20 ஏப்ரல் 2008 பத்திரிகை செய்தி

From Kailasapedia
Revision as of 05:42, 29 November 2020 by Ma.Akshaya (talk | contribs) (Created page with "==<big>வெளியீடு</big>== தினகரன், தினமணி, தினத்தந்தி, தினமலர் === நிகழ்வு === '''...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

வெளியீடு

தினகரன், தினமணி, தினத்தந்தி, தினமலர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :நித்யானந்த தியானபீடம், திருவண்ணாமலை ஸ்தாபனம் மற்றும் 1008 லிங்கங்கள் பிரதிஷ்டை

நாள் :20 ஏப்ரல் 2008

தலைப்பு : நித்யானந்தர் தியானபீ்டம் சார்பில் திருவண்ணாமலை 1008 லிங்கம் பிரதிஷ்டை, எம்.எல்.ஏக்கள் பங்கேற்பு - திரைப்பட இயக்குனர் விசு அவர்களுக்கு ஆசிர்வாதம், மனதை ஒருநிலைப்படுத்தும் சக்தி தியானத்திற்கு உண்டு - திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நித்யானந்த பீடத்தின் கல்வெட்டை திறந்து வைக்கிறார், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நித்யானந்த பீடத்தில் 1008 லிங்கங்கள் பிரதிஷ்டை

"19 ஏப்ரல் 2008 அன்று பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் திருவண்ணாமலையில் நித்யானந்த தியானபீடத்தை ஸ்தாபனம் செய்து அன்றிலிருந்து ஆன்மிக சேவைகள் துவங்கி வைக்கப்பட்டதாக பிரகடனம் செய்தார்.

கிரிவலப்பாதையில் ஆதீனத்தை தொடங்க முடிவெடுத்து 15 நாட்களில் அடிப்படை ஏற்பாடுகள் செய்யப்பட்டு 1008 லிங்க பிரதிஷ்டை நிறைவடைந்துள்ளது.

21 அடி உயரம் அமையவுள்ள மிகப்பெரிய அளவிலான லிங்கத்திற்கான ஆரம்ப கட்ட பூஜை தொடங்கியது. நவபாஷாணங்கள் மற்றும் 1008 மூலிகைகளால் இந்த லிங்கம் உருவதாக்கப்பட உள்ளது. நவக்கிரக மரங்களோடு கூடிய நவகிரக பிரதிஷ்டை விழாவும், 108 ஜீவ சக்தி லிங்கங்கள், தங்கம், வெள்ளி, ஸ்படிகம் போன்ற 108 சிறப்பு சக்தி பொருட்களால் செய்யப்படும் 108 லிங்க பிரதிஷ்டைக்கான பூர்வாங்க பூஜையும் நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக திருவண்ணாமலை எம்.எல்.ஏ திரு கு. பிச்சாண்டி அவர்கள், வேலூர் எம்.எல்.ஏ. திரு. ஞானசேகரன் அவர்கள், திருவண்ணாமலை நகராட்சி தலைவர் திரு. இரா.ஶீதரன் அவர்கள், அண்ணாமலையார் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் தனுசு அவர்கள், திரைப்பட இயக்குனர் திரு. விசு அவர்கள், ஶீ சேஷாத்திரி ஆஸ்ரமத்தலைவர் முத்து குமாரசுவாமி அவர்கள், அறங்காவலர் மணிவர்மா, வேலூர் டி.கே.எம் கல்லூரி தலைவர் தி. சிவக்குமார் அவர்கள், தொழிலதிபர் பானு நயினார் அவர்கள், வழக்கறிஞர் பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்."

20 ஏப்ரல் 2008

20 ஏப்ரல் 2008 -பத்திரிகை செய்தி