மதத்தாக்குதல்: மூல லிங்கம் மூலவர் லிங்கம் சர்ச்சை- வெளிவராத உண்மை

From Kailasapedia
Revision as of 14:45, 12 April 2021 by Ma.divya (talk | contribs) (→‎நிகழ்வின் விவரனை)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

மதத்தாக்குதல் (Persecution)

வருடம்  : 2019

நாள் : 19 செப்டம்பர் 2019

நடத்தப்பட்ட மதத்தாக்குதல் - அதற்கு சொல்லப்பட்ட காரணம் : மேட்டூர் அணையின் நீர் தேக்கப்பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான மூல லிங்கத்தை கடத்தியதாக பதியப்பட்ட பொய் புகாரின் பெயரில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் மீது F.I.R பதிவு செய்யப்பட்டது.

மதத் தாக்குதல் எங்கு நிகழ்ந்தது : சேலத்தில் ஒரு நபர் தந்த பொய் புகாரின் பெயரில் மதத்தாக்குதல் ஆரம்பமானது.

எவ்வகையில் எல்லாம் மதத்தாக்குதல் நடத்தப்பட்டது : அனைத்து ஊடகங்களும் பகவான் சிலை கடத்துவதாக செய்திகளை வெளியிட்டது.

மதத்தாக்குதலை நடத்தியவர்கள் யார்? : இந்து விரோத ஊடகங்கள்

எவ்வளவு பேர் மதத்தாக்குதலில் ஈடுபட்டார்கள் : தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இந்து விரோத ஊடகங்களும் ஒன்று சேர்ந்து தாக்குதல் நடத்தியது.

மதத்தாக்குதல் நடத்தியவர்களின் பிண்ணனி - அரசியல் பலம், அதிகார பலம், பண பலம், அரசாங்க பலம், மீடியா பலம் : இந்து விரோத ஊடகங்கள்

எவ்வளவு நேரம் மதத்தாக்குதல் நீடித்தது : ஒரு வாரத்திற்கு மேலாக இந்த செய்தியை தொடரந்து ஊடகங்கள் விவாதித்து வந்தது.

மதத்தாக்குதல் நடத்தியவர்களின் நோக்கம் : இந்து மதத்திற்கு பங்களிக்கும் தலைவர்களுக்கு தொடர் தொந்தரவு தந்து அவர்களின் பங்களிப்பை நிறுத்துவது.

தாக்கப்பட்டவர்கள் யார்? : சனாதன இந்து தர்மத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் உலகளாவிய சங்கமும் - பக்தர்களும்

நிகழ்ந்த பாதிப்புகள் : சிவ தீட்சையும், ஸ்படிகத்தாலான ஆத்ம லிங்கமும் அளித்து விஷேச தீட்சையும் அளித்து - சிவ பூஜை செய்வதற்கான பூஜை பொருட்களை தந்து, அதற்கான மந்திர உச்சாடன பயிற்சி, புத்தகங்கள் - அனைத்தும் இலவசமாக அளித்து, அதை கற்றுக் கொள்ளும் வரை உணவும், இடமும் தந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சிவ பூஜை செய்வதற்கு உத்வேகம் அளிக்கும் ஜெகத்குரு பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களை அவதூறு செய்ததால் சீடர்களுக்குள் ஏற்பட்ட மனப்பாதிப்பு.

தீட்சை பெற்ற லட்சக்கணக்கான பக்தர்களும், சீடர்களும் தினந்தோறும் பகவானின் வழிகாட்டுதல்படி ஒரே இடத்தில் அமர்ந்து சிவ பூஜையும், குரு பூஜையும் செய்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களின் பிண்ணனி : பகவானால் சிவ தீட்சை பெற்று பயனடைந்த சீடர்கள்

நடந்தவற்றை மறைத்து அவதூறாக திரித்து வெளியிடப்பட்ட செய்திகள் மற்றும் அதன் பிண்ணனியும் : பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் உலகம் முழுவதும் சைவ கோயில்களை நிர்மாணித்து வருகிறார். தமிழ்நாட்டில் இருந்து உலகம் முழுவதும் சைவத்தை வேளாண்மை செய்யும் ஒரே குரு பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் ஆவார். இத்தகைய இந்துமதத்தின் ஜெகத்குரு இதுவரை இந்து மதத்திற்கு ஆற்றிய பங்களிப்புகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அவரை ஒரு சிலையை கடத்தினார் என்று அவதூறு சொல்லியது இந்து விரோத ஊடகங்களின் குரூரமான புத்தியை வெளிக்கொணர்கிறது.

அழிக்கப்பட்ட அடையாளம் ( Ethnocide) - குணப்பண்புகளை படுகொலை செய்தல் ( Character Assassination ) : இந்து மதத்தின் பிரதிநிதிகள் மீதான நம்பிக்கையை தொடர்ந்து சீர்குலைப்பது இந்து மதத்திற்கு நடக்கும் பொருளாதார இழப்பை காட்டிலும் பாதகமான கலாச்சார சீரழிவாகும், இது பல தலைமுறைகளை பாதிக்கு பேரிழப்பு.

வெளிவராத உண்மை : இந்த புகாரை விசாரணை செய்த அதிகாரிகள் - ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் சோதனை செய்து மூல லிங்கம் அங்கே பல வருடங்களாக இருக்கிறது என்று உறுதி செய்து, அதை பொய் வழக்கு என்று அறிக்கை தெரிவித்தனர். ஆனால் அதற்குள் தவறான செய்திகள் இணையம் முழுவதும் பெருமளவில் அவதூறாக பேசிவிட்டு, பகவான் தானே ஒரு சர்ச்சையை கிளப்பியதாக பழி சுமத்தியது.

இன்றைய நிலை : சுமத்தப்பட்ட பொய் வழக்கு நிராகரிக்கப்பட்டதைப் பற்றி எந்த ஊடகமும் ஒளிபரப்பவில்லை.

பதிவு செய்யப்பட்ட புகார்களின் விபரம் ( பதிவு செய்யப்பட்ட நாள், பதிவு செய்யப்பட்ட காவல் நிலையம், பதிவு செய்தவர், பதிவான குற்ற பிரிவுகள் ) : கொளத்தூரை அடுத்த பாலவாடி என்ற கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 26) என்பவர் 28 செப்டம்பர் 2019 தேதி கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று கொடுத்தார்.


புகாரில் உள்ள செய்தி : "மேட்டூர் அணையின் நீர் தேக்கப்பகுதியான பண்ணவாடியில் இருந்த சிவன் கோவில் தற்போது புனரமைக்கப்பட்டு பாலவாடி கிராமத்தில் ஜலகண்டேஸ்வரர் கோவிலாக உள்ளது.

எனவே இந்த கோவிலுக்கு சொந்தமான மூல லிங்கம் தன்னிடம் இருப்பதாக சாமியார் நித்யானந்தா வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்து அந்த மூல லிங்கத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் சக்திவேல் புகாரின் பேரில் நேற்று சாமியார் நித்யானந்தா மீது கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்"


மதத்தாக்குதல்


நிகழ்வின் விவரணை

கடந்த சில தினங்களுக்கு முன்பு சில தமிழ் தொலைக்காட்சிகள் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் தமிழ் தியான சத்சங்கத்தில், அவர் தன் பூர்வஜென்மத்தில் எழுப்பிய மேட்டூர் சிவாலயத்தின் மூல லிங்கம் – என்று அவர் சொன்னதை, அதன் ஆன்மீக மொழியின் உண்மையான அர்த்தம் புரியாமல் தவறாக வெளியிட்டிருக்கிறர்கள். அவர்களுக்கு அதன் உண்மையான அர்த்தத்தை இந்த வீடியோவில் பரமஹம்ஸர் அவர்கள் விளக்கியருளியிருக்கின்றார்கள். “பூசலார் நாயனார் தன்னுடைய மனத்திற்குள்ளே சிவாலயம் அமைப்பதற்கான மூல லிங்கத்தை அமைக்கிறார். நன்றாக புரிந்துகொள்ளுங்கள்… மூல லிங்கம் என்றால்… என்னவென்றால்… சக்தி மண்டலத்தாலே பாலாலயமாக தங்கள் உயிருக்குள்ளே பிராணபிரதிஷ்டை செய்வதற்காக அமைப்பதுதான் மூலலிங்கம். மூலவர் லிங்கம் வேறு…மூல லிங்கம் வேறு… மூலவர் லிங்கம் என்றால் ஸ்தூலமாக இருக்கும். கருங்கல்லாலோ… அல்லது… பல்வேறுவிதமான…. தங்கத்தாலோ… வெள்ளி யாலோ… மரத்தாலோ… எந்த பொருளால் வேண்டுமானாலும் செய்யப்பட்டு…ஸ்தூலமாக செய்து வைக்கப்பட்டிருக்கின்ற லிங்கம் மூலவர் லிங்கம். மூல லிங்கம் என்றால்… தன்னுடைய உயிராலே, தியானத்தாலே, சக்தி மண்டலத்தாலோ உருவாக்குவது மூல லிங்கம். நான் மேட்டூரில் போன ஜென்மத்தில் அமைத்த ஆலயத்தின் மூல லிங்கம் என்னிடம் உள்ளது என்று சொன்னது அந்த சக்தி மண்டலம் … மூலவர் லிங்கமான ஸ்தூல லிங்கம் இன்னும் அந்த கோயிலுக்குள்தான் இருக்கிறது. நான் சென்று அந்த கோயிலை பார்த்தபோது, அது ஏற்கனவே மூழ்கிவிட்டிருந்தது. தண்ணீர் வடிந்திருந்தபோதுகூட சேறும், சகதியும் சேர்ந்து மூழ்கிவிட்டது. கருவறைக்குள் போக முடியாது யாரும் அப்போ… என்னாலேயே போக முடியவில்லை… தூரத்திலிருந்து பார்த்து ப்போட்டோ வீடியோ எடுத்து வந்துவிட்டோமே தவிர…நான் மூல லிங்கம் என்று சொன்னது…சக்தி மண்டலத்தை… அந்த இடத்தில் பிராண பிரதிஷ்டை செய்வதற்கான சக்தி மண்டலத்தை போன பிறவியில் நான்தான் உருவாக்கினேன்… இப்போது அந்த சக்தி மண்டலம் என்னிடம் இருக்கிறது என்று சொன்னேன்… ஸ்தூலமான மூலவர் லிங்கம் கிடையாது… இந்த வார்த்தை இரண்டையும் புரிந்து கொள்ளுங்கள்… மூல லிங்கம் வேறு… மூலவர் லிங்கம் வேறு… மூலவர் லிங்கம் என்பது பிசிக்கலாக (Physical) பிரதிஷ்டை பண்ணப்படுகிற லிங்கம். மூல லிங்கம் என்பது அங்கு பிராண பிரதிஷ்டை பண்ணப்படுகிற ஞான சக்தி மண்டலம்.”

மதத்தாக்குதல்_சாஸ்திர பிரமாணம்

அசுர இயல்பு கொண்ட ஜீவன்கள் இந்த பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கின்ற சக்தி என்பதோ அல்லது அறிவாற்றல் என்பதோ இல்லை என்று தெரிவிக்கின்றார்கள். இந்த முழுபடைப்பும் சிற்றின்பத்தாலும் ஆசைகளினாலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று நினைக்கின்றார்கள்.

ஏதாம் த்ரு'ஷ்டிமவஷ்டப்ய நஷ்டாத்மாநோsல்பபுத்தய: |

ப்ரபவந்த்யுக்ரகர்மாண: க்ஷயாய ஜகதோsஹிதா: || 16.9

படைப்பைப் பற்றிய இவ்வுலகாயதக் கருத்தைக் கொண்டவர்கள், குறைந்த பட்டறிவுடன் கூடிய தாழ்ந்த ஆன்மாக்கள், தங்களையே தொலைத்தவர்கள், கொடூரமான செயல்களை செய்பவர்கள் இவர்கள் உலகத்தின் அழிவிற்கான செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

- பகவத்கீதை ( தெய்வாஸூர சம்பத் விபாக யோகம், 16 ஆம் அத்தியாயம் 9 வது ஸ்லோகம்)

இந்த ராக்ஷதர்கள் தங்கள் மூடத்தனத்தால் தர்மத்தை அழிப்பது மட்டுமல்லாது, தர்மத்தை ரக்ஷிப்பவர்களையும் அழிக்க முயல்கிறார்கள்.

தர்மேவ ஹதோ ஹன்த தர்மோ ரக்ஷதி ரக்ஷித: |

தஸ்மாத்தர்மோ ந ஹன்தவ்யோ மா நோ தர்மோ ஹதோவதீத ||

யாரெல்லாம் பிரபஞ்சத்தின் விதியான தர்மத்தை அழிக்க நினைக்கின்றார்களோ, அவர்களும் அதனாலேயே அழிகிறார்கள். யார் தர்மத்தை காக்கின்றார்களோ, அவர்களை தர்மம் காக்கின்றது. எனவே தர்மத்தை அழிக்க முயலாதீர்கள்.

- மனு ஸ்மிருதி 8.15

தர்மமே தர்ம ரக்ஷகர்களை காப்பாற்றுகிறது. ராக்ஷதர்களை அழிக்கிறது.

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் மீது நடத்தப்பட்ட மதத் தாக்குதல் இந்த நூற்றாண்டிலே நடத்தப்பட்ட மிகக் கொடுமையான மதத்தாக்குதல் ஆகும். அத்தனை தாக்குதல்களையும் பரம்பொருள் பரமசிவனின் அருளால் தாக்குப்பிடித்து, திருப்பித் தாக்குதல் நடத்தாமல் அஹிம்சையுடன் வாழ்ந்து, தம் சங்கத்தையும் பகவான் அஹிம்சையுடன் வாழச் செய்கிறார்.

அஹிம்சையின் உருவகமாக வாழ்ந்து உலகை வழிநடத்துகிறார் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்.

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு புத்தன், சங்கரனில் துவங்கி வாழையடி வாழையென எல்லா மதங்களிலும், எல்லா இனங்களிலும் உலகின் பல்வேறு மூளைகளிலும் தோன்றிய குருமார்கள், அவர்களைப் புரிந்து கொள்ள முடியாத மக்களால் தாக்கப்பட்டாலும், விஷம் கொடுக்கப்பட்டாலும், விரட்டியடிக்கப்பட்டாலும், கல்லால் அடிக்கப்பட்டாலும், உடலாலும் மனதாலும் தாக்குப்பிடிக்க முடியாத தொல்லைகளால் தாக்கப்பட்டாலும், யானையால் இடறப்பட்டாலும், மீராவையும், பிரகலாதனையும் போல் உறவினர்களாலேயே கொடுமைப்படுத்தப்பட்டாலும், உலகில் இருக்கும் எல்லாவித கொடுமைகளும் அவர்களுக்கு இழைக்கப்பட்டாலும், சிறையிலிடப்பட்டாலும் தங்களின் ஜீவன் முக்தியின் ஸ்திரத்தன்மை மாறாது மனித குலத்தை அடுத்த உயர் நிலைக்கு அழைத்து செல்கிறார்கள்.

அதேபோன்ற தாக்குதல்களை பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் எதிர்கொண்டாலும், மொத்த உயிர்களின் மேன்மைக்காக... பூமியில் உயர் உயிர் விழிப்பு நடைபெறுவதற்காக... மொத்த மனித குலத்தையும் அடுத்த உயர் உயிர் நிலைக்கு வழிநடத்திச் செல்கிறார். அதில் மாபெரும் வெற்றியடைந்துள்ளார்."