27 November 2025 SPH Live Darshan

From Kailasapedia
Revision as of 18:16, 7 December 2025 by Testkailasa (talk | contribs) (Created new satsang page)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

On this day, THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), BHAGAVAN SRI NITHYANANDA PARAMASHIVAM—the ultimate manifestation, Paramavatara of Paramashiva, the ultimate superconsciousness—gave a Live Darshan and delivered a Presidential Address attended by the founding fathers, diplomats, delegates, ministers, citizens, and e-citizens of the United States of KAILASA (USK).

Title

உங்கள் விதியை நீங்களே மாற்றி எழுதலாம் | அருணாசலப் புராணம் | பாகம் 7

Link to Video

Transcript

ஓம் நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம் நித்யானந்தேஶ்வரி பரமஶக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்

உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

உலகம் முழுவதிலும் இதயத்தாலும், இணையத்தாலும் இணைந்திருக்கும் நண்பர்கள், பக்தர்கள், சீடர்கள், பார்வையாளர்கள் மற்றும் கைலாயத்தின் குடிமக்கள், கைலாயத்தின் அமைச்சர்கள், கைலாயத்தின் தூதர்கள், கைலாஸவாசிகள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

அருணாச்சல புராணம்.

தொடர்ந்து இன்று ஏழாவது நாள் ஸத்ஸங்கமாக, கார்த்திகை தீபத் திருவிழா நான்காவது நாள் உற்சவமாக, பூர்வாங்கமாக மூன்று நாள், த்வஜாரோஹணம் நிகழ்ந்து இன்று நான்காவது நாள் உற்சவம். உலகம் முழுவதிலும் உள்ள கைலாஸங்களிலும் மற்றும் அண்ணாமலையார் ஆலயத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

இந்த அருணாச்சல புராணத்தினுடைய பத்து பாகங்கள்: ஸர்க்கம், விஸர்க்கம், விருத்தி எனும் வாழ்வாதாரம்... அதாவது… ஸர்க்கம் என்றால் முதலாம் படைப்பு, விஸர்க்கம் என்றால் இரண்டாம் நிலை படைப்பு, விருத்தி எனப்படும் வாழ்வாதாரம், ரக்ஷா எனப்படும் பாதுகாப்பு, அந்தராணி எனப்படும் மன்வந்தரம், வம்ஸம் எனப்படும் வம்ஸாவளிகள், வம்ஸானுசரிதம் எனப்படும் வம்ஸத்தின் செயல்கள், ஸம்ஸ்தா எனப்படும் அழிவு, ஹேது எனப்படும் காரணம் மற்றும் கர்மா, அபாஷ்ரயம் எனப்படும் பரம புகலிடம். - இந்த பத்தும் சேர்ந்ததுதான் ஒரு மஹாபுராணம்.

அருணாச்சல புராணம் இந்த பத்தும் உடையதாக இருக்கின்றது. இதில் மிகப்பெரிய ஜ்ஞாந ஸத்யங்கள், ஜ்ஞாநக் கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகிறன.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்தக் கதைகள் எல்லாமே... இதில் நிறைய கதைகள் வருகின்றன. அந்த கதைகளையும் சொல்லப் போகின்றேன். ஒவ்வொரு ஸத்ஸங்கத்திலும் அந்த கதைகளையும் விளக்கப்போகின்றேன். அதாவது, ப்ரஹ்மாவும் விஷ்ணுவும் பரமஶிவனாருடைய அடிமுடி தேடிய கதை, தாயார் தவம் இருந்து இடப்பாகம் பெற்ற கதை, வஜ்ராங்கத பாண்டியன் மலைவலம் வந்த கதை, வள்ளால மஹாராஜனுக்கு மகனாய் வந்து அருள் செய்த கதை...

இந்த மாதிரி பல்வேறு… 'கதைகள்' என்று சொல்வதைவிட 'வரலாறு' என்று சொல்லவேண்டும். அதுதான் சரியான வார்த்தை. ஏனென்றால் புராணங்கள், 11 பரிமாணத்திலே நிகழ்கின்றவற்றை, தன்னுடைய personal opinion -னை வைத்து spoil பண்ணாமல், destroy பண்ணாமல், corrupt பண்ணாமல் அப்படியே document பண்ணி வைப்பதுதான் - புராணம்.

இப்பொழுது எழுதப்படுகின்ற எந்த history, எந்த media-வையும்விட authentic-ஆன, ஸத்யத்தின் அளவு முழுமையாகவும், ஒரு பருக்கும் குறையாதும், ஸத்யமே முழுமையாக நிறைந்துள்ள, அருமையான, ப்ரபஞ்சத்தின் பலபரிமாணங்களிலே நிகழ்ந்தவற்றையும் ஆவணப்படுத்துகின்ற நூல்கள் தான் - புராணங்கள்.

இதில், வ்யாஸர் பல்வேறு பரிமாணங்களை ஆவணப்படுத்துகின்றார். அந்த பரிமாணங்களை ஆவணப்படுத்தும்பொழுது பல்வேறு ஸத்யங்கள், உண்மைகளை, ப்ரபஞ்ச ஸத்யங்கள், உண்மைகளைச் சொல்கின்றார். அதுதான் ஜ்ஞாந பாதம். இந்த புராணத்திலே சொல்லப்படுகின்ற, அதி ஸுக்ஷ்மமான ரகசிய ஸத்யங்களான ஜ்ஞாந பாதம்.

ஒரு உதாரணத்திற்கு, 'திருவாரூரிலே முசுகுந்த சக்ரவர்த்தி தேவலோகம் போனார். இந்திரனுக்காக போரிலே நின்று ஜெயித்துக் கொடுத்தார். இந்திரனிடமிருந்து த்யாகராஜப் பெருமானைப் பெற்று வந்தார்'. இதைத் தெரிந்து கொண்டீர்களானால் அது புராணம்.

ஆனால் அதை ஆழ்ந்து படித்தீர்களானால், 'என்ன காரணத்தினால் வேறு ஒரு portal, வேறு ஒரு vertical time zone, வேறு ஒரு dimension-னுக்குள் சுலபமாக முசுகுந்த சக்ரவர்த்தியால், தன்னுடைய சேனை பரிவாரங்களோடு செல்ல இயன்றது? பிறகு, என்ன காரணத்தினாலே அவர் வென்றார்?'. அதில் ஒரு அழகான ஒரு description இருக்கின்றது. கொஞ்சம் அந்த புராணத்தைப் படித்திருந்தீர்களானால், இதை ரசிக்கலாம்.

போரிலே வென்ற பிறகு, இந்திரன் கேட்கிறானாம் முசுகுந்த சக்ரவர்த்தியிடம், 'நண்பனே, நீ எனக்கு செய்த துணையின் மூலமாக, எனக்கு மிகுந்த, மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்த உற்ற நண்பன் ஆனாய். அதனாலே என்ன வேண்டுமானாலும் கேள், அளிக்கிறேன்' என்று இந்திரன் சொல்லுகின்றான்.

உடனே இந்திரன் describe பண்ணுகின்றான், அதாவது அவனிடம் என்னென்னவெல்லாம் choices இருக்கிறது என்று சொல்கின்றான். 'அளப்பரிய குபேரபுரியின் பொக்கிஷம், இளமை மாறாத ரம்பை, மேனகை, ஊர்வசி போன்ற இளமையும், அழகும் பொருந்திய, என்றென்றும் இளமை மாறாத தேவ கன்னிகைகள், தங்கத்தால் ஓடும் ஸ்வர்ண நதி' - இது மாதிரி அனைத்தையும் காட்டுகின்றான்.

முசுகுந்த சக்ரவர்த்தி எல்லாவற்றையும் கேட்டுவிட்டு பொறுமையாகச் சொல்கின்றாராம், ஐயா, இந்திரனே, நான் இந்த தேவலோகத்தை முழுமையாகச் சுற்றிப் பார்த்துவிட்டேன். உன்னுடைய சேவகர்கள், எனக்கு சேவை செய்வதற்காக நீ நியமித்த வேலையாட்கள், பணியாட்கள் என்னை முழுமையாக, தேவலோகத்தை சுற்றிக் காட்டி அனைத்தையும் விளக்கினார்கள். 'இந்த முழு தேவலோகத்திலும் இருக்கின்ற, ஆனால் என்னுடைய சோழ நாட்டிலே இல்லாத பொருள்' என்று ஒன்றுமே இல்லை. தேவலோகத்தினுடைய பெருமை என்று நீ நினைக்கின்ற அனைத்துமே, என் சோழ நாட்டிலே மண்டிக் கிடக்கின்றது. ஒன்றே ஒன்றுதான் தேவலோகத்திலே இருக்கின்ற, ஆனால் என் சோழ நாட்டிலே இல்லாத பொருள்" என்றாராம்.

உடனே இந்திரனுக்குப் பெரும் பெருமை வந்தது, 'ஆஹா! அது மாதிரி ஒன்றாவது இருக்கே இந்திரலோகத்திற்கு' என்று பெருமை வந்ததாம்.

சோழ நாட்டில் இல்லாத ஒன்று இந்திரலோகத்தில் இருக்கின்றதே, அதைக் கேள், தருகின்றேன்" என்று பெருமையோடு இந்திரன் சொல்லுகின்றான்.

அப்பொழுதுதான் முசுகுந்த சக்ரவர்த்தி சொல்கின்றார், எங்கள் ஊரில் பெருமான் புற்றிடம் கொண்டவராக, சுயம்புத் திருமேனியாக எழுந்தருளி இருக்கின்றார். ஆனால் அவர் திருமுகம், கை கால்களோடு முழுமையான திருமேனியாக, தேவலோகத்திலே எழுந்தருளி இருக்கின்றார். இதுபோன்ற முழுமையான திருமேனியாக பெருமான் எழுந்தருளி, அவருக்கு நாங்கள் பூஜை செய்ய வேண்டும், சேவை செய்ய வேண்டும், அவரை வழிபட வேண்டும். இந்த ஒரு விஷயம்தான் தேவலோகத்திலே இருக்கின்ற, சோழ நாட்டிலே இல்லாத ஒன்று" என்றாராம்.

என்ன மாதிரியான personality பாருங்கள் ஐயா முசுகுந்த சக்ரவர்த்தி. இந்த முசுகுந்த சக்ரவர்த்தியின் முன்னால், மொத்த தேவலோகமுமே மிகவும் சிறியதாகத் தோன்றுகிறது.

முசுகுந்த சக்ரவர்த்தியினுடைய பக்தியின் முன்னால்… ஒரு அரசன் கல்ப வ்ரு'க்ஷத்தைக் கேட்டிருக்கலாம், காமதேனுவைக் கேட்டிருக்கலாம், பாரிஜாதத்தைக் கேட்டிருக்கலாம், தன்வந்திரியைக் கேட்டிருக்கலாம், தேவ கன்னிகைகளைக் கேட்டிருக்கலாம்… எதை வேண்டுமானாலும் கேட்டிருக்கலாம்.

ஆழ்வார்கள் பாசுரத்தில் ஒரு பாடல், அருமையான பாடல்: 'பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே' என்று பாடுறார்.

அதை அப்படியே முசுகுந்த சக்ரவர்த்தியின் வாழ்க்கையில் பார்க்கலாம். அனுபூதியாகப் பார்க்கலாம். அவர் ஆழ்வார் வந்து பாடலாக பக்தியிலிருந்து எப்படி கரைந்துப் பாடினாரோ, அந்த வார்த்தையை அப்படியே முசுகுந்த சக்ரவர்த்தியினுடைய அனுபவத்திலேப் பார்க்கலாம்.

உண்மையில் முசுகுந்த சக்ரவர்த்தி, 'இந்த தேவலோகத்தை எனக்குக் கொடு என்று கேட்டிருந்தால், தேவேந்திரன் 'மாட்டேன்' என்று சொல்லியிருக்க முடியாது. காரணம் என்னவென்றால், அந்த தேவலோகமே முசுகுந்த சக்ரவர்த்தியினால்தான் இப்பொழுது வெற்றி கொள்ளப்பட்டு, காப்பாற்றப்பட்டிருக்கின்றது. அதுமட்டும் இல்லாமல், தேவேந்திரன் என்ன வாக்கு கொடுக்கிறான்? 'என்ன வேண்டுமானாலும் கேள் தருகிறேன்' என்று வாக்கு கொடுத்திருக்கிறான். அதனால், 'தேவலோகம் கொடு' என்று சொன்னால், 'மாட்டேன்' என்று சொல்ல முடியாது.

ஆனால், எதை choose பண்ணுகிறார் பாருங்கள் முசுகுந்த சக்ரவர்த்தி!

'குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயிற் குமின் சிரிப்பும், பனித்த சடையும், பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும், இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால், மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே" என்று அப்பர் பெருமான் express பண்ணுகின்ற, வெளிப்படுத்துகின்ற அந்த sentiment.

இங்கு ஆழ்வார் சொல்கின்ற, 'பச்சைமா மலைபோல் மேனி' என்னும் பாடலிலே ஆழ்வார் சொல்லுகின்ற sentiment-டும், 'குனித்த புருவமும், குவளைச் செவ்வாயிற் குமின் சிரிப்பும்' என்று அப்பர் பெருமான் express பண்ணுகின்ற, அவர் வெளிப்படுத்துகின்ற sentiment-டும், நிதர்சனமாக, ஒரு வாழ்க்கை அனுபூதியாக முசுகுந்த சக்ரவர்த்திக்கு இருப்பதைப் பார்க்கலாம்.

நீ பெருமானுடைய திருமேனி த்யாகராஜரைக் கொடு போதும். நாங்கள் வைத்துப் அதை பூஜை செய்துகொள்கின்றோம் என்கின்றார்.

உண்மையில், தேவலோகத்தின் உயிரைக் கேட்டிருக்கின்றார் முசுகுந்த சக்ரவர்த்தி.

மிக உயர்ந்த பரம பக்தியும், பரம பக்தியினால் வரக்கூடிய பரமத் தெளிவும், பரம strategy-யும், நிறைந்தவராக முசுகுந்த சக்ரவர்த்தி இங்கே விளங்குகின்றார்.

ஏனென்றால், முசுகுந்த சக்ரவர்த்திக்கு நன்றாகத் தெரிகிறது, 'சோழநாட்டின் வளம், தேவலோகத்தின் வளம்போல நிரந்தரமாக இருக்க வேண்டுமானால், இந்த த்யாகராஜர் சோழநாடு வந்தால் போதும்' என்று அவருக்குத் தெரிந்திருக்கின்றது. அதனால், முசுகுந்த சக்ரவர்த்தி, 'தன்னோடு இந்த வளமும், பாரம்பரியமும், சோழவள நாடும் முடிந்தோ அல்லது குறைந்தோ போய்விடக்கூடாது என்று நிரந்தரமாய் இந்த legacy, இந்த வம்ஸமும், வம்ஸானுசரிதமும் திகழ வேண்டும்' என்பதற்காக, சரியான செயலை செய்கின்றார். த்யாகராஜப் பெருமானைக் கொண்டு வருகின்றார்.

யார் யாரெல்லாம், உங்களுடைய organization நிரந்தரமாக எல்லா வளத்தோடு நிறைந்து விளங்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ... அரசியல்வாதிகள், உங்களுடைய நாடு அது மாதிரி நிரந்தரமாக எல்லா வளத்தோடு நிறைந்து விளங்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ, எல்லா வளத்தோடும் உங்கள் சமூகம், உங்களுடைய குலம், உங்களுடைய அரசாங்கம், உங்களுடைய நாடு, உங்களுடைய கட்சி, உங்களுடைய கழகம், உங்களுடைய நிறுவனங்கள், உங்களுடைய வியாபார ஸ்தலங்கள் விளங்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ, அவர்கள் எல்லாம் போய் திருவாரூர் த்யாகராஜருக்கு, ஒரு முறையாவது முசுகுந்தா அர்ச்சனை செய்யுங்கள்.

கைலாயத்தின் சார்பில், முசுகுந்தா அர்ச்சனை பண்ண சொல்லி சொல்லியிருக்கின்றேன்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். தேவையில்லாத அல்லது தவறான அல்லது அரை உண்மையான எதையும் நான் சொல்லமாட்டேன்.

திருவாரூர் த்யாகேசப் பெருமான், தேவலோகத்தை எப்படி வைத்திருந்தாரோ எல்லா நிறைவோடும், அதேபோல…உங்கள் வாழ்க்கையையும், உங்கள் நிறுவனத்தையும், உங்கள் வியாபாரத்தையும், உங்களுடைய organization... ஒருவேளை நீங்கள் ஒரு ஜாதிக் கட்சியினுடைய தலைவராக இருந்தால், உங்களுடைய ஜாதி, உங்களுடைய குலம், ஒருவேளை நீங்கள் ஒரு சமூக இயக்கத்தினுடைய தலைவராக இருந்தால், உங்கள் சமூக இயக்கம், ஒருவேளை நீங்கள் ஒரு ஆன்மீக இயக்கத்தினுடைய தலைவராக இருந்தால், உங்கள் ஆன்மீக இயக்கம், ஒருவேளை நீங்கள் ஒரு அரசாங்கத்தினுடைய தலைவராக இருந்தால், உங்களுடைய அரசாங்கம், உங்களுடைய நாடு… தேவலோகத்தைப் போன்று ஸர்வ வளங்களோடும், வல்லமையோடும், நலன்களோடும் இருக்க வேண்டும் என்று நினைந்தீர்களானால், திருவாரூர் த்யாகராஜருக்கு, முசுகுந்தா அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.

சில நாட்களுக்கு முன்பு பெருமானே தர்ஶநத்தில் தோன்றி, அவரே இந்த ஸத்யத்தை எனக்குக் காட்டினார். அவரே எனை கரம் பற்றி அழைத்துச் சென்று, திருவாரூர் தரிசனம் செய்து வைத்தார்.

ஐயா, ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: என்னுடைய வாழ்க்கையிலேயே, நான் நீட்டி விழுந்து வணங்குகின்ற ஒரே இறைவன், அண்ணாமலையார் மட்டும்தான். வேறு யார் முன்பாகவும்…

அதாவது எல்லா கோவிலுக்கும் போவேன், கோவிலுக்கெல்லாம் போகாமல் இருக்கமாட்டேன். கசிந்து, உருகி வழிபாடு செய்வேன். நானே கட்டியிருக்கின்ற இந்த நூற்றுக்கணக்கான கோவில்கள், ஆயிரக்கணக்கான த்யான மையங்களில் மூர்த்திகளை ப்ரதிஷ்டை பண்ணியிருக்கோம். இது எல்லாவற்றிலும் சென்று, தன்னை மறந்து, கசிந்து, பெருமானோடு கலந்து, பக்தியில் உருகி எல்லாம் பண்ணுவேன். ஆனால், நீட்டி விழுந்து வணங்குவது, ஸாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணுவது, திருவண்ணாமலையில் மட்டும்தான். வேறு எங்கேயும் விழமாட்டேன். வேறு எங்கேயும் விழுந்து கும்பிடமாட்டேன்.

மதுரையில், இந்த சன்னிதானமாக பட்டாபிஷேகம் செய்த பிறகு, நம் பெரிய சன்னிதானம் 292, கோவிலுக்கு, மீனாட்சி ஸுந்தரேஶ்வரர் கோவிலுக்கு அழைத்துச் செல்கின்றார். அழைத்துச் சென்று எல்லாம் தரிசனம் பண்ணுவதையெல்லாம் நல்லபடியாக பண்ணிவிட்டோம். ரொம்ப, மீனாட்சியும், சொக்கநாதரையும் அவ்வளவு இனிமையான தரிசனம். பக்தியில் கரைந்து, உருகி, பொங்கி, அன்னை தாயாரை வந்து ரொம்ப நெருக்கமாக பக்கத்தில் இருந்து பார்த்து, கரைந்து போய் இருக்கின்றேன்.

கொடிமரத்திற்கு முன்பாக வந்ததும், அவர் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். நான் அப்படியே நின்றுகொண்டிருக்கின்றேன். அவர் நமஸ்காரம் செய்து முடித்துவிட்டு, எழுந்து நின்று, 'பண்ணு' என்று கண்ணில் காட்டுகின்றார்.

எனக்கா! ஏனென்றால், இதுவரை வாழ்க்கையில் எங்கேயும் ஸாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணது கிடையாது. அண்ணாமலையானைத் தவிர, வேறு ஒரு இடத்திலும் ஸாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணது கிடையாது. இங்கு சன்னிதானம் வந்து, 'நமஸ்காரம் பண்ணுங்க' என்று முதலில் கண்ணில் காட்டுகின்றார்.

நான் அப்படியே, திருதிரு என்று முழிக்கிறேன் பதில் சொல்லாமல். பிறகு காதில் சொல்கின்றார், ஸ்வாமி இது பாரம்பரியம்.. ஸம்ப்ரதாய பரிபாலனார்த்தம், நீங்கள் நமஸ்காரம் பண்ண வேண்டும்' என்கின்றார்.

அவர் என்னை ரொம்ப மரியாதையோடு treat பண்ணார். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இதை நான் வரலாற்றிலே பதிவிட வேண்டும். அவர் என்னை ஒரு சீடனைப் போலவே நடத்தவில்லை. மீனாட்சியும் சுந்தரேஸ்வரருமே தரிசனத்தில் வந்து எனக்குப் பட்டாபிஷேகம் செய்யச் சொல்லி சொன்னதனாலே, 'மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் தேர்ந்தெடுத்த சன்னிதானம் நான்' என்று சொல்லி, இதைப் பொதுவெளியிலும் document பண்ணியிருக்கின்றார். legal-ஆக, paper-ஆக, paper-work-ல், legal paper-work-லும் document பண்ணியிருக்கின்றார். பல தரம் வெளிப்படையாகச் சொல்லி இருக்கின்றார். என்னிடமும் அதே மாதிரிதான் நடந்துகொண்டார், என்னையும் அப்படித்தான் நடத்தினார். 'ஸ்வாமி, நீங்கள் மீனாக்ஷி ஸுந்தரேஶ்வரர் தேர்ந்தெடுத்த சன்னிதானம்' என்று சொல்வார். ஏனென்றால், அவராக வந்துதான் பட்டாபிஷேகம் செய்தார்.

அவர், நமஸ்காரம் பண்ண வேண்டும் சாமி என்கிறார்.

நான் உடனே, சாமி நான் திருவண்ணாமலை தவிர, அண்ணாமலையார் தவிர வேறு எங்கேயும் நமஸ்காரமே, அதாவத ஸாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி நமஸ்காரம் பண்ணதில்லை ஸ்வாமி என்றேன்.

அவர் உடனே திரும்பிப் பார்த்து, ஸ்வாமி இது ஸம்ப்ரதாயம். நம்முடைய ஆதீனத்தினுடைய ஆன்மார்த்த மூர்த்தி மீனாக்ஷி ஸுந்தரேஶ்வரர்தான். அதனால் ஆன்மார்த்த மூர்த்தி முன்னாடி நமஸ்காரம் பண்ணித்தான் ஆகணும். ஸம்ப்ரதாயம் என்று சொன்னார்.

உடனே நான், 'பெருமானே! இது என்ன சோதனை? என்று கண்மூடி நின்றதும், அப்படியே அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் தோன்றி, அங்கு மீனாக்ஷி ஸுந்தரேஶ்வரராக மலர்ந்து நின்றதைப் பார்த்த உடனேதான், ஆஹா! பெருமானே...!

நன்றாகப் புரிந்துந்துகொள்ளுங்கள், 'மூர்த்திக் கற்பு, தெய்வக் கற்பு' என்று ஒன்று இருக்கிறது ஐயா. அது என்னவென்றால், ஶிவபெருமானை இஷ்டதெய்வமாக ஏற்றுக்கொண்டவர்கள் வேறு எந்த தெய்வத்தின் முன்னும், முன்பும் ஸாஷ்டாங்கமாக விழுந்து வணங்கமாட்டார்கள். வணங்குவார்கள், பக்தி செய்வார்கள், ஶ்ரத்தையோடு இருப்பார்கள், மரியாதையோடு இருப்பார்கள். ஆனால், அந்த ஸாஷ்டாங்க மரியாதையான ஶரணாகதி, ஶிவனுக்கு மாத்திரமே என்று இருப்பார்கள். அது தெய்வக் கற்பு. இஷ்ட தெய்வக் கற்பு என்று சொல்லுவோம்.

அதே மாதிரி வைஷ்ணவர்கள். அதே மாதிரி ஶாக்தர்கள். அவரவர்களுக்கென்று அந்த இஷ்ட தெய்வக் கற்பிற்கு, ஒரு தனி இலக்கணத்தை வைத்திருப்பார்கள்... ஒவ்வொரு ஸம்ப்ரதாயத்திற்கும்.

என்னுடையது, இஷ்ட தெய்வக் கற்பையும் தாண்டி, திருமேனிக் கற்பு! மூர்த்திக்குக் கற்பு! அது அண்ணாமலையார் திருமேனிக்கு மட்டும்தான். அந்த அண்ணாமலை, திருவண்ணாமலையிலேயே வீற்றிருக்கின்ற திருமேனி. அந்த மூர்த்தி, அவருக்கு மட்டுமே வாழ்க்கைப்பட்டக் கற்பு. வேறு எங்கேயும் ஸாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவது கிடையாது.

ஆனால், இங்கு ஸம்ப்ரதாய பரிபாலனார்த்தம் செய்தாக வேண்டும். அது மட்டுமல்லாமல், மீனாக்ஷியும் ஸுந்தரேஶ்வரருமேதான் தேடி, அவர்களேத் தேர்ந்தெடுத்துப் பட்டாபிஷேகம் செய்திருக்கின்றார்கள்.

இன்னொன்று, அடிப்படையிலே பரம ஸத்யம்... நன்றாகத் தெரியும்... அதாவது 'மீனாக்ஷி ஸுந்தரேஶ்வரரும், அண்ணாமலையானும், உண்ணாமுலையம்மையும் ஒருவரே. இரண்டு திருமேனிகளிலே எழுந்தருளியிருக்கின்ற பெருமான். திருவண்ணாமலையிலே, அண்ணா நாட்டிலே அருணாச்சலேஶ்வரராகவும், மதுரையிலே சொக்கநாதராகவும், அண்ணா நாட்டிலே உண்ணாமுலையாளாகவும், மதுரையிலே அன்னை மீனாக்ஷியாகவும் எழுந்தருளியிருக்கிறார்கள்' என்பது தெரிகின்றது. உணர்விற்குத் தெரிகின்றது. ஆனால், உடலில் அந்தக் கற்பு build ஆகிவிட்டது. இத்தனை வருஷமாக, உடல் அந்த கற்பிலே நிறைந்து பழுத்துவிட்டிருக்கிறது. பக்தி, கற்பாக மலர்ந்துவிட்டிருக்கிறது.

அதனால் என்ன செய்வது? ஸம்ப்ரதாய பரிபாலனம் - ஸம்ப்ரதாயத்தையும் மீறக்கூடாது என்று, கண்களை மூடி 'பெருமானே!' என்று ஸ்மரணம் செய்து நின்றுகொண்டிருந்தேன் இருந்தேன். நின்றால், அப்படியே தர்ஶநம் கொடுத்தார்! கொடுத்த உடனேயேதான் ஸாஷ்டாங்கமாக விழுந்து, வணங்கினோம்!

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், அதே மாதிரி, அதற்குப் பிறகு சில ஸ்தலங்களிலே பெருமான் நேரடியாக அண்ணாமலையானும் - உண்ணாமுலையம்மையும், என்னுடைய ஆன்மார்த்த மூர்த்தியும், இஷ்ட தெய்வமும், எனக்கு பரமாத்வைதத்தை அருளிய ஜ்ஞாந குருவுமான... உங்களுக்கெல்லாம் அண்ணாமலையார் சில பேருக்கு கடவுள், எனக்கு குரு, கடவுள் இரண்டும். அவரே அருணகிரியோகீஶ்வரராக வந்து, பரமாத்வைத அனுபூதியும் தந்து, பரமஶிவ ஜ்ஞாநமும் விஜ்ஞாநமும் தந்து, அனுபூதியும் அளித்தார். அவரேதான் பரம்பொருளாகவும் இருந்து, அந்த அனுபூதியிலேயே நிலைபெறச் செய்தார். அதனால் அவருக்கு மட்டும்தான் ஸாஷ்டாங்க நமஸ்காரம்.

அருணகிரியோகீஶ்வரரைப் பற்றி புராணங்கள் மிகத் தெளிவாக விளக்குகின்றன. அவர் கற்பனை அல்ல. திருவண்ணாமலையிலே நிரந்தரமாக, யோகியாக அவரே வீற்றிருக்கின்றார். அந்த வடிவத்தை ரமண மஹரிஷி தர்ஶநம் செய்திருக்கின்றார். பெருமான் எனக்குக் காட்டி அருளினார்.

லலாடே த்ரிபுண்ட்ரீ நிடில க்ரு'த கஸ்தூரி திலக: ஸ்புரன்-மாலாதார ஸ்புரித-கடி கௌபீன வஸன: ததானோ துஸ்தாரம் ஶிரஸி பணிராஜம் ஶஶிகலாம் ப்ரதீப: ஸர்வேஷாம் அருணகிரி யோகீ விஜயதே - இந்த ஸ்லோகத்தின் மூலமாக 'அருணகிரியோகீஶ்வரருடைய இருக்கின்ற அமைப்பு, வடிவம் எவ்வாறு பெருமான் அருணகிரியோகீஶ்வரராக திருவண்ணாமலையில் வீற்றிருக்கிறார்' என்று மிகத் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றது.

அவருடைய சன்னிதி, இன்னமும் திருவண்ணாமலையிலே மூன்றாம் ப்ரகாரத்திலே மண்டபமாக இருக்கின்றது. அவருடைய திருமேனி புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கின்றது. அந்த இடத்தில்தான் எனக்கு தர்ஶநம் கொடுத்தார்.

கல்ப வ்ரு'க்ஷத்தின் கீழே, திருவண்ணாமலையின் தெற்கு மலைச்சாரல் மேற்குப் புறமாக… நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், திருவண்ணாமலையில் இந்த தெற்கு மலைச்சாரல்… மலையை வந்து மேலிருந்துப் பார்த்தீர்களானால் புரியும். Drone view, மலையினுடைய drone view, இந்த Google Earth view-ல் பாருங்கள். பார்த்தீர்களானால் புரியும். மேற்குப் பக்கம் தெற்கு திசை நோக்கிய அந்த இடத்தில் பார்த்தீர்களானால், ஒரு மிகப்பெரிய ஆலமரம் இருக்கும். Physical-லாக யாராலும் அங்கு கிட்டே போகமுடியாது. அது நேரடியாக கல்ப வ்ரு'க்ஷம்.

கைலாஸத்திலிருக்கும் கல்ப வ்ரு'க்ஷமே அது. அதனுடைய, அந்த tree-யை எடுத்துட்டு வந்து இங்க plant பண்ணியிருக்கின்றார்கள். அதன் அடியில்தான் அருணகிரியோகீஶ்வரப் பெருமான் அமர்ந்து, சதா மௌனத்திலே உபதேசிக்கின்றார். தர்ஶநம் தருகின்றார். இன்று அந்த கல்ப வ்ரு'க்ஷ வாகனத்தில்தான் அண்ணாமலையான் அருள் செய்கின்றான்அருணகிரியோகீஶ்வரராக.

இப்பொழுது நீங்கள் பார்க்கின்ற இந்த திருமேனி, புடைப்புச் சிற்பமாக இருக்கின்றது. இதை முழு விளக்கத் திருமேனியாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்தீர்களானால், பெரிய நாயகரைப் பாருங்கள். பெரிய நாயகர்தான் அப்படியே… அதாவது எனக்கு தர்ஶநம் கொடுத்தப்பொழுது அருணகிரியோகீஶ்வரர் எப்படி இருந்தாரோ, அது அப்படியே பெரிய நாயகராக, திருவண்ணாமலையின் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளுகின்றார்.

மதுரையில், எனக்கு பெருமான் தர்ஶநம் கொடுத்து, 'நாமே இங்கிருக்கின்றோம்' என்று நமஸ்காரம் பண்ணச் சொன்னார். அது மாதிரி, அதற்குப் பிறகு ஓரிரு இடங்களிலே, அவரே தர்ஶநம் கொடுத்து நமஸ்காரம் பண்ணச் சொன்னால்தான், பண்ணுவது.

தெரிந்துகொள்ளுங்கள். இப்பொழுது சில நாட்களுக்கு முன்பு... சத்தியம் சொல்லுகின்றேன், சந்தேகம் வேண்டாம், பொய் புகலேன், புரட்டுரையேன். பெருமானே வந்து, கரம் பற்றி, உயிரைக் கொண்டு சென்று, முழுமையாக ஆரூர் தர்ஶநம் செய்து வைத்து, த்யாகேஸரை தரிசிக்க வைத்து, 'தானே இங்கிருக்கிறோம்' என்று காட்டி…. அதாவது அங்கு திரும்பவும் சுற்றி வந்த பிறகு, எனக்கு நன்றாகத் தெரிகிறது தர்ஶநம் நடந்துகொண்டிருக்கிறது என்று, பெருமானே அழைத்துச் சென்று காட்டுகிறார் என்று. ஆனால் திரும்பவும் த்யாகராஜர் முன்பாக வந்து நின்னதும் கை கூப்பி வணங்குறேன். பெருமான் சொல்கின்றார், 'ம்ம்ம், விழுந்து வணங்கு' என்று. நான் நிமிர்ந்துப் பார்க்கிறேன், திரும்பவும் அங்கு பெருமானே தோன்றி, அண்ணாமலையானே தோன்றி, த்யாகேஸராய் காட்சி தந்ததும்தான் விழுந்து வணங்கினேன்.

இப்பொழுது முசுகுந்த அர்ச்சனை, கைலாயத்தின் சார்பில் செய்யச் சொல்லியிருக்கின்றேன். யார் யாரெல்லாம்... என்னை நம்புபவர்கள், என்னுடைய பக்தர்கள், சீடர்கள், உங்களுடைய நிறுவனங்கள், உங்கள் வாழ்க்கை, தேவலோகம்போல சகல வளங்களோடும் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ, அவர்கள் ஆரூர் த்யாகேஸருக்கு, த்யாகராஜப் பெருமானுக்கு முசுகுந்தா அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.

ஐயா நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இல்லையென்றால் நான் வேறொரு ஶிவத்தலம் பற்றி நான் பேசுவதை வந்து ரொம்ப rare-ஆகத்தான் கேட்டிருப்பீர்கள். ஏனென்றால், நான் தெய்வக் கற்பு மட்டுமல்ல, திருமேனிக் கற்பு உடையவன்.

ஒரு உண்மையைச் சொல்றேன் ஐயா… இன்னமும் திருவண்ணாமலையில் இருந்துத்தான் விபூதி வர வேண்டும். இங்கு கைலாஸத்தில் நாங்களே விபூதி செய்கின்றோம். நானே தினந்தோறும் அபிஷேகம் செய்கின்றேன். ஆன்மார்த்த பூஜையில் விபூதி அபிஷேகம் செய்துதான், லக்ஷக்கணக்கான பக்தர்களுக்கு நாங்கள் ப்ரஸாதம் கொடுக்கிறோம். திருநீற்று ப்ரஸாதம் அனுப்புகின்றோம். நித்யானந்தர் விபூதி எந்த அளவுக்கு popular-என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இன்னமும், நான் நெற்றியிலே பூசுகின்ற திருநீறு, அண்ணாமலையாருக்கு அபிஷேகம் பண்ணித்தான் வந்தாக வேண்டும்.

திருவண்ணாமலையில் அபிஷேகம் நடந்து... இன்னொரு விஷயம், இங்கு பதிவிட விரும்புகின்றேன், இதைப் பற்றி பேசும்பொழுது நான் பதிவிட்டு விட வேண்டும் என்று நினைக்கிறேன். திருவண்ணாமலை ஶிவாச்சார்யார்களும், ஆலயத்து ஊழியர்கள் - பணி செய்பவர்கள் அனைவரும், எந்நாளும் நன்றாக வாழ வேண்டும். அவர்கள் இனிமையே, அன்பே வடிவானவர்கள்.

கொரோனா காலத்தில்கூட, நான் நெற்றியில் பூசிக்கொள்வதற்குத் திருநீறு வேண்டும் என்று correct-ஆக… அதாவது கோவிலுக்குள்ளே யாரையும் விடாதபொழுதுகூட, அபிஷேகம் செய்து, திருநீற்று ப்ரஸாதத்தைக் கொண்டுவந்து கொடுத்துவிடுவார்கள். தவறாமல், இடைவிடாமல்.

அண்ணாமலையார் ஆலயத்தின் ஊழியர்கள், சகல நிலை ஊழியர்களையும், மணியக்காரரில் துவங்கி, மேல்நிலை தக்கார், அந்த மேல்நிலை, அதற்குமேல அந்த தர்மகர்த்தா மற்றும் அதிகாரிகள், அரசு நியமித்த அதிகாரிகள் மற்றும் ஶிவாச்சார்யார்கள் அத்துனை பேருமே... அது என்னவோ திருவண்ணாமலை ஆலயத்தின், ஆலயத்திலே திருப்பணி செய்கின்ற, சேவை செய்கின்ற, தொண்டு செய்கின்ற அத்துனை பேருமே என்னோடு ஒரு இனிமையான நட்பும், உறவும், அன்பும் கலந்த ஒரு உறவு இருப்பதனால்... உண்மையில் அந்த உறவிற்கு நான் எதுவும் செய்யவில்லை. காரணமில்லாத ஒரு அன்பை அவர்கள் வைத்திருக்கிறார்கள். தவறாமல் திருவண்ணாமலை அண்ணாமலையாருடைய அபிஷேகத் திருநீறு அனுப்பிவிடுவார்கள். தினந்தோறும் அபிஷேகம் நடந்து ப்ரஸாதம் வந்துவிடும்.

உண்மையில், அந்த ப்ரஸாதத்தைக் கொண்டுவந்து, நம் ஆதீனங்களில் சமைத்திருக்கின்ற உணவோடு கலந்து, அதைத்தான் அன்னதானமாகச் செய்கின்றோம்.

நம்முடைய எல்லா திருவண்ணாமலை ஆதீனங்களிலும், திருவண்ணாமலையில இப்போதைக்கு இரண்டு இடத்தில் நிரந்தரமாக நித்ய அன்னதானம் பண்றோம். திருஊடல் தெருவில் இருக்கின்ற நித்யானந்த ஜென்ம பூமி, கிரிவலப் பாதையில் இருக்கின்ற நித்யானந்த ஜென்ம பூமி க்ஷேத்ரம். இப்பொழுது மூன்றாவதாக இன்னொரு property பே கோபுரத் தெருவில் வாங்கி, அங்கேயும் அன்னதானம் துவங்கப் போகின்றோம்.

இப்பொழுது நடந்துகொண்டிருக்கின்ற இரண்டு இடங்களிலுமே, அன்னதானத்திலே, அண்ணாமலையார் கோவிலுடைய ப்ரஸாதம், காலையில் அபிஷேகம் நடந்து, அந்த ப்ரஸாதம் வந்து, அந்த ப்ரஸாதத்தை இந்த சமைத்த உணவோடு கலந்து, அதைத்தான் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கின்றோம்

அதனால் திருவண்ணாமலையில், நம்முடைய இரண்டு ஆதீனத்திலும் நீங்கள் எப்பொழுது அன்னதானம் சாப்பிட்டாலும், தெரிந்துகொள்ளுங்கள், அண்ணாமலையார் கோவில் ப்ரஸாதத்தைத்தான் சாப்பிடுகின்றீர்கள்.

இந்த திருவாரூர் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தேன். அதை சற்று ஆழ்ந்து புரிந்து கொண்டோமானால், எப்படி முசுகுந்த சக்ரவர்த்தியால் இன்னொரு dimension-க்கு போக முடிந்தது? என்ற இந்த ரகசியங்கள் எல்லாம் அந்த கதைக்குள்ளேயே பொதிய வைக்கப்பட்டிருக்கின்றது ஐயா. என்ன உணர்வு நிலை, என்ன space-ல் இருந்து operate பண்ணால், இந்த multi-dimension travel பண்ண முடியும்? இது எல்லாமே அந்த கதையிலேயேப் பொதிக்கப்பட்டு விடுகின்றது. கதையிலேயேப் பதிக்கப்பட்டு விடுகின்றது. அதை கண்டெடுப்பது, கண்டெடுத்து அதைக் கடைப்பிடிப்பது, உலகத்திற்குச் சொல்வதுதான் - ஜ்ஞாந யோகம்.

அது மாதிரி, இந்த அருணாச்சல புராணத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற எல்லா ஜ்ஞாந ஸத்யங்கள், அதையெல்லாம் ஒன்றாக்கி, அந்த ஜ்ஞாந ஸத்யங்களை எல்லாம் உங்களுக்குச் சொல்லிவிடுகின்றேன். அதையெல்லாம் புரிந்துகொண்டீர்களானால், அதற்குப் பிறகு, இந்த கதை முழுமையாகப் புரியும். அப்பொழுதுதான் இந்த கதையை நம்ப முடியும் ஐயா.

என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கின்றேன்... கைலாயத்திற்கு ஒரு மிகப்பெரிய நன்மை நடக்க வேண்டியிருந்தது. ஒரு breakthrough நடக்க வேண்டியிருந்தது. பெருமான் தர்ஶநம் கொடுத்து, ஆரூர் தர்ஶநம் செய்ய வைத்து, ஆசீர்வாதம் பண்ண உடனேயே, உடனடியாக அந்த breakthrough நடக்கத் துவங்கிவிட்டது. அந்த pending-ல் இருந்த, நடக்க வேண்டியிருந்த நன்மை நடக்க ஆரம்பித்துவிட்டது.

அதனால்தான் ரொம்ப தைரியமாகச் சொல்கின்றேன். முசுகுந்தார்ச்சனை செய்து வழிபடுங்கள். உங்களுக்கு ஏதாவது breakthrough நடக்க வேண்டியிருந்தால் நடந்துவிடும். ஏதாவது stuck ஆகியிருந்தீர்கள், breakthrough நடக்க வேண்டும், உங்கள் business-ல் ஒரு பெரிய, வேறு ஏதாவது ஒரு, அரசியலில் election-ல் நிற்கப் போகிறீர்கள் அல்லது என்னவாவது அல்லது ஏதோ ஒரு விருது வேண்டும் என்று நினைத்து வேலை செய்துகொண்டிருக்கின்றீர்கள், ஏதாவது ஒரு award-ஓ அல்லது ஏதோ ஒரு வெற்றியை நோக்கி நீங்கள் வேலை செய்கிறீர்கள், அது நடக்க வேண்டும் என்றால், த்யாகராஜப் பெருமானை முசுகுந்தார்ச்சனை செய்து வழிபடுங்கள்.

இன்னொன்று தெரிந்துகொள்ளுங்கள்.. என் பக்தர்கள், சீடர்கள் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், தேவையில்லாது உங்களை பொருள் செலவு செய்ய சொல்ல மாட்டேன். தேவையில்லாது, சரியான காரணம் இல்லாது, உங்களுடைய நேரத்தை செலவிட்டு, ஒரு ஆலயங்களுக்கு செல்லுங்கள், ஒரு வழிபாட்டை செய்யுங்கள் என்று நான் சொல்ல மாட்டேன்.

நான் சொல்கிறேன் என்றால், இது மருந்துபோல வேலை செய்யும். தீர்வு கொடுக்கும். இந்த வார்த்தைகளுக்கு நான் பொறுப்பு. இந்த வார்த்தைகளுக்கு நான் பொறுப்பு.

நீங்கள் சென்று, திருவாரூர் கோயிலில் முசுகுந்தார்ச்சனை செய்த உடனே, எனக்கு ஏதும் அங்கிருந்து commission வருகின்றது என்று நினைக்காதீர்கள். எல்லாவற்றையும் வியாபாரமாக பார்க்காதீர்கள். சென்று அர்ச்சனை செய்து வாருங்கள். மிகப்பெரிய breakthrough நடக்கும். நான் பார்த்திருக்கின்றேன். நான் பார்த்ததனால் சொல்கின்றேன். அவ்வளவுதான். என்னுடைய அனுபூதியைச் சொல்கின்றேன்.

அதுமட்டுமல்லாமல், பெருமான், இதை சொல்லச் சொல்லி எனக்கு அருள் செய்து, உத்தரவிட்டதனால் சொல்கின்றேன். சில நேரத்தில் அனுபூதியாக இருப்பவற்றை வெளியில் சொல்லமாட்டேன். சரி, அது நமக்கு பெருமான் காட்டியது என்று விட்டுவிடுவேன். ஆனால் பெருமானே உத்தரவிட்டு, இல்லை இதை மற்றோருக்கும் சொல்லலாம் என்று அவரே உத்தரவிட்டால் மட்டும்தான் சொல்லுவேன். அதனால் சரியான, தேர்ந்தெடுத்த கவனமான வார்த்தைகளை வைத்துச் சொல்கின்றேன்.

நல்லது. ஆழ்ந்து கேளுங்கள். இந்த அருணாச்சல புராணத்திலே, இது மாதிரி ஜ்ஞாந ஸத்யங்களை எல்லாம் கடைந்து எடுத்திருக்கின்றேன். இந்த அடுத்த இரண்டு - மூன்று நாட்கள் ஸத்ஸங்கத்தில், நான் ஜ்ஞாந ஸத்யங்களை உங்களுக்குச் சொல்லிவிடுகின்றேன்.

அதற்குப் பிறகு இந்த கதைகள், ஸர்க்கம், விஸர்க்கம், விருத்தி, ரக்ஷா, அந்தராணி, வம்சம், வம்ஸானுசரிதம், ஸம்ஸ்தா, ஹேது, அபாஷ்ரயம் என்ற எல்லாமும் சொல்கின்றேன். உங்களுக்குப் புரிந்துவிடும். அந்த context-ஐ set பண்ணிவிட்டால் புரிந்துவிடும். அனுபூதியாக மாறிவிடும். அதனால் இந்த பரமஶிவ ஜ்ஞாநம், பரமஶிவ விஜ்ஞாநத்தைச் சொல்லுகின்றேன், கேட்டுக்கொள்ளுங்கள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், பத்து ஸத்யங்கள்தான்: மொத்தமாக அருணாச்சல புராணத்தினுடைய சாரமாக உங்களுக்கு நான் சொல்லப்போகின்றேன். நிறைய எடுத்தெல்லாம் சொல்லவில்லை. வெறும் பத்தே பத்து ஸத்யங்கள் சொல்கின்றேன்.

இந்த பத்து ஸத்யங்களை மட்டும்... ஆழ்ந்து கேளுங்கள்: இந்த பத்து ஸத்யங்களைக் கடைபிடித்தீர்களானால், வருகின்ற 2026, உங்களுக்கு நிஜமான, புது வாழ்க்கையாக அமையும். புது வருடமாக அல்ல, புது வாழ்க்கையாக அமையும்.

இந்த 2026-ஐ, புது வாழ்க்கையாக அடைவதற்கு, புது வாழ்க்கையாக வாழ்வதற்கு, இந்த பத்து ஸத்யங்களை உள்வாங்கிக் கொள்ளுங்கள். பத்தே பத்து ஸத்யங்கள்தான் சொல்கின்றேன். உங்களுக்கு அதற்குமேல் பெரிய load வைக்கவில்லை.

முதல் சத்தியம்: உங்களுடைய உணர்விற்குள்ளே, நீங்கள் உங்களைப் பற்றியே சொல்லிக்கொள்ளுகின்ற கதைகளை, எதிர்கொள்ளுங்கள். ஆழ்ந்து கேளுங்கள், நீங்கள் உங்களைப் பற்றியே சொல்லுகின்ற கதைகளை- எதிர்கொள்ளுங்கள்.

'கடந்த காலம்' என்று ஒன்று இல்லை. அதை நான் முதலிலேயேச் சொன்னேன். கடந்த காலத்தைப்பற்றி, நீங்கள் இப்பொழுது வைத்திருக்கின்ற நினைவுகள்தான், உங்களைக் கட்டுப்படுத்துகின்ற, கர்மப் பிணைப்பு, கர்மமே தவிர, கடந்த காலம் என்ற ஒன்று இல்லை.

இன்னோரு முக்கியமான விஷயம். கடந்த காலத்தைப்பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற நினைவுகள், உண்மையிலேயே கடந்த காலத்தைப் பிரதிபலிக்கவில்லை. அதனால்தான் ஐயா, நீங்கள் வளர வளர, matured-ஆக matured-ஆக, உங்களுடைய ஆசைகள், அச்சங்கள் இதெல்லாம் மாற மாற, உங்கள் கடந்த காலத்தைப்பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற நினைவுத் தொகுப்புமே மாறிப்போய்விடும் ஐயா.

ஆழ்ந்து கேளுங்கள். இதைச் சற்றே ஆழ்ந்து புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் matured-ஆக matured-ஆக, present-ல் matured -ஆனீர்கள் என்றால்கூட, உங்களுடைய past-ஐ பற்றி நீங்கள் present-ல் வைத்திருக்கின்ற நினைவுகள், அந்த files வந்து முழுதாக மாறிப் போய்விட்டிருக்கும்.

அதனால்தான் சொல்கின்றேன், 'கடந்தது இறந்தது' கடந்த காலம், இறந்த காலம். கடந்ததைப் பற்றி நீங்கள் நினைவிலே வைத்திருக்கின்ற, நிகழ்காலத்தில் வைத்திருக்கின்ற நினைவுப் பதிவுகள்தான், உங்களைக் கட்டுகின்ற, கண்ணுக்குத் தெரியாத சிறை. கண் காணாத சிறை.

ஆழ்ந்து கேளுங்கள்… கடந்ததைப் பற்றி நீங்கள் நிகழ்விலே வைத்திருக்கின்ற நினைவுகள், உண்மையிலேயே கடந்த காலத்தைப் பிரதிபலிக்கிறதா என்று கேட்டால்?… அதுவும் இல்லை.

திரும்பவும் சொல்றேன், ஒரு moving sand, அதன்மீது உங்களுடைய அடிப்படையை, அடித்தளத்தை அமைக்கின்றீர்கள். உங்களுடைய identity-ஏ ஐயா, உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற உங்கள் past experiences-னுடைய தொகுப்புதான் உங்கள் identity. ஆனால் அந்த identity-னுடைய foundation-ஏ தப்பு, பொய்!

மணிவாசகப் பெருமான் சொல்றாரே, 'யானே பொய், என் நெஞ்சும் பொய்' என்று, அதுதான் உண்மை! காரணம் என்னவென்றால், நீங்கள் நிதர்சனமாகப் பார்க்கலாம்... உங்களுடைய ஆசைகள் matured-ஆகி, அச்சங்கள் matured-ஆகி, பயங்கள்கூட matured ஆகும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்கள் ஆசைகள் matured ஆகும்போது, அச்சங்கள் matured ஆகும். ஆகும்பொழுது, கடந்த காலத்தைப் பற்றி நிகழ்காலத்தில் நீங்கள் வைத்திருக்கின்ற நினைவுகள் மாறும்.

அது ஒன்றும்… அதாவது 'அப்படியே கடந்த காலம் என்ற எல்லா file-லும் இருக்கிறது, நீங்கள் வேண்டுமானால் தேவையான file-ஐ எடுத்துக்கொண்டு வருகின்றீர்கள்' என்று நினைக்காதீர்கள் ஐயா. கிடையாது.

இப்பொழுது நிகழ்காலத்தில் உங்களுக்கு இருக்கின்ற மனநிலையை வைத்து, கடந்த காலத்தினுடைய சில நிகழ்வுகளை எடுத்து நீங்களாகவே பிண்ணி, ஒரு திரைப்படத்தை உருவாக்கி, உங்களுக்கு நீங்களே கதை சொல்லிக்கொள்கின்றீர்கள்.

தயவுசெய்து... உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்கின்ற அந்த கதைகளை எதிர்கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்கின்ற அந்த கதைகளை எதிர்கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்கின்ற அந்த கதைகளை எதிர்கொள்ளுங்கள்.

கொஞ்சம் தள்ளியே அமைதியாக தள்ளிநின்றுப் பார்த்து, உங்களுடைய ஜ்ஞாநத்தை serious-ஆக எடுத்துக்கொள்கின்ற, ரொம்ப ஆழமான ஶ்ரத்தையோடு கூடிய தேடுதல் உடைய நபர்கள் எல்லாம், உட்கார்ந்து எழுதுங்கள்.

உங்களைக் கட்டுப்படுத்துகின்ற கண்காணாத சிறைதான், உங்களுக்கு நீங்களே உங்களைப்பற்றி சொல்லிக்கொள்கின்ற கதைகள் ஐயா.

கடந்த காலத்தின் தோல்விகள் சார்ந்து, பயங்கள் சார்ந்து, சமூகம் உங்கள் மீது திணித்த அச்சுறுத்தல்கள் சார்ந்து, கடந்த காலம் உங்களுக்குள் எழுப்பிய தோல்வி, துக்கம், குற்ற உணர்ச்சி இந்த மாதிரியான அனுபவங்களை எல்லாம் சார்ந்து, உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்கின்ற கதைகள்தான், உங்களைக் கட்டுப்படுத்துகின்ற கண்காணாத சிறை. ஆங்கிலத்தில் சொல்லவேண்டும் என்றால், உங்களுடைய invisible prisons-ஐ recognize பண்ணுங்கள். Invisible prisons-ஐ recognize பண்ணுங்கள்.

உங்களப் பற்றி நீங்களே உங்களுக்குச் சொல்லிக்கொள்கின்ற இந்த narrative… உங்களப் பற்றி நீங்களே உங்களை நோக்கி சொல்லிக்கொள்கின்ற வார்த்தைகள் மாறினால்தான், உங்கள் வாழ்க்கை மாறும். உங்களைப் பற்றி நீங்கள் சொல்லிக்கொண்டே இருக்கின்ற அந்த வார்த்தைகள் மாறாமல், வாழ்க்கை மாறும் என்று கனவு கண்டுகொண்டு இருந்தீர்களானால், அதைவிட லூசுத்தனமான ஒன்று வேறு எதுவும் கிடையாது. இதுதான் மூட நம்பிக்கை.

உங்களுக்குள் இருக்கும் வார்த்தைகள் மாறாமல், உங்களுக்குள் நீங்களே உங்களைப் பற்றி உங்களை நோக்கி சொல்லிக்கொள்ளுகின்ற, ப்ரபஞ்சத்தை நோக்கி, உங்கள் வாழ்க்கையை நோக்கி, உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுகின்ற வார்த்தைகள் மாறாமல், வாழ்க்கை மாறாது.

கொஞ்சம் ஆழ்ந்து கேளுங்கள்: முதலில், இந்த 2026 ஒரு புது வாழ்க்கையாக மலர வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லோரும் செய்ய வேண்டியது… உங்களுக்குள் உங்களை நோக்கியும், உலகத்தை நோக்கியும், வாழ்க்கையை நோக்கியும், ப்ரபஞ்சத்தை நோக்கியும், உங்கள் வாழ்வில் இருப்பவர்களை நோக்கியும், உங்களுக்குள் நீங்கள் சொல்லிக் கொள்ளும் வார்த்தைகள் மாற வேண்டும். அதுதான் முதல் படி.

அப்பொழுது எப்படி அதை மாற்றுவது என்றால், முதலில் என்னெவெல்லாம் நீங்கள் சொல்லிக்கொண்டிருகின்றீர்கள்? உங்களைப் பற்றி நீங்கள் சொல்லிக்கொள்ளும் கதைகள், narrations என்னென்ன என்பதை recognise பண்ணுங்கள். அதற்குப் பிறகு, அதை question பண்ணலாம்.

அதற்குப் பிறகு, அதில் எது உண்மைக் கதை? ஒரு அளவிற்காகவாது பொருந்துகின்ற உண்மைக் கதைகள் என்ன? எது உண்மையிலேயே உண்மை கிடையாது, ஆனால் பயத்தின் காரணமாக நீங்கள் அந்த கதையை உண்மை என்று ஏற்றுக்கொண்டீர்கள்? அல்லது பழக்கத்தின் காரணமாக பயப்பழக்கத்தின் காரணமாக அந்த கதையை உண்மை என்று ஏற்றுக்கொண்டீர்கள்?

நன்றாக யோசித்துப் பாருங்கள்: சில நேரத்தில் 'இந்த கதைத்தான் உங்களைப்பற்றி நீங்கள் வைத்திருக்கும் உண்மையான கதை' என்று நம்பினால்தான், சில சூழ்நிலைகளில் இருந்து வெளியில் வரமுடியும், உங்களை நீங்களே train பண்ணிக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக, பயத்தில் இருந்து விளைந்த சில கதைகளை உங்களைப் பற்றி நீங்களே உருவாக்கிக்கொண்டு, 'இல்லை இல்லை, இந்த மாதிரி இருந்தால்தான் என்ன நானே control-ல் வைத்திருப்பேன். இதெல்லாம் இந்த மாதிரி எல்லாம் நான் நினைத்தேன் என்றால்தான், என்னை நானே கட்டுப்பாட்டில் வைத்திருப்பேன்' என்று ஏதோ ஒரு மூட நம்பிக்கை, பயம் சார்ந்த மூடநம்பிக்கை அல்லது பழக்கம் சார்ந்த மூடநம்பிக்கை... இவைகளை வைத்து, உங்களைப் பற்றி என்னென்ன கதைகளை நீங்கள் சொல்லிக் கொள்கின்றீர்கள் என்று பாருங்கள்.

அதற்கடுத்து, உங்களைப்பற்றி நீங்கள் சொல்லிக்கொள்கின்ற கதைதான், நீங்கள் பார்க்கின்ற உலகத்தையே shape பண்ணுகின்றது என்கின்ற இந்த filter effect-ஐ புரிந்துகொள்ளுங்கள் ஐயா.

Filter effect - இந்த வார்த்தை உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும். Gen Z-க்கு மொத்தமாகத் தெரியும்.

உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கின்றக் கட்டுக்கதைகள்தான், filter effect-ஆக செயல்பட்டு, அதுதான் உங்களுடைய வாழ்க்கையை, நீங்கள் உங்கள் reality-ஐ எப்படி experience பண்ணுகின்றீர்கள் என்பதையும், அதுதான் முடிவு பண்ணுகிறது ஐயா. உங்களுடைய limitations, அது உங்களுடைய பல சாத்தியங்களை block பண்ணுகிறது. உங்கள் சுய-சந்தேகங்கள், உங்களுடைய பல ஶக்திகளை block பண்ணுகிறது.

ஆழ்ந்து கேளுங்கள், இப்பொழுது நான் சொல்கின்ற ஸத்யம் எல்லாமே, உங்களுக்குள் கொஞ்சம் அமைதியாக உட்கார்ந்து ஆழ்ந்து கேட்டீர்களானால் புரியும். அதை உள்வாங்கிக்கொள்ளலாம்.

எப்படி, பல நேரத்தில், காரணமில்லாத பயத்தினால் ஏற்பட்ட ஒரு failure, ஒரு நிகழ்வை வைத்து, உங்களை நீங்களே முழுமையாகக் கட்டிக்கொள்ளுகிறீர்கள். இந்த inviable prison-ல் உங்களை நீங்களே போட்டுக்கொள்கிறீர்கள். எப்படி, அது உருவாக்குகின்ற self-doubt-ம், filter effect-டும் உங்கள் reality-ஐ உங்களுக்குக் காட்டுகின்றது, உங்களை எப்படி control பண்ணுகிறது என்று இதையெல்லாம் பாருங்கள்.

தேவையில்லாத ஒரு 100 கருங்கல்லை மூட்டை கட்டி, backpack-ல் போட்டுக்கொண்டு மலை ஏறினீர்களானால், ஏற முடியுமா?

உங்கள் வாழ்க்கையை அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றீர்கள் ஐயா. தேவையில்லாத large files உங்கள் computer-ல் load பண்ணி வைத்திருந்தீர்களானால், computer function ஆகுமா?

பழையது மொத்தத்தையும் delete பண்ணுங்கள் ஐயா. Drop the backpack of rocks!

உங்களைக் கட்டுப்படுத்தும், மட்டுப்படுத்தும், உங்கள் சாத்தியங்களை குறைக்கும் நம்பிக்கைகள், குற்ற உணர்ச்சிகள், பயங்கள், இயங்கா நிலைகள், உங்கள் எதிரிகளைப் பற்றி, எதிர்ப்பைப் பற்றி மிகவும் அதிகமாக கற்பனை செய்துகொள்ளுதல், இது எல்லாமே பார்த்தீர்களானால், backpack of rocks-ஐ backpack-ல் போட்டுக்கொண்டு மலை ஏற முயற்சிக்கின்றீர்கள். உங்கள் வாழ்க்கையை நடத்த முயற்சிக்கின்றீர்கள். முதலில் அதை கீழே போடுங்கள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், 'கடந்ததிலிருந்து பாடம்' என்று தனியாக ஒன்றை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டாம். கடந்ததை drop பண்ணுவதுதான், நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!

என்ன சாமி சொல்றீங்க, அப்பொழுது அதே தவறை திரும்ப பண்ணமாட்டேனா? என்றால், பண்ண மாட்டீர்கள்!

கடந்ததை drop பண்ண முடியலைவில்லை என்றால்தான், அதே தவறை செய்துகொண்டிருப்பீர்கள்.

புதிது புதிதாக தப்பு பண்ணுவதுதான் ஐயா வாழ்க்கை. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், வெளிப்படையாகச் சொல்கின்றேன், Gen Z தெரிந்துகொள்ளுங்கள்... ஒரே தவறைத் திரும்ப திரும்ப பண்ணாதீர்கள். அவ்வளவுதான் நான் உங்கள் வாழ்க்கையில் சொல்கின்றேன். 'தப்பு பண்ணாதீர்கள்' என்றெல்லாம் சொல்ல மாட்டேன். பண்ணாமல் இருக்கவும் முடியாது. ஏனென்றால் எது தப்பு, எது சரி என்பதே வாழ்ந்த பிறகுதான், முடிவு நமக்கு தெரியும். வாழும்பொழுது தெரியாது. அதுதான் உண்மை. பரம ஸத்யம் அதுதான். ஒரே தவறைச் செய்யாதீர்கள். அவ்வளவுதான்.

அது, நீங்கள் கடந்ததை மறந்துவிட்டு, தூக்கி எறிந்துவிட்டு, கடந்ததும் உங்கள் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் ஒதுக்கி வைத்துவிட்டீர்களானாலே நடக்கும்.

தப்புக்கெல்லாம் பயந்தவன் வாழவே முடியாது ஐயா. பயம்தான் பெரிய தப்பு ஐயா!

அதனால், உங்களை limit பண்ணிக்கொள்கின்ற, control பண்ணிக்கொள்கின்ற சகல விதமான சுய எதிர்மறை கதைகளையும் drop பண்ணுங்கள். அதை drop செய்தீர்களானால்தான், உங்களுக்குள் உங்கள் வாழ்க்கையைப் புதுமையாக மாற்றி எழுதுவதற்கான space அமையும் ஐயா.

எப்படி பழைய loaded files எல்லாம் delete செய்தீர்களானால்தான், உங்கள் life-ஐ நீங்கள் புது files-ஐ store பண்ண ஆரம்பிக்க முடியுமோ, புது creative work-ஐ பண்ண முடியுமோ, உங்கள் device-ல், உங்கள் computer-ல், உங்கள் laptop-ல், உங்கள் phone-ல், அதே மாதிரிதான் பழையதை delete பண்ணி முடியுங்கள் ஐயா. Trash-ல் கூட வைக்காதீர்கள், trash-ல் இருந்தும் delete பண்ணுங்கள்.

பண்ணிவிட்டு, fresh-ஆக நீங்கள், பழையதைத் திரும்பத் திரும்ப reference-க்காகவோ, வேறு ஏதாவது ஒரு காரணத்திற்காகவோ உள்ளுக்குள் rehearsal பண்ணுவதை நிறுத்துங்கள் ஐயா. நிறுத்திவிட்டு, fresh-ஆக உங்கள் life-ஐ breatheபண்ண ஆரம்பியுங்கள். அப்பொழுதுதான் புது வாழ்க்கையை narrate பண்ணி எழுதுவதற்கு, உள்ளே space கிடைக்கும் ஐயா.

ஒவ்வொரு நாள் காலையில் எழுந்த உடனேயும் தெளிவாகச் சொல்லுங்கள்: I am new now. Right now I am new . And I am the Ultimate. I am not going to repeat my old stories. என்னைப் பற்றி நான் வைத்திருக்கின்ற பழங்கருத்துக்கள், பழங்கதைகள், அவைகளை நான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்வதன் மூலமாக அதை repeat பண்ணப் போவதில்லை.

உங்களைப் பற்றி நீங்கள் சொல்லுகின்ற பழங்கதைகளை, 'repeat பண்ணப் போவதில்லை' என்று தெளிந்த முடிவெடுத்துவிடுங்கள். இதுதான் நீங்கள் ஸ்வதந்தரத்திற்குள் எடுத்து வைக்கும் முதல் படி.

உங்களப்பற்றி நீங்கள் சொல்லிக்கொள்கின்ற கதையைக் கட்டுப்படுத்தினீர்களானால், Conscious-ஆக அதை கட்டுப்படுத்தினீர்களானால், உங்கள் life-ஐ Conscious-ஆக கட்டுப்படுத்திவிடுவீர்கள்.

என்னுடைய வாழ்க்கையிலே பரமஶிவப் பரம்பொருள் எனக்கு அனுபூதியாக, அனுபவமாக அளித்த ஸத்யங்களை, பரமஶிவ ஜ்ஞாநத்தை, பரமஶிவ விஜ்ஞாநத்தை, உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றேன்.

ஒரு சின்ன உதாரணம் வேண்டுமானாலும் சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள்… உங்களைச் சுற்றி இருப்பவர்களில் பலபேர், பல வார்த்தைகள் உங்களைப் பற்றிச் சொல்லியிருப்பார்கள். எந்த வார்த்தை உங்களுக்கு ரொம்ப ஆழமாக வலிக்கிறது, தைக்கிறது? அல்லது நீங்கள் 'social media-வே கதி' என்று இருக்கின்ற Gen Z-யாக இருந்தால், social media-ல் பல comments வரும். எந்த comment உங்களை ரொம்ப வலிக்க வைக்கிறது, தைக்கிறது? என்று பாருங்கள்.

அதுதான் உங்களைப் பற்றி நீங்களே சொல்லிக்கொண்டிருக்கின்ற narrative. அதை எவனோ ஒருவன் வெளியில் இருந்து சொல்லிவிட்டானே என்றுதான் உள்ளுக்குள் இருந்து வலிக்கிறது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களைப் பற்றி நீங்கள் சொல்லிக்கொண்டே இருக்கின்ற narrative-ஐ, வெளியிலிருந்து யாராவது ஒருவர் சொல்லிவிட்டால்தான், அந்த வார்த்தை வலிக்குமே தவிர, உங்களைப் பற்றி நீங்கள் சொல்லிக்கொள்ளாத narrative-ஐ, வெளியிலிருந்து யாராவது ஒருவர் சொன்னாலும் வலிக்காது, நினைவில் நிற்காது, அது எந்தவிதமான தாக்கத்தையும் உங்கள் மீது ஏற்படுத்தாது. இதுதான் சத்தியம். இதுதான் முதல் படி.

2026-ல் புது வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்கின்றவர்களுக்கு, 2026-ல் முழு வாழ்க்கை, நிறை வாழ்க்கை, புது வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்கின்ற எல்லோருக்கும், இதுதான் முதல் படி.

இரண்டாவது படி: தயவுசெய்து 'நான்' என்கின்ற இந்த உணர்வைக் கொண்டுவந்து குறுக்கிடாமல், உங்கள் உள்ளுணர்வு... உள்ளுக்குள் என்ன நிகழுகின்றதோ, அதாவது உங்கள் மனதிற்குள், சித்தத்திற்குள், புத்திக்குள், உங்களுக்குள், உங்களுடைய சிதாகாஶத்திற்குள் என்ன நடக்கிறதோ, அதை silent-ஆக கவனியுங்கள்.

ஒரு நாளைக்கு ஒரு 20 நிமிடமாவது ஐயா, silent-ஆக அமர்ந்து உங்களுக்குள் நடக்கின்ற, உங்களுக்குள் என்ன இருக்கிறது என்பதை அப்படியே கவனியுங்கள் ஐயா. உங்களுடைய Conscious-ஐ, 'உங்களை' ஆழ்ந்த அமைதியோடு பரமஶாந்தத்தில் இருந்து கவனியுங்கள்.

அப்பொழுது என்ன நடக்கும் என்றால், இந்த... கடல் அலைகள், அது create பண்ணுகின்ற noise, chaos, அலைச்சல், இது எல்லாவற்றையும் தாண்டி கீழே சென்றீர்களானால்தான், authentic-ஆன உங்களை நீங்கள் எதிர்கொள்ள முடியும், கண்டறிய முடியும்.

இப்பொழுது கடலலை மாதிரி மேம்போக்காக, உங்களுடைய மேல்நிலையில் நடக்கின்ற chaos, தொடர்ந்த diversions, இது, அது, எல்லா புரட்டு, கலாட்டா, பிரச்சினைகள் என இது எல்லாவற்றையும் தாண்டி, கொஞ்சம் உள்ளேச் சென்று அமைதிக்குள் சென்றீர்களானால்தான், உங்களுடைய authentic-ஆன self, 'நீங்கள் யார்?' என்பதையே meet பண்ண முடியும் ஐயா.

பரமஶாந்தத்துவமான settling space-ஐ முதலில் create பண்ணுங்கள் ஐயா. எண்ணங்கள் settle ஆவதற்கு... constant distraction இல்லாமல், எண்ணங்கள் settle ஆவதற்கு அனுமதியுங்கள். பாருங்கள்.

உங்கள் வாழ்க்கையில் இருக்கின்ற ஒவ்வொரு second-ஐயும், எதையாவது ஒன்றை வைத்து நிரப்ப வேண்டும் என்கின்ற கட்டாயத்திலிருந்து உங்களை விடுபடுத்துங்கள். அது ஒரு பெரிய prison ஐயா. சிறை! உங்கள் வாழ்க்கையினுடைய ஒவ்வொரு second-ஐயும், எதையாவது வைத்து fill பண்ணி ஆகவேண்டும் என்கின்ற கட்டாயம் இருக்கிறது பாருங்கள், அது ஒரு மிகப்பெரிய prison!

அதனால்தான் எப்பொழுதுப் பார்த்தாலும் அந்த doom-scrolling செய்துகொண்டே இருப்பது - messaging-உம் scrolling-உம். இந்த temporary thrills-ஐ chase பண்ணுவது. தரித்தரம் பிடித்த video game... அதையெல்லாம்...

தன்னுடைய மகனை, பொறுப்பெடுத்துப் பார்த்து, வாழ்க்கையைப் பற்றி சொல்லி, இந்த வாழ்க்கையினுடைய உயர்ந்த ஸத்யங்களான ராமாயண-மஹாபாரதப் புராணக் கதைகள் இதெல்லாம் சொல்லி வளர்க்க முடியாத, தன்னுடைய உடல் இச்சையையும், வெறும் சுய -இன்பத்திலே கழித்துக்கொள்ள முடியாத தரித்திரங்கள், இன்னொரு உடலை sex toy-யாக உபயோகப்படுத்தி, பிள்ளையைப் பெற்றுத் தொலைக்கிறார்கள்.

தயவுசெய்து, வெறும் காமத்தின் தேடுதலை, இன்னொரு உயிருக்கு உயிர் கொடுக்கின்ற செயலாக மாற்றித் தொலைக்காதீர்கள்.

இன்னொரு உயிருக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்றால், குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கு… அந்தக் குழந்தையை வளர்ப்பதற்குத் தேவையான அளவுக்கு நேரம் உங்களுக்கு இருக்கிறதா? என்று பாருங்கள். 'பணம்' - குழந்தை வளர்ப்பிற்கான ஒரே தேவை கிடையாது. 'நேரம்' - அந்தக் குழந்தைக்கு attention கொடுப்பதற்கு... அந்த குழந்தைக்கு, அந்த குழந்தையினுடைய formation years-ல், foundation years-ல் அந்தக் குழந்தையை நீங்கள் attend பண்ணி உருவாக்கிவிடுவதற்கு, உங்களுக்கு நேரமும், அறிவும், பொறுமையும் இருக்கிறதா? அது இல்லையென்றால், நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்வது தவறு!

எந்த ஒரு நாடும் அந்த மாதிரி இருக்கின்ற parents… அதாவது நேரமோ, பொறுமையோ, அறிவோ இல்லாத parents, குழந்தைப் பெற்றுக்கொள்கின்ற licence-ஐயே cancel பண்ணிவிட வேண்டும். குழந்தைப் பெற்றுக்கொள்வதற்கு licence இருக்க வேண்டும். திருமணம் செய்துகொள்வதற்கு முன்பாக, குறைந்தபட்சம் ஒரு மாதமாவது, இந்த உறவுகளை உருவாக்குவதைப் பற்றி படிக்க வேண்டும். Course-ஐ pass பண்ண வேண்டும்.

குழந்தைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னால், குறைந்தபட்சம் ஒரு மாதமாவது ஒரு course இருக்க வேண்டும். அதற்குப் பிறகுதான், அதாவது அதைப் படித்து, complete பண்ணி, உடலாலும், மனதாலும் தயாரான பிறகுதான், pregnancy-க்கு allow பண்ண வேண்டும். ஒரு conscious society evolve -ஆக வேண்டும் என்றால், இதெல்லாம் நடந்தாக வேண்டும்.

இல்லையென்றால், உன்னுடைய உடலறிப்பிற்காக, இன்னொருவரை sex toy-யாக use பண்ணுவது. அதற்கு வேறு ஏதையாவது பண்ணித் தொலைச்சிட்டு போ. இன்னொரு உயிருக்கு உயிர் கொடுக்காதே. அப்பொழுது என்ன... இன்னொரு உயிருக்கு உயிர் கொடுத்தீர்களானால், அப்பொழுது உங்களை மாதிரி தரித்திரமாக அதை reproduce பண்ணி வைப்பீர்கள்.

Video game கொடுத்துவிட்டு, நீங்கள் free-யாக இருப்பது. அது பாவம், அதற்கு அடிமையாகிவிட்டு, அந்த video game-க்கு அடிமையாகிவிட்டு…

இந்த temporary thrills-ஐ chase பண்ணுவது இருகிறது பாருங்கள், அது மாதிரி கொடுமையான சிறை… இந்த தொடர்ந்து doom-scrolling செய்துகொண்டே இருப்பது, தொடர்ந்து message செய்துகொண்டே இருப்பது, இந்த temporary thrills பின்னாடி ஓடுவது, chasing temporary thrills.

யாராக இருந்தாலும், எந்த வயதினராக இருந்தாலும் இதை நிறுத்துங்கள்.

இன்னொரு முக்கியமானது என்னவென்றால், உங்களுடைய அடுத்தத் தலைமுறைக்கு இந்த பழக்கம் வராமல் பாதுகாத்திடுங்கள். இப்பொழுது தான் நான்… அதாவது, இந்த கருத்தைத் தொடர்ந்து பத்து வருடங்களாக நான் சொல்லிக்கொண்டிருக்கின்றேன். இந்த வருடம்தான் ஆஸ்த்ரேலியா Government இந்த கருத்தை கேட்டு, 17 வயது, 16 வயதுக்குட்பட்ட எல்லாக் குழந்தைகளுக்கும் social media-ஐ ban பண்ணிவிட்டார்கள்.

எனக்கு ஒரு பெரிய சந்தோஷம்! ஆஹா, பரவாயில்லையே!

'நான் சொன்னதனால் செய்தார்கள்' என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் நிச்சயமாக இந்த கருத்து பரவ ஆரம்பித்திருக்கின்றதே! இந்த ஸத்யம் உலகம் முழுக்க பரவ ஆரம்பித்திருக்கின்றது. It has become ‘talk|.

அதுவே எனக்கு பெரிய வெற்றி. ஏனென்றால், பத்து வருடங்களுக்கு முன்பாக நான் இதை ஆரம்பித்தேன். இந்த கருத்துக்களை சொல்ல ஆரம்பித்தேன்.

இந்த constant-ஆ temporary thrills-ஐ chase பண்ணுவதை நிறுத்து. உங்களுடைய ஆன்மீக இதயத்தை கேளுங்கள்.

ரொம்ப அருமையாக ரமண மஹரிஷி சொல்லுவார்: ஹ்ருதயம்...உங்கள் இதயம் என்ன சொல்லுகின்றது என்று ஆழ்ந்து கேளுங்கள்.

உங்கள் heart-னுடைய, உங்களுடைய ஆன்மீக இருப்பினுடைய தேவைகளை, ஏக்கங்களை புறந்தள்ளாதீர்கள். அது உங்களுக்கு சொல்லுகின்ற ஸத்யத்திலிருந்து தப்பிக்காதீர்கள்.

அது உங்களுக்கு உண்மையான, உங்கள் வாழ்க்கையை expand பண்ணுகின்ற ஆசை எது? உங்கள் வாழ்க்கையில் நீங்கள் avoid பண்ண வேண்டிய சூழ்நிலைகள் எது? என்று தெளிவாகக் காட்டும்.

பரபரப்பு இல்லாது உங்களுக்குள் நிகழும் ஆசையும், நடுக்கம் இல்லாது உங்களுக்குள் ஏற்படும் தெளிந்த எதிர்காலம் பற்றிய திசை முடிவு செய்தலும்...

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: பதற்றம் இல்லாத, இந்த temporary thrills-ஐ chase பண்ணுகின்ற அந்த anxiety இல்லாத ஆசைகள், நடுக்கம் தராத பயங்கள், இரண்டுமே இதயத்திலிருந்து வரும். உங்களுக்கு நல்லது மட்டும்தான் பண்ணும். இதயம் வந்து பயமுறுத்தி உங்களை நடுங்க வைக்காது. 'இது செய்ய வேண்டாம்ப்பா, இது செய்யவில்லை என்றால் நல்லது. இதைச் செய்தால் பிரச்சனை. நம்மால் எதிர்கொள்ள முடியாத பிரச்சனையாக இருக்கும்' என்று தெளிவாகக் காட்டும். நடுக்கம் தராத, அறிவோடு கூடிய 'தெளிவு'-ஆக' வரும். அதற்குப் பெயர் பயம் கிடையாது. நடுக்கம் தந்தாலே அது பயம்.

உடல் முழுவதும் ஐயா, emotions இந்த neuropeptides-ஆக travel பண்ணுவதும்... Neuropeptides என்றால் என்னவென்றால், chemical messengers created by emotion that travel throughout the body and stored in various organs - அதுதான் neuropeptides.

Chemical messengers created by emotions, that travel throughout the body and stored in various organs. அந்த மாதிரி அந்த chemical emotions> toxins, ஒரு பேரலையாக, சுனாமியாக பொங்கி எழுகின்ற எந்த emotion-னும், ஆசை, அச்சம், பயம், குற்றம் எல்லாமே பொய், bogus, டுபாக்கூர். கேட்காதீர்கள்.

சில comedy scenes-ல் சொல்லுவார்கள் தெரியுமா? ஒருவர் இன்னொருவரைப் பார்த்து warn பண்ணுவார். 'தப்பிச்சு ஓடிப் போயிரு, தப்பிச்சு ஓடிப் போயிரு, மாட்டிக்காத மாட்டிக்காத' என்று மாட்டிக்கொண்ட ஒருவர் warn பண்ணுவார்.

இங்கு ஆனால், தப்பித்துவிட்ட ஒருவன் சொல்கின்றேன், கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் உடல் முழுக்க கலக்குகின்றா மாதிரி, உடலையும் மனதையும் suffocate பண்ணுகின்ற மாதிரி, அதிர்ச்சி கொடுத்து பொங்கி, உடம்பு முழுக்கவும் பரவி organs-ல் store ஆகி, உங்களை அலைக்கழிக்கின்ற chemical messengers-ஆன neuropeptides-னுடன் சேர்ந்து பொங்குகின்ற அத்துனை emotion-னும் டுபாக்கூர். பொய். தப்பு. உண்மை இல்லை. தப்பித்துக்கொள்ளுங்கள், தப்பித்துக்கொள்ளுங்கள், தப்பித்துக்கொள்ளுங்கள்!

தப்பித்தவன் சொல்லுகின்றேன்.

Comedy scenes--ல் மாட்டியவன் சொல்லுவான்... 'தப்பிச்சிரு, தப்பிச்சிரு' என்று. இங்க தப்பித்தவன் சொல்லுகிறேன். தப்பித்துக்கொள்ளுங்கள், தப்பித்துக்கொள்ளுங்கள், தப்பித்துக்கொள்ளுங்கள்.

இந்த silence-ல் அமர்ந்து தினந்தோறும் பார்க்கும்பொழுது, repeated-ஆன fear patterns> repeated-ஆன anxieties, மற்றவர்களிடம் இருந்து inherit பண்ண பயங்கள், நம்பிக்கைகள்... இது எல்லாவற்றையும் கொஞ்சம் note பண்ணுங்கள்.

இந்த inherit பண்ணுகின்ற பயத்தை, 'அவங்களுக்கு அப்படி நடந்தது. நம்மளுக்கும் அப்படித்தான் நடக்கும்' என்று இந்த inherit பண்ணுகின்ற பயத்தை ருசிப்பது ஐயா, எப்படி அறுசுவை உணவிற்கு, நாக்கு அடிமையாய் போயிருக்கோ, அதே மாதிரி நவரச உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு மனம் அடிமையாகப் போய், பிரச்சினை வரப்போவதே இல்லை என்றால்கூட, அந்த பிரச்சினைகள் வந்ததாகவும், வருவதாகவும் அதை நாம் வென்று ஜெயிப்பதாகவும் அதை ருசிப்பது... ஒரு விதமான ரசிப்பதாகவும், புசிப்பதாகவும் மாறிவிடுகின்றது.

அந்த நவரச உணர்ச்சிக் கொந்தளிப்புகளை புசிப்பது, ருசிப்பது, ரசிப்பது... அதற்கே அடிமையாய் போய்விடுவது.

நன்றாக உங்கள் வாழ்க்கையை ஆழ்ந்து பார்த்தீர்களானால், உங்களுக்குத் தெரியும். உண்மையிலேயே பயமோ, கவலையோ, பிரச்சினையோ, எந்த பெரிய சங்கடமோ, challenge-ஓ வரப்போவதில்லை. ஆனால் வந்துவிட்டது மாதிரி யோசித்து, கற்பனை செய்து, அந்த கற்பனையினாலேயே அதை ஜெயித்துவிட்டால் நமக்கு ஒரு பெரிய திருப்தி மாதிரி…

அறுசுவைக்கு அடிமையான நாக்கைவிட, நவரச உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு அடிமையான மனம் மிகவும் ஆபத்தானது.

என் வாழ்க்கையில் நடந்த ஒரு சின்ன கதை சொல்கின்றேன். ஏற்கனவே இன்னொரு ஸத்ஸங்கத்தில் சொல்லி இருப்பேன், முன்னாடி ஒரு ஸத்ஸங்கத்தில் சொல்லியிருப்பேன். இப்பொழுது அதனுடைய அந்தக் கதையை வந்து, ஒரு சில நிமிடங்களில் சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்.

அந்த காலத்தில், இந்த TV deck எடுத்து வந்து போட்டுதான் வீட்டில் படம் பார்ப்பார்கள். ஏதாவது வீட்டில் திருவிழா, festival அல்லது ஊர் திருவிழா... இந்த மாதிரி காலங்களில்தான் அந்த TV deck-ஐ வாடகைக்கு எடுத்து வருவார்கள். எல்லா வீடுகளிலும் அப்பொழுதெல்லாம் TV இருக்காது அல்லது இந்த deck இருக்காது, cassette போட்டு பார்க்கின்ற அந்த deck எல்லாம் இருக்காது. இந்த திருவிழா காலங்களில் வாடகைக்கு எடுத்து வந்து போடுவார்கள். ஒருமுறை திருவண்ணாமலையில், அந்த மாதிரி ஒரு ஏதோ ஒரு திருவிழாவோ அல்லது வீட்டில் ஏதோ ஒரு function-ஓ festival-லோ. பொதுவாக இந்த சைவ வேளாளர்கள் வீடுகளில், எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது ஒரு festival நடக்கும். ஏனென்றால் large family - joint families. அதிலும் tight-knit families-ஆக இருப்பார்கள்.

முக்கியமாக நான் பிறந்து வளர்ந்த அந்த சூழ்நிலையை வர்ணிக்கிறேன். ஒரு நான்கு தெரு... யாரை எடுத்தாலும், அந்த வீட்டில் இருக்கின்ற நபர், குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு விதத்திலே எனக்கு உறவாக இருப்பார்! அதனால்தான் குழந்தைகள் எந்த வீட்டில் வேண்டுமானாலும் போய் விளையாடும். எந்த வீட்டில் வேண்டுமானாலும் போய் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும்.

இந்த சைவ வேளாளர் சமூகத்தில், சைவ வேளாளர் மட்டுமல்ல, எல்லா அந்த tight-knit family oriented சமூகங்கள் எல்லாவற்றிலுமே, ஒரு குழந்தையை சமூகமே சேர்ந்து வளர்க்கும். அது என்ன ஒரு அழகான வாழ்க்கைமுறை! தாய் தந்தையர் மட்டுமல்ல, அந்த குழந்தையை சமூகமே சேர்ந்து வளர்க்கும்.

சமூகமே சேர்ந்து அன்பு செலுத்தும். சமூகமே சேர்ந்து கண்டிக்கும். சமூகமே சேர்ந்து வழிகாட்டும். சமூகமே சேர்ந்து அந்த குழந்தையைப் பாதுகாக்கும். சமூகமே சேர்ந்து அந்த குழந்தைக்கு சொந்தம் கொண்டாடும்.

ஒரே ஒரு தாய்-தந்தையரால் வளர்க்கப்பட்ட குழந்தைகளைவிட, சமூகத்தால் வளர்க்கப்பட்ட குழந்தைகள், 'தலைவர்கள்' ஆகின்றார்கள். ஏனென்றால், பல பேரோடும் இனிமையான உறவு கொள்வதற்கானப் பழக்கத்தை அவர்கள் கற்றுக்கொள்கின்றார்கள். Inner space-ல் overwhelm ஆகாமல், multiple relationships-ஐ sweet-ஆக handle பண்ணுவதற்குக் கற்றக்கொள்கிறார்கள் ஐயா.

அதனால் ஆழ்ந்து கேளுங்கள்… சிறுவயதில் ஒருமுறை ஒரு திருவிழா. ஒரு வீட்டு function. Maybe அது… பொதுவாக நான் பிறந்து வளர்ந்தபொழுது, வீட்டுத் திருவிழாவும் கோவில் திருவிழாவும் வித்தியாசமே தெரியாது. ஏனென்றால், எது என்றாலும் எல்லோரும் ஒன்றாகக் கூடிவிடுவார்கள். அந்த joint families-ல் பார்த்தீர்களானால், இந்த tight-knit communities, tight-knit communities-ல் அந்த நான்கு தெருவுமே joint family-க்கு சமம்தான். யார் வீட்டில் எது நடந்தாலும் எல்லாருக்கும் தெரியும். யார் வீட்டில் என்ன முடிவெடுக்கப்பட்டாலும் அதில் எல்லோரும் ஈடுபடுவார்கள். நீங்கள் கூப்பிடாமல் எல்லாம் முடிவெடுத்துவிட முடியாது. தானாக வந்து உட்கார்ந்துவிடுவார்கள். 'என்ன? என்னை ஒன்றுமே கேட்கவே இல்லை. அப்புறம் எதுக்கு நான் இங்க இருக்கேன்?' என்று.

நிறைய குழந்தைகள் இருப்பார்கள், தொடர்ந்து இந்த பூப்புனித நீராட்டு விழாக்கள் நடக்கும், திருமணங்கள், குழந்தை பிறந்தால் பெயர் வைக்கின்ற அந்த சடங்கு. தொட்டில் போடுவது. இந்த மாதிரி தொடர்ந்து ஏதாவது ஒன்று நடந்துகொண்டே இருக்கும்.

அதனால், இந்த மாதிரி ஏதோ ஒரு festival-ல் நந்தனார் படம், திரைப்படம் கொண்டுவந்து திரையிட்டார்கள். எனக்கு அந்த நந்தனார் படத்தை, திரைப்படம் பார்த்து ஆஹா... கனிந்து உருகி... ஆனால் அதற்குப் பிறகு பெரிய புராணத்தை முழுதாக, original பெரிய புராணத்தை படித்தப் பிறகுதான் தெரிகிறது, அந்த நந்தனார் திரைக்கதையில் வருவது எதுவும்.. பல விஷயங்கள் பொய் என்று.

நீங்கள் எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும், நந்தனார் திரைப்படத்திலே காட்டுகின்ற, காட்டப்படுகின்ற அந்த ப்ரஹ்மண எஜமானர், உண்மையான original மூல பெரியபுராணத்தில் இல்லை! வில்லனே அங்கு இல்லை! எத்தனை பேருக்கு இது shock-காக இருக்கும் என்று தெரியாது. தயவுசெய்து கொஞ்சம் பெரியபுராணத்தை போய் புரட்டிப் பாருங்கள். நந்தனார் கதை புரியும்.

அந்த திரைப்படத்தை மட்டும் பார்த்துவிட்டு, இந்த 'ஜாதி, சமூக நீதி' என்று இந்த உருட்டெல்லாம் உருட்டிக்கொண்டிருக்காதீர்கள். அந்த கம்பெல்லாம் சுத்திக்கொண்டிருக்காதீர்கள். Original-ஆக சேக்கிழார் என்ன ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றாரோ, அந்த original historical document-ஐ புரட்டிப் பாருங்கள்.

Anyhow, நான் அந்த படத்தைப் பார்த்துட்டு, 'எனக்கு அப்படியே ஆஹா! நந்தனார் என்ன பாடுபட்டு சிதம்பரம் போனார்! நானும் சிதம்பரம் போக வேண்டும்!'

நான் எப்படி function-ஆனேன் என்று நான் அப்படியே சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். அந்த inherited belief.. Inherited belief-என்றால் என்னவென்றால், 'நந்தனார் சிதம்பரம் போவதற்கு அவ்வளவு பிரச்சினை வந்தது. அப்பொழுது நானும் சிதம்பரம் போக வேண்டும் என்று நினைத்தாலும், அவ்வளவு பிரச்சினைகள் வரப்போகிறது. நான் அதையெல்லாம் எதிர்கொண்டு, நந்தனார் மாதிரி கடும் தவம் செய்து, எல்லாத்தையும் எதிர்த்து, போராடி, சிதம்பரம் போய் நடராஜரை தர்ஶநம் பண்ணிடப் போறேன்' என்று முடிவு செய்துவிட்டேன்.

அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு, வேகம்... திருவண்ணாமலையில் நடராஜர் சன்னிதி, அருமையான ஒரு நடராஜர் சன்னிதி இருக்கிறது. இரண்டாம் ப்ரகாரத்திலே பெருமான், தாயார் ஶிவகாம ஸுந்தரியோடு எழுந்தருளியிருக்கிறார். முன்னாடி நால்வர் இருப்பார்கள்.

அங்கு போய் உட்கார்ந்துகொண்டு, 'அந்த நந்தனார் மாதிரி ஏக்கமும் பக்தியும் எனக்கு வரவேண்டும்... அது வந்தால்தான், நான் சிதம்பரம் போய், தில்லை சென்று தரிசிப்பதற்கு என்னென்ன தடை வருகிறதோ அதெல்லாம் நான் எதிர்கொள்ள முடியும்' என்று அங்கு சென்று அமர்ந்து நானே என்னை boost பண்ணிக்கொள்கின்றேன். Energy ஏற்றிக்கொள்கின்றேன்.

அந்த நடராஜர் சன்னிதில் அமர்ந்து, அப்படியே அந்த.. 'குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமின் சிரிப்பும், பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும், இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே...' என்று இன்னும் தேவாரம், திருவாசகம், சிதம்பரம் பற்றி என்னென்ன பாடல்கள் இருக்கிறதோ அதையெல்லாம் பாடி... 'பெரும்பற்றப் புலியூரானை பாடாத நாளெல்லாம் பிறவாத நாளே, பேசாத நாளெல்லாம் பிறவாத நாளே' என்று பாடி... அமர்ந்து சிந்தனை செய்து, பெருமானே, இந்த மாதிரி எல்லாம் என்ன தடை வந்தாலும், நந்தனார் மாதிரி அதெல்லாம் உடைத்துவிட்டு வந்து உங்களை நான் தர்ஶநம் பண்ணனும். சிதம்பரம் வந்து என்று எல்லாம் கேட்டுக்கொண்டு, பேசிக்கொண்டே, மனதில் சிந்தனை பண்ணிக்கொண்டே, அப்படியே over emotion-ஐ build up பண்ணிக்கொண்டே உட்கார்ந்து இருந்து கொஞ்ச நேரத்தில் தூங்கிவிட்டேன்!

தூங்கியது மட்டும் இல்லாமல், அந்த கோயில் சுவற்றில் சாய்ந்துகொண்டு தூங்கிவிட்டது, மட்டும் இல்லாமல், தூங்கின உடனே automatic-காக காலை நீட்டிக்கொண்டு தூங்கிவிட்டேன்.

அந்தப் பக்கமாக எங்கள் school teacher கோயிலுக்கு வந்திருக்கிறார். அவர் கால் மேலேயே ஒரு தரம் மிதிச்சி, 'ஏய், சாமிய பார்த்து கால் நீட்டிட்டு தூங்குற, கால மடக்குடா' என்றார். அந்த காலகட்டத்தில், திருவண்ணாமலை கோயில் ரொம்ப free-யாக இருக்கும். நிறைய இந்த மாதிரி எல்லா காலங்களிலும் மக்கள் இவ்வளவுபேர் இருக்கமாட்டார்கள். நாங்கள் அந்த ஊர் குடிகள், பழங்குடிகள் மட்டும் அண்ணாமலையாரை அனுபவித்துக் கொண்டிருந்த காலம்! 1980களைப்பற்றி நான் பேசுகின்றேன்! 1980-கள், Early 80'S.

அதில் இன்னொரு.. அந்த ஊரில் இன்னொரு நல்லது என்னவென்றால்… school teacher-ஐ கோவிலில் பார்ப்பீர்கள். எங்கு போனாலும் சரி உங்கள் school teacher-களை பார்ப்பீர்கள். ஏனென்றால் சின்ன ஊர். அவர்கள் எங்கு பார்த்தாலும் சுற்றிக்கொண்டிருப்பார்கள்! அவர் என் கால் மேலேயே மிதித்து, தூங்கற! தூங்கறது மட்டும் இல்லாமல் சாமிய பார்த்து கால் நீட்டிட்டு தூங்குற, கால மடக்குடா! என்றார். அப்பொழுதுதான் விழித்துக்கொண்டு, காலை மடக்கிக்கொண்டு, 'ஐயயோ தூங்கிட்டோமோ' என்று. சரி திரும்பவும் அந்த வெறி ஏற்றிக்கொண்டு...

முதலில் என்ன தடை சிதம்பரம் போவதற்கு? School-ல் permission வாங்க வேண்டும், leave கேட்க வேண்டும். ஐயோ, school-ல் போய் நாம leave கேட்டால் teacher, கொடுக்க மாட்டேன் என்று சொல்வார். கை நீட்டி பிரம்பால அடிப்பார்… அந்த நந்தனார் படத்துல வருது இல்லையா, 'ஆண்டே, ஆண்டே' என்று அந்த நந்தனார் வந்து, அந்த ப்ராஹ்மண எஜமானர் அடிப்பதை வாங்குகிறார் இல்லையா, அதே மாதிரி நாமும் நந்தனார் மாதிரியே ஶிவபெருமானை நினைத்துக்கொண்டு, நடராஜரை நினைத்துக்கொண்டு 'ஆண்டே, ஆண்டே' என்று சொல்லி அந்த அடியை வாங்கிவிட்டு, 'போயே தீருவேன்' என்று teacher-ரிடம் அடம்பிடித்து, teacher-ரிடம் என்னெவெல்லாம் dialogue பேச வேண்டும் என்பதை வேறு full dialogue ready பண்ணிக்கொண்டேன்.

அந்த நேரத்தில் கொஞ்சம் இந்த வேதாந்தம், சைவ ஸித்தாந்தம் எல்லாம் எனக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார்கள். என்னுடைய ஸிக்ஷா குரு, ஆச்சார்யர் பாண்டுரங்கனார் அவர்கள் வகுப்பெடுப்பார், தொடர்ந்து வகுப்பெடுப்பார். அந்த வகுப்பெல்லாம் கேட்டுக்கொண்டிருந்ததனால், அதெல்லாம் மனதில் தயார் செய்து வைத்துக்கொண்டேன்.

வைத்துக்கொண்டு, ஏன் சிதம்பரம் போக வேண்டும்? ஏன் தர்ஶநம் செய்ய வேண்டும்? தில்லை தர்ஶநத்தின் முக்கியத்துவம் என்ன? என்று இதையெல்லாத்தையும் தயார் செய்துகொண்டேன்.

அந்த teacher, நான் யாரிடம் போய் permission கேட்க வேண்டுமோ, அந்த teacher-ரும் சைவ வேளாளர். அதனால், என்னென்னவோ... என்னென்ன argument நான் பேசவேண்டுமோ... அவருக்கும் என்னுடைய பாட்டனார் மேல ரொம்ப மரியாதை உண்டு. என் பாட்டனார் வந்து அந்த குலபதி, குலத்துக்கு ஒரு பெரியவர், முன்னவர். ஒரு நன்மதிப்பைப் பெற்றவர். அதனால் என்னென்ன argument-லாம் அந்த teacher-ரிடம் சொல்ல வேண்டும் என்று full argument-ஐ ready பண்ணிக்கொண்டு, மெதுவாக class-க்கு போகிறேன்.

Late. Class-க்கு late. Class ஆரம்பித்துவிட்டது. Teacher குனிந்துகொண்டு attendance எடுத்துக்கொண்டிருக்கின்றார். நான் வெளியில் நின்றுகொண்டே இருக்கின்றேன். அவர் attendance எடுத்து முடித்துவிட்டு, நிமிர்ந்து பார்க்கின்றார்.

’’May I come in Sir? உள்ள வரலாமா சார்? என்றேன். அவர், ரொம்ப நெத்தியை சுருக்கி வியப்போடு பார்த்து, உள்ள வா" என்றார். என்ன வேண்டும், என்ன?" என்று கேட்டார்.

நான் உடனே, நான் தான் full argument-ஐ ready பண்ணி வைத்திருக்கின்றேன் அல்லவா, அதனால், சார், நான் சிதம்பரம் போகனும் சார். நந்தனார் படம் பார்த்தேன் சார். அதில் இருக்கின்ற மாதிரியே, நந்தனார் என்ன பாடுபட்டாலும் சிதம்பரம் போய் தர்ஶநம் பண்ணாரே சார். படாதபாடு பட்டிருக்கிறார், கஷ்டப்பட்டிருக்கின்றார். அதே மாதிரி, எப்பாடுபட்டாலும், என்ன பிரச்சனை வந்தாலும், நான் சிதம்பரம் போய் நடராஜரை தர்ஶநம் பண்ணனும் சார். அந்த நந்தனாரை அடித்த மாதிரி, நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் அடிங்க சார். நான் வாங்கிக்க தயாராக இருக்கேன். ஆனால் சிதம்பரம் போவதுக்கு permission கொடுங்க சார் என்றேன்.

கையை நீட்டிக்கொண்டு வேறு... Ready-யாக! மனதிற்குள் 'ஆண்டே, ஆண்டே' என்று சொல்வதற்கெல்லாம் அந்த mind voice ready ஆகிவிட்டது

அந்த teacher கோலை எடுத்து, அந்த காலத்தில் school-ல் எல்லாம் கோல் இருக்கும். கோல் எடுத்து கையில் அடிக்காமல் மண்டை மேலேயே ஒன்னு போட்டு, தரித்தரம் புடிச்ச நாயே, உன்னுடைய class teacher இப்ப வேற. நான் போன வருஷம் உன் teacher-டா" என்றார்.

அப்படியென்றால் என்ன அர்த்தம் என்றால், school ஆரம்பித்து 3 மாதமாக school -க்கே போகல! அதனால் என் class எது என்றே எனக்குத் தெரியாது! போன வருஷம் யார் teacher-ஓ, அந்த class -ல் போய் நின்றுகொண்டு இருக்கிறேன்.

அவர், போன வருஷமே உன்னை என் class-ல் இருந்து transfer பண்ணிட்டாங்கடா. Promotion ஆயி நீ வேற section டா, நான் உன் teacher இல்லடா" என்று மண்டை மேலேயே போட்டார்.

எனக்கு ஐயோ.. ச்சேய்! என்றாகிவிட்டது. ஏனென்றால், நான் ரொம்ப heroic-ஆக, argument எல்லாம் தயார் செய்துகொண்டு போனேன்! இப்படி மொத்தமும் fail ஆகிவிட்டதே, 'புஸ்'-ன்னு போய்விட்டதே - என்னடா இது?' என்றாகிவிட்டது.

ஒன்று, class மொத்தமும் சிரிக்கின்றார்கள். ஏனென்றால், நான் வந்து அங்கு ஒரு பெரிய hero-யிசத்தை demonstrate பண்ணுவதற்காக தயார் செய்துகொண்டு போகின்றேன். நான் படித்த சைவ ஸித்தாந்தம், வேதாந்தம்... நான் மரபுப்பாடம் கேட்டேன். ஸித்தாந்த ஶாஸ்த்ரம் வந்து திருவாவடுதுறை ஆதீனத்தினுடைய 14 புத்தகம், 14 நூல்கள். வேதாந்த ஶாஸ்த்ரம் வந்து கோவிலூர் மடத்தினுடைய 16 நூட்கள், நூல்கள். இதுதான் தமிழில் மரபுப்பாடம் என்று சொல்வார்கள். அதற்குப் பிறகு ஸம்ஸ்க்ரு'தத்தில், அது தனியாக ப்ரஸ்தானத்ரயம் - ஸ்ரீகண்ட பாஷ்யம் படித்தேன். படித்துக்கொண்டு இருந்தோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். மரபுப்பாடம் கேட்டேன்.

அதனால், நான் கேட்ட ஸித்தாந்த, வேதாந்த பாடங்களில் இருந்து எல்லாம், reference எடுத்துக்கொண்டு தயாராக போனால், வாத்தியார் மண்டை மேலேயே போட்டு, தரித்திரம் பிடித்த நாயே, நான் போன வருஷம் உன் teacher-டா. இந்த வருஷம் உன் class-ஏ வேறடா. போடா என்றார்.

மொத்த class-ம் சிரித்துவிட்டார்கள். அசிங்கமாக போச்சு! அப்பொழுதுதான் எனக்கே ஞாபகம் வருகிறது, '3 மாதமாக school-க்கே வரவில்லை'என்று. 'நான் படித்தேன், pass ஆனேன், certificate வாங்கினேன்' என்று சொல்லிக்கொள்ளலாமேத் தவிர, 'school-க்கு போனேன்' என்று சொல்லிக்கொள்ள முடியாது! அதுதான் உண்மை.

ஒரு வழியாக இது மொத்தமும் fail ஆகிவிட்டது. மொத்த plan-னும் fail ஆகிவிட்டதனால், திரும்ப வந்துவிட்டேன். திரும்ப வந்துவிட்டு, என்னடா இது? எந்த பிரச்சினையுமே இல்லையா? அதாவது 'சிதம்பரம் போக வேண்டும்' என்கின்ற அந்த நோக்கத்தைவிட, பிரச்சினைகள் வந்து, அதை ருசித்து, ரசித்து, அதற்குத் தீர்வு காண்பது, இந்த நவரச உணர்ச்சிக் கொந்தளிப்புகளின்... அதன்மீது இருக்கின்ற ரசனை அதிகமாக இருந்திருக்கின்றது.

இந்த நிகழ்ச்சியை, இப்பொழுது பார்க்கும்பொழுதுதான் எனக்கே புரிகிறது ஐயா. 'ஆஹா... எதன் மீது நமக்கு ரசனை அதிகமாக இருக்கிறது' என்று. அதற்குப் பிறகு என்ன பண்ணேன், அப்பவும் விடவில்லை. 'கட்டாயம் பிரச்சினை வரும். வராமல் எப்படி போகும்? ஏதாவது ஒன்று இருக்கும். நான் பார், அதை எப்படி தீர்க்கிறேன் பார், நந்தனார் மாதிரி நின்னு தீர்க்கிறேன் பார்!'

அட, நந்தனாருக்கு நிஜமாவே பிரச்சினை வந்தது - தீர்த்தார். இங்கு, 'எனக்கு வந்தே தீரும்' என்பது, inherited belief!

கடைசியில், தாத்தாவிடம் போய் நின்றேன். என்னுடைய பாட்டனார் தான் practical-லாக என்னை வளர்த்தவர். எல்லாரையும்விட, தந்தை, தாய்... எல்லாரையும்விட, தாயாருடைய தகப்பன் -பாட்டனார், அவர்தான் என்ன வளர்த்தவர். அவரிடம் போய் நின்றேன்.

அவரிடம் சென்று, தாத்தா, சிதம்பரம் போகனும் என்றேன். நான் ready-யாக இருந்தேன் வேறு. அதாவது, அவர் ஏதாவது சொல்லுவார், நாம் அதை argue பண்ணனும். அதெல்லாம் ready-யாக இருந்தேன்.

அவர் ஒரே வார்த்தையில், அவருடைய கூடவே அவருடைய business partner... அவர்களும் family-ஏ தான். அதுதான் இந்த சைவ வேளாளர் குடும்பங்களில் இருக்கின்ற ஒன்று, பக்கத்து வீட்டுக்காரரே நண்பராக இருப்பார், family business partner-ராக இருப்பார். Family-யினுடைய multiple விதங்களில் relative-ஆக இருப்பார். நாம் எதாவது ஒரு business பண்ணால், அதனுடைய customer-ஆக இருப்பார். இந்தமாதிரி எல்லாமே அந்த 4-5 தெருக்களுக்குள் மொத்த வாழ்க்கையும் முடிந்துவிடும் . அந்த மாதிரி tight-knit family.

அவரைப் பார்த்து… ஏய் சங்கரு, நமக்கு சிதம்பரத்துல மடம் இருக்கு பாரு..' அதாவது சிதம்பரத்தில் சைவ வேளாளர்களுக்கு ஒரு மடம் இருந்தது. அதுமட்டுமில்லாமல், நம் relatives-ம், உறவினர்களும் அங்கு இருந்திருக்கிறார்கள். அதனால் என் பாட்டனார் அவரிடம், அந்த மாமாவிற்கு phone பண்ணி, பையனை வந்து கூட்டிட்டு போய், கூட்டிட்டு வந்துரச் சொல்லுப்பா. பாதுகாப்பா, safe-ஆக போய்விட்டு வரட்டும்ப்பா. மடத்திலும் தங்க வைத்து, கோவிலையும் தர்ஶநம் பண்ண வைத்து, மடத்தையும் பாத்துவிட்டு, கூட்டிட்டு வந்து விடச் சொல்லுப்பா என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார்.

அந்த காலத்தில் trunk call book பண்ணி பேச வேண்டும். STD கிடையாது. Trunk book பண்ணி பேசி arrange பண்ணிடுப்பா என்று முடித்துவிட்டார்.

எனக்கு 'புஸ்'-ன்னு போயிருச்சு. ஏனென்றால், நான் வந்து சிதம்பரத்தை விடவும், நந்தனார் எதிர்கொண்ட பிரச்சினைகளைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் முகத்தில் அப்படியே 'புஸ்'-ன்னு போயிருச்சு. ஏமாற்றம்... ஏமாந்துவிட்டேன்.

தாத்தா குனிந்து கணக்கு எழுதிக்கொண்டிருந்தார், நிமிர்ந்து பார்த்துவிட்டு, என் முகத்தில் இருக்கின்ற ஏமாற்றத்தை, ஏமாந்து இருக்கின்ற அந்த face-ஐ பார்த்துவிட்டு, ஏன்டா கண்ணா என்ன? நீ போகனும்-னு கேட்ட, போய்விட்டு வா என்று சொன்னேன். வேறென்ன, வேறென்ன பிரச்சனை? என்று கேட்டார்.

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை!

நான், இல்லை தாத்தா, நீ வேண்டாம் என்று சொல்லுவ, அதுக்கெல்லாம் என்னென்ன காரணம் எல்லாம் சொல்லலாம், என்னென்னலாம் சொல்லி உன்னை நான் பணிய வைக்க வேண்டும். நான் உன்கிட்ட இருந்து அனுமதி வாங்க வேண்டும் என்று ரொம்ப தயார் பண்ணிக்கொண்டு வந்தேன். நீ இப்படி ஒரே வார்த்தையில் சொல்லிட்டயே? என்றேன்.

அவர் ரொம்ப casual-லாக, பைத்தியம், நீ நேத்து நந்தனார் படம் பார்த்தாய் என்று எனக்குத் தெரியும். இன்னைக்கு வந்து கேட்பாய் என்று தெரியும். நான் ரெடியாகத்தான் இருந்தேன். போ, போ! இப்பொழுது நீ சொல்வதையெல்லாம் கேட்பதற்கு எனக்கு time இல்லை. கிளம்பு, கிளம்பு என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார்!

அதற்குப் பிறகு சிதம்பரம் அழைத்துச் சென்றார்கள். போய் பெருமானை தர்ஶநம் பண்ணேன். மடத்துக்கும் போயிருந்து அங்கேயும் இருந்துவிட்டு, தங்கிவிட்டு, எல்லாம் தர்ஶநம் பண்ணிவிட்டு திரும்ப வந்தேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த மொத்த கதையிலிருந்தும் நான் புரிந்துகொண்டது, உங்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், பெரும்பாலான நேரங்களில், பெரும்பாலான என்றால், 99.99999% of the நேரங்களில், நாம் வெற்றியை விடவும், success-ஐ விடவும், result- ஐ விடவும், இந்த நவரச உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு அடிமையாகிப் போய் இருப்பதனால், பல நேரத்தில் இல்லாத பிரச்சினைகளை, பேயைப் போல மனதுக்குள்ளே உருவாக்கிப் பார்த்து, 'அதைத் தீர்க்க வேண்டும்' என்கின்ற போராட்டங்களை உருவாக்கி, கண் காணாத கற்பனை சிறையில் காலத்தையும், ஶக்தியையும், பணத்தையும், உணர்வையும், உணர்ச்சிகளையும் வீணடித்துக் கொண்டிருக்கின்றோம். இதுதான் உண்மை. இந்த ஸத்யத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

மொத்தம் பத்து ஸத்யங்களை சொல்வதற்காக எடுத்து வைத்திருக்கின்றேன். தொகுத்து வைத்திருக்கின்றேன். இன்று இரண்டுதான் சொல்லி முடித்திருக்கின்றேன். அடுத்தடுத்தவைகளை அடுத்தடுத்த ஸத்ஸங்கங்களில் காண்போம்.

நவரச உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு அடிமையாகாமல், உங்களை விடுபடுத்திக் கொண்டு, குறிக்கோளை பற்றி மட்டுமே, குறிக்கோளை நோக்கியே உங்கள் வாழ்வை இயக்குங்கள்.

அப்பர் பெருமான் சொல்கிறார் இல்லையா, 'குறிக்கோள் இலாது கெட்டேன்' என்று. அவர் கெடவில்லை, நமக்குச் சொல்லிக் கொடுக்கின்றார். அதுமாதிரி குறிக்கோள் இலாது கெடாது, ஸத்யத்தை அடைந்து, புதிய வாழ்க்கை, 2026-ல் புதிய வாழ்க்கையைத் துவங்குவோம்.

புதிய வருடம் அல்ல, புதிய வாழ்க்கையைத் துவங்குவோம்!

நீங்கள் எல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள்.







Event Photos

Photo 1 Photo 2 Photo 3
Photo 4 Photo 5 Photo 6
Photo 7 Photo 8 Photo 9
Photo 10 Photo 11 Photo 12
Photo 13 Photo 14 Photo 15
Photo 16 Photo 17 Photo 18
Photo 19 Photo 20 Photo 21
Photo 22 Photo 23 Photo 24
Photo 25 Photo 26 Photo 27
Photo 28 Photo 29 Photo 30
Photo 31 Photo 32 Photo 33
Photo 34 Photo 35 Photo 36
Photo 37 Photo 38 Photo 39
Photo 40 Photo 41