Difference between revisions of "April 17 2013"
Ma.mythreyi (talk | contribs) (April 17 2013) |
Ma.mythreyi (talk | contribs) (April 17 2013) |
||
| Line 515: | Line 515: | ||
File:20130417_Photo_1240_1MTiiisv-W15Xj3Xia_NP_JTHn4aMxIEC.JPG | File:20130417_Photo_1240_1MTiiisv-W15Xj3Xia_NP_JTHn4aMxIEC.JPG | ||
</gallery> | </gallery> | ||
| − | [[Category: 2013 | 20130417]][[Category:Auto Uploaded Images]][[Category:Auto Uploaded Images]] | + | ==Photos Of The Day:== |
| + | |||
| + | ===<center>Pada-Puja</center>=== | ||
| + | |||
| + | |||
| + | <gallery mode=packed-hover heights=300px widths=200px> | ||
| + | File:20130417_Photo_1000_18TZh_5UQQ8xhPizBdvtgXN-EZhWu7Ar7.JPG | ||
| + | File:20130417_Photo_1001_1An0ozxnMywnhtI0raa57Wz3qDvcIKID8.JPG | ||
| + | File:20130417_Photo_1002_1cYhpO_4bzzjV-bjx1-j8OTad4LTiVTSN.JPG | ||
| + | File:20130417_Photo_1003_18l6gX2edjgt1kedVrH2eeRwus5EoU5hn.JPG | ||
| + | File:20130417_Photo_1004_1nbK3ioLqBO4UXww7fKFnMFb9TppgRHqq.JPG | ||
| + | File:20130417_Photo_1005_1aCuP5dALBsRtuV4-9vA2kwUSbw_LERSq.JPG | ||
| + | File:20130417_Photo_1006_1g9ByrNMIYvw1hVpGVpoSQ-io0xJgqqRl.JPG | ||
| + | </gallery> | ||
| + | ===<center>Morning-Satsang</center>=== | ||
| + | |||
| + | |||
| + | <gallery mode=packed-hover heights=300px widths=200px> | ||
| + | File:20130417_Photo_1007_1WoENEbuJLvWMj77muFboKDenlp1pjnDx.JPG | ||
| + | File:20130417_Photo_1008_1VIQ3R_gMUbY59M-VLYjUq-uS1YGhXv4F.JPG | ||
| + | </gallery> | ||
| + | [[Category: 2013 | 20130417]][[Category:Auto Uploaded Images]][[Category:Auto Uploaded Images]][[Category:Auto Uploaded Images]] | ||
Revision as of 19:17, 25 April 2021
Title:
பொறுப்பெடுத்தல்
Link to Video:
| Video | Audio |
Transcript
உங்கள் அனைவரையும் வணங்கி வரவேங்கின்றேன்..
இன்று இந்த நான்கு தத்துவங்களின் விளக்கத்தையும் சாரத்தையும் தொடர்ந்து உங்களோடு பகிர்ந்துகொள்ளுகின்றேன்.. இன்று பெங்களுரு தியானபீடத்திலும் மீனாட்சி திருமணத்தின் சித்திரைத் திருவிழா நான்காவது நாள் நடந்துகொண்டிருக்கின்றது. நான்காம் நாள் திருவிழாவில் அன்னை மீனாட்சி உங்கள் எல்லோருக்கும் மயூர வாகனத்தில் அருள்பாலிக்கின்றாள். சத்சங்கத்திற்குள் நுழைவோம்,.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்..
நான்கு தத்துவங்களில் மூன்றாவது தத்துவம்.. பொறுப்பு. முதல் தத்துவம் மெய்மை - எனப்படும் சம்புர்த்தி, இரண்டாவது தத்துவம் சிரத்தை, மூன்றாவது தத்தவம் பொறுப்பெடுத்தல். ஆழந்து புரிந்துகொள்ளுங்கள்.. பொறுப்பெடுத்தல் அப்படீன்னா என்ன? நம்மைச் சுற்றி வௌியிலும், நமக்குள்ளும் நம்மை சுற்றி நடக்கின்ற எல்லாவற்றிற்கும் ஆதிமூல காரணம் நாமே என்று உணர்ந்து நம்மைச் சுற்றி நடப்பவைகளுக்கும், நமக்கு உள் நடப்பவைகளுக்கும் நாமே பொறுப்பு என்று உணர்ந்து அந்த உணர்விலிருந்தே சிந்தித்தல் பேசுதல், செயல்படுதல் இயங்குதல்.
ஆழந்து புரிந்துகொள்ளுங்கள். நமக்கெல்லாம் வருகின்ற ஒரு பெரிய கேள்வி நாமே எப்படி எல்லாத்துக்கும் பொறுப்பாக முடியும்? தன்னுடைய செயலுக்குகூட பொறுப்பெடுக்காமல் வாழ்பவன் சுழ்நிலைகளுக்கு அடிமையாகவே வாழ்ந்து அழிந்து போகின்றான்.. வாழ்ந்து என்கிற் வாழ்க்கைககூட தவறானது, இருந்து அழிந்து போகின்றான். நம்முடைய தன்னுடைய செயலுக்குகூட தான் பொறுப்பு என்று நினைக்காமல் தட்டிக்கழிக்கின்ற மனிதன் கடைசிவரை சுழ்நிலைக்கும் மனிதர்களுக்கும் அடிமையாகவே இருந்து, இருந்து ஒழிகின்றான். தன்னுடைய செயலுக்குகூட தான் பொறுப்பு என்று நினைக்கின்ற மனிதன் மனித நிலைக்கு உயர்கின்றான். தான் நேரடியாக செய்யாவிட்டாலும் தன் வாழ்க்கையை பாத்திக்கிறது என்றால் அவை அனைத்திற்கும் தானே பொறுப்பு என்று பொறுப்பெடுப்பவன் தலைவனாகின்றான். ஆழந்து புரிந்துகொள்ளுங்கள், தலைவனாகின்றார்.
ஆழந்து நீங்கள் உணர வேண்டிய சத்தியம்.. உங்களுடைய செயல்களுக்குகூட நீங்கள் பொறுப்பில்லை என்று நினைக்கும்பொழுது, சுழ்நிலையின் அடிமைகளாக பலகீனர்களாகவே இருந்து அழிகின்றீர்கள். உங்கள் செயலுக்கு நீங்கள் பொறுப்பு என்று நினைக்கும்பொழுது, மனித நிலைக்கு உயர்கின்றீர்கள். நீங்கள் செய்யாவிட்டாலும் உங்கள் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கிறது என்றால் அதை மாற்றுவதற்குப் பொறுப்பெடுக்கும்பொழுதுதான் நீங்கள் தலைவனாகின்றீர்கள்.
உதாரணத்திற்கு சொல்ல வெண்டுமென்றால், என் மீது நடந்த பல்வேறு தாக்குதல்கள் அவதூறுகளுக்குக் காரணம், தமிழ்நாட்டிலே வேறுன்றி இருக்கின்ற நாத்திகப் பிரச்சாரம். உண்மையான பகுத்தறிவு இல்லாத நாத்திகப் பிரச்சாரம். அதைப் பரப்பினது நான் இல்லை. நான் பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே பரவிடுச்சி ஆனால் அது என் வாழ்க்கையை பாதிக்கும்பொழுது, அதற்கு நான் பொறுப்பெடுக்கும்பொழுதுதான் நான் தலைவனாக மாறுகின்றேன்.
அதற்கு நான் பொறுப்பு என்று நினைக்கும்பொழுதுதான் அதிலிருந்து மக்களை நெறிப்படுத்தி உண்மையான பகுத்தறிவை அவர்களுக்கு உணர வைப்பதற்கான பொறுப்பை நான் எடுக்கின்றேன் அதற்கான செயலை நாம் செய்ய முடியும். அதை நோக்கி நம்முடைய சிந்தனை ஓடத்துவங்கும். ஆழந்து இந்த சத்தியத்தை உள்வாங்குங்கள்..
பொறுப்பு நம்முடைய சிந்தனை ஓட்டத்தை அகலமாக்குகின்றது, உணர்வுத் தன்மையை ஆழமாக்குகின்றது. தோளின் வலிமையை அதிகமாக்குகின்றது. விவேகானந்தர் மிக அழகாகச் சொல்கின்றார் ‘பொறுக்பெடுக்க, பொறுப்பெடுக்க அதைச் சுமப்பதற்கு உங்கள் தோளின் வலிமையும் அதிகரிக்கின்றது’ பொறுப்பை சுமக்கத் துவங்கத் துவங்க சுமக்கும் தோளின் வலிமையும் அதிகரிக்கின்றது. உண்மையின் உள் சென்று வாழ்க்கையின் ஆழத்தைப் பார்த்தீர்களானால், பொறுப்பெடுத்த மனிதர்கள் மட்டும்தான் எந்தத்துறையானாலும் தலைவர்களாக மாறியிருக்கிறார்கள்.
சுற்றி எது நடந்தாலும் நாம் பொறுப்பு என்று உணரும்பொழுதுதான் நாம் பொறுப்பு என்று உணரும்பொழுதுதான், சுழ்நிலையை மாற்றவதற்கான நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களின் போக்கை மாற்றுவதற்கான தௌிவுகூட நம் மனதிலே மலரத்துவங்குகின்றது. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.. நமக்கு உள்ளும் நமக்கு வௌியிலும் நடபெறும் எல்லா நிகழ்வுகளுக்கும் நாமே பொறுப்பு என்கின்ற உணர்விலிருந்தெ சிந்தித்தல், செயல்படுதல், இயங்குதல், நம்மைச் சுற்றி இருப்பவர்களை இயங்க வைத்தல். இதைதான் பொறுப்பு என்கின்ற வார்த்தைக்கான விளக்காம அளிக்கின்றேன்.



