசக்கி சுவாமிகளும், குப்பம்மாளும் இரண்டு பேரும் சேர்ந்து எனக்காகக் கட்டிய ஒரு சிறு ஆசிரமம். அதாவது ஆசிரமம் என்றால் பெரிய கட்டிடம் எல்லாம் கிடையாது. என்னை சமாதியில், அதாவது எப்பொழுதும் நிர்விகல்ப சமாதியில் அமரவைப்பதற்கு, என்னைப் பயற்சி செய்வதற்காக ஒரு சிறிய கட்டிடத்தைக் கட்டினார்கள். அங்குதான் நீண்ட நாட்கள் சமாதியில் அமரவைத்துப் பயிற்சி செய்வதற்குப் பயிற்சி கொடுப்பார்கள். அங்கு வேறு எதுவும் இருக்காது, எல்லாம் வெட்ட வெளியாக இருக்கும். இந்த 8 திசையும்… அதற்குப் பிறகு நான் அமர்ந்திருந்தப் பாறையின் கீழே, மேலே ஆகாசம், இது அத்துனையும் 'நான் நான் நான்' என்றே உணர்ந்தேன்.
அதாவது இந்த உடலிற்குள் நீங்கள் எல்லாம் எவ்வளவு அழமாக உங்களை உணர்கின்றீர்களோ, அதேபோல அதைவிட அழமாக, பல மடங்கு அதிகமாக, என் இருப்பை எல்லாவற்றிலும் உணர்ந்தேன். பெருமான் வந்து 'தானே எல்லாமாகவும் இருக்கின்றார்' எனும் தன் இருப்பை மொத்தமாகக் காட்டினார். அதாவது நான் கண்களை மூடியிருக்கின்றேன், ஆனால் சுற்றி 8 திசை, 360 டிகிரி மேலே, கீழே என மொத்தத்தையும் என்னால் பார்க்க முடிந்தது. பார்க்க முடிந்தது மட்டுமல்ல, உணர முடிந்தது. 'அது நான்' என்று உணர முடிந்தது. 'என்னை தவிர வேறொன்று' என்று எதையுமே உணராமல், 'இருக்கும் இருப்பு அனைத்தையும் தானே' என்று உணர்ந்தேன்.
அதாவது 'இந்த உடல் மட்டும் நான்' என்கின்ற உணர்வு மறைந்து, இருக்கும் அத்துனையும்… அதாவது இந்த உடல், உடல் அமர்ந்திருக்கின்ற கல் - பாறை, சுற்றியிருக்கின்ற செடி கொடிகள், முன்னால் இருக்கும் அண்ணாமலை, பின்னால் இருக்கும் பவழக்குன்று ஆலயம், இடது பக்கம் இருக்கின்ற அண்ணாமலையார் ஆலயம் அத்துனையும், அந்த இடம்- வலம்- மேல்-கீழ் திசைகள் அதெல்லாம் எதுவும் இல்லாமல், 'அனைத்தும் தான்' என்கின்ற அந்த உயிர்ப்பாக இருந்தது. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்க முடிந்தது. கண்ணைத் திறக்காமல், கண்ணை உருட்டாமல், கண்ணைத் திருப்பாமல், கண்ணைச் சிமிட்டாமல், இருப்பது அத்துனையும் தன் இருப்பாக உணரவும், பார்க்கவும் இயன்றது.
இன்னும் சில வார்த்தைகளால் சொல்ல முயற்சி செய்கின்றேன்… பசி - தூக்கம் இவைகள் வரும்பொழுது உங்களுடைய இருப்பு, அந்த இருப்பினுடைய அலைவரிசை (frequency) மாறும். தூக்கத்தில் ஒரு அலைவரிசைக்குச் செல்வீர்கள், பசியில் ஒரு அலைவரிசைக்குச் செல்வீர்கள், மயக்கத்தில் ஒரு அலைவரிசைக்குச் செல்வீர்கள். உங்களுடைய அந்த தன்னிலை மாறும், உங்களுடைய இருப்பு மாறும். அவைகளை எல்லாம் தாண்டி, மிகப்பெரிய அந்த மலையின் இருப்பைப்போல, மலை, ஊர், உலகம், மேல், கீழ் இந்த வார்த்தைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட இருப்பாக பரம்பொருள் விளங்கினார். பரமாத்வைதம் விளங்கியது!
பரமசிவ பதம், பரமசிவ நிலை, பரமசிவ பக்தி, பரமசிவ ஞானம், பரமசிவ விஞ்ஞானம், பரமசிவ சக்தி இப்படி பல்வேறு நிலைகளெல்லாம் ஒன்றாகச் சேர்ந்த, இப்போது சொன்ன வார்த்தைகள் மற்றும் இவைகளால் நீங்கள் புரிந்துகொள்வது, அதற்கும் அப்பாற்பட்டது அனைத்தும் ஒன்றாய் சேர்ந்த இந்த பரமாத்வைதம் இருப்பாய் விளங்கியது. இதை நான் என்னதான் வார்த்தைகளால் விளக்கினாலும், அனிமேஷன் போட்டுக் காட்டினாலும், அதைத் துல்லியமாகச் சொல்லிவிட முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. முயற்சி செய்துகொண்டே இருக்கிறேன்.
இப்பொழுது இந்த வார்த்தைகளை நீங்கள் உள்வாங்கினீங்கள் என்றால், இந்த வார்த்தைகள் என்ற இந்த பாத்திரத்திற்குள் அந்த அனுபூதியை வைத்து அனுப்பிருக்கின்றேன். இதைக் கேட்டு உள்வாங்கினீர்களானால், அந்த அனுபூதி உங்களுக்குள்ளே மலர்ந்துவிடும். உங்களுக்கே இது அனுபூதியாக மாறும். அப்பொழுதுதான் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்குப் புரியும்.
பரமாத்வைதம் - தீக்ஷைகளால், சாந்நித்யத்தினால், சக்திபாதத்தினால் அளிக்கப்படுவது. அருணாச்சலப் பரம்பொருள், அண்ணாமலையான் தானே விளங்கி, வெளியில் அண்ணாமலை சுவாமிகளாய் வந்து உள் செலுத்தி, உள்ளுக்குள் அண்ணாமலையான் தானே விளங்கி, அருணகிரியோகிஸ்வரனாய் உள்ளிருந்து உள்ளிழுத்துக்கொண்டு, தன் இருப்பைத் தானே விளக்கினார். தான் தானாகவே விளங்கினார். இந்த பரமாத்வைத அனுபூதி எல்லோருக்குள்ளும் மலரட்டும்.
பரமாத்வைதப் பிராப்திரஸ்து… பரமாத்வைதப் பிராப்திரஸ்து… பரமாத்வைதப் பிராப்திரஸ்து… பரமாத்வைதப் பிராப்திரஸ்து…
எல்லோருக்குள்ளும் இந்த பரமாத்வைத நிலை மலரட்டும்.
பரமாத்வைதப் பிராப்திரஸ்து…
யாருக்கெல்லாம் இந்த பரமாத்வைத அனுபூதி மலர வேண்டுமென்று நினைக்கின்றீர்களோ, இந்த சத்சங்கத்தை மீண்டும் மீண்டும் சிலமுறையாவது கேளுங்கள். இதில் வார்த்தைகளுக்கு நடுவிலே, வார்த்தைகளால் சொல்ல முடியாத பரமாத்வைத அனுபூதியையும் வைத்து அனுப்பியிருக்கின்றேன். பெற்றுக்கொள்ளுங்கள். பரமாத்வைத நிலையில் வாழுங்கள், பரமாத்வைதத்தை அடைந்து பரமாத்வைத நிலையை வாழுங்கள்.
பரமாத்வைதப் பிராப்திரஸ்து…
எல்லோரும் பரமாத்வைத நிலையடைந்து, பரமாத்வைதத்தில் நிலைத்து, நித்யானந்தத்தில் நிறைந்து நித்யானந்தமாகிட ஆசீர்வதிகின்றேன். ஆனந்தமாக இருங்கள். "