புத்தகங்கள் (தமிழ்) - பகவத்கீதை - விளக்கவுரை ( அத்தியாயம் 1 முதல் 18 வரை )

From Kailasapedia
Jump to navigation Jump to search

புத்தகங்கள் (தமிழ்) -பகவத்கீதை - விளக்கவுரை ( அத்தியாயம் 1 முதல் 18 வரை )


புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2018-ஆகஸ்ட்

பதிப்பு :இரண்டாம் பதிப்பு

வெளியீடு :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

பிரதிகள் :1000 பிரதிகள்

பக்கங்கள் :758

ISBN எண்கள் :ISBN: 978-1-60607-191-5

பதிப்பகத்தார் :நித்யானந்த பல்கலைக்கழகம் ( Nithyananda University - NU )

மொழி :தமிழ்


புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

""பகவத்கீதை 18 அத்தியாயத்தில் ...

என்றென்றும் வாழும் மஹாபாரதம், ஸம்ஸ்க்ருத உச்சரிப்பு முறை, பூர்ணத்வம், உங்கள் தடுமாற்றங்களுக்கான தீர்வு, மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான தீர்வு, உங்கள் வாழ்வை வவளமாக்கும் தீர்வு, உங்கள் கர்மங்களைக் கரைப்பதற்கான தீர்வு, உங்களின் எல்லாப் பரிமாணங்களிலும் ஒளிர்வதற்கான தீர்வு, உங்களின் தடைகளை எல்லாம் தகர்ப்பததாற்கான தீர்வு, உங்களை உயர்த்திடும் உன்னதத் தீர்வு, மரணபயத்தை வெல்வதற்கான தீர்வு, உங்களை அறிந்து கொள்வதற்கான தீர்வு, உங்களின் சுதந்திரத்திற்கான தீர்வு, துக்கங்களை துறப்பதற்கான தீர்வு, உங்கள் வாழ்வை முழுமையாக்கும் தீர்வு, குறையுணர்வுகளைக் களைவதற்கான தீர்வு, மூலமனப்பாங்குகளை நிறைவு செய்வதற்கான தீர்வு, வளப்படுத்துதலை உங்கள் வாழ்க்கை முறையாக்குவதற்கான தீர்வு, நீங்கள் ஜீவன் முக்தராவதற்கான தீர்வு, உங்கள் வாழ்வு விரிவடைவதற்கான தீர்வு, உங்களைக் கிருஷ்ணராக்கும் தீர்வு என 18 அத்தியாயங்களிலும் ஒவ்வொன்றாக முறையே வழங்கியுள்ளார்.""


புத்தகத்தின் சாரம்

"அர்ஜுனன் என்பவர் வாழ்ந்த தனிமனிதர் மட்டும் அல்ல... உங்களுக்குள் வாழ்கின்ற தனிமனித நிலையுங்கூட! தனிமனித நிலையிலிருந்து கடவுள் நிலைக்குத் தங்களை உயர்த்திக் கொள்ள விரும்பும் அனைவரும் அர்ஜுனன்களே! பகவத்கீதை என் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை, அளித்திட்ட ஆன்மபலத்தை, உணர்வு உருமாற்றத்தை விளக்கவும், நன்றி சொல்லவும் வார்த்தைள் இல்லை. உணர்வால் வழிபடுகிறேன்.

உங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மஹாபாரத யுத்தமே! உங்கள் வாழ்வென்னும் யுத்தத்தின் உண்மையான வெற்றி என்பது, தர்மத்தின் வெற்றி என்பது... உங்களுடைய சுபாவமான ஜீவன்முக்த நிலையை மனத்தின் குறையுணர்வு நிலையான அதர்மத்திடமிருந்து மீட்டெடுப்பதே. உங்களிடமிருந்து நான் கேட்பது இந்த ஒன்றை மட்டும் தான்... உங்களுக்குள் நிகழும் தீட்சையை சிரத்தையோடு வாழுங்கள்.

- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்"

- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்




பகவத்கீதை - விளக்கவுரை ( அத்தியாயம் 1 முதல் 18 வரை ) (BHAGAVADH GEETHAI-CHAPTER 1-18)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1R1FTls8GIdPh2idl51QsGERwsPtclQ5b/view?usp=sharing