25 செப்டம்பர் 2006 பத்திரிகை செய்தி

From Kailasapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

தினத்தந்தி, தமிழ்சுடர், தினகரன், தினமணி, தினமலர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம்: திருவண்ணாமலையில் ஆனந்த ரதோற்சவம் துவக்க விழா - கோடிக் கண்கள் தரிசிக்கும் தென்னக யாத்திரை துவக்க விழா - கார்த்திகை தீபத்திருவிழா பந்தகால் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் பந்தகாலை நட்டார்.

நாள்: 25 செப்டம்பர் 2006

தலைப்பு: திருவண்ணாமலையில் ஆனந்த ரதோற்சவம் துவக்க விழா - கோடிக் கண்கள் தரிசிக்கும் தென்னக யாத்திரை துவக்க விழா மற்றும் - கார்த்திகை தீபத்திருவிழா பந்தகால் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் பந்தகாலை நட்டார்.

"திருவண்ணாமலையில் ஆனந்த ரதோற்சவம் துவக்க விழா - 24 செப்டம்பர் 2006 - கோடிக் கண்கள் தரிசிக்கும் தென்னக யாத்திரை துவக்க விழா - கார்த்திகை தீபத்திருவிழா பந்தகால் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் பந்தகாலை நட்டார்.

ஆனந்த ரதோற்சவம் துவக்க விழா:

அருள்மிகு ஆனந்தேஷ்வரியுடனாகிய ஆனந்தேஷ்வரர் சிலை தியான ரதத்தில் அமர்ந்து தென்னகம் முழுவதும் பயணம் செய்து பெங்களூரு, பிடதி ஆஸ்ரமத்தில் கற்மண்டபத்துடன் அமையும் திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதன் துவக்க விழா திருவண்ணாமலையில் 24 செப்டம்பர் 2006 அன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு இறைவனின் அருளையும் பரமஹம்ஸ நித்யானந்தரின் ஆனந்தத்தையும் பெற்றனர்.

விழா நடைபெற்ற நாள்: 24 செப்டம்பர் 2006, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 8 மணி
இடம்: அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில், பெரிய கோபுரம் முன்பு

ஆனந்த ரதோற்சவத்தை துவக்கி வைத்தவர்: பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள்.

குறிப்பு:
காலை 8 மணிக்கு ரதோற்சவத்தை பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் துவக்கி வைக்க திருக்கோயில் மாட வீதியை சுற்றி ஆனந்த ரதோற்சவம் ஊர்வலம் நிகழ்ந்தது.

மாலை 5 மணிக்கு ஆனந்த ரதோற்சவ கிரிவலம் சுற்றி வருதல் துவங்கியது.

அனைவரும் தரிசனம் செய்ய தமிழகம் முழுவதும் யாத்திரை நிகழ்த்தப்படும். ராசிபுரம், சேலம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 300 தியானபீட கிளைகளுக்கு ரதம் செல்கிறது. டிசம்பர் 20, 2006 அன்று ரதம் பிடதி, பெங்களூரு சென்றடைகிறது.

கார்த்திகை தீபத்திருவிழா பந்தகால் விழா:

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் தீபத்திருவிழா பூர்வாங்க பணிகள் தொடங்க பந்தகால் முகூர்த்தம் நடந்தது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று கார்த்திகை தீப விழாவாகும். இவ்விழா கொடியேற்றத்துடன் 10 நாட்கள் நடைபெறும். பத்தாவது நாள் காலை கோயிலில் பரணி தீபமும், மாலையில் மலைமீது மகாதீபமும் ஏற்றப்படும். கார்த்திகை தீபவிழா நவம்பர் 24, 2006 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி டிசம்பர் 3, 2006 ஞாயிற்றுக்கிழமை மலைத்தீபம் ஏற்றத்துடன் முடிகிறது. இந்தாண்டு ( 2006) தொடங்கும் தீப விழாவிற்கான பூர்வாங்க பணிகளான வாகனங்கள், பழுது பார்த்தல், வர்ணம் பூசுதல், மராமத்து பணிகள், பத்திரிகை அச்சடித்தல், தேர் பராமரிப்பு பணிகளை தொடங்குவதற்கு கோயிலில் பிரார்த்தனை நடத்தும் பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து பந்தகால் சம்பந்த விநாயகர் சந்நிதியில் பிரார்த்தனை வலம் வந்து ராஜகோபுரம் முன்பு காலை 6.50 மணிக்கு நடப்பட்டது.

பந்தகால் நடும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் பந்தகாலை நட்டார்.

கோயில் துணை ஆணையர் திரு ஜெயராமன் அவர்கள், இளவரசு பட்டம் தியாகராஜ குருக்கள் அவர்கள், மாவட்ட அறங்காவல் குழு முன்னாள் தலைவர் பன்னீர் செல்வம் அவர்கள், முன்னாள் அறங்காவலர் பாஷ்யம் அவர்கள், இந்து முண்ணனி மாவட்ட தலைவர் வக்கீல் சங்கர் அவர்கள், விசுவ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் சக்திவேல் அவர்கள், பாரதீய ஜனதா குணசேகரன் அவர்கள், எக்ஸ்னோரா மாநில செயலாளர் இந்திர ராஜன் அவர்கள், போர் மன்னன் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்."

25 செப்டம்பர் 2006

25 செப்டம்பர் 2006 -பத்திரிகை செய்தி