27 நவம்பர் 2018 பத்திரிகை செய்தி

From Kailasapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

சுவாசம் செய்திகள்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிக தொடர்: தொடர் வெற்றிக்கு வழிக்காட்டும் கட்டுரை

நாள் :27 நவம்பர் 2018

தலைப்பு : நீங்களும் வெற்றியாளர்களே 3: தொடர் வெற்றிக்கு வழி…

"சுவாசம் செய்திகள் என்ற வார இதழில் 27 நவம்பர் 2018 அன்று ‘நீங்களும் வெற்றியாளர்களே 3: தொடர் வெற்றிக்கு வழி…’ என்ற தலைப்பில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய சத்சங்கத்தில் இருந்து தொகுக்கப்பட்ட கட்டுரை வெளியாகி உள்ளது.

இக்கட்டுரையில் தொடர் வெற்றிக்கு வழி நடத்தி செல்லும் செயல்முறைகள் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களால் அருளப்பட்டுள்ளது. நமது வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடிக்கும் பொழுதே அதை வாழத் துவங்கிவிடுகின்றோம். அதற்கான நுட்பமுறை இங்கு வழங்கப்பட்டுள்ளது.

புத்தகத்தில் உள்ள ஒரு பக்கத்தை இரு பாகங்களாக பிரித்து கொள்ளுங்கள். முதலாவது பாகத்தில் வாழ்க்கையில் விரும்பியது நடந்த போது கற்றுக் கொண்ட பாடம் மற்றும் நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள் என்பதை அலசி ஆராய்ந்து எழுதுங்கள். மறு பக்கத்தில் ‘தற்செயலான வெற்றி’ நிகழ்ந்தபொழுது கற்றுக்கொண்ட பாடம் மற்றும் வகுத்துக் கொண்ட திட்டங்களும் செயல்திறங்களையும் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிட்டு ஆராயும் பொழுது நாம் வெற்றியை பற்றி உருவாக்கிய மனப்பாங்கை புரிந்து கொள்ள முடியும். தொடர் வெற்றிக்கு நோக்கத்தில் மட்டுமே மாற்றம் தேவை - அதாவது ‘எப்படியாயினும் நான் வெற்றியடைவேன்’ என்ற ஆற்றலை தரும் தெளிவு."

27 நவம்பர் 2018

27 நவம்பர் 2018 -பத்திரிகை செய்தி