25 November 2025 SPH Live Darshan
On this day, THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), BHAGAVAN SRI NITHYANANDA PARAMASHIVAM—the ultimate manifestation, Paramavatara of Paramashiva, the ultimate superconsciousness—gave a Live Darshan and delivered a Presidential Address attended by the founding fathers, diplomats, delegates, ministers, citizens, and e-citizens of the United States of KAILASA (USK).
Title
உங்களை ஆட்டிப்படைக்கும் பழைய பதிவுகள்! | அருணாசலப் புராணம் | பாகம் 5
Link to Video
Transcript
ஓம் நித்யானந்தேஸ் வர பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ் வரி பரமசக்தி மத்யமாம் அஸ் மதாசார்ய பரியந்தாம் வந்தே குரு பரம்பராம்.
உலகம் முழுவதிலும் இதயத்தின் மூலமாகவும், இணையத்தின் மூலமாகவும் இணைந்திருக்கும் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், கைலாசவாசிகள், கைலாயத்தின் குடிமக்கள் மற்றும் பார்வையாளர்கள் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.
அருணாசல புராணம். புராண லக்ஷணத்திலே சர்க்கத்தைப் பற்றி, முதன்மைப் படைப்பு, இரண் டாம் நிலைப் படைப்பைப் பற்றி பார்த்துக் கொண் டிருக்கின்றோம்.
நேற்று நாம் பார்த்தது: "Timeless in Time" காலத்தைக் கடந்து 'அவ்வியக்தமாய்' இருப்பது, காலமாய் மலர்வது. காலம் சார்ந்த எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு, நீங்கள் காலாதீதத்தில் இருப்பதும், நீங்கள் காலாதீதர்என்று உணர்ந்து கொள்வதும். அதைதான் நேற்று அறிவுப்பூர்வமாக, அனுபவப்பூர்வமாக அனுபூதிப் பூர்வமாக உணர்ந்தோம்.
இன்னைக்கு அடுத்தது. "Nameless in Name, Formless in Form" Nameless in Name
வார்த்தைகள்... நாமம், ரூபம், வார்த்தைகள், வடிவங்கள், இவற்றிற்கு அப்பாற்பட்டது. எவ்வாறு வார்த்தைகளை, வடிவங்களை வெளிப்படுத்தி, அவ்யக்தத்திலிருந்து வ்யக்தமாக வெளிப்படுகின்றது. இந்த சத்தியத்தை கேளுங்கள்;
ஆழ்ந்து பு ரிந்து கொள்ளுங்கள், கொஞ்சம் அமைதியா உங்களுக்குள்ள திரும்பி பார்த்தீர்கன்னா, உங்க மொத்த வாழ்க்கையுமே வெறும் வார்த்தைகள்தான்.
உங்கள நீங்களே, உங்கள பார்த்து நீங்களே சொல்லிக்கற வார்த்தைகள்தான் 'எண்ணம்', 'மனம்' அப்படீன்னு சொல்றோம். நீங்கள் மத்தவங்கள பார்த்து சொல்லும் வார்த்தைகள்தான் 'பேச்சு'. உங்க மொத்த வாழ்க்கையுமே நீங்க உங்கள நோக்கி சொல்லிக்கிற வார்த்தைகளும், மத்தவங்களக்கு சொல்ற வார்த்தைகளும்தான். அவ்வளவுதான். வேற ஒ ன்னுமே இல்லை-ங்கைய்யா. இவ்வளவுதாங்கைய்யா மொத்தமும்.
"அனேஜத் ஏகம் மனஸோ ஜவீயோ நைனத்தேவோ ஆப்னுவ பூர்வமர்ஷத் | தத்தாவதோ அன்யானத்யேத் திஷ்டத்தஸ் மின் னபோ மாதரிஷ்வா ததாதி ||" ஈஷாவாஸ் ய உபநிஷத்சொல்லுது.
"அசையாமல் இருப்பது போல் தோன்றினாலும் அது மனதை விட வேகமானதும், இது மு ன்னே செல்வதனால், தேவர்கள் அதை எட்ட முடியாது நிலைத்திருக்கிறதுபோல் இருந்தும்; ஓடிக்கொண் டிருப்பவற்றை எல்லாம் கடந்து செல்வதும்; அதனுள் 'மாதரிஷ்வா' எனும் பிரபஞ்சத்தின் உயிர்சக்தியே இருந்து அனைத்து செயல்களையும் நிலைநிறுத்துவதும்…
அது எ ன்னனு இன்னைக்கு புரிஞ்சிக்கபோறோம். இப்போ, 'வார்த்தை'னா என்னனு புரிஞ்சிக்கோங்க. இப்போ அந்த வார்த்தை கடந்த இருப்பு நிலை, அவ்யக்த ஸ் வபாவ நிர்வாணநிலை என்னனு அடுத்து புரிஞ்சிரும்.
அப்படியே உங்களுக்குள்ள பாத்தீங்கன்னா, கொஞ்சம் பொறுமையோடு, உங்களுடைய மொத்த மனம், சித்தம், புத்தி, அகங்காரம் அப்படின்னு அப்படின்னு சொற இது எல்லாமே, உங்கள் வாழ்க்கையினுடைய அடிப்படையாக இருக்கின்ற 'நீங்கள்', 'நீங்கள்' என்று எ தை நீங்கள் அனுபவமாக உணர்கிறீர்களோ அது - வெறும் வார்த்தைகள்தான்.
ஆழ்ந்து, பொறுமையா பாருங்க. இந்த உங்களுக்குள்ள நீங்கள் சொல்லிக்கிற வார்த்தைகள் மூன்று நிலை.
ஒரு நிலை என்னன்னா, சொல்வது நீங்கள்; நீங்கள் சொல்வதை உங்களால் கேட்க முடியும். நீங்களேதான் Command-அ generate பண்ணறீங்க. நீங்களேதான் அத listen பண்ணறீங்க. நீங்க சொல்லலாம், நீங்கதான் சொல்றீங்கனு உங்களுக்குத்தெரியும், நீங்க அத கேக்கலாம். இது ஒரு நிலை.
இரண் டாவது: சொல்றத உங்களால control பண்ணமுடியாது. Generate ஆகுற command உங்க control-ல இருக்காது. அது வருகி ன்ற வேகம், உங்க control-லயே அந்த command இருக்காது. தானா அந்த வார்த்தை வரும். கேக்கறது மட்டும்தான் நீங்களா இருப்பீங்க. இது ஒரு நிலை.
இன்னொன்னு, சொல்றதும் உங்களுக்கு தெரியாது; கேக்கறதும் நீங்கதான் கேக்குறீங்களானு தெரியாது. இது ஒரு மூன்றாவது நிலை. சொல்றதும் unconscious-ஆ, உங்களுக்கு தெரியாமலே நடக்குது. யாரோ சொல்லீட்றுக்காங்க. கேக்கறதும் உங்களுக்குத தெரியாமலே யாரோ கேட்டுட்றுக்காங்க.
இந்த மூன்று நிலையும் உங்களுக்குள் எப்போதும் நிகழ்ந்து கொண் டிருக்கிறது. இது எ த்தனை பேருக்கு புரியுது, கை தூக்குங்க. ஏன்னா உங்களுக்கு புரிஞ்சிதுன்னா நான் அடுத்த நிலைக்கு உங்கள அழச்சிட்டு போ முடியும். ஒன்னொன்னா ஒன்னொன்னா அடுத்த நிலைக்கு அழச்சிட்டு போக முடியும்.
இங்க நான் எனக்குத்தெரிஞ்சதெல்லாம் எனக்குத்தெரியுன்றதுக்காக பேசீட்டில்ல. நீங்கள் அனுபூதி அடைய வேண் டும் என்பதற்காக பேசறேன்.
நல்லா புரிஞ்சிக்கோங்க, சொல்பவரும் நீங்கதான். Conscious-ஆ நீங்கதான் சொல்றீங்க, கேட்பவரும் நீங்கதான். நீங்கதான் கேக்கறீங்க. இந்த நிலைக்கு சத்வ மனம்னு பேரு. சத்வ மனம். சத்வ குன ம் மேலோங்கி இருக்கின்ற மனம்.
அடுத்தது... சொல்றது நீங்க கடையாது. அந்த command-அ generate பண் றது நீங்க இல்ல. Rush பண்ணுது அ ந்த command... உங்க... நீங்க விழிப்படைவதற்குள்ள, அந்த command rush பண்ணி உங்கள த்வம்சம் பண்ணி அந்த காட்டாற்று வெள்ளம் மாதிரி எல்லாம் முடிச்சிட்டு வடிஞ்சுருச்சு. 23:00
அப்புறம்தான் தெரியுது என்ன நடந்திருக்குன்னு.. "ஐயோ! 10 வருஷமா build பண்ண relationship பட்டுன்னு Breakup சொல்லிட்டாமே.." அது என்ன Breakup சொல்லி அவன் போய், வேற பெண்ணைப் பார்த்துட்டு போன பிறகுதான்..." தோன்றும்.
command-ஐ generate பண்றது வேறு யாராவதாக இருக்கும். நீங்கள் இல்லை; அது யார் என்று தெரியாது. ஆனால் Listen பண்றது நீங்களாக இருக்கும்; Obey பண்றது நீங்களாக இருக்கும். இந்த மன அமைப்புக்கு, ரஜோ குண மன அமைப்புன்னு சொல்வோம். ரஜஸ் மேலோங்கி இருக்கின்ற மன அமைப்பு. இந்த ரஜோ குண மன அமைப்புக்கு நான் பெருசா உதாரணம் சொல்ல வேண்டியதில்லை.
ஏன்னா நீங்க 99 சதவிகித நேரத்தில், நீங்கள் இந்த ரஜோகுண மன அமைப்பில்தான் இருக்கின்றீர்கள். யார் command-ஐ பண்ணுகிறார்கள் என்றே தெரியாது; Listen பண்ணுவது மட்டும்தான் நீங்கள். இந்த பாகத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த பாகம்தான் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியமான பாகம்.
அதாவது, command ம் நீங்களே generate பண்ணகிறீர்கள், கேட்பதும் நீங்களே கேட்கிறீர்கள். அது எந்தமாதிரியான காலம் என்று உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், 'ஜபம்' பண்ணுவது. "நமச்சிவாய... நமச்சிவாய..." என்று conscious-ஆக நீங்கள்தான் சொல்கிறீர்கள் உள்ளுக்குள். அந்த எண்ணத்தை நீங்களே சொல்கிறீர்கள், அதை நீங்களே கேட்கிறீர்கள். ஜபம் ஒரு example.
ஆனால் அதற்கு நடுவிலேயே, "நமச்சிவாய... நமச்சிவாய..." அதற்கு நடுவிலேயே,"ஒரு தரம் போனைப் பார்த்துரலாமா? ரொம்ப நேரமா எந்த Notification-ம் வராம இருக்கு? இருக்காளோ? போயிட்டாளோ?" என்று வந்ததென்றால், ரஜஸ் தலையிட்டுவிடுகின்றது,
பட்டினத்தார் காலத்தில் அப்பொழுது இருந்த மிகப்பெரிய பிரச்சனை, மனிதன் வளமான சமூகமாக இருந்ததால், அளப்பரிய... அளவில்லாத காமத்தீயில் விழுவதுதான் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்திருக்கின்றது. அதனால் அவர் அது சார்ந்தே பாடல்களை வரித்திருப்பார். பாடல்களைப் பாடியிருப்பார், வரிகளை அமைத்திருப்பார்.
அடுத்து ராமகிருஷ்ணர் காலகட்டத்தில் 'காமினி, காஞ்சனம்' இரண்டும் பெரிய பிரச்சனையாக இருந்தது. அதாவது அளப்பரிய.. அப்பொழுதுதான் Materialism இந்தியாவை take over பண்ணுகின்றது. British society நம்மை மொத்தமாகச் சுரண்டிவிட்டு, அதற்கு மேலும் வேண்டும் என்ற greed-க்காக நம்மை அந்த greed-இல் போட்டு நாசமாக்கிக்கொண்டிருந்த காலகட்டம் அது. So, materialism தான் religion ஆக மாற ஆரம்பித்துக்கொண்டிருக்கிறது. அதாவது religion ஆக practice பண்ணப்பட்டுக்கொண்டிருந்த காலம். அதனால் அந்த நேரத்தில் வந்ததனால், அவர் 'காமினி, காஞ்சனம் இரண்டும் கடந்துதான் ஜீவன் முக்தி' என்று சொன்னார்.
இந்தக் காலகட்டத்தில் நான் சொல்ல வேண்டுமென்றால், "காமினி, காஞ்சனம், computer". உடனே பலபேர் சொல்கிறார்கள். நான் பார்த்திருக்கிறேன் அந்த comments ஐ. “Device மூலமாகத்தான், செல்போன் மூலமாகத்தான் உங்களையே நாங்கள் பார்க்கிறோம் சுவாமி” என்று. அது ஸத்வ குணத்திற்காக உபயோகப்படுத்துவது வேறு. ஆனால், எத்தனை பேர் ஸத்வ குணத்திற்காக உபயோகப்படுத்துகிறார்கள்? ஜ்ஞாநத்திற்காக உபயோகப்படுத்துகிறார்கள்? அதைப் பாருங்கள். அதைப் பார்த்தீர்களானால், negligible percent. என்ன 0.000001% தான்.
General ஆக இந்த device எதற்கு உபயோகப்படுகிறது என்று பார்த்தால், தொடர்ந்து உங்களை வெறுமையில் வைத்திருக்கத்தான் உபயோகப்படுகிறது. Diversion.. diversion... இது, அது என்று எதையாவது Scroll பண்ணிக்கொண்டே இருப்பது. Attention Span உடைந்து, சிதறி, சின்னாபின்னமாகி... டக் டக் டக் டக்கு என்று எதையாவது ஒன்றை, இந்த Doom scrolling... அந்த மாதிரி, அப்படி ஆவதற்குத்தான் உபயோகமாகின்றது.
Anyhow… ஆழ்ந்து கேளுங்கள். ஸத்வ குண மனம், ரஜோ குண மனம், தமோ குண மனம். பேசுவதும் நீங்கள் அல்ல, கேட்பதும் நீங்கள் அல்ல. யாரோ பேசுகின்றார்கள், யாரோ கேட்கின்றார்கள். என்ன நடக்கிறது என்றேத் தெரியாது. இரண்டையுமே control-இல் வைக்க முடியாது. இதுதான்.. இதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் - கனவு. கனவில் பேசுவதும் யாரோ, கேட்பதும் யாரோ. இரண்டுமே உங்கள் control-ல் இல்லை.
இப்பொழுது இந்த மூன்றில், உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரும் பகுதியை ஆக்கிரமித்து இருப்பது, இரண்டாவது முறை. இந்த இரண்டாவது. நடுமுறை என்று சொல்கின்றேன், நடுவில் இருப்பது. அது என்னவென்றால், பேசுவது யாரோ, comment -ஐ generate -பண்ணுவது யாரோ, listen பண்ணுவது நீங்கள்.
என்ன கொடுமை சார்… யாரோ கொடுக்கின்ற comment -ஐ தொடர்ந்து கேட்டு, அதை listen பண்ணிக்கொண்டு, இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், அதை 'தன்னுடைய சுதந்திரம்' என்று வேறு நினைத்துக் கொண்டு திரிகிறார்களே... ஐயோ! ஐயஹோ!
இப்பொழுது யார் சொல்கிறார்கள்? இந்த வார்த்தைகளை யார் சொல்கிறார்கள்? கொஞ்சம் ஆழ்ந்து பார்ப்போமா? உங்களுக்குள் ஓடுகின்ற வார்த்தைகளை அப்படியே, என்னெல்லாம் ஓடுகிறதோ அதை அப்படியே ஒரு அரை மணி நேரம் tape பண்ணி கேட்டுப் பார்த்தீர்களென்றால்... பைத்தியம் பிடித்து விடும். நீங்கள் பைத்தியம் என்பது புரிய ஆரம்பிக்கும்; எந்த level என்றுதான் அதற்குப் பிறகு நாம் கண்டுபிடிக்க வேண்டும். அவ்வளவுதான். எந்த level -ல் இருக்கிறோம் என்றுதான் கண்டுபிடித்தாக வேண்டும்.
அப்படியே என்னெல்லாம் ஓடிக்கொண்டிருக்கின்றதோ, ஒரு Tape recorder-ஐ on செய்துவிட்டு அப்படியே பேசுங்கள்; record செய்து விடுங்கள். அரை மணி நேரம் கழித்து அந்த recording மொத்தமாக ஒரு தரம் உட்கார்ந்து கேட்டுப் பாருங்கள். அதை transcribe பண்ணி AI -க்குள் feed பண்ணீர்களால் என்றால், AI 'தூ...' என்று துப்பிவிடும்.
ஆழ்ந்து கேளுங்கள், ஒரு தரம் transcribe பண்ணி அப்படியேப் பார்த்தீர்களானால், உங்களுக்கு என்ன தெரியுமா முதலில் புரியும்? சின்ன வயதிலிருந்து உங்கள் மீது கொட்டப்பட்ட வார்த்தைகளை எல்லாம் மொத்தமாகக் கூட்டி வைத்து, அதை உங்களுடைய உணர்ச்சிகளோடு கலந்து... அது பாட்டுக்கு commend- ஆக generate ஆகிக்கொண்டிருக்கின்றது.
இப்பொழுது, modem day science மெதுமெதுவாகப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கின்றது. நம்முடைய body, 70 வருடத்திற்குக்கூட ஒரு emotion-யை அப்படியே சேமித்து வைக்குமாம். அந்த மாதிரி உள்ளே சேமிக்கப்பட்ட emotions எல்லாம்தான் - அடுப்பு, நெருப்பு. அந்த நெருப்பில், உங்கள் மேலே யார் யார் என்னென்ன வார்த்தைகளைக் கொட்டினார்களோ, சின்ன வயதிலிருந்து நீங்கள் கேட்ட எல்லா வார்த்தைகளும் மொத்தமாகச் சேர்ந்து, இந்த நெருப்பில் கொதித்து... கொதிக்கின்ற எண்ணெய் தெரிக்கின்ற மாதிரி, எண்ணெய் over- ஆக கொதித்தால் சட்டியிலிருந்து தெரிக்கும் பாருங்கள், அது மாதிரி உங்களுக்குள்ளிருந்து கொதித்துக் கொதித்து அந்த வார்த்தைகள் வந்து கொண்டிருக்கின்றன.
எந்த வார்த்தை, எப்பொழுது வரும் என்று யாருக்கும் தெரியாது. யாருக்கும் அதற்கும் சம்பந்தமும் கிடையாது.
அப்படியே உங்களுடைய, உள்ளே ஓடுகின்ற வார்த்தைகளை, அதனுடைய transcript -ஐ எடுத்துப் படித்துப் பார்த்தீர்களானால் புரியும். mostly உங்கள் mother tongue-ல் இருக்கும். இரண்டாவது, ஒருவேளை சிந்திக்கின்ற மொழியை நீங்கள் மாற்றி விட்டீர்களானால், ரொம்ப நாள் மாற்றிப் பழகி விட்டீர்களானால், அந்த சிந்திக்கின்ற மொழியில் இருக்கும். அது ரொம்ப rare ஆக, மிகவும் குறைவான percentage தான். பொதுவாக mother tongue-ல் இருக்கும்.
இரண்டாவது, நீங்கள் நிறையக் கேட்ட, படித்த, உள்வாங்கிய வார்த்தைகள், உங்களுக்குள் store பண்ணி வைக்கப்பட்டிருக்கின்ற emotions-ஓடு கலந்து... அந்த emotions- இன் Influence -னால், 'பட், பட், பட்' என்று வெளியில் வந்து விழும். எந்த logic-ஓ அதற்குப் பின்னால்... இந்த வார்த்தைகளை நீங்கள் கேட்டு நடந்தால், அதற்குப் பிறகு வரப்போகின்ற side effects, after effects பற்றிய அறிவோ, அல்லது அந்த வரப்போகின்ற side effects, after effects-ஐ handle பண்ணுகின்ற அளவிற்கு வாழ்க்கையில் தைரியம், துணிச்சலோ... எதுக்குமே, இந்த command பண்ணுகிறவர்கள் பொறுப்பு இல்லை!
உள்ளிருந்து ஏன் வருகிறதோ, அந்தக் காரணம், உள்ளிருந்து command-யை generate பண்ணுகிறவர்களுக்கே தெரியாது. ஏனென்றால், இது ஒரு conscious-ஆக command generate ஆகி எல்லாம் நடக்கவில்லை. ஏற்கனவே store பண்ணி வைத்திருக்கின்ற எல்லா emotions-ம் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. ஏதோ ஒரு வார்த்தை குறுக்கில், அங்கே இங்கே வருவது, வெளியே வந்து விழுகிறது. நீங்கள் அப்படியே கைகட்டி, வாய் பொத்தி, அதைக் கேட்டு... “உத்தரவு அரசே! உத்தரவு மஹாராஜா!” என்று போய் execute பண்ணிவிட்டு வருகிறீர்கள்.
இதில், நாம் ஏதோ மிகப்பெரிய சுதந்திரத்தில் இருக்கின்ற மாதிரியும்... 'தோன்றுவதைச் செய்வது, தோன்றுவதைச் சொல்வது ஏதோ சுதந்திரம்' என்று வேறு நினைத்துக் கொண்டிருக்கிறோம். என்ன கொடுமை ஐயா!
பலபேர் பேசும்போது ரொம்பப் பெருமையாக, “எனக்கு மனசுல பட்டத பளிச்சுன்னு சொல்லிடுவேன் சார்” என்பார்கள். அடப்பாவி! அது என்ன பெருமையா? சுதந்திரமா? அது சுதந்திரம் கிடையாது. அதை விட மிக மோசமான ஒரு அடிமைத்தனம் கிடையாது.
ஆழ்ந்து கேளுங்கள், Neuro peptides என்ற சொல்கின்றர்கள், அதாவது நம்முடைய emotions-ஐ body store பண்ணி வைப்பதற்குப் பெயர் Neuro peptides. ஒவ்வொரு emotion-ம் ஒரு measurable chemical equalant மாதிரி உள்ளே தங்கியிருக்கிறது. Its a measurable. இந்த emotions னுடைய boiling- ல் ஏதோ வார்த்தைகள் command -ஆக generate ஆகி வந்து விழுகின்றது. அதை நீங்கள் obedient ஆக கேட்கின்றீர்கள். கேட்டு அதை execute பண்ணுகிறீர்கள், அதையே வெளியல் சொல்கின்றீர்கள். இதை 'சுதந்திரம்' என்று நினைக்கின்றீர்கள். அதைப் பெருமை என்று வேறு நினைக்கின்றீர்கள். ஐயோ கொடுமை!
command எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல், வருகிற command-யை செய்பவனும் மூடன். அதைச் சொல்பவனும் மஹா மூடன். command எங்கிருந்து வருகிறது என்றாவது உங்களுக்குத் தெரிய வேண்டும் ஐயா. அதை listen பண்ணுவதற்கு முன்னாடி... ஆனால் command வருகின்ற வேகம்... நீங்கள்தான் அந்த command-யை generate பண்ணுகிறீர்கள் என்று உங்களை மூளைச்சலவை செய்து வைத்து, அந்த command-யை செய்து முடித்த பிறகுதான்... "ஐயோ! போச்சே!" என்று புலம்பவைக்கிறது. ஒரு கொடுமை என்னவென்றால், நீங்கள் புலம்புவதற்கும், திரும்பிப் பார்ப்பதற்கும், ‘தப்பு நடந்து விட்டது’ என்று கண்டுபிடிப்பதற்க்கூட அனுமதிக்காமல் அடுத்த command அதற்குள் வந்துவிடும்.
அதனால், இந்தத் தொடர்ந்த குழப்பத்திலும் Continuous chaos-ல் உங்களை drown பண்ணி வைத்திருந்தால்தான், மனம் உயிரோடு இருக்க முடியும்.
எத்தனை பேருக்கு இந்த மூன்று நிலை மனங்களைப் பற்றி புரிகிறது? ஏனென்றால் இது புரிந்தாலே விடுதலை.
Conscious-ஆக நீங்கள் command-யை generate பண்ணி, அந்த command-யை நீங்கள் கேட்டீர்களானால், execute பண்ணால், குறைந்தபட்சம் உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் பொறுப்பு என்ற நிலையில் வாழ்கிறீர்கள்.
ஆழ்ந்து கேளுங்கள், இன்று முடிவெடுங்கள். எங்கிருந்து command வருகிறது என்று தெரியாமல், pressure-ரோடு, வேகத்தோடு எந்த command வந்தாலும், அதைக் கேட்பதை நிறுத்துங்கள். இது மொத்தமாக சமூகம் உங்கள் மீது துப்பி வைத்த கழிவு ஐயா. எங்கிருந்து command வருகிறது என்று தெரியாமல் command வருகின்றது. அதை நீங்கள், நீங்கள்தான் அந்த command-ஐ generate பண்ணுகிறீர்கள் என்று நம்புகிறீர்கள். அதை வேக வேகமாகச் கேட்டுவிட்டு, அதை வெளிப்படுத்துகிறீர்கள், செயல்படுத்த ஆரம்பிக்கின்றீர்கள். ஆனால் அதனால் வரப்போகின்ற பிரதிபலனுக்கு யார் பொறுப்பு என்று தெரியாது. உங்களுக்குள் இருக்கும் இந்த command generating mechanism automatic- ஆக வேறு யாருடைய control- லிலோ இருக்கின்ற இல்லது யாருடைய control-லிலுமே இல்லை. மொத்தமாக சமூகம் உங்கள் மீது வாந்தியெடுத்து வைத், கழிந்து வைத்து, துப்பி வைத்த அந்த மொத்தத்தினுடைய கொந்தளிப்பு, உங்கள் உடலில் store ஆகிவிட்டு, அந்த வார்த்தைகளை எல்லாம் உங்களுக்குள் அது ஒரு எண்ணைச் சட்டியில் எண்ணைக் கொதிக்கின்ற மாதிரி கொதித்து, திடீர் திடீர் என்று தெறிக்கிறது. ஏன்? எதற்கு? என்ன? என்று யாருக்குமேப் புரியாமல் தெறிக்கின்றது. அதை உங்களுடைய command என்று நினைத்துக்கொண்டு, நீங்கள் செயல்படுகின்றீர்கள்.
தொடர்ந்து இரண்டு, மூன்று முறை விளக்குகின்றேன். காரணம் என்னவென்றால், இது ஆழ்ந்து புரிந்துகொள்ள வேண்டியது. நான் ஒவ்வொரு முறை சொல்லும்பொழுதும் உங்களுக்குள் அதைப் map பண்ணி பார்ப்பீர்கள். “ஆஹா.. கரெக்ட்டு”
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், வேறு ஒன்றுமே வேண்டாம் ஐயா, வேகத்திலே சிதைத்து ஒழித்தலை மட்டும் நிறுத்தினீர்களானால், உங்கள் வாழ்க்கையில் ஜெயித்து விடுவீர்கள்.
என்னிடம் வந்து... இந்த வெற்றி அடையவேண்டும் என்று கேட்பவர்களுக்கெல்லாம் நான் ஒன்றுதான் சொல்வேன், “ஒன்றுமே வேண்டாம், வேகத்திலே சிதைத்து அழித்தலை மட்டும் நிறுத்திவிடுங்கள்.”
பல நேரத்தில் 10 வருடங்கள், 15 வருடங்கள் உருவாக்கி வைத்த உறவுகள், வியாபாரம், குடும்பம், மனிதர்கள், நட்பு போன்ற பல விஷயங்களை, 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள் கஷ்டப்பட்டு உருவாக்கி வைத்ததெல்லாம், சும்மா பளீர் என்று ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பு, யாரோ உள்ளிருந்துக் கொடுத்த command, அந்த command ஐ கேட்டு, பளீர் என்று அதை execute பண்ணி, மொத்தமாகப் போட்டு உடைத்துவிட்டு, அதற்குப் பிறகு கஷ்டப்பட்டவர்கள் எத்தனைப் பேர் வாழ்க்கையில்? கை உயர்த்துங்கள். “இதை நான் என் வாழ்க்கையில் பலதரம் பண்ணிட்டேன் சாமி” என்பர்கள் கை உயர்த்துங்கள். இவ்வளவுதான்.
ஒரு கொடுமை என்ன தெரியுமா, அதை உங்களுடையப் பெருமை என்றும், சுதந்திரம் என்றும், அது உங்களுடைய தனித்தன்மை என்றும், அது உங்களுடைய மஹிமை என்றும், அதுதான் உங்களுடைய identity என்றும் அதை வேறு நம்புகின்றீர்கள். ஐயோ...! அதுதான் ஐயா, அதாவது யாரோ துப்பி வைத்த, கொட்டி வைத்த, கழிந்து வைத்த வார்த்தைகளை எல்லாம் ஒன்றாக்கி, அந்த உணர்ச்சிகளை எல்லாம் ஒன்றாக்கி, அது கொந்தளித்துக்கொண்டிருக்கின்ற அந்த கொதிச் சட்டியில் இருந்து தெறிக்கின்ற வார்த்தைகளை, உங்களுடைய command என்று நினைத்து execute பண்ணி எத்தனைக் கொடுமைகளை வாழ்க்கையிலே உருவாக்கிக்கொள்ளுகிறீர்கள்.
அதைப் பெருமையாக வேறு நினைக்கின்றீர்கள். ஆழ்ந்து பாருங்கள், எவ்வளவு கொடுமையான சதி உங்களுக்கு எதிராக செய்யப்பட்டிருக்கின்றது. இது 'சதி' என்பதுதான் சரியான வார்த்தை. conspiracy.
உண்மையில் உங்களுக்கு எது சுதந்திரம் என்று உங்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். உண்மையில் எது சுதந்திரம் என்றால், நீங்கள் conscious ஆக generate பண்ணுகின்ற ஒரு command ஐ, நீங்கள் obey பண்ணுவதுதான் சுதந்திரம்.
திரும்பவும் சொல்கின்றேன், இந்த 'ஸ்வதந்த்ரம்' என்கின்ற ஸம்ஸ்க்ருத வார்த்தைக்கு, ஆங்கிலத்தில் வார்த்தையேக் கிடையாது. ‘Freedom’ equalant வார்த்தை கிடையாது. Bull -ஐ Ox ஆக்கிய மாதிரிதான். Freedom என்கிற வார்த்தை, 'ஸ்வதந்த்ரம்' என்கின்ற வார்த்தையிலிருந்து potency ஐ எடுத்துவிட்டு, impotent ஆக்கி translate செய்து சொல்வது. Impotent ஆக்கிய meaning - ஐ சொல்வது.
Freedom is impotent expression of the word ‘Swadhantram’
ஸ்வதந்த்ரம் என்றால் என்ன அர்த்தம் என்றால், தன்னை கையாளும் நுட்பம். 'ஸ்வ-தந்த்ரம்' - தந்த்ரம் என்றால் technique, நுட்பம், methodology. ஸ்வ-தந்த்ரம் - தன்னைக் கையாளும் நுட்பம், தெளிவும், methodology -யும் தெரிந்தவர்கள். அதுதான் ஸ்வதந்த்ரம்.
தனக்குள் command conscious- ஆக generate பண்ணி, எண்ணத்தை நாம் உருவாக்கி, அதை நாம் பேசி, நாம் execute பண்ணி வாழுகின்றவன் - ஸ்வதந்த்ரமான மனிதன். அதுதான் ஐயா ஸ்வதந்த்ரம்.
சும்மா ஊரெல்லாம் அவன் அவன் கழிந்து வைத்ததையும், உமிழ்ந்து வைத்ததையும், உள்ளுக்குள்ளேப் பொங்கிக்கொண்டிருப்பதையும்.... இந்த கழிந்து வைத்து, உமிழ்ந்து வைத்ததெல்லாம் உள்ளே இருக்கின்றது. வாங்கி வைத்திருக்கின்றோம். அது உள்ளேப் பொங்கிக்கொண்டிருக்கிறது. அதிலிருந்துத் தெறித்து வெளிப்படுகின்ற சில வார்த்தைகளை, நீங்கள் generate பண்ணிய command என்று நினைத்துக்கொண்டு, அதைச் செய்வதும், அதைச் சொல்வதும், பேச்சு சுதந்திரமும் கிடையாது, வாழ்வு சுதந்திரமும் கிடையாது.
நம்முடைய fundamental right ஒரு மனிதனுக்கு என்னவென்றால்... நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நான் சொல்வது Cosmic Constitution படி, ப்ரபஞ்சத்தின் ஸாஸனத்தின் படி, ஒரு fundamental right மனிதனுக்கு என்னவென்றால், first amendment... கைலாஸாவினுடைய first amendment இதுதான்: “உங்களை பரம்பொருள் என்று உணரவும், அந்த ஸத்யத்தை வாழவும், அதற்கு நீங்கள் பொறுப்போடு இருக்கவும், அதேபோல மற்றவர்கள் உங்களை நடத்துவதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு”. இதுதான் first amendment.
Second amendment: Conscious-ஆக நீங்கள் generate பண்ணுகின்ற எந்த வார்த்தையையும், எந்த எண்ணத்தையும் நீங்கள் செயல்படுத்தலாம், சொல்லலாம். ஆனால் அது Conscious-ஆக generate பண்ணுதாக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள்தான் பொறுப்பு என்று உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்.
Conscious-ஆக நீங்கள் generate பண்ணுகின்ற வார்த்தைகளை, ஸ்வதந்த்ரமாக நீங்கள் generate பண்ணுகின்ற வார்த்தைகளைப் பேசுவதற்கும், அந்தமாதிரி நீங்கள் generate பண்ணுகின்ற வார்த்தைகளை செயல்வடிவமாக்குவதற்கும் உங்களுக்குச் சுதந்திரம் உண்டு. ஏனென்றால் அந்த வார்த்தைகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள்தான் பொறுப்பு.
Cosmic Constitution-ல், ப்ரபஞ்சத்தின் ஸாஸனத்தில் தோன்றுவது எது வேண்டுமானாலும்... அதாவது command யை நீங்கள் generate பண்ணாமல், யாரோ generate பண்ணுகின்ற command-யை execute பண்ணுவதற்கோ, செயல்படுத்துவதற்கோ அனுமதி இல்லை. அதற்குப் பெயர் சுதந்திரமும் இல்லை. இதைப் புரிந்துகொள்ளுங்கள்.
உங்களுக்குள் generate ஆகின்ற word, உங்களுடையதாக இருக்க வேண்டும். மனம், உங்களுடையதாக இருக்க வேண்டும். உங்களுக்குள் சொல்லப்படும் வார்த்தைகள், உங்களுடையதாக இருக்க வேண்டும். இதுதான் எண்ணங்களைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முதல் ஸத்யம்.
அடுத்து ஆழ்ந்து கேளுங்கள்: நேற்று காலத்தைப் பற்றி விளக்கிக்கொண்டிருந்தேன். கடந்த காலம் இறந்து விட்டது. எதிர்காலம் என்றுமே வரப்போவதில்லை. நிகழ்காலம் புரியாத புதிர். இல்லை என்பதே உண்மை. அப்படியென்றால் உண்மையில் சத்தியதான் எது? எதுதான் சத்தியம்?
'நித்ய நிகழ்வே' சத்தியம். இப்பொழுது நீங்கள் வைத்திருக்கும் இந்த focal point சத்தியம். இந்த generate தான் உங்களுடைய வாழ்க்கை, உங்களுடைய பலம்.
உங்கள் மனம் மாற வேண்டுமென்றாலும், உடல் உடல் நலம் அடைய வேண்டுமென்றாலும், என்ன நடக்க வேண்டும் என்றாலும், எந்த நல்லது நடக்க வேண்டும் என்றாலும், அது இந்த நித்ய நிகழ்வில்தான் நிகழும். அதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
Physical healing -ஆக இருந்தாலும் சரி, Mental healing - ஆக இருந்தாலும் சரி, Psychological healing -ஆக இருந்தாலும் சரி, Emotional healing -ஆக இருந்தாலும் சரி, ஜீவன் முக்தியாக இருந்தாலும் சரி... எந்த அனுபவமோ, அனுபூதியோ நித்ய நிகழ்வான இக்காலத்திலேயே நிகழும்.
உண்மையில் 'நித்ய நிகழ்வு' என்று சொல்வது, 'காலம்' என்கிற சினிமா திரையிடப்பட்டுக் காட்டப்படும் திரை. 'காலங்கள்' எனும் திரைப்படம் திரையிடப்பட்டுக் காட்டப்படும் திரை.
இந்த நித்ய நிகழ்வில்தான் உடல் heal ஆகும். நித்ய நிகழ்வில்தான் மனம் heal ஆகும். நித்ய நிகழ்வில்தான் உயிர் மலரும். நித்ய நிகழ்வில்தான் அமைதி பிறக்கும். நித்ய நிகழ்வில்தான் வாழ்க்கையில் உங்களுக்கு வரப்போகின்ற, வருகின்ற பெரிய பெரிய Breakthrough, மிகப்பெரிய ஸத்யாங்கள் விளங்கும். நித்ய நிகழ்வில்தான் Intuition வெளிப்படும்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். உள்ளுக்குள்ளிருந்து ஆழமாக வெளிப்படுகின்ற பயங்கள், Intuition கிடையாது.
பல பேர் என்னிடம் வந்து சொல்வதுண்டு, "எனக்கு Intuition -ல் தெரிகிறது சுவாமி" என்று. உள்ளுணர்வில் பிரச்சனை தெரியவே தெரியாது. அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். உள்ளுணர்வில் Solution மட்டும்தான் தெரியும்.
“யாரோ சூனியம் வைத்து விட்டார்கள், பேய் பிடித்துள்ளது என்று நினைக்கிறேன், எனக்கு உள்ளுணர்வு சொல்லுச்சு...” இது எல்லாமே, நீங்கள் உங்களுக்கே செய்துகொள்கின்ற மிகப் பெரிய மூளைச்சலவை. உயிரோடு இருப்பவன் தான் தொந்தரவு கொடுப்பான். செத்தவன் தொந்தரவு கொடுக்கவே முடியவே முடியாது ையா. போய்விட்டான் ஐயா, அவன் பித்ரு லோகம் தாண்டிவிட்டான்.
இந்த ப்ரஹ்ம ராக்ஷஸர்கள் என்கின்ற அந்தச் சக்தி உடைய அந்த ஆத்மாக்கள் மட்டும் வேண்டுமானால், கீழே வந்து யாருக்காவது தொந்தரவு பண்ண முடியும். அதுவும் இந்த ரவுடி, டான் மாதிரி ஐயா. அவர்கள் ஒன்றும்.... இப்பொழுது டான் இருக்கிறார்கள் என்றால், அந்த டானோ, மாபியா மக்களோ ஊரில் இருக்கின்ற எல்லோரையும் போய் சாகடிக்கப் போவதில்லை. ரோட்டில் போகின்ற எல்லோரையும் அடிக்க மாட்டார்கள். அவர்கள் Lifestyle -லோடு சம்பந்தப்பட்டவர்கள், அவர்களுக்கு துரோகம் செய்தவர்கள், அவர்களுடன் பிரச்சனை செய்பவர்களோடு மட்டும்தான் பிரச்சனையை வைத்துக்கொள்வார்கள். அதே மாதிரிதான் இந்த ப்ரஹ்ம ராக்ஷஸர்கள் எல்லாமும். அதனால் அது Rare ஆன exemption ஆன சில நிகழ்வுகள்.
ஆனால் இந்தப் பேய் படங்கள் மூலமாக, பேய்களையே normalize பண்ணிவிட்டார்கள். அது ஒரு பெரிய கொடுமை. இந்த அளவுக்கு common-ஆக எல்லாம், பேய்கள் சமூகத்திலே மனிதர்கள் மீது இயங்குவது சாத்தியம் இல்லை!
இறந்தவர்களைப் பற்றி நீங்கள் நிகழ்காலத்தில் வைத்திருக்கும் நினைவுதான் பிரச்சினையே தவிர, இறந்தவர்கள் அல்ல.
எப்படி உங்களுக்கு இருக்கின்ற இந்த பேய் சம்பந்தமான பிரச்சினை, ப்ரஹ்ம ராக்ஷஸர்கள் மாதிரி அல்லது இறந்தவர்களைப் பற்றி நீங்கள் நினைவா? என்று எப்படி கண்டுபிடிப்பது என்றால், ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன் ஐயா, கேட்டுக்கொள்ளுங்கள்.
நம்முடைய shared reality இருக்கிறது இல்லையா, shared reality என்றால், நீங்கள், நான் எல்லோரும் பார்க்கின்ற இந்த டேபிள், சேர், நம்மைச் சுற்றியிருக்கின்ற பொருட்கள், இந்தமாதிரிப் பொருட்களே உடையுமானால், மாறுமானால், shared reality -ல் இருக்கின்ற விஷயங்கள் மாறுமானால், அப்பொழுது வேண்டுமானால் சொல்லலாம், அமானுஷ்யமான ஏதோ ஒன்று... ப்ரஹ்ம ராக்ஷஸோ, ஏதோ பித்ரு லோகத்திற்குச் சென்ற ஆத்மாக்கள் ஏதோ ஒன்று இங்கு செயல்படுது என்றெல்லாம் சொல்லலாம்.
shared reality -ல் எந்த மாற்றமும் வராதவரை நீங்கள் go through பண்ணுகின்ற எல்லா experience மே, past -ஐ பற்றி present-ல் நீங்கள் வைத்திருக்கின்ற memory-யினுடைய impact தான். வேறு ஒன்றும் கிடையாது. இதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்,
நீங்களே ஒரு பெரிய பேய், உங்களை இன்னொரு பேய் வேற தனியா பிடிக்க வேண்டுமா?
என்னுடைய ரொம்ப நாள், சிஷ்ஷை ஒருவர் வந்து.. பல ஆண்டுகள் 20 ஆண்டுகளுக்கும் மேலான, சிஷ்யை, அவர்கள் வந்து, “சாமி இப்ப நடப்பதெல்லாம், எனக்குள் நடப்பதெல்லாம் பார்த்தால், ஏதோ திடீர் என்று எனக்குப் பைத்தியம் பிடிச்சிட்டா மாதிரி இருக்கு சாமி” என்றார்கள்.
நான் நிமிர்ந்துக்கூட பார்க்கவில்லை, நான் எழுதிக்கொண்டிருந்தேன்.. எழுதிக்கொண்டிருந்து.. “கட்டாயமா இல்ல மா, கவலையேப் படாதீங்க’.
ஆனால் அந்தப் பெண்ணுடைய மிகப்பெரிய பிரச்சினை, நான் நிமிர்ந்துக்கூட, attention கொடுக்காமல் answer பண்ணேன் என்பதுதான்.
“என்ன சாமி நான் இவ்வளவு பெரிய பிரச்சினையை வந்து சொல்லிக்கொண்டிருக்கிறேன், நீங்கள் நிமிர்ந்துக்கூட பார்க்காமல், என்ன சொல்கிறேன் என்றுகூட கேட்காமல், 'இல்லை' என்று சொல்கிறீர்களே?”
நான் சொன்னேன்.. “மா.. மா.. இரண்டாவது தரம் பைத்தியம் பிடிக்காதுமா. அதனால கட்டாயமா இது பைத்தியம் இல்லமா. என்னன்னு உட்கார்ந்து கண்டுபிடிப்போம்”. அவ்வளவுதான் அந்தம்மாவிற்கு உண்மையிலேயே பைத்தியம் பிடித்துவிட்டது. “என்னை பைத்தியம்-னு சொல்லிட்டீங்களா? என்னை பைத்தியம்-னு சொல்லிட்டீங்களா?”
நான் சொன்னேன்.. “நான் சொல்லலமா, நீ தான்மா சொன்ன உன்னைப் பைத்தியம் என்று. நான் சொன்னேனா?”
உங்கள் எல்லோருக்கும் சொல்கிறேன், உங்களை எல்லாம் யாரையும் பேய் பிடிக்காது. நீங்கள் எல்லாம் யாரும் பைத்தியம் ஆக மாட்டீர்கள். காரணம் என்னவென்றால், ஏற்கனவே அதைவிட மோசமான நிலையில்தான் இருக்கின்றீர்கள்.
உங்கள் வாழ்க்கையை அப்படி கண் திறந்து பாருங்கள். 99 சதவிகிதம், உங்களுக்குள் generate ஆகின்ற command, யார் generate பண்ணுகிறார்கள் என்றேத் தெரியாமல், listen பண்ணிக்கொண்டு, அதை execute பண்ணிக்கொண்டு வேறு இருக்கின்றோம்.
ஒரு.. ஒரு நிமிடம் time கொடுக்கின்றேன், உங்களை நீங்களே திரும்பி அப்படியே மெதுவாகப் பாருங்கள். என்னவெல்லாம் ஓடிக்கொண்டிருக்கின்றது என்று பாருங்கள்.
எரிச்சல், tiredness, boredom, குழப்பம், மொத்தமான ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பு, மந்தம் இது எல்லாம் நீங்கள் generate பண்ணுகின்ற command ஆ? conscious -ஆன நீங்கள் generate பண்ணுகின்ற mood ஆ? நீங்கள் generate பண்ணுகின்ற word ஆ?
கிடையாது! ஆனால் இதிலிருந்து அந்த வார்த்தைகள், command தெறிச்சி வெடிக்கின்றது. உங்களுடைய consciousness -இல் இல்லாத இருப்பிலே இருப்பதுதான், பேய் பிடித்திருப்பது ஐயா.
உங்களுடைய consciousness -இல் இல்லாத, உங்களுடைய consciousness -க்குக் கீழே, உங்கள் conscious -இல் இல்லாமல், நீங்கள் conscious - ஆக இல்லாமல் இருக்கின்ற இருப்பில் இருப்பதுதான், பைத்தியம் பிடித்திருப்பது ஐயா. வேண்டுமானால், scale வேறு வேறு விதத்தில் இருக்கும்.
சரி.. நான், ‘உங்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது’ என்று சொன்ன உடனே, hurt ஆகிவிட்டீர்கள் என்றால், sorry. scale வேண்டுமானால் கொஞ்சம் குறைத்துக்கொள்கின்றேன், 99.99% என்று குறைத்துக்கொள்கின்றேன். அவ்வளவுதான்.
என்ன நடக்கிறது? என்று பாருங்கள். எவ்வளவு blind spots… எவ்வளவு unconscious comments ஐ execute பண்ணுவதனால் வருகின்ற துயரங்கள். வாழ்க்கை சிதைந்து, உடல் சிதைந்து, மனம் சிதைந்து, இதை சுதந்திரம் என்று நம்பி, இதை பெருமை என்று நம்பி, அதுமாதிரியான gang -கோடு connect பண்ணி, ஒரு team- ஐ உருவாக்கிக்கொண்டு, அதுமாதிரியான ஒரு eco-system- த்தை உருவாக்கிக்கொண்டு…
நித்ய நிகழ்விலே எழுகின்ற எண்ணங்கள், உங்கள் தெளிந்த உணர்வோடு எழவேண்டும். அதை நீங்கள் செயல்படுத்த வேண்டும். அதன் லாப-நஷ்டங்களுக்கு, பிரதிபலன்களுக்கு நீங்கள் பொறுப்பு என்கின்ற வாழ்க்கைதான், அடிப்படை சுதந்திர வாழ்க்கை!
இதில் அடுத்த நிலை சுதந்திரம் இருக்கின்றது - ஆன்மிக சுதந்திரம்.
அது என்ன என்று சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள், இந்த நித்ய நிகழ்வு நிலையிலேயே இருக்க இருக்க, எங்கிருந்து எவ்வாறு நாம் இந்த உணர்வை உணருகின்றோம்?
'நான்' என்கிற உணர்வையோ, இந்த ப்ரபஞ்சம் என்கிற உணர்வையோ, இருப்பைப் பற்றி எவ்வாறு நாம் உணருகின்றோமோ…
'நான்' என்கின்ற தன் உணர்வு எவ்வாறு இருக்கின்றதோ, அதை ஆழ்ந்து பார்க்கப் பார்க்க, எவ்வாறு இருக்கிறது என்று பார்க்கப் பார்க்க.. அதாவது observer ஐ observe பண்ணுவது, witness ஐ witness பண்ணுவது, pure சாக்ஷியாக நமக்குள் நிகழ்வதைப் பார்த்தல்.
ரமண மஹரிஷி சொல்லுவார், ‘அஹம் அஹம் அஹம்’ என்று நமக்குள் ஸ்புரிக்கின்ற, அந்த உணர்விலே ஆழ்ந்து இருத்தல். அஹம் ஸ்புரணம், ஆத்ம ஸ்புரணமாக மாறிவிடும்.
இந்த நித்ய நிகழ்விலே, ஆத்ம ஸ்புணத்திலே இருக்க இருக்க, ஒரே... அந்த 'நான்' என்ற உங்களுடைய உணர்வு, தன்முனைப்பு எங்கிருந்து எழுகின்றதோ, அதே மூலத்திலிலிருந்துதான் இந்த உலகமே வெளிப்படுகிறது என்று புரிந்துகொண்டீர்களானால், இந்த உலகம் மூன்று நிலையிலே விளங்கும்.
ஐயா.. முதல் நிலை: இருப்பதை நாம் பார்க்கின்றோம் என்று நினைக்கின்ற ராக்ஷஸ நிலை. நரகம். அதுதான் மிகப்பெரிய மாயை!
ஸ்ருஷ்டி-த்ருஷ்டி என்று சொல்வோம். ‘ஸ்ருஷ்டி இருக்கிறது, நான் அதைப் பார்க்கின்றேன்’ அப்படியென்றால் என்ன? ஒரு சிறைக்குள் மாட்டிக்கொண்டீர்கள், இது இருக்கிறது, என்ன... ஐயோ..! ‘இந்த உலகமே உண்மையிலேயே இருக்கின்றது, நீங்கள் அதில் மாட்டிக்கொண்டீர்கள்’ என்கின்ற உணர்வு - இதுதான் நரகம்.
நித்ய நிகழ்விலே இருக்க இருக்க இருக்க, அடுத்த நிலை புரியும். அடுத்த நிலை என்னவென்றால், 'நாம்தான் இந்த உலகத்தை, நமக்குத் தேவையானபடி project பண்ணி பார்க்கின்றோம். நாம் என்ன emotion -ஐ உருவாக்குகின்றோமோ, என்ன command -ஐ generate பண்ணுகின்றோமோ, என்ன mood -ல் இருக்கிறோமோ, அதேமாதிரிதான் உலகம் தெரிகின்றது. த்ருஷ்டி-ஸ்ரு ஷ்டி: உருவாக்கிப் பார்க்கின்றோம். ஸ்ருஷ்டி-த்ருஷ்டி அல்ல. நன்றாகப் புரிந்துகொள்ளுகள், அதாவது இருப்பதை நாம் பார்க்கவில்லை. த்ருஷ்டி-ஸ்ருஷ்டி: நாம் பார்க்கவிரும்பதை உருவாக்குகின்றோம். இதற்கு விவர்த்த ஸித்தாந்தம் என்று பெயர். விவர்த்தம் என்று பெயர்.
நாமே நம்மை விவரிக்கின்றோம். நம்முடைய விவர்த்தம்.
நன்றாகக் கேளுங்கள், நேற்றைய ஸத்ஸங்கமும், இன்றைய ஸத்ஸங்கமும் இரண்டும் புரிந்தால்தான் புரியும். சேர்ந்து புரிந்துகொள்ள வேண்டியது.
நித்ய நிகழ்விலே, ரஜோ குணமாக... ரஜோ குணத்தோடுப் பொங்கினீர்களானால், அதாவது உள்ளிருந்து வருகின்ற command யாருடையது என்றே தெரியாது, ஆனால் execute பண்ணுவது மட்டும் நீங்களாக இருக்கும். அந்த நிலையில் நீங்கள் இருந்தீர்களானால், இந்த ஸ்ருஷ்டியை, ‘இந்த ஸ்ருஷ்டி நிஜமாக இருக்கிறது, அதை நீங்கள் பார்க்கின்றீர்கள்’ என்று நினைப்பீர்கள். இது தான் நரகம், பந்தம்.
கொஞ்சம் சற்றே அமைதியடைந்து நித்ய நிகழ்வில் இருக்க இருக்க, conscious - ஆக command ஐ generate பண்ணுவது, conscious -ஆக அதை execute பண்ணுவது என்கின்ற நிலைமைக்கு வர ஆரம்பித்தீர்களானால், அப்பொழுது புரியும்... விவர்த்தம் - நாம் விரும்புவதைத்தான் உருவாக்கிப் பார்க்கின்றோம்.
இப்பொழுது நவீன கால அறிவியல் observer effect என்று சொல்கிறார்கள் ஐயா, பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பாக, நம்முடைய முன்னோர்கள் இதை அவ்வளவு அழகாக ஆவணப்படுத்தி வைத்துவிட்டார்கள். பாவம் இந்த modern day science இப்பொழுதுதான் வந்து நம்மை scratch பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள், skin level தான் scratch பண்ணிக்கொண்டிருக்கின்றார்கள். எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால், அடப்பாவிகளா! இவ்வளவு திருடிக்கொண்டுப் போனீர்களே டா, திருடிக்கொண்டு போயும் புரியவில்லையா டா?
பல நேர்மையான அறிஞர்கள், உலகம் முழுவதும் நேர்மையான அறிஞர்கள், மீண்டும் மீண்டும் சொல்கின்றார்கள், “மொத்த wester civilization -னும் Hindu civilization- ல் திருடிய அறிவும், பணமும்தான். அவ்வளவுதான்.”
Invation -க்கு முன்பாக, இந்த தீவிரவாதத் தாக்குதல்கள், கிறிஸ்தவ தீவிரவாதத் தாக்குதல்களும், இஸ்லாமிய கண்மூடிதனமான தீவிரவாதத் தாக்குதல்களும் நடப்பதற்கு முன்பாக, பாரதத்தினுடைய GDP, உலகத்தின் 40 சதவிகிதம்.
அடுத்தது: நம்முடைய அறிவு, நாம் நடத்திக்கொண்டிருந்த Universities, மேலை நாட்டினுடைய மிகப்பெரிய Universities ஆரம்பிப்பதற்கெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக, உலகத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களையும் நடத்திக்கொண்டிருந்த civilization நாம்.
நம்முடைய முன்னோர் மிகத்தெளிவாக இந்த விவர்த்தத்தைப் பற்றி விளக்கிவிட்டார்கள்.
Observer effect என்று இப்பொழுது modern day science பேசுகின்றது. அது என்னவென்றால், ஒன்றும் இல்லை. ஒரு நியுட்ரானை observe பண்ணாமல் இருந்தால், அது பாட்டுக்கு ஒரு மாதிரி இயங்குது. சும்மா observe பண்ணால் போதும், interfere எல்லாம் பண்ண வேண்டாம், observe பண்ணாலே அதனுடைய behaviour மாறுகிறது. அதுன் ஐயா த்ருஷ்டி-ஸ்ரு ஷ்டி – பார்ப்பதன் மூலமாக உருவாக்குகின்றோம்.
ஸ்ரு ஷ்டி-த்ரு ஷ்டி அல்ல. இருப்பதைப் பார்க்கவில்லை. பார்க்கவிரும்பதை, இருப்பதாக உருவாக்குகின்றோம். இதுபுரிவதுதான் ஸத்வ நிலை.
நித்ய நிகழ்வில் இருக்க இருக்க, இந்த ஸத்வ நிலை வளரும். மெது மெதுவாகப் புரியும், “ஆமாம்.. நம்ம என்ன mood-ல் இருக்கிறோமோ, அப்படித்தான் உலகத்தைப் பார்கின்றோம். நாம என்ன மாதிரி react பண்ணுகிறோமோ, அப்படித்தான் உலகம் நம்மை mirror பண்ணுகிறது” என்று புரியும்.
இந்த ப்ரபஞ்சம் நம்முடைய mirror என்று புரிந்துகொள்வதுதான் ஸத்வ நிலை. அது எவ்வளவு பெரிய சுதந்திரம் தெரியுமா ஐயா? அது புரிந்துவிட்டதென்றால், எத்துனைத் தாக்குதல்கள், எத்துனை மூலையிலிருந்து எத்துனைப் பிரச்சினை வந்தாலும், பரமசாந்த ஸ்வரூபனாக இருந்து, அவ்வளவு அருமையாக deal பண்ணலாம் ஐயா. அப்பொழுது என்ன நினைப்போம் என்றால்... நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், வெளியிலிருந்து எது வந்தாலும், பரமசாந்த நிலையிலிருந்துப் பார்ப்பது.. 'என் முன் ஜென்ம கர்மா... கர்மH' என்று புலம்புவது எல்லாம் கிடையாது. அதெல்லாம் அடி முட்டாள்தனம்.
'இதை நான் ஏன் உருவாக்கிப் பார்க்கின்றேன்? உண்மையில் நான்தான் எல்லாவற்றையும் உருவாக்கிப் பார்க்கின்றேன், இதை உருவாக்கிப் பார்ப்பதன் மூலமாக, உண்மையில் எனக்கு நான் என்ன சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். ஏன் இதை நான் உருவாக்கிப் பார்க்கின்றேன்? இதன் மூலமாக என் வாழ்க்கையின் குறிக்கோளுக்கு என்ன முன்னேற்றம் வரப்போகின்றது? என் இருப்பிற்கு இது எந்த விதத்திலே உபயோகம்? ஏன் இதை நான் உருவாக்கிப் பார்க்கின்றேன்?' என்று அமைதியாகப் பாருங்கள்.
ஐயா நல்லா புரிஞ்சுக்கோங்க. நான் ஏதோ காட்டுக்குள் life-ல இருந்து escape-ஆயி, escapist-ஆ ஒக்காந்துட்டு ஒழிஞ்சுட்டு வாழ்ந்தவனும் அல்ல, வாழறவனும் கிடையாது. இந்த வாழ்க்கையிலே சந்திக்காததும் இல்லை, சாதிக்காததும் இல்லை. அதனால ரொம்ப practical -லான நடைமுறை சத்தியத்தைத்தான் உங்களுக்கு சொல்லுவேன்.
இந்த சத்தியத்தைக் கேட்ட உடனே பலபேருக்கு வர reaction, ”ஒ... இது escapism” ம்... கிடையாது. ஒரு வீடு பத்தி எரியுதுன்னா, escape-ஆயி வர்றது தாங்கயா புத்திசாலித்தனம். இல்லைன்னா suicide பண்ணிக்கோ, யார் வேனாங்குறது?
சில நேரத்துல, சில விலங்குகள், especially மான்-லாம்... மான், நாய் இதெல்லாம், சிறுத்தை கவ்விடுச்சுன்னா, செத்துப்போன மாதிரி நடிக்கும். அப்ப சிறுத்தை என்ன பண்ணும்? ”ஒ, செத்துருச்சு”ன்னு சொல்லி விட்டுட்டு, தன்னை தயார்படுத்திக்கிட்டு, நல்லா புடிச்சு தூக்கிட்டுப் போலான்னு... அத முதல்ல கவ்வும்போது, natural-லா தாவி கவ்வும்போது, பிடி அவ்வளவு இருக்கமா தூக்கிட்டுப் போறதுக்கு இருக்காது. Kill பண்ற purpose-ஸோடதான் கடிக்கப்படுது, பிடிபடுது. So, அதை அந்த weight-ட இழுத்துட்டுப் போறதுக்கு நல்லா வாயால இன்னும் நல்லா கவ்விப் பிடிக்க வேண்டி இருக்கும். So இந்த விலங்கு நடிக்கும்பொழுது, அது இன்னும் நல்லா வசதியா கவ்விப் பிடித்துக் கொள்வதற்காக அது, ”ஒ, செத்துருச்சு”ன்னு சொல்லி விடும். விட்ட உடனே அது தப்பிச்சுகும். அந்த மாதிரி நடிக்கிறது என்ன? அங்க? கோழைத்தனமா? கிடையாது. அதுதான் புத்திசாலித்தனம்.
ரொம்ப practical-லான சத்தியத்தைத்தாங்கயா உங்களுக்கு சொல்லுவேன்.
நல்லா புரிஞ்சுக்கோங்க. ‘நீங்கதான் இந்த உலகத்தை உருவாக்கிப் பார்க்கிறீங்க’ன்ற சத்தியத்திலிலிருந்து பார்த்தீங்கன்னா, இது அனைத்தும்... உங்க முன்னாடி எது வந்தாலும், அதுக்கு அழகா conscious-ஸாக தீர்வைக் கண்டறிந்து விடுவீர்கள். conscious-ஆ அதுக்கு தீர்வைக் கண்டு விடுவீர்கள். உங்களுடைய வாழ்க்கையின் நோக்கம், போக்கு, இதை ஏன் உருவாக்கிப் பார்க்கறீங்க? இதை எவ்வாறு மாற்றுவது? அத்தனையும் ரொம்பத் தெளிவாப் பார்த்திருவீங்க.
விவர்த்தம்... நித்ய நிகழ்விலே இருக்கும்பொழுது, நீங்கள் 'நான்' என்கின்ற தன்முனைப்பை எவ்வாறு உருவாக்குகிறீர்களோ, அதே மூலத்திலிலிருந்து அவ்வாறேதான் இந்த பிரபஞ்சத்தையும் வெளிப்படுத்திப் பார்க்கின்றீர்கள்.
R-A-S-ன்னு சொல்லுவாங்கம்ய்யா, Reticular Activating System... 1.1 crore bits of information ஒவ்வொரு வினாடியும் உங்களுக்கு வருது, ஆனா அதுல வெறும் 40 information-அ மட்டும்தான் எடுத்து stitch பண்ணி உங்களுடைய reality-ய நீங்க புரிஞ்சுக்கிறீங்க. உங்கள் நம்பிக்கைக்கு ஏத்தா மாதிரி, வெறும் 40 bit-ட மட்டும்தான் எடுத்து உங்க reality-ய நீங்க உருவாக்கிறீங்க.
அப்படின்னா என்ன அர்த்தம்-ன்னா, உங்களுடைய பார்வைக்கேற்றார் போல் உங்கள் உலகத்தை உருவாக்குகிறீர்கள்ங்கிறதை, உங்க experience-அ உருவாக்குகிறீங்கன்றதை, உங்க reality-அ manifest பண்ணிக்கிறீங்கன்றத மிக மிக மிகத் தெளிவாக நவீன கால அறிவியல் நிரூபித்துவிட்டது.
இதுக்கு அடுத்த ஒரு நிலை இருக்கு. அதைப் புரிந்துகொள்ளுங்கள். ஏன்னா, நித்ய நிகழ்விலே இருக்க இருக்க இப்படித்தான் அனுபூதி வர ஆரம்பிக்கும். பரமசிவ அனுபூதி இப்படிதான் வர ஆரம்பிக்கும்.
மூன்றாவது நிலை என்னன்னா, உண்மையில் சுத்தமான pure consciousness மட்டும்தான் இருக்கு. Pure consciousness மட்டும்தான். 'நீங்கள்'னு தனியா ஒன்னும், இந்த பிரபஞ்சம்னு தனியா ஒண்ணும் எதுவுமே இல்லை. இருக்கிறது pure consciousness - அஜாதம்.
நீங்களோ, உலகமும் தனியாகப் பிறப்பெடுக்கவே இல்லை. இருப்பு இருப்பாகவே இருக்கின்றது. இதை புரிந்துகொள்வதுதான் பரமானுபூதி.
மூன்று நிலையை விளக்கினேன்: ஸ்ருஷ்டி-த்ருஷ்டி: இருப்பதைப் பார்க்கின்றோம் என்று நினைக்கின்ற நரக நிலை. த்ருஷ்டி-ஸ்ருஷ்டி: நாம் பார்க்க நினைப்பதைத்தான் உருவாக்கிப் பார்க்கின்றோம் என்கின்ற புரிதல் நிலை. 'நான்' என்று தனியாக ஒன்றும், ‘இந்த உலகம்’ என்று தனியாக ஒன்றும் உருவாகவே இல்லை. இருப்பு இருப்பாகவே இருக்கின்றது என்கின்ற அனுபூதி நிலை. ஸ்ருஷ்டி-த்ருஷ்டி: - முதல். இரண்டாவது - த்ருஷ்டி-ஸ்ருஷ்டி. விவர்த்தம். மூன்றாவது - அஜாதம்.
ஒரு கெட்ட செய்தி என்னன்னா, சின்ன வயசிலிருந்து இந்த சத்தியங்கள் அளிக்கப்படாததனால் இது ரொம்பக் கஷ்டம். இந்த அனுபூதி அடைவது கஷ்டம்னு உங்க மனசு நம்பி மூளைச்சலவைக்கு ஆளாகுதல்.
ஒரு நல்ல செய்தி என்னன்னா, இந்த அனுபூதியை வார்த்தையால் மட்டுமல்ல, சக்தியாக, அனுபூதியாக குருவினால் அளித்துவிட முடியும்.
எப்படி ஒரு cake-அ cut பண்ணி அந்த piece-அ உங்க வாயில வைக்க முடியுமோ, எப்படி ஒரு உணவை... லட்டையோ, உணவையோ, பஞ்சாமிருதத்தையோ, இல்ல ஏதாவது ஒரு பிரசாதத்தையோ உங்களுக்குக் கொடுக்க முடியுமோ, அதே போல இந்த அனுபூதியை வார்த்தைகளால் அல்ல, vibration-ஆக, frequency -யாக, உணர்வாக, அனுபூதியாக, அனுபவமாக, உங்களுக்கு குருவால் அளிக்க முடியும். cake ஒரு piece cut பண்ணிக் கொடுக்கிற மாதிரி, எனக்குள் இருக்கும் இந்த பரமாத்வைதத்தை எடுத்துக் கொடுக்க முடியும்.
இதுல இன்னொரு நல்ல செய்தி என்னன்னா, cake, எடுத்துக் கொடுக்க கொடுக்க குறையும். ஆனா, பரமாத்வைத அனுபூதி அப்படி இல்லை. கொடுக்க கொடுக்க கொடுக்க மேலும் பல்வேறு... பல பேருக்கும் கொடுக்க வளரும்.
இப்போ அருணாசல புராணத்தினுடைய மூலக் கதையை புரிந்துகொள்வோம்.
‘அருணாசலம்’ அப்படிங்கிற வார்த்தையை புரிந்துகொள்வோம். புராணத்தைப் பற்றிய அடிப்படையாக விளக்கங்களைச் சொன்னேன். இன்னும் புராணத்தைப் பற்றி முழுமையாக விளக்கல. தொடர்ந்து இந்த அடுத்த இந்த 17 இன்னும் 12 நாட்களுக்கு மேல சத்சங்கம் இருக்கு. 12 நாட்கள் இருக்கு. தொடர்ந்து சொல்றேன். அதுல விளக்குறேன்.
இப்ப அருணாசலம், அருணாசலம்ன்னா, அடிப்படையாக அந்த வார்த்தைக்குப் பொருள், குறைந்தபட்சம் ஒரு 25 பொருளுக்கு மேல, புராணத்திலே வேறு வேறு இடத்தில வேறு வேறு விதமாக விளக்கப்படுகிறது.
ஒன்னு, அதுல முக்கியமான ஒரு பொருள்: சூரியன்களை எல்லாம் கொட்டி மலை உருவாக்கப்பட்ட மலை! மண் துகளோ கல்லோ அல்ல, சூரியன்கள் கொட்டி உருவாக்கப்பட்ட மலை! அப்படின்னா என்ன அர்த்தம்? நிஜத்தில் 'பிரபஞ்சம்' அப்படின்னு அர்த்தம்.
NASA வெளியிட்டு இருக்கிற அந்த மொத்த universe-ஸோட photos வெளியிட்டு இருக்காங்க பாருங்க. அதை பார்த்தாத்தான் தெரியுது, பல ஆயிரக்கணக்கான... sorry. trillions and trillions of சூரியன்களைக் கொட்டி உருவாக்கப்பட்ட மலை.
அருணாசலம் சூரியன்களால்... actual-அ 'அருணன்' அப்படிங்கிற வார்த்தைக்கு, வெறும் சூரியன் அப்படின்னு கூட அர்த்தம் இல்லை. சூரியனின் மூல சக்தி-னு அர்த்தம். சூரியனை எது ஒளிரச் செய்கின்றதோ அந்த சக்தி.
அருணாசலன், அருணாசலம் அப்படின்னா, சூரியனை... சூரியனை ஒளிரச் செய்கின்ற சக்திகளைக் கொட்டி ஆன மலை. தேஜோ ஸ்வரூபம். தேஜோ ஸ்வரூபம். தேஜோமயம். தேஜஸ் ஸ்வரூபம்.
மீண்டும் மீண்டும் மீண்டும் சகல புராணங்களிலும் வருகின்ற ஒன்று: 'ஸ்மரணாத் முக்தி அருணாசலம்'. அது எப்படி? அதைப் புரிந்துகொள்ளுங்கள்.
நல்லா புரிஞ்சுக்கோங்க. ‘ஸ்மரணம்’ என்கின்ற வார்த்தைக்கு remembering அப்படிங்கிற meaning ஆங்கிலத்தில் சொல்றது தவறு. குறைபொருள் வார்த்தை. சம வார்த்தை அல்ல.
ஸ்மரணம் அப்படிங்கிற வார்த்தையை அப்படியே புரிந்துகொள்ள வேண்டும்.
ஸ்மரித்தல் அப்படின்னா என்னன்னா, தமிழ்ல தெளிவா சொல்றேன், புரிஞ்சுக்கோங்க: ‘சொல்லாது நினைதல்.’
ரமண மஹரிஷி ரொம்ப அழகான ஒரு வார்த்தை use பண்ணுவார், ஸ்புரித்தல்-ம்பாரு. நாம் சொல்லாது நினைக்க முடிவது.
ஐயா, நல்லா புரிஞ்சுக்கோங்க. உங்க மனம் மொத்தமுமே வேற ஒன்னும் இல்லை. நீங்க சொல்லிக்கிட்டே இருக்கிற வார்த்தைகள்தான். அறிந்தோ அறியாமலோ, புரிந்தோ புரியாமலோ, சொலல். உள்ளுக்குள்ள சொல்லிக்கிட்டே இருக்கிறது.
உங்க வாழ்க்கை அப்படியே திரும்பி பாருங்கயா. உங்க வாழ்க்கை மொத்தமும் bore அடிச்சுப் போறதுக்கு அடிப்படை காரணம் என்ன தெரியுமா? எந்த அனுபவத்தையும் அடையறதுக்கு முன்னாடியே அதை சொல்லிப் பார்த்திருவீங்க.
ஒரு தாமரை மலரப் பாத்தாகூட, அதை அப்படியே ரசிக்க, அனுபவிக்க, பார்க்க முடியாது. உங்களுக்கு தாமரையைப் பற்றி இருக்கிற எல்லா எண்ணங்கள், அது பத்தி இருக்கிற மன அமைப்புகள், எண்ணங்கள், நினைவுகள் இதெல்லாம் ஓடும். வார்த்தைகள்... எத்தனை விதமான colour தாமரை இருக்கு, எத்தனை நாட்டுல இருக்கு, என்னென்னல்லாம் தாமரையோட குணங்கள் என்ன, வேற என்னென்னவோ... அதுகூட அதோட முதன்மை, இரண்டாம் நிலை... எல்லா associated memories awaken-ஆயி, தாமரை miss-ஆயி எப்பவோ போயிருந்திருக்கும்.
அதே மாதிரி ஒரு நபரைப் பார்த்தால்கூட, அதோட associated memories trigger-ஆயி, சொலல் அப்படிங்கிறதுல வேகமாய் இருந்து, அவரை நேரில் உணர்வதே இல்லை.
ஒரு உணவு... எந்த அனுபவமானாலும் சரிங்கயா... பார்த்தலோ, கேட்டலோ, ருசித்தலோ, நுகர்தலோ, தொடலோ... எந்த அனுபவமானாலும், ‘சொலல்’ என்கின்ற ஒரு செயலாலே, அந்த அனுபவத்தின் ஆழத்தை மந்தமாக்கிவிட்டு, அனுபவத்தோட rawness-அ அழிச்சிட்டு, சிதைத்துவிட்டு, சின்னாபின்னமாக்கிவிட்டு, அரைகுறையாக வாழ்ந்துவிட்டு, “வாழ்க்கையே bore அடிக்குது”ன்னு சொன்னா, யார் தவறு அது?
சொலல் என்கின்ற பழக்கத்தினாலே, எதுவாயிருந்தாலும், உள்ள, சொல்லுதல் என்பது நிகழ்ந்துகொண்டே இருப்பதனால, எதைப் பற்றி... நல்லா புரிஞ்சுக்கோங்க... சொலல் அப்படிங்கிற பழக்கம் அறிவை வேண்டுமானால் அதிகரிக்கலாம். அனுபவத்தையும், அனுபூதியையும் அதிகரிக்காது.
சொலல் என்பது, ஒன்னொன்னத்தையும் புரிஞ்சுக்கிறதுக்கு வெளி உலகத்துக்கு, வெளி உலகத்தோடு உறவு கொள்வதற்கு வேண்டுமானால் சொலல் என்பது உபயோகமாகும், உங்களை அறிவாளியாக்கும்.
ஆனால், சொலல் ஒருநாளும் அனுபவத்தையோ, அனூபூதியையோ அளிக்காது. சொல்லாது நினைதல்தான் ஸ்மரணம், ஸ்புரித்தல்.
எப்படின்னு சொல்றேன் கேளுங்க, ஆழ்ந்து கேளுங்க.
அருணாசல ஸ்மரணம்ன்னா ‘அருணாசலம், அருணாசலம்’னு சொல்லிக்கிட்டே இருக்கிறது கிடையாது. இந்த சொல்லிக்கிட்டே இருக்கிறது ஜபம். அதுவும் குறைந்தது அல்ல, அதுவும் நல்லதுதான். ஆனா, அது முக்திக்கான நேரடி சாதனம் கிடையாது. சொல்லாது, இருக்கும் இருப்பாலோ, மறப்பும், நினைப்பும் அற்ற நிலையிலிருந்து... கம்பர் சொல்லுவார் பாருங்க, "நினைப்பும், மறப்பும் இலாத நெஞ்சினாள்!" அப்படின்னு சீதையைப் பார்த்து... கம்பர் ஒரு ஞானிங்கயா, கவிஞன் மட்டும் கிடையாதுங்கயா! அதைத்தானே அனுபவித்திருந்தால் மட்டும்தான் அந்த வார்த்தை விளையாட்டுக்களை, அந்த வார்த்தை அவ்வளவு ஆழமான செறிந்த வார்த்தைகளை சொல்ல முடியும்.
அப்பா!
'நினைப்பும் மறப்பும் இலாத நெஞ்சினாள்'னு சீதையைப் பற்றி விவரிக்கும்போது விவரிக்கிறார்.
ராவணனைப் பத்தி சொல்லும்பொழுது ஒரு இடத்துல சொல்றாரு ‘கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’னு. அப்போ கடனை அவ்வளவு பெரிய பிரச்சனையா describe பண்றாரு.
EMI, Gen Z எல்லாம் புரிஞ்சிக்கோங்க! ஒரு காலத்துல கடனை அவ்வளவு பெரிய பிரச்சனையா பார்த்திருக்காங்க. எதற்கும் கலங்காத இலங்கை வேந்தன், மூவுலகுக்கும் ஈஸ்வரனாக தன்னை பட்டாபிஷேகம் செய்துகொண்டு வாழ்ந்த இலங்கை வேந்தன் ராவணேஸ்வரன், 'கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான்' அப்படின்னு, அவன் கலங்குறதுக்கான உதாரணமாக, அவன் கலங்கியபோது, கடன் பட்டார் நெஞ்சம்னு சொல்றாரு!
EMI, Gen Z எல்லாம் புரிஞ்சிக்கோங்க. கடன் அப்படிங்கறது வேற ஒன்னுமில்லை. உங்க எதிர்காலத்தை வித்துட்டு வாழறீங்க.
எதிர்காலத்தை விற்றுவிட்டு, நிகழ்காலத்தை வாழ்வது போன்ற ஒரு கொடிய வறுமை வேற எதுவும் கிடையாது. அதை வறுமைன்னு கூட புரிஞ்சிக்காம வாழறது.
சரி இந்த சத்தியத்தை கேளுங்கள்.
’அருணாசலம்’, ‘ஸ்மரணாத் அருணாசலம்’ - இந்த இரண்டு வார்த்தைகளையும் விளக்கிட்டு இருந்தேன்.
ஆழ்ந்து கேளுங்க, சொலல் அப்படிங்கிறதே வாழ்விலே எல்லா அனுபூதிகளையும் சிதைத்து அரையாக்கி குறையாக்கி, வாழ்க்கையில ஒரு வெறுமையை கொண்டு வந்துவிடும்.
யார் யாருக்கெல்லாம் வாழ்க்கை bore அடிக்குதோ, whole day tired-ஆவே இருக்கீங்களோ, உங்களுக்கு உடனடி தீர்வு குடுக்கிறேன் தெரிஞ்சுக்கோங்க: சொலாது இருந்து வாழ்க்கையை சுவைத்துப் பாருங்கள்.
ஒரு டீ குடிக்கிறீங்கனாலும் சரி, ஒரு coffee குடிக்கிறீங்கனாலும் சரி, எந்த செயல் செய்தாலும், என்ன அவ்வளவு அவசரம், ஆத்திரம், ஓட வேண்டியது... எங்கையும் ஓடிப்போய் வெட்டி சாச்சு முறிக்க வேண்டியது எதுவும் இல்லை.
தமிழ்-ல ஒரு பழமொழி சொல்லுவாங்க: நாய்க்கு வேலையில்லை நிக்க நேரமில்லைன்னு! ஒரு வேலையும் இல்லை, ஆனா நிக்கறதுக்கு நேரமில்லை.
Whole day busy without business. So much sound but nothing conveyed. Only noise.
Whole day busy but என்ன productivity business? ஒன்னுமில்லை. ஒன்னும் இல்லை.
Whole day லபலப லபலப லபலப லபலப-னு உள்ளையும் வெளியிலையும் வார்த்தைகளை சொல்லிக்கிட்டே இருக்கிறது. என்ன convey ஆச்சு? உள்ளையும் ஒன்னும் convey ஆகல, வெளியவும் ஒன்னும் convey ஆகல. ஒன்னும் இல்லை.
சொலல் என்பதை நிறுத்தி, உங்களுடைய தினசரி வாழ்க்கையையே, சொலல் என்பதை விடுத்து, நிகழ்த்துங்கள்.
சாதாரணமா காலையில எந்திருச்சு brush பண்றதோ, yoga பண்றதோ, பூஜை பண்றதோ, குளிக்கிறது, உங்களுடைய coffee-யோ இல்ல tea-யோ எடுத்துக்கிறது, breakfast எடுத்துக்கிறது, என்ன நீங்க செஞ்சாலும், ‘சொலல்’ அப்படிங்கிறது இல்லாமல் நிகழ்த்துங்கள்.
வாழ்க்கையில இருக்கிற boredom காணாம போயிடும். boredom உடைஞ்சு சிதறிடுங்கய்யா.
வாழ்க்கையில இருக்கிற மிகப்பெரிய பிரச்சனை, உங்களை அறியாமல் சொல்லிக்கொண்டே இருத்தல். உள்ளும் வெளியும் சொல்லிக்கொண்டே இருத்தல்.
இந்த ரெண்டு வருஷமாங்கய்யா, AI develop பண்றதுக்காக இந்த Ask Nithyananda AI develop பண்றதுக்காக, ஏறத்தாழ ஒரு பத்து லக்ஷம் புத்தகங்களோடு தொடர்ந்து வேலை செஞ்சுட்டு இருக்கேன். அதை translate பண்றது நிறைய தமிழ்ல இருக்கிறதை சமஸ்கிருத்திலயும், சமஸ்கிருத்தத்துல இருக்கிறதை ஆங்கிலத்திலயும், தமிழ்ல இருக்கிறதை ஆங்கிலத்திலயும் இந்த மொழி பெயர்ப்புகள்...
நிறைய பேர் கேட்டுட்டு இருந்தீங்க: பல மொழியில இந்த சத்சங்கம் மொழிபெயர்ப்பு நடக்குதே, நேரலையில, எத்தனை மொழி நான் பேச எனக்கு பேசத் தெரியும்னு கேட்டாங்க. நானே சுயமாக என்னால் எழுத பேச படிக்க முடியும் அப்படின்னா மூனு மொழிதாங்கய்யா - தமிழும், ஆங்கிலமும். சமஸ்கிருதம். இந்த மூனு மட்டும்தான் என்னாலேயே பேசவும் எழுதவும் படிக்கவும் முடியும். மற்ற மொழிகள் கொஞ்சம் கொஞ்சம் பேச கத்துக்கிட்டேன். பக்தர்களோடு உரையாடுவதற்காக... கொஞ்சம் French, கொஞ்சம் Spanish, கொஞ்சம் Kannada, கொஞ்சம் Hindi.
என்ன, என்னுடைய வாழ்க்கையில அவங்களுக்கு ஆறுதல் சொல்லப்போறேன். அறிவுரை சொல்லப் போறேன். ஆசி குடுக்கப் போறேன். தீக்ஷை குடுக்கப் போறேன். அதுக்கு மொத்தமா ஒரு 200, 250 வார்த்தைகள் தெரிந்தால் போதுமானது. அதுமாரி ஒவ்வொரு மொழியிலும் அந்த 250 வார்த்தைகள் அதை உபயோகிக்கின்ற விதம். அந்த அளவுக்கு படிச்சு வெச்சிருக்கேன்.
அவ்ளோதானே தவிர எனக்காக நல்ல fluent-ஆ பேச முடியும், எழுத முடியும், படிக்க முடியும் அப்படின்னா, நானே படித்து புரிந்து கொள்ள முடியும் அப்படின்னா இந்த மூன்று மொழிதான் - தமிழும், சமஸ்கிருதமும், ஆங்கிலமும்தான். இந்த மூன்றுதான்.
இந்த சாஸ்திரங்களை மொழிபெயர்க்கும்பொழுது, ஒரு விஷயம் என்னை உலுக்கிவிட்டது. அதாவது, மிகக்குறைந்த வார்த்தைகளின் மூலமாக மிகப்பெரிய சத்தியங்களை சொல்லுகின்ற அந்த நுட்பம்! அப்பா!
நம்முடைய ரிஷிமார்களுடைய அறிவு, அவங்க Sanskrit-ல் ஒரு மூனு வார்த்தையில சொல்லீற ஒரு விஷயத்த இப்போ எல்லாருக்கும் புரிய வைக்கணும்னா at least ஒரு 40, 50 வார்த்தைகளை உபயோகப்படுத்தி விளக்க வேண்டியிருக்கு ஆங்கிலத்துல எல்லாம். வேற எந்த மொழி... மொழியில விளக்கணும் முயற்சி பண்ணாலும்.
மிகக்குறைவான வார்த்தைகளை உபயோகப்படுத்தி மிக அதிக அளவு செய்திகளை, கருத்துக்களை, சத்தியங்களை சொல்லி இருக்காங்க அப்படின்னாலே என்ன அர்த்தம்னா, முழுமையான பரமாத்வைதத்தில், பரமுக்தி நிலையில், அஜாத நிலையில், நிர்விகல்ப நிலையில் நிலை பெற்று அதுல இருந்தே இந்த சாத்திரங்களை, இந்த சூத்திரங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்னு மட்டும் ரொம்ப தெளிவா தெரியுதுங்கய்யா.
இந்த ஒரு சத்தியத்தை உள்வாங்கிக் கொள்ளுங்கள். இந்த ஒரு சத்தியத்தை புரிந்து கொள்ளுங்கள். சொல்லாது ஸ்மரித்தல். சொல்லாது நினைத்தல்.
எப்படி சாத்தியம்? ஏன்னா அருணாசலம்னு நாம நினைக்க முயற்சி பண்ணும்பொழுதே, அந்த வார்த்தை வந்துருதே. சொல்லல்.. சொலல் வந்துடுதே. அமைதியா, வார்த்தையே எழாத அந்த இருப்பு நிலைக்கு செல்லுங்கள். அந்த இருப்பு நிலையிலே இருத்தலே - அருணாசல ஸ்மரணம். அதுதான் முக்தி.
இருப்பு நிலையிலே இருத்தல். சொலல் என்கின்ற நிலைக்கு பிழறாமல், பிறழாமல்... ரெண்டு வார்த்தை உபயோகம் பண்றேன். பிழுறுதல், பிறழ்தல் - இந்த ரெண்டுத்துக்கும் தமிழ்ல வேற வேற அர்த்தம்.
எந்த நிலையிலும் பிறழ்தலோ, பிழர்தலோ இல்லாமல் இருப்பிலே இருப்பது - அருணாசல ஸ்மரணம்.
ஆழ்ந்து கேளுங்கள், அருணாசலம் என்பது தேஜோமயமானது. வார்த்தைகளை சொல்லாமல் இருப்பிலே அமர்ந்திருந்தீர்களானால் உங்களுடைய உயிர்ப்பு, உங்கள் இருப்பினுடைய உயிர்ப்பு, தேஜோமயமாக உங்களுக்குள் தெரியும். அதுதான் அருணாசல ஸ்மரணம்.
உள்ளுக்குள் ருசிப்பதை, வெளியிலே பார்த்து ரசிக்கவும் முடியும். அதுதான் திருவண்ணாமலை. திருவண்ணாமலையை வெளியிலும் பார்த்து ரசிக்கணும், உள்ளுக்குள்ளயும் புசிக்கணுங்கய்யா. வெளியில் பார்த்து ரசிப்பது, அதை உள்ளுக்குள் சொலல் இல்லாது ருசிப்பது.
அருணாசலத்தினுடைய கதை:
உங்க எல்லோருக்கும் இந்த கதை தெரியும். ப்ரம்மா விஷ்ணு இருவருக்கும் இடையிலே, தங்கள் பரத்துவத்தைப் பற்றிய பிரச்சனை வருகின்றது. இவர்கள் பெருமானுடைய வெளிப்பாடுகள், படைப்புகள் என்பதனால், பெருமான்தான் இதை தீர்த்தாக வேண்டும், தீர்த்து வைக்க வேண்டும். வேற யாராலும் தீர்க்க முடியாது. அதனால பெருமானே வெளிப்பட்டு இதை தீர்த்து வைக்கின்றார்.
இதுல பல நிலை சத்தியங்களை புரிந்துகொள்ள வேண்டும். இந்த நிகழ்வின் மூலமாக பல multi-dimensional multiple layer truths-அ பெருமான் reveal பண்றாரு. வெளிப்படுத்துறாரு.
நாம் layer by layer-ஆ dimension by dimension-ஆ ஒவ்வொரு படியாக புரிந்துகொள்வோம். முதல்ல பிரம்மா யாருன்னு தெரிஞ்சுக்கோங்க. கடந்த காலம். படைச்சு முடிச்சுட்டாரு. அதனாலதான் அவர பெருசா நாம வழிபடறதில்ல. ஏன்னா அவரு வேலை முடிஞ்சிருச்சு. படைப்புங்கிறது கடந்த காலம்.
விஷ்ணு represents எதிர்காலம். அதாவது, ஸ்திதி, காப்பற்றுதல் அப்படிங்கிறது எதிர்காலம் சம்பந்தப்பட்டது தானே. வேணும்னா Present continuous tense-னு சொல்லிக்கலாம். நிகழ்வில் இருந்து எதிர்காலம் வரை. Actual-ஆ நிகழ்காலம்னு ஒன்னு தனியா இல்ல. கடந்ததிலிருந்து எதிர் வரை... எதிர்காலமும் நிகழ்காலமும் meet பண்ணிக்கிற அந்த point-அ எவ்வளவுதான் நீங்க அறிஞ்சு பார்த்தீங்கனாலும், அறியறதுக்குள்ள அது எதிர்காலம் கடந்த காலத்துக்குள்ள போயிரும். அதனால for all practical purpose இந்த ரெண்டுதான்.
இந்த கடந்த காலமான ப்ரம்மாவும், எதிர்காலமான விஷ்ணுவும் தங்களுடைய காலாதீத பரத்துவத்தை மறந்ததனால், காலாதீத ஸ்வரூபத்தை மறந்ததனால் குழப்பத்திற்கு ஆளாகின்றார்கள்.
அந்தக் குழப்பத்திலிருந்துதான் supremacy, superiority பரத்துவம் சார்ந்த பிரச்சனைகள் உருவாகின்றது.
நல்லா புரிஞ்சுக்கோங்க, காலாதீதமாக இருப்பவர்களுக்கு நல்லா தெரியும் நாம் பரத்துவத்தில் இருக்கின்றோம்னு. அதனால தன் பரத்துவத்தை தனக்கோ மற்றவர்களுக்கோ நிரூபித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாததனால், அதில் சந்தேகம் வருவதில்லை பிரச்சனையும் வருவதில்லை.
இங்க அவர்கள் இருவருக்குமே, காலாதீத நிலையிலிருந்து சற்றவர்கள் தாழ்ந்தார்கள். Maybe அந்த pure awareness பிரம்மஞானத்திலேயே இருக்கிறது கொஞ்சம் bore அடிச்சிருந்திருக்கும் போல! சரி அப்படின்னு எல்லாத்தையும் இன்னும் கொஞ்சம் பாப்போமே. நம்ம garden தானே. என்ன நடந்திர போகுது போயிட்டு வந்துரலாம் அப்படின்னு அப்படி இறங்கி வந்துருப்பார் போலருக்கு.
ஆனா சில நேரத்துல அந்தமாரி இறங்கி வந்துதான், பெரிய diversions-ல மாட்டிக்கிட்டு முழிக்கிற அனுபவத்தை நாம் எல்லாம் பார்த்திருக்கோம் பாருங்க.
நம்ம வாழ்க்கையில எல்லாம் நடந்திருக்கும். ரொம்ப சின்ன முடிவு casual-ஆ எடுத்திருப்போம். ஆனா அது நமக்கு தெரியாத பெரிய சிக்கல்ல விட்டிருக்கும்.
அது மாதிரி பரத்துவ மறதி வந்து விடுகின்றது. ப்ரம்மஞான மறதி நடந்து விடுகின்றது. இருவருக்குமே, 'யார் பெரியவர்?' என்ற குழப்பம் வந்து விடுகின்றது.
பரம்பொருள், தேஜோமயமாக, காலாதீத ஸ்வரூபமாக... Big Bang-னு இப்போ அறிவியல் modern day அறிவியல் சொல்ற அந்த Big Bang நிகழ்வாக நிற்கின்றார்.
நின்று, ‘யார் இதனுடைய முடிவையோ, முதலையோ காண்கிறீர்களோ அவர்கள் பரம்.’
உடனே... எதிர்காலம்-விஷ்ணு வேக வேகமாகப் போறார். கடந்த காலம்-ப்ரம்மா அவரும் மேல போறார்.
நான் முதல்லயே சொன்னேன்: Time வந்து spiral. So இவர் ஒரு பக்கம் போறார், அவர் ஒரு பக்கம் போறார். இரண்டு காலத்தாலும், காலாதீத பரத்தை காண முடியவில்லை.
ஆனா ஒரு நல்ல விஷயம் என்னன்னா, எதிர்காலம் ஒரு இடத்திலயாவது வந்து ஒத்துக்கும். அது வந்து பொய், அது இல்லாதது அப்படின்னு புரிஞ்சிரும். அதனால விஷ்ணுக்கு புரிஞ்சிருது. புரிந்த உடனே வந்து surrender பண்ணிடுறார்.
Surrender பண்ணதுமே, பெருமான் காலாதீத சத்தியத்தை விஷ்ணுவுக்கு அனூபூதியா அளிச்சிர்றார். ப்ரம்மா அப்படி இல்ல... கடந்த காலம். ‘அந்த நினைவுகள்’ அப்படிங்கிறதை வச்சுக்கிட்டு கடந்த காலம், உள்ளது, இருப்பு, அப்படிங்கிற சத்தியத்தை ஸ்தாபிதம் பண்ணுவதற்கு ப்ரம்மா முயற்சிக்கிறார். அந்த நினைவுகள் தான் தாழம்பூ. அதை சாக்ஷியாக கொண்டு வறார்.
காலாதீதப் பரம்பொருளிடம், கடந்த காலம் பொய் சொல்லி, தன்னை நிலை நிறுத்திக்கொள்வது சாத்தியமா? இல்லை.
அதனால உண்மை வெளிப்படுகின்றது. பிறகு ப்ரம்மாவும் மன்னிப்பு கேட்க, அவருக்கும் காலாதீத சத்தியத்தை புரிய வைக்கின்றார்.
தாழம்பூ சபிக்கப்படுகின்றது. பிறகு தாழம்பூ மன்னிப்பு கேட்க, அதற்கும் சாப விமோசனமும் அளிக்கப்படுகின்றது.
இந்தக் கதை எல்லாருக்குமே தெரியும். இதற்குள் பல நிலை சத்தியங்கள் இருக்கின்றன. அவைகளை ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய் இந்த அடுத்தடுத்த சத்சங்கங்களில் காண்போம்.
இன்றைய சத்சங்கம் ரொம்ப ஆழமான சத்தியங்கள். நல்லா புரிஞ்சுக்கோங்க. உங்களை entertain பண்றதுக்காக நான் பேசல. enlighten பண்றதுக்காக பேசறேன். இந்த சத்தியங்கள் ரொம்ப ஆழமானவைங்கறதால, ஒரு ரெண்டு மூனு தரம் ஒக்காந்து கேளுங்க. அப்பதான் பல இடங்களில் |ஆ!... இது சாமி சொன்னாரா? கேட்காமலேயே விட்டுட்டேனே! இப்பதான் எனக்கு புரியுது!|
பல விஷயங்கள் இரண்டாவது, மூன்றாவது முறை கேட்கும்போதுதான் புரிபடத் துவங்கும். காரணம் என்னன்னா ஒரு மூனு நிமிஷம், அதுக்கு மேல உங்க attention எங்கேயாவது போயிடுங்கையா. திரும்ப நான் கூட்டிட்டு வரணும். திரும்ப கூட்டிட்டு வந்து திரும்ப பேச ஆரம்பிக்கணும். அப்படித்தான் இப்ப பேசிட்டு இருக்கிறோம். அப்படித்தான் சொல்லிட்டு இருக்கிறேன் இப்போ, இந்த சத்தியங்களை. பரம சத்தியங்களை.
அதனால... இன்னைக்கு சொன்ன சத்தியங்கள் முக்கியமான வார்த்தைகள் என்னென்னன்னா: மூன்று நிலை மனம்: ஸத்வ மனம், ரஜோ மனம், தமோ மனம்.
அடுத்தது, நித்ய நிகழ்விலே இருக்கும்பொழுது, நீங்கள் ரஜோ மனத்தில் இயங்கினால் சிருஷ்டி-திருஷ்டி- இருப்பதைப் பார்க்கிறீர்கள் என்று நினைந்து பந்தத்திலே கட்டுரு... கட்டுப்பட்டு அந்த கட்டுக்களாலே வாழ்க்கையின் நிம்மதியும், ஆனந்தமும், சுகமும், சுதந்திரமும் இழந்து பெரும் துக்கமான நரகில் வாழ்வீர்கள்.
ஆனால் நித்ய நிகழ்விலே ஸத்வ மனமாக இயங்கினீர்களானால், விவர்த்தமாகிய சத்தியமாகிய விவர்த்த சத்தியமான நாம் பார்க்க விரும்புவதைத்தான் உருவாக்குகின்றோம். த்ருஷ்டி-ஸ்ருஷ்டி என்கின்ற ஸத்வ நிலையில், புரிதல் நிலையில் இருப்பீர்கள்.
அதைத் தாண்டி இன்னமும் அந்த நித்ய நிகழ்வில் இருக்க இருக்க, பராமானுபூதியான அஜாதம். ~நான் என்றும், |இந்த உலகம்| என்றும் தனியாக நாம் பிரியவே இல்லை. இருப்பு இருப்பாகவே இருக்கின்றது| என்கின்ற அஜாத நிலையில் இருப்பீர்கள்.
நித்ய நிகழ்விலே சொல்லாது நினைதலே - அருணாசல ஸ்மரணம். சொலல் இல்லாது ஆனால் விழிப்போடு இருத்தல். அதுதான் ஸ்மரணம். ஸ்புரணம். ஸ்புரணம் எனும் வார்த்தையினாலும், ஸ்மரணம் எனும் வார்த்தையினாலும் சொல்லப்படுகின்ற சத்தியம் ஒன்றுதான் - சொல்லாது விழிப்போடு இருத்தல். சொலல் இல்லாதும் விழிப்போடு இருத்தல்.
தொடர்ந்து அருணாசல புராணத்தின் ஆழமான சத்தியங்களை, அடுத்தடுத்த சத்சங்கங்களில் காண்போம்.
வாருங்கள் இப்பொழுது அண்ணாமலையான் இந்திர விமானம் ஏறி, திருவண்ணாமலையின் மாட வீதிகளிலே வலம் வந்து கொண்டிருக்கின்றார்.
உலகம் முழுவதிலும் இருக்கும் கைலாஸத்திலும் கார்த்திகை தீப ப்ரம்மோற்சவம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. உலகம் முழுவதிலும் இருக்கும் கைலாசங்களில் அருணாசலேஸ்வர கருணா மூர்த்தி, பரமசிவப் பரம்பொருள் இந்திர விமானம் ஏறி ஆசி வழங்குகின்றார்.
அவரை பூஜித்து, வழிபட்டு, தரிசிப்போம். வாருங்கள்.
நித்யானந்த நிலையிலிருந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள்.
Event Photos
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
































