July 19 2022

From Kailasapedia
Jump to navigation Jump to search

Title

Practicing Samadhi: The Most Powerful Solution to All Problems | Nithyananda Satsang | 19 Jul 2022

Video

Transcript

19 JULY 2022, TUESDAY (IST) 8:30 PM IST - 10:41 PM IST THE SPH APPEARANCE. SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM. 8:39 PM IST TO 9:15 PM IST - ENGLISH NITHYANANDA SATSANG I WELCOME EVERYONE SITTING WITH US ALL OVER THE WORLD WITH MY LOVE AND BLESSING PARAMASHIVA'S MESSAGE DIRECTLY FROM MAHAKAILASA:

  • PRACTICE SAMADHI, ENRICH THE WORLD WITH SAMADHI.
  • WHETHER THE INDIVIDUAL PROBLEMS YOU ARE FACING, YOUR PERSONAL HEALTH RELATED ISSUES, OR THE WHOLE WORLD RELATED ISSUES, OR WHETHER YOU ARE FACING YOUR PERSONAL ECONOMIC PROBLEMS OR THE WORLD HEALTH CRISIS, YOUR PERSONAL RELATIONSHIP ISSUES OR RELATIONSHIP BETWEEN COUNTRIES, FOR EVERYTHING PRACTISING SAMADHI IS THE MOST POWERFUL SOLUTION.
  • WHEN YOU PRACTICE SAMADHI, EVERYTHING IN YOUR CONTROL BECOMES CONSCIOUS POWERFUL RIGHT AND BEST FOR YOU AND FOR THE WORLD
  • I WILL GIVE YOU AN EXAMPLE:

IF YOU START PRACTISING SAMADHI, YOUR HEALTH WILL BECOME BEST AND ALL THE PEOPLE WHO ARE UNDER YOU.

  • FOR EXAMPLE, IF YOU ARE HEADING A FAMILY, ALL THE PEOPLE WHO ARE UNDER YOU, YOU WILL MAKE SURE THEY ARE ALL HEALTHY
  • IF YOU PRACTICE SAMADHI YOU WILL KEEP YOUR RELATIONSHIP WITH YOU BEST AND EVERYONE AROUND YOU AND UNDER YOU, THEIR RELATIONSHIPS BEST.
  • IF YOU PRACTICE SAMADHI, YOU WILL KEEP YOURSELF HIGHLY CONSCIOUS.
  • UNCONSCIOUS BLIND SPOTS RESPONSIBLE FOR ALMOST ALL THE PROBLEMS IN OUR LIFE WILL BE ELIMINATED.
  • IF THE DECISION MAKERS OF THE WORLD START PRACTISING SAMADHI, NOT ONLY THEIR PEOPLE WILL BE PEACEFUL, WORLD WILL BECOME PEACEFUL.
  • I AM NOT SELLING DREAMS OF UTOPIA. I AM GIVING YOU THE PLAN FOR UTOPIA.
  • ELABORATELY I HAVE SPOKEN ABOUT HOW TO PRACTICE NIRVIKALPA SAMADHI UNCLUTCHING. ALL THE VIDEOS I AM PUTTING ON A LINK, IF YOU GO TO THIS LINK YOU WILL GET 50 VIDEOS IN VARIOUS LANGUAGES.
  • PRACTICE JUST 21 MINUTES A DAY THAT IS ENOUGH I AM NOT ASKING YOU MORE THAN THAT.
  • BHAGAWAN REDDY, YOU ARE ASKING YOU WANT TO WATCH MOVIES BECAUSE YOU HAVE COVID. WATCH ALL MY SATSANGS, YOU WILL GET OUT OF COVID.
  • IN BUDDHISM THERE IS A PRACTICE, WHEN YOU FALL SICK USE THE TIME FOR PRACTISING SPIRITUALITY. DON'T WASTE THE TIME IN OTHER THINGS. BHAGAWAN REDDY DO THE SAME. YOU WILL BE HEALED AND BECOME MORE ENERGETIC AND INTENSE.
  • LET ME TELL YOU OPENLY, THE GLOBAL HUMAN POPULATION IS MORE THAN 7 BILLION. UN HAS ALREADY ANNOUNCED WE ARE GOING TO BECOME 8 BILLION BY COMING NOVEMBER.
  • ACTUALLY WE HUMAN BEINGS, AS A MODERN SOCIETY WE HAVE ALREADY REACHED A LEVEL WHERE WE CAN PROVIDE FOOD, CLOTHES, SHELTER, MEDICAL CARE FOR ALL 8 BILLION PEOPLE.
  • WE HAVE ALREADY REACHED THAT STATE, TECHNOLOGY, INFRASTRUCTURE , EVERYTHING FOR FULFILMENT IN BASIC NEEDS TO SHARE WITH ALL 8 BILLION PEOPLE.
  • BUT UNFORTUNATELY OUR DECISION MAKERS HAVE NOT REACHED THAT CONSCIOUS LEVEL THAT WE SHOULD PROVIDE BASIC NEEDS FOR ALL 8 MILLION PEOPLE.
  • REALLY WE LACK ONLY IN CONSCIOUSNESS, NOTHING ELSE.
  • THE SURVIVAL NEED FOR THE 8 BILLION POPULATION ON PLANET EARTH IS NOT FOOD. WE HAVE REACHED THE TECHNOLOGY AND METHODOLOGY TO PROVIDE FOOD HOUSING FOR ALL 8 BILLION PEOPLE
  • ONE SIDE HOMES FORECLOSURE AND HOMES ARE JUST LOCKED WITHOUT PEOPLE, OTHER SIDE MILLIONS HOMELESS.
  • ONE SIDE TONS OF FOOD GETTING WASTED AND DESTROYED TO MAINTAIN, THE PRICE OTHER SIDE MILLIONS DYING WITHOUT FOOD.
  • ACTUALLY HUMANITY HAS REACHED A LEVEL WE HAVE EVOLVED ENOUGH TECH TO PROVIDE FOOD, CLOTHES, SHELTER, MEDICAL CARE, ALL THE FUNDAMENTAL BASIC NEEDS FOR ALL 8 BILLION PEOPLE.
  • MILLIONS OF TONS CLOTHES USED ONLY ONCE IS DUMPED INTO OCEAN BECAUSE PEOPLE DON’T KNOW WHAT TO DO WITH IT.
  • IN MANY GROWN EVOLVED RICH DEVELOPED COUNTRIES MILLIONS OF TONS OF CLOTH USED ONLY ONCE IS BEING DUMPED INTO OCEAN.
  • I HAVE DECIDED KAILASA IS GOING TO PICK UP A PROJECT - ISHANYA
  • IF YOU SEE, PARAMASHIVA’S WHOLE LIFE IS RECYCLING.
  • FIRST SEE WHERE HE LIVES - IN SAMSHANA, THE LAND EVERYONE HAS GIVEN UP.

HIS JEWELLERY IS RUDRAKSHA, LOW COST. WHO ARE HIS SERVANTS? BHUTA GANAS. HE RECYCLES THEM AND KEEPS THEM WITH HIM. HIS VEHICLE? OLD BULL NANDI. NO ONE HAS USE FOR IT.

  • EVERYTHING PARAMASHIVA USES, IF YOU SEE, IS RECYCLED PRODUCT. HE IS THE SYMBOL OF RECYCLING AND REUSING.
  • I AM STARTING A PROJECT:

COLLECTING THESE THINGS WHICH ARE GETTING DUMPED AND WASTED, WHICH IS IN TURN BECOMING HAZARD TO NATURE, AND DISTRIBUTING TO COUNTRIES TO THE PEOPLE FOR WHOM IT IS A GREAT BOON. JUST RECYCLING AND REUSING.

  • EVEN IF WE START PUTTING OUR CONSCIOUSNESS IN THAT DIRECTION, WE WILL GET MILLIONS OF PEOPLE OUT OF POVERTY.
  • THE FOOD WHICH IS DUMPED, IF IT IS TAKEN, PROCESSED AND DISTRIBUTED TO THOSE WHO DON'T HAVE FOOD, MILLIONS WILL COME OUT OF POVERTY.
  • IN MANY DEVELOPED COUNTRIES LIKE USA AND CANADA, MANY MEDICAL EQUIPMENT THEY USE ONLY FOR 1 OR 2 YEARS AND THEN THEY DISCARD IT.
  • THOSE MEDICAL EQUIPMENTS CAN BE GREATLY USEFUL IN OTHER COUNTRIES FOR NEXT 10 YEARS. IT’S NOT THAT WITHIN ONE YEAR THOSE MEDICAL EQUIPMENTS BECOMES USELESS, BUT SOMEHOW THEY KEEP THEIR STANDARD OF USING ONLY FOR ONE YEAR.
  • IF WE JUST FOCUS ON THIS RECYCLING, MILLIONS OF PEOPLE CAN BE BROUGHT OUT OF POVERTY.
  • SECOND, IF THE DECISION MAKERS ARE GIVEN SAMADHI PRACTICE AND THEY FEEL LESS INSECURE, THEY WILL KEEP THE CURRENCY CURRENT.
  • IF THE CURRENCY IS KEPT CURRENT, THERE WILL NOT BE ECONOMIC CRISIS. ALL ECONOMIC CRISIS IS INSECURITY DEVELOPED IN MINDS OF DECISION MAKERS OF THE WORLD.
  • MANY COUNTRY HEADS, WHEN THEY START FEELING INSECURE, THEY START HOARDING. NATURALLY LESS DEVELOPED COUNTRIES PLUNGE INTO POVERTY CAUSING ECONOMIC CRISIS AND ALL OTHER PROBLEMS.
  • SAME WAY, THIS RUSSIA UKRAINE WAR IS NOT AFFECTING ONLY RUSSIANS AND UKRAINIANS. AT LEAST 50 COUNTRIES WHO ARE IN NO WAY INVOLVED IN THIS WAR, WHO HAVE NOT MADE ANY DECISION FOR THIS WAR, ARE SUFFERING.
  • AT LEAST 1 BILLION PEOPLE ALL OVER THE WORLD WILL BE PUSHED BELOW POVERTY LINE BECAUSE OF RUSSIA UKRAINE WAR AND ITS RIPPLE EFFECTS.
  • NOT JUST SRI LANKA ALONE, THERE ARE MANY COUNTRIES IN THAT LINE.
  • ALL THESE PROBLEMS CAN BE CLEARED, AVOIDED, SOLVED, PREVENTED BY THE DECISION MAKERS PRACTISING SAMADHI AND FEELING LESS INSECURE.
  • I REQUEST ALL OF YOU, WATCH THESE SATSANGS WHERE I AM GIVING ELABORATE EXPLANATION AND INITIATION INTO SAMADHI PRACTICE, AND YOU PRACTICE BY YOURSELF EVERYDAY FOR 21 MINUTES, THEN SHARE WITH AS MANY PEOPLE AS POSSIBLE.
  • YOU CAN SHARE DIGITALLY ITSELF, YOU DON'T EVEN NEED TO MEET FACE TO FACE. IF YOU CAN MEET, GREAT. IF NOT, SHARE DIGITALLY ASK YOUR FRIENDS OR CONTACTS TO WATCH THE SATSANG AND AFTER THEY WATCH, CLEAR THEIR DOUBTS AND ENCOURAGE THEM TO PRACTICE SAMADHI.

tiny.cc/unclutching

  • PLEASE GO TO THE LINK AND ENRICH THE WORLD TO PRACTICE SAMADHI
  • THIS CHATURMASYA, 4 MONTHS, I SINCERELY RECOMMEND THE WHOLE KAILASA WORKS TOWARDS MAKING 1 CRORE PEOPLE PRACTICE SAMADHI.
  • LET US ALL DECIDE FROM TODAY, WE WILL ALL START SHARING AT LEAST 1000 PEOPLE PER DAY DIGITALLY. DIGITALLY SHARING IS TOO EASY.
  • IN FACEBOOK ITSELF YOU WILL BE HAVING 5000 FRIENDS, SHARE AND ASK ALL OF THEM TO WATCH. AND THEN CLARIFY THEIR DOUBTS
  • AND ENCOURAGE THEM TO PRACTICE NEXT DAY AND ASK THEM TO START SHARING WITH OTHERS.
  • THIS CHATURMASYA LET US REACH ONE CRORE PEOPLE.
  • RAJESH CHANDRA MOHAN, I AM HAPPY TO SEE MEENAKSHI. BLESSINGS TO MEENAKSHI. SHE IS RECOGNIZING ME. SHE IS ONLY FEW MONTHS OLD BUT SHE IS ABLE TO RECOGNIZE WHEN SHE SEES ME AND…
  • SO MY REQUEST IS LET US WORK ON MAKING 1 CRORE PEOPLE ALL OVER THE WORLD PRACTICE SAMADHI THIS CHATURMASYA.
  • SECOND LET US ENTER INTO THIS ISHANYA PROJECT VERY SINCERELY. ALL THE DEVELOPED COUNTRIES KAILASAS, YOU START GETTING ALL THESE MEDICAL EQUIPMENTS, USED CLOTHES AND WHERE THE UNDERDEVELOPED COUNTRIES WHERE THE NEED IS, THOSE COUNTRIES’ KAILASAS PLEASE SHARE YOUR REQUIREMENTS.
  • THE CHANNEL WITH WHICH IT WILL DISTRIBUTE, KAILASA WILL SPONSOR THE TRANSPORTATION EXPENSES.
  • DR PETER BLOOMFIELD, MANMOHAN KUMAR, AND IN CANADA- DR NIRMALA YOU ALL CAN FORM A TEAM AND START COLLECTING AND THE COUNTRIES IN NEED PLEASE SEND AN EMAIL TO KAILASA.ORG.
  • WE WILL FACILITATE THIS AND PROVIDE YOU ALL WITH WHATEVER MEDICAL EQUIP YOU NEED FOR YOUR HOSPITALS, SAME WAY FOR CLOTHES.
  • I HAVE SEEN SOME REPORTS-SINGAPORE ALONE DUMPS MILLIONS OF TONS OF ONLY ONCE USED CLOTHES.
  • IF THAT CAN BE COLLECTED INSTEAD OF GETTING DUMPED INTO OCEAN OR BURNT AND DISTRIBUTE TO COUNTRIES WHERE THEY NEED. IT WILL BE A GREAT SERVICE.
  • SAME WAY FOOD. IF ALL KAILASA PUTS THEIR ATTENTION ON RECYCLING, IN THIS CHATURMASYA ALONE, WE WILL BE ABLE TO BRING 1 CRORE PEOPLE OUT OF POVERTY.
  • THIS WILL BECOME BEST SERVICE KAILASA CAN EVER DO BECAUSE WE HAVE INFRASTRUCTURE SPREAD ACROSS 140 COUNTRIES, WE HAVE LEGITIMATE BODY.
  • AND ALL OF YOU SHOULD KNOW WITH PARAMASHIVA’S GRACE, FROM 1994 TILL NOW ALMOST 27-28 YEARS ME AND ALL OF YOU, WE ALL WORKED SO HARD AND NOW WE HAVE LEGALLY REGISTERED LEGITIMATE BODIES IN 140 COUNTRIES.
  • IN 118 COUNTRIES WE HAVE A CHARITY STATUS. IN MANY COUNTRIES, NOT ONLY WE CAN BE RECEIVING AGENT, WE CAN ALSO DISTRIBUTE IT.
  • LET US USE THIS WHOLE INFRASTRUCTURE. THIS CHATURMASYA LET US PLAN TO GET 1 CRORE PEOPLE OUT OF POVERTY.
  • 1 CRORE PEOPLE SHOULD PRACTICE SAMADHI. 1 CRORE PEOPLE SHOULD BE PULLED OUT OF POVERTY.
  • THIS CHATURMASYA LET US DEDICATE IT TO THIS PROJECT CALLED ISHANYA.
  • LET US WORK ON SERVING THE SOCIETY THROUGH THIS RECYCLING METHODS.
  • IF WE CONCENTRATE ON THIS RECYCLING AND REUSING, WE WILL DO SO MUCH GOOD TO THE WORLD.
  • WE HAVE MILLIONS OF PEOPLE VOLUNTEERING FOR US. WE JUST NEED TO FOCUS ON THIS 4 MONTHS CHATURMASYA.
  • THE FOCUS IS 1 CRORE PEOPLE SHOULD PRACTICE SAMADHI, 1 CRORE PEOPLE SHOULD BE PULLED OUT OF POVERTY.
  • I HAVE 21 NEW PROJECTS TO CELEBRATE OUR UPGRADED NEW BEGINNING.
  • MANY PEOPLE WHO ARE WATCHING THE LIVE SATSANG ARE MESSAGING, ‘PLEASE SPEAK IN TAMIL’. LAST SATSANG ON GURU PURNIMA DAY, I SPOKE 90% IN ENGLISH AND 10% IN TAMIL. TODAY I WILL DO 10% IN ENGLISH AND 90% IN TAMIL.
  • DUE TO THE FEAR OF MEENA JOSHI I STARTED SPEAKING IN ENGLISH. OTHERWISE SHE WILL SEND A MESSAGE "HOW CAN YOU USE THE PRIME TIME?" ANYHOW I HAVE GIVEN THE GIST IN ENGLISH, NOW I WILL SPEAK IN TAMIL.
  • MEENA JOSHI IS THE ONLY WOMAN WHO I AM AFRAID OF IN MY LIFE. SHE WILL SAY ‘SWAMIJI TAKES PRIME TIME TO SPEAK IN TAMIL’
  • MEENA JOSHI, LET US MAKE THE KAILASA WASHINGTON DC HAPPEN. I TOLD VIJAYAPRIYA TO WORK WITH YOU. MAKE THE KAILASA WASHINGTON DC HAPPEN AND LET US INAUGURATE IT WITHIN THIS CHATURMASYA.

9:15 PM IST - 10:40 PM TAMIL SATSANG MA NITHYA KAILASAPRIYA IS MESSAGING..I AM SO HAPPY YOU ARE LEARNING TAMIL. BLESSINGS.

  • YOU CAN ALSO ENJOY, YOU CAN ENRICH


உலகமெங்கும் இருக்கும், இதயத்தாலும் இணையத்தாலும் இணைத்திருக்கும் தமிழ் மக்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். அன்பர்கள் பக்தர்கள் சீடர்கள் உலகெங்கும் அமர்ந்திருக்கும் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

மஹாகைலாசத்திருந்து பரமசிவன் நேரடியாக நமக்கு வழங்கும் சத்தியம் - சமாதி பழகுங்கள். இந்த நான்கு மாதமும், நாமும் நிர்விகல்ப சமாதி UNCLUTCHING சமாதி தியான முறையை பழகி மற்றவர்களுக்கும் கொண்டு சென்று சேர்ப்போம்.

இந்த சமாதி பழகுகின்ற முறை செய்முறையை பல சத்சங்கங்களாக ஏற்கெனவே அளித்திருக்கின்றேன். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு TINY.CC/UNCLUTCHING என்கின்ற இந்த இணையதள முகவரியில் கிடைக்கின்றது இலவசமாக. நீங்கள் எல்லோரும் இதை பார்த்து நீங்களே கடைபிடிக்க துவங்க முடியும்; ஒரு நாளைக்கு இருபத்தொரு நிமிஷம் PRACTICE பண்ணா போதும், 21 நிமிடம் மட்டும் தான் தேவை. நீங்கள் சமாதி பழக துவங்குங்கள்; மற்றவர்களுக்கும் பகிர்ந்து இந்த நான்கு மாதம், சாதுர்மாஸ்யம் நான்கு மாதத்திற்குள், ஒரு கோடி பேராவது சமாதி பழகுவதற்காக அவர்களை வளப்படுத்துங்கள். தனி மனித அளவிலும் உலக அளவிலும் மிகப்பெரிய மாற்றங்களை நல்ல மாற்றங்களை சமாதி பழகுவதனால் நம்மால் கொண்டு வர முடியும். நன்றாக புரிந்து கொள்ளுங்கள், சமாதி பழகுவதனால் நம்மால் மிகப்பெரிய நல்ல மாற்றங்களை கொண்டு வர முடியும். நமக்கும் நன்மை செய்ய முடியும், உலகத்திற்கும் நன்மை செய்ய முடியும்.

மா நித்ய கைலாசப்பிரியா ஸ்டான், SHE IS MESSAGING “நான் தமிழ் படிக்கிறேன் ஸ்வாமிஜி”. பூரண ஆசிகள், நல்லாசிகள். உங்களுக்கு பூரண தமிழ் அறிவு மலர்ந்து, தமிழில் உரையாடி, நன்மைகள் பெற ஆசிர்வதிக்கிறேன்.

கைலாசத்தில் இருக்கின்ற கைலாசவாசிகள் உள்ளுக்குள் உரையாடுவதற்கு, நம்ம கைலாசவாசிகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கின்ற மொழியாக தமிழையும், கைலாசவாசிகள் வேற்று நாட்டவர்களோடு பேசுகின்ற மொழியாக ஆங்கிலத்தையும், வேற்று கிரகத்தில் இருக்கின்ற, வேற்று மண்டலத்தில் இருக்கின்ற தேவர்கள் முனிவர்கள் சித்தர்கள் ரிஷிகள் இவர்களோடு உரையாடுவதற்கு சம்ஸ்க்ருதத்தையும் மொழியாக வைத்திருக்கின்றோம். அதனால கைலாசம் மும்மொழி கொள்கையை கடைபிடிக்கிறது. கைலாசவாசிகளாக மாற விரும்பும் அனைவரும் தமிழ் கற்றுக்கொள்வது நன்மை தரும். ஏன்னா, உள்ளுக்குள் உரையாடுகின்ற மொழியாக தமிழையும், வேற்று நாடு, வெளிநாட்டு மக்களோடு உரையாடுகின்ற மொழியாக ஆங்கிலத்தையும், வெளிநாட்டவர்களோடு உரையாடுகின்ற மொழியாக ஆங்கிலம், வேற்று மண்டலங்களில் வெளி மண்டலங்களில் இருப்பவர்களோடு உரையாடும் மொழியாக சம்ஸ்க்ருதத்தையும் வைத்திருக்கிறோம். அதனால கைலாசப்பிரியா ஸ்டான், I AM SO HAPPY YOU ARE LEARNING TAMIZH, BLESSINGS!

இந்த சாதுர்மாஸ்யத்தில் ஒரு கோடி பேரையாவது சமாதி பழக வைத்தால், ஒரு கோடி பேரை POVERTY நிலையிலிருந்து, வறுமை கோட்டுக்கு கீழிருக்கும் நிலையிலிருந்து மேலெடுத்தல், இந்த மாதிரி மொத்தம் 21 ப்ராஜெக்ட்ஸ், முறையாக விதிமுறைகளோடு தொகுத்து முடித்துவிட்டோம்; அதை நீங்க இன்னும் ONE OR TWO DAYS ல SOCIAL MEDIA ல PUBLISH பண்ணிடுவோம். யார் வேண்டுமானாலும் இதில் பங்கு கொள்ளலாம். இதன் பாகமாக மாறலாம், பலனும் பெறலாம், மற்றவர்களுக்கு பலனும் அளிக்கலாம். YOU CAN ALSO ENJOY, YOU CAN ENRICH. இந்த நிகழ்வுகள் PROJECTS மூலமா உங்களையும் வளப்படுத்திக் கொள்ளலாம் மற்றவர்களையும் வளப்படுத்தலாம்.

ஒரு கோடி பேருக்கு பகவத்கீதை வழங்கும் செயல். ஏற்கெனவே தமிழ் ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் பகவத்கீதை புத்தகங்கள் அச்சிடப்பட்டு பல ஆஸ்ரமங்களில் கிடைக்கின்றது, இலவசமாக நீங்கள் பெற்றுக்கொள்ளலாம், இலவசமாக மற்றவர்களுக்கு அதை அளிக்கலாம். தயவு செய்து வீணாக்க வேண்டாம். இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக வீணாக்க வேண்டாம். நீங்க KAILAASA.ORG என்ற இணையதள இமெயில் முகவரிக்கு உங்கள் தொலைபேசி எண்ணுடன் இமெயில் அனுப்பினால், உங்களை தொடர்பு கொண்டு நம்முடைய சன்னியாசிகளும், பக்தர்களும், உங்களுக்கு புத்தகங்களை வழங்குவார்கள்.

அடுத்ததாக நாம் மட்டும் நேரடியாக சேவை செய்யாமல் சேவை செய்கின்ற பல பேரையும் உற்சாகப்படுத்தி, அவர்களுக்கு விருதுகள் வழங்குவதன் மூலமாக பொருளாதார உதவிகள் வழங்குவதன் மூலமாக, அவர்களுடைய சேவையை உற்சாகப்படுத்தி, பல பேருக்கும் பல நல்ல சேவைகளும் சென்று சேர்வதற்கு ஊக்கம் கொடுக்கின்ற சில திட்டங்களை ORGANISED ஆ இதற்கு முன்னாடியே செஞ்சிட்டிருந்த திட்டங்களை இப்ப UPDATED ORGANISED ஆக்கி வெளியிடுகின்றோம்; இந்த சாதுர்மாஸ்யம் நான்கு மாதத்தில் அன்னதானம் செய்கின்ற உலகமெங்கிலும் அன்னதானம் செய்கின்ற பல இடங்களில் தனி நபர்கள் ரொம்ப கஷ்டப்பட்டு அவர்களுடைய சொந்த வருமானம் அல்லது அவர்களுக்கு தெரிந்த சில நண்பர்கள் கொடுக்கின்ற சொற்ப பணத்தை வைத்து தொடர்ந்து அன்னதானம் செய்து கொண்டிருக்கின்ற சேவைகளை செய்கிறார்கள். அந்த நபர்களை எல்லாம் கண்டறிந்து அவர்களுக்கு ஒரு லட்சம் பணம் அதாவது இப்போ அந்த நபர் வந்து ஆஸ்திரேலியாவில் இருக்கிறார் என்றால் அந்த ஆஸ்திரேலியா பணத்தில் ஒரு லட்சம் பணம், இந்தியாவில் இருக்கிறார் என்றால் இந்திய பணத்தில் ஒரு லட்சம் பணம், இலங்கையில் இருக்கிறார் என்றால் அவங்க பணத்தில் ஒரு லட்சம் பணம், அந்த மாதிரி எந்தெந்த நாட்டில் இருக்கிறார்களோ அந்த நாட்டில், கனடாவில் இருக்கிறார் என்றால் அந்த கனடாவின் ஒரு லட்சம் பணம், அந்த நாட்டினுடைய ஒரு லட்சம் பணம் முடிப்போடு கூடிய கைலாச அன்னலக்ஷ்மி விருது வழங்கப்படும்.

இரண்டாவது இந்த குறைந்த விலைக்கு உணவை அளிக்கின்ற ஒரு ரூபாய்க்கு இட்லி ஒரு ரூபாய்க்கு வடை ஒரு ரூபாய்க்கு டீ, இந்த இரண்டு ரூபாய்க்கு மூன்று ரூபாய்க்கு தோசை அப்படியெல்லாம் கொடுக்கறாங்க பாருங்க EVEN பத்து ரூபாய்க்கு தோசை கொடுத்தால் கூட அது மிகப்பெரிய சேவை, இந்த விலைவாசி விற்கின்ற இந்த காலகட்டத்தில், இது போன்ற நபர்களையெல்லாம் கண்டறிந்து ஆயிரம் பேருக்கு இந்த சாதுர்மாஸ்யத்தில் மட்டும் ஒரு லட்சம் பணத்தோடு கூடிய அன்ன தாதா விருது. இந்த அன்னதான சேவைகளை பொறுத்தவரை செய்கின்றவர்கள் எந்த ஜாதி மதத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம், பலன் பெறுபவர்கள் எந்த ஜாதி மதத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம், இந்த சேவையை செய்பவர்களும் எந்த ஜாதி மதத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். அன்னதானம் செய்பவர்கள் ஆயிரம் பேர் கண்டறிந்து ஒரு லட்சம் பணத்தோடு கூடிய கைலாச அன்னலக்ஷ்மி விருதும், குறைந்த விலைக்கு உணவளிக்கின்ற, பல கிராமங்கள்ல இப்ப YOU TUBE ல நிறைய பேர் போடுறாங்க ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுக்கறாங்க, இரண்டு ரூபாய்க்கு இட்லி கொடுக்கறாங்க, வெறும் மூன்று ரூபாய்க்கு தோசை கொடுக்கறாங்க, ஒரு ரூபாய்க்கு வடை கொடுக்கறாங்கண்ணா, எவ்வளவு பெரிய சேவை தெரியுமா இதெல்லாம், மக்களுடைய பசி போக்குதல். இந்த மாதிரியான நபர்கள் அனைவருக்கும் கண்டறிந்து இந்த நான்கு மாதத்தில் ஆயிரம் பேருக்கு ஒரு லட்சம் பணத்தோடு கூடிய கைலாச அன்ன தாதா என்கின்ற விருது வழங்கப்படும்.

அடுத்ததாக நிறுவனங்கள், மிகப்பெரிய நிறுவனங்கள் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட இடத்திலே அன்னதானம் செய்கிறார்கள், அது போன்ற நிறுவனங்களுக்கு ஒரு முக்கியமான NETWORKING சேவை, எந்த விதமான கமிஷனும் சர்வீஸ் சாரஜும் இல்லாத NETWORKING சேவையை செய்ய போகின்றோம். அப்படீன்னா என்னன்னா கடந்த 27 - 28 ஆண்டுகள், 1994 லிருந்து இன்று வரை நானும் கைலாசத்தின் பக்தர்களும் சீடர்களும் ஒன்று சேர்ந்து உலகம் முழுவதும் கடும் உழைப்பினாலும் தியாகத்தினாலும் 140 நாடுகளில் கைலாசவோட LEGIT BODIES களை அதாவது சட்டப்படியான அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளை உருவாக்கி இருக்கோம். அதுல 120 நாடுகள்ல CHARITY STATUS வாங்கி இருக்கோம். CHARITY STATUS கு தமிழ்ல எக்ஸாக்ட் அ என்ன வார்த்தைனு தெரியல. CHARITY STATUS னு பொதுவா சொல்லுவாங்க. இதுல பல நாடுகள்ல ரிசீவரா மட்டும் இல்லாம ரிஸிவிங் ஏஜெண்டாவும் இருக்கறதுக்கான LEGIT STATUS, LEGAL STATUS OBTAIN பண்ணி இருக்கோம். அதாவது நாங்கள் நன்கொடை பெறுவது மட்டுமல்லாமல், நாங்கள் மற்றவர்களுக்கும் நன்கொடைகளை வாங்கி கொடுக்கலாம். அந்த நன்கொடைக்கும் வரிவிலக்கு உண்டு, அப்படீங்கிற அந்த LEGAL STATUS அ பல நாடுகள்ல பெற்றிருக்கின்றோம், இந்த NETWORK அ எந்த விதமான சர்வீஸ் சார்ஜோ கமிஷனோ இல்லாமல் நிறுவனப்படுத்தி அன்னதானம் செய்கின்ற நிறுவனங்களுக்கு வழங்குகின்ற செயல் பண்ணப்போறோம். அப்படீன்னா என்னன்னா, ஒரு உதாரணம் சொல்றேன், யாரவது ஒருத்தர் மலேசியாவிலோ இல்ல மதுரையிலோ காசியிலோ ஒரு நிறுவனத்தை உருவாக்கி தினந்தோறும் அன்னதானம் பண்றீங்கன்னா உங்கள் நாட்டுல நீங்கள் CHARITY STATUS வாங்கியிருக்கணும், அதாவது வெளிநாட்டு பணம் பெறுவதற்கு அனுமதி வாங்கியிருக்கணும். அந்த மாதிரி அனுமதி பெற்ற உங்கள் நிறுவனங்களின் links களை எங்களுடைய ORGANISATION -னுடைய வெப்சைட்ல போட்டு, பொது மக்கள் யார் உங்களுக்கு பணம் கொடுத்தாலும் நேரடியா உங்களுடைய வங்கிக்கே அது வந்து சேர்ந்திடும். இந்த மாதிரி நிறுவனங்களுக்கு கைலாச அன்னபூரணி விருது அளிக்கின்றோம், நிறுவனமயமாக தொடர்ந்து அன்னதானம் செய்பவர்களுக்கு கைலாச அன்னபூரணி, இதுல என்னன்னா உதாரணத்திற்கு ஸ்விட்ஸ்ர்லாந்துல இருக்கும் ஒரு அன்பர் காசியிலே அன்னதானம் பண்ணனும்னு நெனச்சார்னா, கூகுள் பண்ணார்னா உங்களுடைய நிறுவனம் மேல வரும், எங்கள் கைலாச INFRASTRUCTURE மூலமா அவர் DONATE பண்ணா நேரடியா அது உங்களுடைய பேங்குக்கு போயிடும். ஆனா அந்த வெளிநாட்டு பணத்த வாங்கறதுக்கான LEGAL STATUS, இப்ப இந்தியாவை பொறுத்தவரைக்கும் 80G அப்புறம் FCRA STATUS இந்த இரண்டும் இருக்கணும்; மலேசியாவுக்கு அந்த மாதிரி ஒரு சில விதிகள் இருக்கு, அந்தந்த உள்நாட்டு விதிகள் படி நீங்கள் அதை பெறுவதற்கான சட்ட ரீதியான தகுதி உடையவர்களாக இருந்தால் CONNECT பண்ணி உங்களுக்கு அதை வாங்கி கொடுத்துடுவோம், ACTUAL அ அது டைரக்ட் ஆ உங்க வாங்கி கணக்குக்கே போயிடும். இப்ப YOU TUBE இந்த சேவை பண்ணும் போது சர்வீஸ் சார்ஜ் 30 % எடுத்துப்பாங்க, சில நிறுவனங்கள் இந்த சர்வீஸ் சார்ஜ் எடுத்துப்பாங்க, நாங்க எந்த விதமான சர்வீஸ் சார்ஜோ கமிஷனோ இல்லாமல் பக்தர்கள் கொடுக்கின்ற, அன்பர்கள் கொடுக்கின்ற பணம் நேரடியாக உங்களுக்கு முழுமையாக போய் சேர்ந்து விடும். நாங்க ஒரு பாலமாக மட்டும் இருக்கின்றோம். நாங்க ஏற்கெனவே கைலாசத்திற்காக கட்டிய INFRASTRUCTURE அ உலகத்தில் இருக்கிற எல்லா சேவை நிறுவனங்களுக்கும் திறந்து விடுவது என்கின்ற முடிவு எடுத்திருக்கின்றோம். இந்த சாதுர்மாஸ்யம் நான்கு மாதத்தில் ஆயிரம் நிறுவனங்களை கைலாச அன்ன பூரணி விருது அளித்து அவர்களுக்கு உலகம் முழுவதிலிருந்தும் நன்கொடை பெற்று கொள்வதற்கான வசதிகளை செய்து தருவோம்.

அடுத்தது ஹிந்து மதத்திற்காக உழைத்து ஹிந்து மத சேவைகளை செய்துகொண்டிருக்கும் பொழுதே ஏதாவது ஒரு காரணத்தினால் விபத்து போன்றவைகள் ஏற்பட்டு உயிர் இழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு பண உதவியும் பொருளாதார உதவியும் விருதும் வழங்குதல். இப்போ உதாரணத்திற்கு தஞ்சாவூர்ல இந்த கோவில் திருவிழாவின் பொழுது ஒரு விபத்து ஏற்பட்டு சில பேர் இறந்துவிட்டார்கள், சில பேர் காயமடைந்தார்கள், அவர்களுக்கு சிறு உதவியாக பத்தாயிரம் ரூபாய் அந்த குடும்பத்தினருக்கு ஆறுதலுக்காக கொடுத்து ஒரு சிறு விருது கொடுப்போம். இப்ப அத மேம்படுத்தி ஒரு லட்சம் பணமாக மாற்றி ஹிந்து மதத்திற்காக சேவை செய்கின்றவர்கள் சேவை காலத்திலேயே அகால மரணம், விபத்து அல்லது எந்த காரணத்தினாலும் மரணமடைந்தாலும் அல்லது காயமடைந்தாலும் அவர்களுக்கு விருதுகள் வழங்குகின்ற நம்பிக்கை தருகின்ற ஆறுதல் தருகின்ற, அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் தருகின்ற, யாராவது இறந்து விட்டால் அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் தருகிற, காயமடைந்தவர்களுக்கு அவர்களுக்கு மருத்துவ செலவு மற்றும் அடிப்படை உதவி செய்கின்ற விதமாக ஒரு லட்சம் பணத்தோடு கூடிய விருதுகளை வழங்குகின்றோம்.

அடுத்தது தனி ஒரு குடும்பமாக இருந்து வாழ்வாதாரத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டு ஆனால் தங்கள் பாரம்பரிய கடமையை விடக்கூடாது என்று கிராம கோயில்களில் இருக்கின்ற சிவாச்சார்ய பெருங்குடி மக்கள், வைணவ ஆலயங்களில் இருக்கின்ற பட்டாச்சார்யா பெருங்குடி மக்கள், ஏழ்மையான நிலையில் இருக்கின்ற கிராம கோயில் பூசாரிகள், இவர்களையெல்லாம் கண்டறிந்து இந்த நான்கு மாதத்தில் குறைந்தபட்சம் 1008 பேருக்கு கைலாச ஆச்சார்யா விருது ஒரு லட்சம் பணம் கூடிய அந்தந்த நாட்டினுடைய எந்த நாட்டில இருக்கிறவங்களுக்கு கொடுக்கிறோமோ, அந்த நாட்டினுடைய ஒரு லட்சம் பணத்தோடு கூடிய கைலாச ஆச்சார்யா விருது வழங்கப்படும்.

திருமேனி தீண்டி சேவை செய்பவர்களுக்கு அடுத்ததாக கிராமப்பகுதிகளில் தனி ஒரு ஆளாக இருந்து தேவாரம் திருவாசகம், திருப்பாவை திருவெம்பாவை ராமாயணம் மகாபாரதம் போன்றவைகளை சொல்லுதல் அந்தக் கால தெருக்கூத்துக்கள் போன்று சிறு சிறு நாடகங்களாக நடித்த காட்டுவதன் மூலமாக மக்களுக்குள் இந்து மதத்தை விதைப்பது... நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.. கிராமங்களில் தேவாரம் திருவாசகம், திருப்பாவை திருவெம்பாவை ராமாயணம் மகாபாரதம் போன்றவைகளை சொல்லுகிறவர்களின் சேவை சாதாரணமானது அல்ல... அந்த மாதிரி நபர்கள் விதைத்த விதையில் வளர்ந்தவன்தான் நானே கூட! நான் பிறந்து வளர்ந்த திருவண்ணாமலை திருவூடல் தெருவில், அந்தத் தெருவும் பேய்க்கோபுரமும் சேரும் முனையில் திரௌபதி அம்மன் கோவில் இருக்கிறது. இப்போது அந்தக் கோயில் சற்று பெரிதாக இருக்கிறது, ஆனால் அந்தக் காலத்தில் அதற்கு ஒரு சிறு கோயில், அந்தக் கோயிலுக்கு வருடாவருடம் நாலைந்து வயதான பெரியவர்கள் வந்து கோடை விடுமுறை ஆரம்பிக்கும் மே மாதத்தில் அதாவது சித்திரை மாதத்தில் மகாபாரதம் சொல்லுவார்கள், மார்கழி மாதம் ராமாயணம் சொல்வார்கள். அங்கு மொத்தமே 10 பேர் தான் இருப்பார்கள். கேட்க வருகின்றவர்கள் 5 பேர், மேடையில் 5 பேர்... அவ்வளவுதான். காலையில் கதை சொல்லுவார்கள்... மாலையில் அதே பெரியவர்கள் வேஷமெல்லாம் போட்டுக்கொண்டு... காலையில் சொன்ன அதே கதையை ஒரு நாடகமாக தெருக்கூத்தாக நடித்துக் காட்டுவார்கள்... அவர்களுடைய தியாகம், சேவை எல்லாம் அளப்பரியது... அந்த சேவை செய்பவர்களை கண்டறிந்து, இந்த நான்கு மாத சாதுர்மாஸ்யத்தில் மட்டும் , குறைந்தபட்சம் ஆயிரம் பேருக்காவது ஒரு லட்சம் பணத்துடன் கூடிய 'கைலாச ஞான சிரோமணி' என்ற விருதை வழங்குகிறோம்.

அடுத்து ஒரு ஆச்சாரியார் மட்டும் இருந்து நடத்தும் வேத பாடசாலைகள், organised அ இருக்க மாட்டாங்க... ஒரே ஒருவர் மட்டும் உட்கார்ந்து... தங்களுடைய வறுமையைப் பற்றி கவலைப்படாமல், கடமையாக உணர்ந்து 3, 4... 10 பிள்ளைகளுக்கு வேதம் சொல்லிக் கொடுப்பார்கள். அந்த சேவை செய்பவர்களை கண்டறிந்து, குறைந்தபட்சம் ஆயிரம் பேருக்காவது ஒரு லட்சம் பணத்துடன் கூடிய 'கைலாச வேத வித்யா சிகாமணி' என்ற விருதை வழங்குகிறோம்.

திரௌபதி படம் எடுத்த தயாரிப்பாளர் jsk கோபி அவர்கள் மெசேஜ் பண்ணுகிறார்கள்... அவர்களுடைய பிறந்த நாள் இன்று... அன்னை திரௌபதியின் பேரருளால் நீங்கள் என்றென்றும் எல்லா வளத்துடனும் வாழ வேண்டுமென்று உங்களை வாழ்த்துகின்றேன், ஆசி உரைக்கின்றேன், நீங்கள் பதினாறும் பெற்று ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் சூழ வாழையடி வாழையென வாழ்வாங்கு வாழ்ந்திட ஆசி உரைக்கிறேன்..

அடுத்ததாக... சோசியல் மீடியா மூலமாக ஹிந்து மதம் சார்ந்த சிறுசிறு செய்திகளைப் போட்டு சேவை செய்கின்ற யூடியூப், இந்து ஆலயங்களுக்கு சென்று அதைப் பற்றிய செய்திகளைப் போடும் bloggers போன்ற சேவையாளர்களை கண்டறிந்து, குறைந்தபட்சம் ஆயிரம் பேருக்காவது ஒரு லட்சம் பணத்துடன் கூடிய கைலாச விருதை வழங்குகிறோம். இப்படி ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களை யார் வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். அவர்கள் அனைவருக்கும் இந்த நான்கு மாத, சாதுர்மாஸ்யத்திற்குள் அந்தந்த நாட்டு பணம் ஆன ஒரு லட்சம் பணத்துடன் விருதும் வழங்கப் பட்டுவிடும். இதைப் பற்றிய விபரங்கள் விதிமுறைகளோடு ஓரிரு நாட்களுக்குள் சோசியல் மீடியாவில் வெளியிடப்படும். கைலாச தான்மட்டும் சேவை செய்வதோடு நிறுத்தாமல்... சேவை செய்பவர்களை ஊக்கப்படுத்துகின்ற உத்வேகப்படுத்துகின்ற ஆதரவு தருகின்ற விதத்தில்... சேவைப் பணியில் ஈடுபடுமாறு கைலாஷாவின் அன்பர்கள் பக்தர்கள் சீடர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இன்னும் சில பிரிவுகளையும் சேர்க்கிறோம்... இந்தியா இலங்கை மலேசியா நேபால் போன்ற நாடுகளில் இன்னமும் ஒரு ரூபாய்க்கும் 10 ரூபாய்க்கும் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

இந்த மருத்துவர்கள் மேலை நாட்டு மருத்துவம் பார்ப்பராக மட்டுமல்ல... சித்த வைத்தியம் அல்லது அந்தந்த நாடு அங்கீகரிக்கும் எந்த மருத்துவ முறையை பார்ப்பவராக இருந்தாலும் சரி... அந்த சேவை செய்பவர்களை கண்டறிந்து, இந்த நான்கு மாத சாதுர்மாஸ்யத்தில் மட்டும் , குறைந்தபட்சம் ஆயிரம் பேருக்காவது ஒரு லட்சம் பணத்துடன் கூடிய 'கைலாச வைத்ய சிகாமணி' என்ற விருதை வழங்குகிறோம்.

கைலாச வாசிகள் மற்றும் கைலாச அன்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்... நீங்கள் இந்த நான்கு மாதத்தில், சாதுர்மாஸ்த்தில் உலகம் முழுவதும் இருக்கும் இதுபோன்ற சேவையாளர்களை கண்டறிந்து தேர்வு செய்யும் சேவையை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் தேர்வு செய்தால் போதும்.. நாம் வைத்திருக்கும் பெரிய சன்யாச படை அவர்களை சென்றடைந்து அவர்களுக்கு தர வேண்டிய சேவைகளை செய்து முடிப்பார்கள்.

ஹிந்து மதத்திற்கு ஆணிவேராக இருக்கின்ற, கண்ணுக்குத் தெரியாத அடித்தட்டு நிலையில் சேவை புரிந்து கொண்டிருக்கின்ற, வெகுஜன சமூகத்தால் கண்டறியப்படாத பாராட்டப்படதா, பாராட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூட இல்லாமல் சேவை செய்து கொண்டிருக்கும் தனிநபர்கள் மற்றும் சிறு சிறு நிறுவனங்கள்.... அவர்களை எல்லாம் கண்டறிந்து விருது வழங்கி கௌரவப்படுத்தி உத்சாகப்படுத்தி சேவை புரியுமாறு கைலாச வாசிகள் மற்றும் திருக்கயிலாய பரம்பரை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்து மதத்திலே மிகப்பெரிய ஒரு விஷயம் ஸ்தலயாத்திரை... கிராமங்களில் ஒரு சிறு குழுக்களோடு பழனி மலைக்கு யாத்திரை செல்வது, சபரிமலை யாத்திரைக்கு அழைத்துச் செல்லுவது (சபரிமலை யாத்திரை அழைத்துச் செல்பவர்களை "குருசாமி" என்று அழைப்போம்.) மகாராஷ்டிரா, உத்தர கர்நாடகா பகுதிகளில் பண்டரிபுரத்திற்கு செல்லும் வார்க்கர் யாத்திரா என்ற புனித யாத்திரை செல்வது, உத்தர பிரதேசம் உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் காவடி யாத்திரை செல்வது என்பதெல்லாம் வழக்கமாக இருக்கிறது. கிராமங்களில் அவ்வாறு சிறு சிறு குழுக்களை அமைத்து அவர்களை யாத்திரைக்கு அழைத்துச் செல்லும் அந்த குழுத் தலைவர்களை கண்டறிந்து... அந்த 'குருசாமிகளுக்கு' இந்த நான்கு மாத சாதுர்மாஸ்யத்தில் மட்டும், குறைந்தபட்சம் ஆயிரம் பேருக்காவது ஒரு லட்சம் பணத்துடன் கூடிய 'கைலாச யாத்ர சிகாமணி' என்ற விருதை வழங்குகிறோம்.

மிகப்பெரிய திருப்பணி நமக்காக காத்திருக்கின்றது. இந்த 21 வகை பிரிவுகளை சார்ந்த சேவையாளர்களுக்கு, ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்சம் ஆயிரம் பேருக்காவது ஒரு லட்சம் பணத்துடன் கூடிய 'கைலாச விருதுகளை இந்த நான்கு மாத சாதுர்மாஸ்யத்திற்குள் வழங்கிவிட வேண்டும். இந்தப் பணியில் முழு வேகத்துடன் இயங்குமாறு கைலாச வாசிகளை கேட்டுக்கொள்கிறேன். இந்த சேவையாளர்கள் சிலர் தங்களையே தேர்வு செய்து கொள்வதற்கு பல காரணங்களுக்காக தயங்குவார்கள், அவர்களை அடையாளம் காணுவதும் அவர்களுக்கு விருது கொண்டு சேர்ப்பதும் நம்முடைய கடமைதான். ஆகவே பொதுமக்கள் அனைவரும் உங்களுக்குத் தெரிந்தவர்களை தயவுசெய்து தேர்வு செய்யுங்கள். இது நிச்சயமாக இந்து மதத்திற்கு ஆணிவேராக விளங்குகின்றவர்களுக்கு உற்சாகத்தையும் பலத்தையும் அளிக்கும். ஹிந்து மர வேருக்கு நீர் வார்த்த புண்ணியம் உங்கள் அனைவருக்கும் உண்டாகும். இதைத்தான் அவர்கள் அப்கிரேடட் நியூ பிகினிங் என்று சொல்லுகிறேன். நாம் நம்முடைய புது துவக்கத்தை செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கின்றோம். நாம் சேவை செய்வதோடு மட்டுமல்லாமல், இன்னொன்று நம் ஒருவராலேயே, நம் ஒரு நிறுவனத்தாலேயே எல்லோருக்கும் சேவை செய்து விட முடியாது, பிராக்டிக்கலாக நிறைய பிரச்சினைகள் இருக்கிறது, உதாரணத்திற்கு ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.... திருவண்ணாமலையில் கிரிவலம் அன்றைக்கு கிரிவலப்பாதையில் அன்னதானம் அளிக்கலாம் என்று நினைக்கிறோம், ஆனால் இடம் சிறிது என்பதால், கிரி வலத்திற்கு 10 லட்சம் பேர்கள் வருகிறார்கள் என்றால் நம்மால் குறைந்தபட்சம் 10 சதவீதம் பேருக்குத்தான் அன்னதானம் வழங்க முடியும், ஏனென்றால் இடம் சிறிது. இப்போது நாம் மட்டும் அன்னதானம் வழங்குவதோடு நின்றுவிடாமல், இதேபோன்று அன்னதானம் வழங்கும் இன்னும் பத்து நிறுவனங்களுக்கு உற்சாகம் வழங்கினால், மேலும் அதிக நபர்களுக்கு அன்னதானம் சென்றடைய முடியும். இது ஒரு சின்ன உதாரணம் தான். இது போன்று நம்முடைய சேவையை விரிவாக்கிக் கொண்டு, அப்கிரேடெட் நியூ பிகினிங் கை இந்த நான்கு மாதத்திற்குள் செய்து முடித்துவிட வேண்டும் என்று கைலாச வாசிகளை, திருக்கயிலாய பரம்பரை பக்தர்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

அதுமட்டுமில்லாமல்... கொரானா காரணமாக உலகம் முழுக்க இருக்கும் ஆதினங்களை மூடச்சொல்லியிருந்தோம். இப்பொழுது இந்தியாவிலும் மலேசியாவிலும் திறப்பதற்கான அனுமதி கிடைத்துவிட்டது என்று நினைக்கிறேன். கனடா அமெரிக்கா போன்ற நாடுகளில் என்ன நிலைமை என்று தெரியவில்லை. எந்தெந்த நாடுகளில் அனுமதி கிடைத்திருக்கிறதோ, அந்தந்த உள்நாட்டு குறிப்பிட்ட ஆசனம் எந்த காரணத்திற்காக தொடங்கப்பட்டதோ அதை அப்கிரேடெட் நியூ பிகினிங் காக செய்ய ஆரம்பிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். உதாரணத்திற்கு... ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்... நான் உதாரணம் என்று சொன்னாலே திருவண்ணாமலைதான் முதலில் வரும்... திருவண்ணாமலையை தான் சொல்லுவேன்... திருவண்ணாமலை என்ன கைலாசத்தை ஏன் உருவாக்கினேன் என்றால், அண்ணாமலையாரே கதி என்று சொல்லி அங்கு வந்து வாழுகின்ற சாதுக்கள் சன்னியாசிகள் சிவனடியார்கள்... என்னுடைய கணக்குப்படி 5 ஆயிரம் பேர், பத்தாயிரம் பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன், ஒரு rough கணக்கு, அவர்கள் எல்லோருக்குமான அடிப்படைத் தேவைகளை செய்து தரவேண்டும், சிறிய இடம் என்பதால் உறைவிட வசதி தவிர, அதாவது உணவு, குடிநீர், உடை, மருத்துவ வசதி போன்ற மற்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி பண்ண வேண்டும் என்பதற்காகத்தான் திருவண்ணாமலை கைலாசத்தை உருவாக்கினேன். உருவாகும்போதே அதன் நோக்கத்தை தெளிவாக கொடுத்திருக்கிறேன். இப்போது அந்த கைலாசத்தை நிர்வகிக்கின்ற சன்னியாசிகள் அந்த நோக்கத்தை ஒரு பெரிய அளவில் போர்ட் ஆக எழுதி ஆதீனத்தில் வைக்க வேண்டும், அதாவது இப்போது குடிநீர் வசதி வழங்குவதற்கான பொறுப்பை யார் நிர்வகிக்கிறார்களோ, அந்த சன்னியாசியின் அல்லது பக்தரின் தொலைபேசி எண்ணை அதில் பதிவிட வேண்டும். இதேபோன்று ஒவ்வொரு பொறுப்பை, நோக்கத்தை யார் வகிக்கிறார்களோ அந்த நபர்களின் தொலைபேசி எண்களை அந்தந்த நோக்கத்திற்கு நேர் குறிப்பிட வேண்டும். சேவை தேவைப்படுவோர் அந்த நபர்களை தொலைபேசி மூலம் அணுகினால், அவர்களுக்குரிய சேவை செய்து தரப்பட வேண்டும் என்பதுதான் அதனுடைய நோக்கம். இப்படித்தான் அந்த கைலாசம் நடக்க வேண்டுமென்ற என்னோட நோக்கத்தில்தான் அந்த கைலாசத்தை உருவாக்கினேன். கொரானா காரணத்திற்காகவும் மற்ற காரணங்களுக்காகவும் அது தடைப்பட்டிருந்தது. இப்போது அந்த நோக்கத்தை பெரிய அளவு போர்டாக எழுதி வெளியில் வைத்து விட்டோம் என்றால், நாம் ஒருவேளை நம்முடைய தார்மீகக் கடமைகளை மறந்தாலும் கூட , அந்த சேவை தேவைப்படுபவர்கள் நம்மிடம் கேட்கும் போது உடனடியாக நாம் அதை செய்து விடுவோம். நான் திருவண்ணாமலை கைலாசத்தை உருவாக்குவதற்கு காரணம் என்னவென்றால், அண்ணாமலையானே கதி என்று திருவண்ணாமலைக்கு வந்துவிட்ட பக்தர்கள் சிவனடியார்கள் சாதுக்கள், அதுமட்டுமன்றி கிரிவலம் வரும் பக்தர்கள், மாதத்துக்கு சுமார் 10 லட்சம் பேர் திருவண்ணாமலை கிரிவலம் வருகிறார்கள் என்று நான் நினைக்கிறேன், அமாவாசை பவுர்ணமி மட்டுமல்லாது பிற நாட்களிலும் பல ஆயிரக்கணக்கானோர் மலை வலம் வருகின்றனர், அப்படி வருபவர்களின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம் இருக்கும் என நான் நினைக்கிறேன், இது ஒரு rough கணக்குதான், அவர்கள் அனைவருக்கும் குறைந்த பட்சம் அன்னதானம், தூய்மைப்படுத்தப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பதுதான் நோக்கம். ஏற்கனவே ஆர்ஓ வாட்டர்கான infra ஸ்ட்ரக்சர் அனைத்தையும் செய்து வைத்திருக்கிறோம், அதை வெளியில் எடுத்து வந்து நிறுவி மக்களுக்கு பயனுள்ள வகையில் உபயோகிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். அந்தந்த நோக்கங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஆதீனங்களை ஆசிரமங்களை, ஆஸ்ரமம் என்பது சமஸ்கிருத வார்த்தை, அதற்கு rough equivalent ட்டான வார்த்தை ஆதீனம் என்று உபயோகிக்கிறேன். அந்தந்த அரசாங்கத்திற்கான பொறுப்பாளர்கள் இந்த நான்கு மாதத்திற்குள் இந்த நோக்கத்தை மீண்டும் தொடங்கி விட வேண்டும். காசியில் இப்போதுதான் ஆதீனம் ஆரம்பித்திருக்கிறார்கள். ஹரித்துவாரில் ஒரு பக்தர் நன்கொடையாக வழங்கிய இடத்தில் ஆசிரமம் தொடங்கப் போகிறது. முக்கியமாக சொத்துக்கு கற்பு பணத்துக்கு கற்பு.... சொத்துக்கு கற்பு என்றால், ஒரு அன்பர் ஆதீனம் ஆரம்பிப்பதற்காக ஒரு சொத்தை வழங்கினார் என்றால், நம்மால் முடிந்தால் உடனே அந்த இடத்தில் ஆசிரமத்தை தொடங்கி நடத்த வேண்டும், அது முடியவில்லை என்றால் ஆசிரமம் ஆரம்பிக்கிற வரை அந்த சொத்து சும்மா இருக்க வேண்டுமே தவிர அதை வாடகைக்கு விடுவதோ அல்லது குத்தகைக்கு விடுவதோ அல்லது வேறு நோக்கங்களுக்காக விற்பதோ கூடாது... அதுவே அந்த சொத்துக்கு கற்பு. உதாரணத்திற்கு... ஹூஸ்டன் முக்தானந்தா அவர்கள் சென்னையில் ஒரு வீடு கொடுத்திருக்கிறார்கள் ஆசிரமம் ஆரம்பிப்பதற்காக... அவை ஆரம்பிப்பதற்கு கொஞ்ச நாள் ஆயிற்று... ஏனென்றால் அதற்கு ஒரு சன்யாசி போட்டு விக்ரகங்கள் ஸ்தாபித்து முறையாக ஆரம்பிப்பதற்கு சிறிது காலம் ஆயிற்று... அதனால் சில பக்தர்கள் என்னிடம் அதை ஆரம்பிக்கிற வரை வாடகைக்கு விடலாம் என்று சொன்னார்கள்.... no... கிடையாது. ஆஸ்ரமம் ஆரம்பிப்பதற்காக ஒரு பக்தர் ஒரு சொத்தை கொடுத்தார் என்றால், அவர் ஆசிரமம் ஆரம்பிக்கவேண்டும் என்று மனதில் நினைத்த தருணமே பரமசிவப்பரம்பொருள் அங்கு சூட்சுமமாக குடியேறி விடுகிறார்... ஸ்தூலமாக பெருமானுடைய அச்சாவதாரத்தை அங்கு பிரதிஷ்டை பண்ணி முறையாக பூஜை புனஸ்காரங்கள் செய்து அங்கு ஆசிரமம் எப்போது ஆரம்பிக்கிறோமோ அது நம்முடைய பொறுப்பு, ஆனால் அது வரைக்கும் கூட அங்கு வாடகைக்கு விடுவதோ குத்தகைக்கு விடுவதோ அல்லது விற்பனை செய்யவோ என மாற்று செயல்கள் செய்யப்படக் கூடாது. ஆரம்பிக்கிற வரைக்கும் பூட்டி வையுங்கள், அப்படி என்றால் நான் நமக்கு உறுத்தும், அவரு கொடுத்தும் நாம இன்னும் ஆரம்பிக்காமல் இருக்கிறோமே என்று, அப்புறம் சீக்கிரமாக வேக வேகமா வேலையை செஞ்சு அதை ஆரம்பிப்போம், இதுதான் அந்த சொத்துக்கு கற்பு. பரமசிவனுக்கு ஆலயம் எழுப்பனும் என்று ஒரு பக்தர் நினைத்து விட்டார் என்றால், அவர் நினைத்த உடனேயே அந்த சொத்தில் பரம சிவப்பரம்பொருள் சூக்ஷ்ம வடிவில் குடியேறி விடுகிறார்.

முக்திரூபானந்தா ஐயா அவர்கள் கொடுத்த சொத்தில் குரு பூர்ணிமை அன்று இறைவனுடைய அர்ச்சாவதாரத்தைப் பிரதிஷ்டை செய்து ஆசிரமம் ஆரம்பித்துவிட்டார்கள். அதே மாதிரி உலகம் முழுக்க யார் எந்த சொத்தை எந்த நோக்கத்திற்காக கொடுக்கிறார்களோ அது மாறக்கூடாது. அதே மாதிரி பணம்.. ராமகிருஷ்ண மடத்தில் இருந்து தான் நான் இந்த சத்தியத்தை புரிந்து கொண்டேன். இஞ்சி வாங்கக் கொடுத்த பணத்தை சுக்கு வாங்க பயன்படுத்தமாட்டார்கள், ராமகிருஷ்ண மடத்தினுடைய பணக் கற்பு... நான் எப்போதுமே என் சன்னியாசிகள் இடம் சொல்வேன்... ராமகிருஷ்ண மடத்தின் நேர்மையையும் இஸ்கானின் பக்தியையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ராமகிருஷ்ண மடத்திற்கு இன்சைடர் ஆக பல வருடங்கள் இருந்திருக்கிறேன், ராமகிருஷ்ண மடத்தின் நேர்மைக்கு சமம் எதுவும் கிடையாது, யாரும் கிடையாது, உலகத்தில் நேர்மையின் உச்சம் என்றால் அது ராமகிருஷ்ண மடம் தான், பரமசிவன் அருளாலே அவர்களின் திருவடியிலே இருந்து பார்க்கின்ற பெரும் பாக்கியத்தை எனக்கு அருளினார். என்னால் பெயரை சொல்லி சொல்ல முடியும்... சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருக்கும் தவத்திரு ஸ்ரீமத் கௌதமானந்த ஜி மகராஜ் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பர்சனலாக அவரு பக்கத்திலேயே இருந்து பார்த்திருக்கிறேன். நேர்மையின் வடிவம், integrity யின் embodiment. மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருக்கின்ற ஸ்ரீமத் சுவாமி கமலாத்மானந்தர் அவர்கள், தஞ்சாவூர் மடத்தின் தலைவராக இருக்கின்ற சுவாமி விமூர்த்தானந்தர், நாட்றம்பள்ளி ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்த சுவாமி சத்தியஞ்ஞானானந்தர்... இவர்களுடன் நேரடியாக வாழும் பாக்கியத்தை பரம சிவன் அருளால் பெற்றிருந்தேன். பெங்களூர் அல்சூர் மடத்தின் தலைவராக இருந்த சுவாமி ராகவேசானந்தர் மகராஜ், மைலாப்பூரில் இருக்கும் ராமகிருஷ்ணா ஸ்டுடென்ட்ஸ் ஹோமில் தலைவராக இருந்த சுவாமி வீதபயானந்த மகராஜ்... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ராமகிருஷ்ண மடத்தின் நேர்மை, அவர்களுடைய பணக் கற்பு, இஞ்சி வாங்கக் கொடுத்த பணத்தில் சுக்கு வாங்க மாட்டார்கள். எதற்காக அந்த நன்கொடை அளிக்கப்பட்டதோ அதற்காக மட்டுமே அதை உபயோகப்படுத்துவார்கள். ராமகிருஷ்ண மடத்தின் நேர்மையையும் இஸ்கானுடைய பக்தியையும் என்னுடைய கைலாச வாசிகள் கற்றுக் கொண்டீர்களானால் நான் வந்த நோக்கம் முடிந்து விட்டது என்று ஒரு பெரிய திருப்திக்கு வந்துருவேன். நம்முடைய கைலாச மடத்தின் பொறுப்பாளர்கள், கைலாச பீடத்தின் பொறுப்பாளர்கள், ஆதீனத்தின் பொறுப்பாளர்கள், சன்னியாச பரம்பரை, பக்தர்கள் சேவையாளர்கள்... நீங்கள் அனைவரும் ராமகிருஷ்ண மடத்தின் நேர்மையையும் இஸ்கானுடைய பக்தியையும் கற்றுக் கொண்டீர்களானால் போதும்..

மொத்த ராமகிருஷ்ண இயக்கமுமே அதிகபட்சம் ஒரு லட்சம் சன்னியாசிகள் தான். ராமகிருஷ்ண மடம் என்னும் முக்கிய மூல நிறுவனம், அதன் உத்வேகத்தினால் உற்சாகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பல ராமகிருஷ்ண ஆஸ்ரமங்கள் என அனைத்திலும் உலகம் முழுக்க ஒரு லட்சம் சன்னியாசிகள் இருப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால் அவர்கள் அனைவரும் செய்திருக்கின்ற மிகபெரும் சேவை... நினைத்துப் பார்க்க முடியாத அளவு மிகப்பெரும் சேவையை செய்திருக்கின்றார்கள்.

மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருக்கின்ற ஸ்ரீமத் கமலாத்மானந்த ஜி மகராஜ் அவர்களின் பாதங்களில் வாழ்ந்திருக்கிறேன். இவர்களுடைய தியாகம் நேர்மை எளிமை சொல்லி மாளாது, சொல்லில் அடங்காது. அவருடைய பாதங்களில் தான் தமிழில் எழுத, படிக்க, புத்தகங்கள் எழுத, கட்டுரைகள் எழுத என எல்லாவற்றையும் கற்றேன். சிறுவயதில் நான் படித்தது மரபு தமிழ். என்னுடைய தமிழ் ஆசிரியரும் என்னுடைய பெரிய தாய்வழி பாட்டனாருமான பாண்டுரங்கனாரிடம் கற்றுக்கொடுத்த தமிழ் மரபுத் தமிழ். இப்போது நடைமுறை தமிழில் பேசவும் எழுதவும் கற்றது சுவாமி கமலாத்மானந்தர் அவர்கள் பாதங்களில் தான். ஒருமுறை நான் நித்யானந்த சங்கம் எல்லாம் ஆரம்பித்து, குருவாக ஒரு சத் சங்கத்திற்காக மதுரைக்கு சென்றிருந்தேன். அப்போது சுவாமி கமலாத்மானந்தர் அவர்கள் மதுரையில் தான் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது, ஆகவே அவருக்கு நான் அழைப்பு விடுக்க மறந்துவிட்டேன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் மறந்துவிட்டார்கள். அழையாமல் வந்துவிட்டார், எனக்கு அடிவயிறு கலங்கி விட்டது, அழைக்காமல் விட்டது தப்பு என்று அடி வயிறு கலங்கியது, அவருக்கு பெரிய ஆசனமிட்டு அமர்த்தி அருகில் நான் சிறிய ஆசனத்தில் அமர்ந்து சத்சங்கம் முடித்தபிறகு, ஸ்வாமி அழையாமல் வந்துவிட்டீர்கள், ஏதாவது ஒரு மலையாளி குறைவு ஏற்பட்டு விடுமோ என்று பயமாகிவிட்டது என்று சொன்னேன். அதற்கு அவர், "ஏய், ஒரு நல்ல ஆசிரியன் கற்றுக் கொடுத்த பிறகு சீடன் அதை எவ்வாறு உலகத்திற்கு சொல்லுகிறான் என்று தெரிஞ்சிகிட்டு தான் திருப்தி அடைவான், " என்றார். ஒரு அழகான ஓவியம் போட்டிருக்கிறோம் பாருங்கள், பரமசிவன் குமாரஸ்வாமியாக முருகனிடம் பாடம் கேட்பார் பாருங்கள்...

ஒரு நல்ல ஆசிரியர் தான் கற்றுக் கொடுத்ததை எல்லாம் சீடன் ஒழுங்காக சொல்கிறானா என்று குவாலிட்டி கன்ட்ரோல் பாஸ் பண்ணிட்டு தான் நிம்மதியாவார்கள், அதே மாதிரி ஒழுங்கா கத்துக் கொடுத்தது எல்லாம் சொல்றியா என்று பார்க்கத்தான் வந்தேன், QC பார்க்க தாண்டா வந்திருக்கேன் என்று சொன்னார். அவருடைய பணிவு தியாகம் நேர்மை இதெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது.

இதே மாதிரி ராமகிருஷ்ண மடத்தின் நேர்மையையும் இஸ்கானுடைய பக்தியையும் கொண்ட குறைந்தபட்சம் பத்து லட்சம் சன்னியாசிகளையாவது உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் பரமசிவ பரம்பொருளின் ஆசீர்வாதத்தால் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறேன். 10 லட்சம் பேராவது கொண்ட சந்நியாச படையை உருவாக்கி பரமசிவனின் பாதங்களில் சமர்ப்பித்தே தீருவேன். நான் தாங்குகின்ற விஷனோட சக்திதான் என்னை உயிரோடு தாங்குகிறது. அந்த சக்தி தான் என்னை இயக்குகிறது. பரமசிவ பரம்பொருளின் பேரருளால் செய்தே தீருவோம் அவருடைய திருப்பணி. 100 கோடி இந்துக்கள் இருக்கிறோம் பிறப்பால், இன்னொரு நூறு கோடி practicing hindu's இருக்கிறார்கள்... உலகம் முழுக்க யோகா ஆயுர்வேதா என்று இந்து மதத்தை வாழ்க்கையில் பயிற்சி செய்கிறவர்களும், ஹிந்து மதத்தின் மேல் கரிசனம் கொண்டவர்களும் 100 கோடி பேர் இருக்கிறார்கள். பிறப்பால் வாழ்க்கை முறையாலும் உலகம் முழுக்க 200 கோடி இந்துக்கள் இருக்கிறோம். ஒரு பத்து லட்சம் சன்னியாசிகளை நம்மால் உருவாக்க முடியாதா... கட்டாயம் முடியும் ! செய்தே தீருவோம் !!

இஸ்கான் கௌடிய வைணவ சம்பிரதாயத்திற்கு என்ன நன்மையும் சேவையும் செய்ததோ, ராமகிருஷ்ண மடம் வேதாந்த சம்பிரதாயத்திற்கு என்ன நன்மையும் சேவையின் செய்தார்களோ... அதை சைவத்திற்கு கைலாசம் செய்தே தீரும். பரமசிவன் அருள்பவளே செய்தே தீருவோம். எனக்கு பதில் 44 வயது தான் ஆகுது ஐயா... அதுக்குள்ள பாதிக்காததும் இல்ல... பரம சிவன் அருளால் சாதிக்காததும் இல்ல... பல பிரச்சனைகளையும் சந்திப்பதால் ஒரு ஸ்திரத்தன்மை வந்துவிடுகிறது, நம்மைப் பற்றி நமக்கே ஒரு தெளிவு வந்துவிடுகிறது, பிரச்சனைகளை எல்லாம் சந்திக்காமல் வளரும் பசங்களெல்லாம் அடையாள சிக்கலிலேயே இருப்பார்கள் ஐயா. பிரச்சனைகளை சந்தித்து வளரும் தலைவர்களுக்கு தான் தன்னைப் பற்றி ஒரு தெளிவு இருக்கும். தன் நோக்கத்தைப் பற்றி ஒரு தெளிவு இருக்கும். தன் குறிக்கோளை பற்றி ஒரு தெளிவு இருக்கும். அடையாளச் சிக்கல் இருக்காது. ஒரு தலைவனுக்கு வலி தாங்கும் வலிமை தான் வலிமை. ரோடில் சுத்தும் ரவுடி பசங்க ஏதோ மூலையில் இருந்து கொண்டு மிரட்டி மாமூல் வசூல் பண்ணும் அந்த மாதிரி பசங்களுக்கு தான் மற்றவர்களுக்கு வலி கொடுக்கிற திறமை வலிமை. ஆனால் நல்ல தலைவனுக்கு கிரியேட்டிவ் ஆக contribute பண்ணுகிற தலைவர்களுக்கு வலி தாங்குகின்ற திறன் தான் வலிமை.

எனக்கு நாற்பத்தி நான்கு வயசுதான் ஆகுது ஐயா.. நம்பர் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா... 78 ல் பிறந்தேன் இப்போது 44 வயது தான் ஆகிறது. பரம சிவன் அருளால் நன்கு ஆரோக்கியமாக இருக்கிறேன், நிறையபேர் நான் செத்துப் போயிட்டேன்னு வீடியோ போட்டிருக்காங்க போலிருக்கு... அவை எல்லாவற்றையும் நான் இன்னும் பார்த்து முடிக்கல, வழக்கமா சிறிது நேரம் ஒதுக்கி இதை எல்லாவற்றையும் சுருக்கமாக எனக்கு காண்பித்து விடுவார்கள், என்னுடைய நலன் சம்பந்தப்பட்ட எந்த ஒரு கிளிப்ஸ் யையும் எனக்கு கொண்டு வந்து காட்டி விடுவார்கள், சமாதியிலிருந்து விட்டு மூன்று மாதம் கழித்து கண் விழித்து பார்த்தால் 4000 வீடியோ இருக்குங்கய்யா... இந்த 4000 கிளிப்ஸ் யையும் எப்ப பார்த்து முடிக்கிறது !

சிலபஸ் (syllabus) முடிக்காமல் பரிட்சை எழுத செல்லும் மாணவன் போன்று இப்போது நான் இங்கு வந்து அமர்ந்திருக்கிறேன். அவை எல்லாவற்றையும் இன்னும் நான் பார்த்து முடிக்கவில்லை... அவற்றுக்கு நான் எப்படி பதில் சொல்லுவது, ரியாக்ட் பண்ணுவது, ரெஸ்பான்ட் பண்ணுவது ! அதனால இந்த மூணு மாசம் வீடியோ போட்ட எல்லாரும் என்னை மன்னிச்சிக்கோங்க... என்னால வீடியோ பார்க்க முடியல... அளவுக்கு மேல் போனதால் rough ஆ எனக்கு சிறு குறிப்பு மட்டும் கொடுத்தாங்க.... இந்த மாதிரி இறந்து போயிட்டதா நியூஸ் போட்டு இருக்காங்கன்னு... இப்ப எனக்கும் சந்தேகமா இருக்கு, உயிரோடு இருக்கேனா இல்லையான்னு, அதனால நாம 18 பட்டியும் கூடி... அந்த காலத்தில் எல்லாம் சந்தேகம் வந்தால் என்ன பண்ணுவோம், இதனால் அறிவிப்பது என்னவென்றால் நம்ம அரசருக்கு ஏற்பட்டிருக்கும் தீராத சந்தேகத்தை தீர்த்து வைக்கும் பாடலை எழுதிக் கொண்டு வரும் புலவருக்கு ஆயிரம் பொற்காசுகள் என்று முரசு அடித்து அறிவிச்சுருவாங்க, இந்த காலத்துல எந்த புலவரை நாம தேடுறது, இந்த காலத்துல எந்த பிரச்சனை என்றாலும் பஞ்சாயத்து பண்ணி பைசல் பண்ணுவது யூடியூப் ல, சோசியல் மீடியாவில் இருக்குறவங்க தானே ! ரொம்ப காலத்துக்கு முன்னாடி பாட்டெழுதி வருகிற புலவருக்கு பரிசுன்னு அறிவிப்பார்கள். சில காலத்துக்கு முன்னாடி 18 படுத்தியும் பஞ்சாயத்துக் கூடி எது உண்மைன்னு முடிவு பண்ணுவாங்க. இப்ப எல்லாம் சோசியல் மீடியா கூடி முடிவு பண்ணுறது தானே, அதனால அப்புறம் ராமசாமி வரல கோவிந்தசாமி வரல சொல்லக்கூடாதப்பா எல்லாரும் கூடி எல்லா சோசியல் மீடியா இல்ல மெயின் ஸ்ட்ரிம் மீடியா msm மெயின் ஸ்ட்ரிம் மீடியா சோசியல் மீடியா யூடியூப் பேஸ்புக் எல்லாம் ஒன்னா சேர்ந்து பஞ்சாயத்து கூடி ஏதோ ஒரு வீடியோவை போட்டு பைசல் பண்ணி விடுங்கப்பா, நான் உயிரோட தான் இருக்கனா இல்லையா ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்கப்பா, எப்படியோ எனக்கு வந்து சந்தேகத்தை தீர்த்து வைங்கப்பா, அவ்வளவுதான் எனக்கு.... பரமசிவன் அருளால நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கேன், எந்த விதமான ஆரோக்கிய பிரச்சனையும் இல்ல, டாக்டர்கள் ரொம்ப தரோவா ஸ்டடி பண்ணிட்டு சொல்லிட்டாங்க, எல்லாம் உள்ளுறுப்புகளும் 22 வயது ஆரோக்கியமான ஒரு இளைஞன் அளவுக்கு நல்லா இயங்குது அப்படின்னு, எந்த பிரச்சனையும் இல்லை அப்படின்னு சொல்லிட்டாங்க ! நான் யூஸ்வலா இந்த சமாதிக்கு போறதும், சமாதியில் இருக்கிறதும், அதுக்கப்புறம் சகஜ சமாதிக்கு வந்து சத்சங்கம் கொடுக்கிறது இதெல்லாம் ரொம்ப சாதாரணம் தான். இந்த முறை என்ன ஆச்சுன்னா கொஞ்சம் காலம் அதிகமா போனதுனால கூட இருந்து பார்த்துக்கிற அந்த பக்தர்கள் சீடர்கள் சன்னியாசிகள் எல்லாம் பயப்பட ஆரம்பிச்சிட்டாங்க, ஒருவேளை சாமிக்கு ஏதாவது ஒன்னுன்னா உலகம் முழுக்க இருக்குற எல்லா பக்தர்களுக்கும் நாமதானே ஆன்சரபில் அப்படின்னு பயப்பட ஆரம்பிச்ச உடனே, அதனாலதான் நான் என்ன சொன்னேன்... "சரிப்பா கவலைப்படாதீங்க, உங்க தைரியத்துக்காக, உங்களுக்கு அந்த பயமில்லாமல் இருப்பதற்காக, உங்களுக்கு அந்த insecurity இல்லாம இருக்கிறதற்காக நீங்க யார வேணாலும் பக்தர்கள் டாக்டர்ஸ் கூட்டிட்டு வந்து வச்சுக்கோங்க, சோ அப்போ நீங்க வந்து கவனக்குறைவாக இருந்ததாக உங்கள் மேல யாரும் பக்தர்களோ இல்லை வேறு யாரும் அன்பர்களோ பழி சுமத்த முடியாது. மெடிக்கலா நீங்க என்ன பண்ணனுமோ எல்லாத்தையும் நீங்க பண்ணிட்டீங்கன்றதுக்கான நீங்க திருப்திக்காக பண்ணிக்கோங்க அப்படின்னு சொல்லிட்டேன். அதனாலதான் கண்விழித்து பார்த்தால் நம்ம பக்தர்கள் டாக்டர்கள் எல்லாம் ஒரு படையை திரட்டி உக்கார வச்சிருக்காங்க... ஏன்னா சின்ன வயசுல இந்த மாதிரி சமாதி எனக்கு என்னுடைய குருமார்கள் பழக்கும்போது என்ன பண்ணுவாங்க மலையில நிறைய குகையில் இருக்கு அங்க தான் உட்கார வைப்பாங்க, என்ன சின்ன வயசுலயே இந்த மாதிரி என்னுடைய குருமார்கள் கூட போனா வீட்ல தேட மாட்டாங்க, அவங்க குருமார்கள் பொறுப்பா பார்த்துப்பாங்க அப்படின்னு... சில நேரம் 15 நாள் சில நேரம் ஒரு மாதம் கூட சமாதியிலே உட்கார வைத்து பழக்குவார்கள், அப்ப என்ன பண்ணுவாங்க அவங்க இந்த சமாதியில் தான் இருக்கிறேன் உயிர் போகல அப்படின்னு எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு குருமார்கள் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு சின்ன முள் எடுத்து கால் விரலோ அல்லது கைவிரல் நுனியிலே குத்தி பார்த்தால் ரத்தம் வரும், அந்த ரத்தத்தை ஒரு மூலிகை இலையில் தடவி பார்ப்பாங்க, அந்த மூலிகை இலையில வந்து உடம்பு பங்க்ஷன் ஆயிட்டு இருக்கு அப்படின்ற பிராண லெவல் பிராணிக் லெவல் அத காமிச்சுரும். இப்ப நாம எல்லாம் பிளட் டெஸ்ட் பண்றோம் இல்லையா... ஒரு விரலில் ஒரு சின்ன ஊசி குத்தி அந்த ரத்தம் எடுத்து பிளட் டெஸ்ட் பண்றோம் இல்லையா அதே மாதிரி என்னுடைய குருமார்கள் பண்ணுவாங்க. அந்த பிராண லெவல்ல காமிச்சிரும், அதனால நல்லா சேஃபா உயிரோட தான் இருக்காங்க இறக்கவில்லை அப்படின்றதை கண்டுபிடிச்சுடுவாங்க. என்னா ஒரு மனிதன் இறந்து விட்டால் ஆறிலிருந்து எட்டு மணி நேரத்துக்கு மேல ரத்தம் வராது, அப்படித்தான் என்னுடைய குருமார்கள் கண்டுபிடிப்பாங்க, அவங்க சமாதியில் இருக்கும் போது கண்டுபிடிக்கிறதுக்கும் இப்படித்தான் எனக்கு கற்றுக் கொடுத்திருக்காங்க. நம்முடைய முன்னோர்கள் இந்த அறிவியல்ல மிகப்பெரிய கரை கண்டவர்கள், எனி ஹவ், நான் சொல்றேன், நான் உயிரோட இருக்கேன் அப்படின்றதுக்காக நம்பிட முடியுமா நித்தியானந்தா என்ன சொன்னாலும், அத எவிடன்ஸ் ஐ விட்னெஸ் இதெல்லாம் இருந்தா தானே நம்புவோம், அதனால நீங்க 18 பட்டியும் எல்லா தரப்பு சோசியல் மீடியா மெயின் ஸ்ட்ரீம் மீடியா எல்லாம் சேர்ந்து பஞ்சாயத்து கூடி ஏதாவது ஒரு பைசல் பண்ணி வீடியோ போடுங்கப்பா, ஒரு பைசல் பண்ணி விடுங்கப்பா, அவ்வளவுதான். நான் யூஸ்வலா ஏதாவது ஒரு நியூஸ் உண்மையா பொய்யா என்று தெரிஞ்சுக்கணும் அப்படின்னா நம்ம பக்தர்களுக்கு என்ன சொல்லுவேன்னா... "அப்பா சாணக்யா சேனல் திரு ரங்கராஜ் பாண்டே ஐயா என்ன சொல்றாரு அப்படின்னு கேட்டு தெரிஞ்சிட்டு வாங்கப்பா, அத பாத்துட்டு சொல்லுங்கப்பா, " அப்படின்னு சொல்லுவேன். ஏன்னா என்னை பொறுத்த வரைக்கும்.. நான் உண்மையா பொய்யான தெரிஞ்சிக்கிறது அவருடைய சேனல் பாத்துட்டுதான் முடிவு பண்ண சொல்லுவேன், ஒருவேளை ஏதாவது ஒரு இஷ்யூ வந்து, அவரு அதைப்பற்றி நியூஸ் போடலன்னா, அத பத்தி நாம தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்ல விட்ருப்பா, அந்த அளவுக்கு முக்கியத்துவமான விஷயமா இருக்காது அப்படின்னு சொல்லிடுவேன். இப்ப நானே உயிரோடு இருக்கேனா இல்லையான்னு தெரிஞ்சுக்கணும்னா என்ன பண்றது... அதையும் அவர் சேனல் பார்த்து தெரிஞ்சுக்கோங்கப்பா அப்படின்னு சொல்லிட வேண்டியதுதான். நல்லது, செய்ய வேண்டிய திருப்பணிகள் நிறைய இருக்கு, இந்த நான்கு மாதம் சாதுர்மாஸ்யம், எனது 42-வது சாதுர்மாஸ்யம், மூணு வயசுல என்னுடைய குருமார்கள் மடியில் உட்கார வைத்து பூஜை பண்ண வைத்து எனக்கு சாதுர்மாஸ்ய விரதத்தை துவக்கி வைத்தார்கள், இப்போது 42வது சாதுர்மாஸ்யத்தில் இந்த திருப்பணிகளை செய்து முடிப்போம்... உலகத்திற்கு செய்யும் நன்மைகள் தான் பரமசிவனுக்கு செலுத்துகின்ற காணிக்கை, பக்தி ! அதனால இந்தியாவில் இருக்கின்ற கயிலாயங்கள் அனைத்தும் இந்த விருதுகள் வழங்குகின்ற சமூகசேவை செய்வதில் போக்கஸ் பண்ணுங்க, உங்களுடைய முதல் முன்னுரிமையா வெச்சுக்கோங்க, ஏனென்றால் இன்றைய இந்தியாவுக்கு அவசியத் தேவை ஆலயங்கள் அல்ல... அதற்காக நான் ஆலயங்களை கட்டுபவர்களை குறை கூறவில்லை, கட்டுவது அவர்கள் விருப்பம். இந்தியாவிலுள்ள கைலாசத்தின் அன்பர்கள் பக்தர்கள் இவர்கள் சமூக சேவையை முதல் முன்னுரிமையாக வைத்து செயல்படுங்கள் என வேண்டிக் கொள்கிறேன்.

இந்தியாவுக்கு வெளியே இருக்கின்ற இப்போ அமெரிக்கா கனடா ஆஸ்திரேலியா போன்ற வெளியே இருக்கின்ற கைலாயங்கள் எல்லாம் ஒரு பத்தாயிரம் இந்துக்கள் வசிக்கின்ற பகுதிகளில் எல்லாம் ஒரு சிவாலயம் அமைப்பது என்ற நோக்கத்தோடு செயல்படுவோம். ஒருவேளை அந்த ஊரில் ஏற்கனவே ஒரு சிவாலயம் இருந்தால் அங்கு புதிதாக கட்ட வேண்டாம். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் வாழ்கின்ற எல்லா ஊர்களிலும் ஆலயம் இல்லாவிட்டால், ஒரு சிவாலயம் செய்வது என்கின்ற நோக்கத்தை Priority கொண்டு வேலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இன்னொரு ப்ராஜெக்ட் பண்ணிக் கொண்டிருக்கிறோம்... மைக்ரோ பைனான்சிங் ன்னு... அதற்கான லீகல் ஸ்ட்ரக்சர் பண்ணி முடிக்கல... இப்பதான் லீகல் ஒப்பீனியன், லீகல் ஸ்ட்ரக்சர் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன.. இன்னும் மூன்று மாதத்திற்குள் அதற்கு சட்டபூர்வமான வடிவம் கொடுத்து அதற்குப் பிறகு announce பண்ணுகிறேன், இந்து மதம் சார்ந்த சேவை செய்கின்ற சிறு குறு வியாபாரிகளுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்குவது பற்றிய திட்டம் அது. கோயிலைச் சுற்றி கோவில் சார்ந்த வியாபாரம் செய்பவர்கள், பூ கட்டி விற்பவர்கள், பிரசாத ஸ்டால் வைத்திருப்பவர்கள்... நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்... கோவிலை ஒட்டி தங்கள் வாழ்வாதாரத்திற்காக வியாபாரம் செய்யும் நபர்களும் கோவில் பெருங்குடி மக்களே ! காரணம் என்னவென்றால் அவர்கள் அங்கு இருப்பதனால்தான் கோயில் உயிரோடு இருக்கிறது. கோயில் பெருங்குடி கல் என்று பதினெட்டு குரூப்.. கோயில் பூஜை புனஸ்காரம் செய்து திருமேனி தீண்டி சேவை செய்யும் சிவாச்சாரியார்கள், அடுத்து கோவிலில் நடத்துகின்ற மணியம் பார்க்கிறவர்கள், நான் திருவண்ணாமலை ஸ்ட்ரெச்சர சொல்கிறேன், எனக்கு திருவண்ணாமலை தான் நல்லா தெரியும் அதனால, மலைமேல் தீபம் ஏற்றும் நாட்டார் குலத்தார்கள், அவர்களும் கோயில் குடிகள் தான் கோயிலை சுற்றியே தான் அவர்களுடைய வீடுகளும் இருக்கும். அதே மாதிரி தேர் புறப்படும் போது பின்பக்கம் கட்டை போடுகின்றவர்கள்...

இதேபோன்று 18 குழுக்கள் சேர்ந்துதான் கோயில் பெருங்குடி. நிச்சயமாக கோயிலைச் சுற்றி இருப்பவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக செய்தாலும் அவர்களும் கோயில் பெருங்குடி மக்களே. அதனால இந்தக் கோயில் பெண் குடிமக்களுக்கு வட்டியில்லாத கடன் கொடுக்கும் திட்டம் பண்ணிக் கொண்டிருக்கிறோம். உலகளாவிய சம்பந்தமுடைய திட்டம் ஆகையால் அதற்கு உலக அளவில் ஒப்புக் கொள்ளப்படும் சட்டரீதியான அமைப்பாக அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கின்றன. அதை செய்து முடிப்பதற்கு இன்னும் ஒரு மாத கால அவகாசம் தேவைப்படும். ஆனால் இந்த விருதுகள் வழங்குவதற்கான லீகல் ஸ்ட்ரக்சர் அனைத்தும் செய்து முடித்துவிட்டோம். அதனால் அதை வழங்குவதற்கு துவங்கலாம். இதைப் பார்க்கின்ற அன்பர்கள் பொதுமக்கள் கைலாசம் வேறு ஏதாவது விதத்தில் இந்துக்களுக்கு சேவை செய்யலாம் என்ற ஆலோசனைகள் கூற விரும்பினால், இந்த kailaasa. org க்கு அனுப்பலாம். அந்தந்த கைலாசத்தை நடத்துகின்ற அன்பர்கள் சீடர்கள் சன்யாசிகள் அந்த ஆலோசனைகளை நிச்சயமாக உபயோகப்படுத்துவார்கள். இது எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். இந்த நான்கு மாதங்களுக்குள் ஒரு புது ஆரம்பம், புதியதோர் ஆரம்பம், upgraded new beginning நமக்கு நாமே செய்து கொள்ள வேண்டும் என்று கைலாசவாசிகள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் அடுத்தடுத்த சத்சங்கங்களில் தொடர்ந்து வர தொடங்குகிறேன். சம்பந்தமாக என்னுடைய வேலைகளை நானே செய்துகொள்கிறேன். அன்பர்கள் எல்லோரும் தெரிந்து கொள்ளுங்கள், யாரும் கவலைப்பட வேண்டாம்... காலையில் எழுந்து ஆகமப்படி என்னுடைய தினசரிக் கடமைகளை, மரபு சைவ வாழ்க்கையை அமைத்து வைத்திருக்கிறேன். எப்பவுமே நான் சொல்வது உண்டு, நிர்விகல்ப சமாதியில் இருக்கும் போது மட்டுமே நானும் பரமசிவனும் ஒன்று என்ற நிலையில் இருப்போம், அடுத்த நிலையில் சவிகற்ப சமாதியில் பரமசிவனுடைய பாகம் நாம், அவருடைய நீட்டிப்பே நாம் என்கின்ற உணர்வில் இருப்போம். சகஜ சமாதியில் அவர் அம்மையப்பன், நாம் அவருடைய பிள்ளை என்கின்ற நினைவில் இருப்போம். So சகஜ சமாதியில் பார்த்தீர்கள் என்றால் என்னுடைய வாழ்க்கை மரபு சைவ வாழ்க்கை, காலையில் எழுந்தவுடன் ஆகமப்படி நெற்றியில் திருநீறு பூசி, காமிக ஆகமத்தில் சொல்லியபடி தான் பல் துலக்குவதில் இருந்து தன்னை தூய்மைப் படுத்திக் கொள்ளுதல் வரை அதே Procedure ஐ ஃபாலோ பண்ணுவேன். மண்ணால் தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள், அதனால் கங்கை மண் கலந்த சோப்புக் கட்டியை தான் உபயோகப் படுத்துவேன், அதுக்காக ஸ்பெஷலா செய்து வைத்திருக்கிறோம், வள்ளலார் சொல்லுகின்ற கரிசலாங்கண்ணியை வைத்து பித்தம் கபம் இவற்றை எல்லாம் சுத்தம் செய்து விடுவோம். என்னுடைய தினசரி கடமைகளை நானே பார்த்துக் கொள்கின்றேன். என்னுடைய ஒருவேளை உணவு வாழ்க்கை முறைக்கு வந்துவிட்டேன், தினந்தோறும் ஒரு வேளை நன்றாக சாப்பிடுகிறேன், ஹெல்த் நல்லா இருக்கு, பக்தர்கள் யாரும் பயப்பட வேண்டாம், நான் உயிரோடு இருக்கேனா இல்லையா என்பது மட்டும்தான் சந்தேகமாக இருக்கிறது. அதை நம்முடைய யூடியூப் பெருங்குடி மக்கள் பதினெட்டு பட்டி கூடி பஞ்சாயத்து பண்ணி சில நாட்களில் பைசல் பண்ணுவார்கள். மற்றபடி நான் ஆரோக்கியத்தோடு இருக்கிறேன், என்னுடைய பூஜைகளை எல்லாம் தொடர்ந்து செய்கிறேன். சாதுர்மாஸ்ய பூஜை ரொம்ப நேர பூஜை, அதனால்தான் சத்சங்கத்திற்கு தொடர்ந்து வராமல் இருந்தேன், இப்போ அந்த ரொம்ப நேர பூஜையும் பண்ணி சத் சங்கத்திற்கும் வருகிற அளவுக்கு நன்றாக இருக்கிறேன். அதனால இதுக்கு மேல தினம் சத்சங்கத்திற்கு வர முயற்சி பண்ணுகிறேன். வந்து உங்களோடு ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் நேரம் செலவு செய்துவிட்டு, பக்தர்களை பார்த்து பேசி உறவாடி விட்டு செல்வதற்காக வருகிறேன். நல்லது.

நீங்கள் எல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்யானந்த மாகிட ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள் !


Photos

FB-Photos- LIVE SATSANGH ENG & TAMIL


Link to Facebook Page

https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/997814014235692
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/pfbid037Pkw6YFQ8Kc65iNZ3b3Sogq2nZGD4VFLBgkWYDEX25vMWv9TZZEFM4yvNin5dg7Xl
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/pfbid0dbVQDmzk36SaTXZPHbnngbXV6v4bRbvGUE1J8trVfYxm3tRXtrw6fs7dq6CdudSMl
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/pfbid0pax3ekPEw3tX7xpgDpdbk5yh3uBEcKCVxvBRQzaniisYyxuyH9zNcog8yPNdCNdVl
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/pfbid0C6nYUtXPkjEijTGBDNw1g8HePu8iDxwNYrvFdutNv1fwiCFTCUiYtzxHeKZjKhCyl
https://www.facebook.com/srinithyananda.swami/posts/pfbid0BLfWPmyLrTfnFKKrpQMFky3XMCud2pYQoX22uzYrEhYpFXQ3AonSEFkdceJM4B9dl