November 17 2015

From Kailasapedia
Jump to navigation Jump to search

Title:

ஆதி சைவம் - பாகம் 2: சரியை

Link to Video:

Video Audio




Link to Video:

Transcript in Tamil

சைவம் - நாள் - 2 உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன் ஆதி சைவம் வாழ்வியல் நெறிகளை வாழ்வியல் முறைகளை ஒவ்வொரு உயிரும், மனிதன் மட்டுமல்ல விலங்குகள் மாத்திரமல்ல ஒவ்வொரு உயிரும் தனக்குள் இருக்கும் ஜீவன் சிவனோடு காலந்து ஷிவோஹம் என்னும் அனுபுதியை வாழ்கை முறையாக வாழுகின்ற ஜீவன்முக்த தன்மையை வாழ்கை முறையாக வாழுகின்ற வாழ்வியல் சைவம். சைவம் ஒரு வாழ்வியல்முறை, உயிர்கள் உண்டாகும் பொழுதே கடவுள் துகள் என்கின்ற நிலையில் இருந்து கடவுள் என்கின்ற நிலைக்கு அவைகள் உயர்வதற்காக பரம்பொருளான சதாசிவனே உலகிற்கு அளித்த பிரபஞ்சத்திற்கு அளித்த வாழ்வியல்முறை சைவம்.

சைவத்தின் மிக முக்கியமான நன்கு பகுதிகளான சரியை - தினசரி வாழ்வியலில் நம்முடைய உடலும் மனமும் இருக்க வேண்டிய முறை - செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை . கிரியை - ஜீவன் தன்னுள் இருக்கும் அமானுஷ்யமான அளப்பரிய சக்திகளையும் ஆன்மீக அனுபவங்களையும் பக்தியையும் வௌிப்படுத்தி வாழ்வதற்கான வாழ்கை முறை கிரியை.

யோகம் - ஜீவன் சிவமயமாக சதாசிவ பரம்பொருளோடு ஒன்றுவதற்கு உடலையும் மனதையும் உபயோகித்து செய்ய வேண்டிய செயல்கள், கடைபிடிக்க வேண்டிய சாதனை முறை யோகம்.

ஞானம் - சதாசிவனோடு இரண்டறக்கலந்து இருப்பின் இருப்பினால் இருப்பே இருப்பை உணர்ந்து உள்ளதை உள்ளபடி உள்ளத்தில் உள்ளி உள்ளுக்குள் இருந்து உள்ளே உறைந்திருக்கும் சத்தியத்தை சதாசிவத்தை நிதியத்துவமை நினைப்பும் மறப்பும் இலாத நெஞ்சினாய் நீர்த்தாரை போன்று நித்தமும் சதாசிவத்தில் நிலைத்திருக்கும் நித்தியானந்த நிலையை தான் ஞானம் என்று சைவம் விளம்புகின்றது. சைவத்தின் இந்த நான்கு முக்கியமான பாகங்களில், ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் - நான்கு படிகள் அல்ல, பாகங்கள். படிகள் என்பது வேறு, பாகங்கள் என்பது வேறு. படிகள் என்றால் ஒரு படியை கடந்து மறு படிக்கு செல்ல வேண்டும், மறுபடியை கடந்து மூன்றாம் படிக்கு செல்ல வேண்டும். மூன்றாம் படி கடந்து நான்காம் படி செல்ல வேண்டும். இது அப்படி அல்ல. ஒரு படியை கடந்து மறுபடி செல்வது அல்ல, இவை நான்கும் ஒரே நேரத்தில் வாழ வேண்டியவை. ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், மனித இனம், கடந்த சில நூறாண்டுகளில் செய்த மிகப்பெரிய தவறு, சரியை கிரியை யோகம் ஞானம் இந்த நான்கும் ஒன்றிற்கு அடுத்து ஒன்று அடுத்து படி என்று புரிந்து கொண்டது தான் மனித இனம் செய்த மிகப்பெரிய தவறு. அதனால்தான் மூடத்தனங்களும் அறிவிலித்தனங்களும் வாழ்வியலை விட்டு மிகவும் ஒதுங்கிய கருத்துக்கள் மதங்களாக கடந்த இரண்டு மூன்றாயிரம் ஆண்டுகளில் உருவெடுத்தது. சைவம் தவிர வேறு சில மதங்கள் உருவெடுப்பதற்கான மிகப்பெரிய காரணம் மனிதன் செய்த இந்த மூடத்தனம். இந்த நான்கும் ஒன்றிற்கு அடுத்து ஒன்று என்று நினைக்கும் பொழுதே அகங்காரம் பிடித்த சில மனிதர்கள் நான்காவது படிதான் உயர்ந்தது என்று கற்பனை செய்து கொண்டு அந்த கற்பனையினால் முதல் படிகளை கடைப்பிடிக்க வேண்டாம் என்கின்ற மூடத்தனத்தை உருவாகிக்கொண்டு உருவ வழிபாடே இல்லாத ஒரு மதத்தை உருவாக்க முடியும் என்கின்ற மூடத்தனத்திற்கு மூர்கத்தனடதிற்கு மதம் என்கின்ற கருத்தையும் காட்டி, அதனால் ஏற்படும் மனம் குழம்பிய நிலையினால் உள்ளே இருக்கும் கோபத்தையும் கொந்தளிப்பையும் வௌிக்கொட்டும் நிலைக்கு அறப்போர் என்றும் தெய்வப்போர் என்றும் பெயரிட்டு எல்லாமூட தன்மைகளுக்கும் மாயைகளுக்கும் நிஜத்தில் இருந்து மிகவும் விட்டுவிலகி மாயையில் சிக்கி மாயையே அஞ்ஞான இருளையே மாதமாகவும் காட்டுகின்ற மிகப்பெரும் கொடுமை மனித இனத்திற்கு நிகழ்ந்ததற்கான காரணம், முதல் காரணம், இந்த நான்கும் ஒன்றிற்கு அடுத்து மற்றொன்று என்கின்ற தவறான புரிதல். நான்கும் அங்கங்கள், படிகள் அல்ல. ஞானியும் திருமேனி வழிபாடு செய்தே தீர வேண்டும். சரியை நிலையிலும் கிரியை நிலையிலும் சொல்லப்படும் திருமேனி தீண்டி வழிபடுவது ஞானநிலை அடைந்தவுடன் தானை விட்டுப்போகும் என்று கற்பனையும் கனவுகளும் இவைகளை, ஒன்ரைத்தாண்டி மற்றொன்று என்கின்ற மூடக்கருத்துக்களை சொல்லி இல்லாத மதங்கள் எல்லாம், இல்லல் அளிக்கும் இல்லாத மதங்கள் எல்லாம் இவ்வுலகில் வந்திட, மூடர்களே முதற்காரணம் ஆனார்கள். சைவத்திலிருந்து விலகி பரம்பொருள் சதாசிவன் உலகிற்கு அளித்த சத்தியமான வாழ்வியல் நெறியிலிருந்து விலகி, ஏற்பட்ட எல்லா மதங்கள், வாழ்கை கோட்பாடுகள்- அயவநசயைடளைஅ, பணம் சார்ந்த வாழ்கை கோட்பாடுகள், இது எல்லாமே, அவைகளின் அடித்தளமே அஞ்ஞானமும் மாயையும்தான். ஒரு சின்ன கதை : ஒரு ஊருக்கு ஒரு பெரிய முதலாளி, பணக்கார முதலாளி தொழில் தொடங்கரதுக்காக வந்தார். வந்தவுடனே ஊர்ல இருந்த மக்கள் எல்லாம் சந்தோஷப்பட்டாங்க. இவர் வந்து தொழில் தொடங்கி ஊரே வளம் ஆகப்போகுதுன்னு. அவர் முதல்ல ஊர் முழுக்க சுவரொட்டி ஓட்டினார். நான் பாம்புகள் சார்ந்த ஒரு வியாபாரம் செய்யப்போகிறேன் ஒரு பாம்பை பிடித்து வந்து கொடுத்தால் ஆயிரம் ரூபாய். மக்கள் கண்ணில் பட்ட பாம்பெல்லாம் பிடித்து, கையில் கிடைத்த பாம்பெல்லாம் பிடித்துக்கொண்டுவந்து கொடுத்து, ஆயிரம் ருபாய் பெற்றுச்சென்றார்கள். ஒரு வாரம் கழித்து ரெண்டாவது சுவரொட்டி ஓட்டினார். ஒரு பாம்புக்கு இரண்டாயிரம் ருபாய் அளிக்கின்றேன். மக்கள், கண்ணில் பட்டவை மாத்திரமல்லாது தேடிஎல்லாம் பிடித்துக்கொண்டு வந்து கொடுத்து பணம் பெற்றுச்சென்றார்கள். மூன்றாவது வாரம் சுவரொட்டி ஓட்டினார். ஒரு பாம்புக்கு ஐந்தாயிரம் ருபாய் கொடுக்கிறேன். மக்கள், சுற்றி இருக்கும் வயல் காடெல்லாம் துழாவி, இருந்த பாம்பைஎல்லாம் கொண்டு வந்தார்கள். இதற்குமேல் சுற்றுப்புறங்களில் பாம்பல்ல, பாம்பு முட்டை கூட இல்லை. அடுத்த சுவரொட்டி அதிரடியாக வந்தது. பாம்புக்கு பத்தாயிரம் என்று. உடனே மக்கள் சுற்றி இருந்த காடு மேடெல்லாம் திரிந்து, வனம் காடு ஆரண்யம் என்னும் எந்த இடத்திலும் ஒரு பாம்பை விடாமல் கொண்டு வந்தார்கள். தமிழில் மட்டும்தான் காட்டுக்கு மூணு வார்த்தை. வனம். காடு, ஆரண்யம். ரம்யமாக இருப்பதற்காக மனிதன் உருவாக்கியது ஆரண்யம். மனிதனாலோ வேறு யாராலோ உருவாக்கப்படாமல் வனாந்தரமாக இருப்பது வனம். உருவாகினாலும் உருவாக்காகவிட்டாலும் கட்டுப்படுத்த முடியாமல் அடர்ந்து கிடப்பது காடு. சுற்றி இருக்கும் வனம், காடு, ஆரண்யமெல்லாம் மக்கள் சுற்றி இருந்த பாம்பையெல்லாம் கொண்டு வந்து கொடுத்தார்கள். அடுத்து வந்தது அதிரடி அறிவிப்பு. பாம்பக்கு 50,000 சுவரொட்டி ஒட்டி விட்டு இரண்டு நாள் முக்கியமான வேலைக்காக வௌியுர் புறப்பட்டு சென்றார் முதலாளி. ஊர் மக்கள் எல்லாம் சொன்னார்கள் பாம்பே இல்லையே ஐம்பதாயிரம்னு சொல்லியிருக்கிறார்களே சில பேர் தருமி போல தனியாக புலம்பினார்கள் எனக்கில்லை எனக்கில்லை! அங்கிருந்த ஒரு வேலைக்காரன் ஊரிலுரிந்து சில மனிதர்களை அழைத்து கவலையே படாதீங்க என் முதலாளி திரும்ப வரதுக்கு இரண்டுநாள் ஆகும் அவரு பிடிச்சு வெச்சுட்டு போன பாம்பெல்லாம் என்கிட்டதான் என் கண்ட்ரோல்லதான் என் கட்டுபாட்டுல்லதான் இருக்கு இருபத்து ஐ ஆயிரம்னு சொல்லி ஒரு பாம்பு உங்களுக்கு கொடுதிடறேன் வேணும்ட்ரவர்களெல்லாம் எடுத்திட்டு போங்க நாளைக்கு காலேல ரெண்டு நாளைக்கு அப்புறம் திரும்பி வந்த பிறகு கொடுத்த அம்பது ஆயிரம் வாங்கிக்கோங்க அம்பது ஆயிரம் வாங்கின பிறகு கமிஷனா எனக்கொரு பத்தாயிரம் கொடுத்திடுங்க. வீட்டில் இருந்த ஐயாயிரம் பாம்பும் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. மறு நாளில் இருந்து வேலையாள் முதலாளி இருவரையும் காணோம். ஊர் மக்கள் சொந்த ஊர் பாம்பை இரண்டு ஆயிரத்துக்கு விற்று இருபத்து ஐயாயிரதுக்கு வாங்கியதுதான் மிச்சம் இதுதான் பணம். இதுதான் ளாயசநஅயசமநவ. இதுதான் ளாயசநஅயசமநவ. ஆழ்ந்து பார்த்தீர்களானால் இதுதான் றயடடளவசநநவ. இதுதான் ளாயசநஅயசமநவ. பொருளுக்கு மதிப்புண்டு என்று சொல்பவனும் மதிப்பில்லை என்று சொல்பவனும் உறவாடும் களவாளிகள். அவர்கள் உறவாடும் களவாணிகள் என்று சந்தேகப்படாதவரை நாம் ஏமாற்றப்படுவோம். நம் வீட்டில் நம் ஊர் பாம்பை பிடித்து நாமே கொடு பொய் இரண்டு ஆயிரத்துக்கு விற்று அந்த பாம்பை 25000 கொடுத்து வாங்கி நம் வீட்டில் வைத்து இருக்கும் வேலையை நம்மை செய்ய வைப்பவர்கள்தான் றயடடளவசநநவ பங்குச்சந்தை தன்னுடைய பங்களிப்பு எதுவுமே இல்லாமல் பங்குச்சந்தையை உருவாக்கி மக்களுக்கு எதையோ அவர்களிடம் வாங்கியது போலவும் கொடுத்தது போலவும் கற்பனையை உருவாக்கி, அவர்கள் வாங்கியது கொடுத்தது இரண்டிற்கும் கற்பனையான மதிப்பையும் காட்டி பிறகு கற்பனை மதிப்பிற்கு வரியும் கூட்டி கடைசியில் விழித்து பார்க்கும் பொழுது கற்பனை புஜ்ஜியங்கள் கரைந்துபோய் நிற்கும். அதற்கு நாம் நம்மையே குறை சொல்லிக்கொள்வோம். வேறு யார் மீதும் குற்றம்சொல்லக்கூட தெரியாத நிலையில் நாம் இருப்போம். இதுக்கு பெயர்தான் பங்குச்சந்தை. முதலாளிக்கோ பங்குச்சந்தை 25000 கொடுத்து 5000் பாம்பு வாங்கினவன் எல்லாம் வேக வேகமா வௌியில சொல்லாம உக்காந்து இருந்தான் ஏன்னா திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி. வாங்கினவன் முதலாளிக்கு தெரியாம அந்த மாதிரி வாங்கலாமா தப்பு தப்பு பண்ணினதாலதான் உனக்கு இந்த மாதிரி நஷ்டமாச்சு ஏதாவது ஒரு காரணத்தை அவர்களே கற்பித்துக்கொண்டு கேள்வி கேட்காமல் இருக்கின்ற சுழலையும் உருவாக்கி இதுதான் பங்குச்சந்தை வர்த்தகம்னு சொல்றது. ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் ஒவ்வொரு வாழ்க்கை முறையுமே அதை உருவாக்கியவர் உணர்வு நிலையை சார்ந்துதான் உருவாக்கப்படுகிறது. ஒரு வாழ்க்கை முறையை ஒரு மதத்தை ஒரு தத்துவத்தை உருவாக்கியவன் கொடூரமானவனாக தாக்குவதும் போருமே வாழ்க்கை என்பதுபோல் கருத்துக்களை உடையவனாக இருந்தால் அவனை கடைபிடிக்கும் எல்லோரும் கடைசிவரை கதி அதுதான். ஏனென்றால் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவன் கருத்துக்களில் எல்லாம் இறுதியில் இதுதான் எதிரொலிக்கும் எது உங்கள் இதயத்திற்குள் ஒலித்துகொண்டிருக்கிறதோ அதுதான் உங்கள் த்வனியிலும் இறுதி எதிரொலியாக இருக்கும். நீங்கள் என்னதான் வார்த்தைகளை மாற்றி விளையாடினாலும் வார்த்தைகளுக்கு இடையில் வருகின்ற செய்தி உழவெநஒவ வார்த்தைகளுக்கு கொடுக்கப்படும் முன்னுரையும் பின்னுரையும் உங்கள் இதயத்தில் இருக்கின்ற உணர்வு தானாகவே நீங்கள் என்ன எழுதினாலும் அதன் முன்னுரையும் பின்னுரையுமாய் மாறிவிடும். முன்னுரைப்பும் பின்னுரைப்பும் நீங்கள் என்னுரைத்தாலும் மாற்ற இயலாத அடி ஆதாரத்தோடு செய்தியின் சாரமாக மாறிவிடும். ஆழந்து புரிஞ்சுக்கோங்க எழைடநவெ ஆன ஒரு நபரை என்னதான் அன்பைபற்றி பேசினாலும் அமைதியைபற்றி அதன் வௌிப்பாடு இறுதியில் விகாரமான வேதனையான வன்முறை ஆகத்தான் இருக்கும். பல்வேறு தத்துவங்களையும் வாழ்க்கை முறையையும் ஆழ்ந்து பார்த்த அனுபவத்தில் இருந்து சொல்கின்றேன் ஆதி சைவம் தவிர மற்ற எல்லா வாழ்க்கை முறைகளுமே மற்ற எல்லா நெறி முறைகளுமே வாழ்க்கையின் வேறு வேறு படி நிலையில் இருந்தவர்களால் உருவாக்கபட்டது. சிலபேர் ஆழமான வன்முறையில் வீழ்ந்து கிடந்த உணர்வுடையவர்கள் சிலபேர் ஒடுக்கல் வாங்கல் எனும் பேரம் மன நிலையில் இருந்தவர்கள் சிலபேர் பெயர் புகழ் என்பதையே குறிக்கோளாக வைத்து வாழ்ந்தவர்கள் இவர்கள் யாருடைய வார்த்தைகளை நீங்கள் வாழ்ந்தாலும் உங்களுக்குள் இருக்கும் கடவுள்துகள் கடவுள்நிலயை அடையுமா என்பதை நிச்சயம் சந்தேகம் மட்டும் அல்ல சாத்தியமே இல்லை என்பதுதான் சத்தியம். ஒவ்வொருவருக்குளும் கடவுள்துகளை கடவுளாய் மாற்றிடும் ஒரே வாழ்வியல் முறை ஆதிசைவம். எங்கு நீங்கள் இருக்கிறீர்களோ அங்கிருந்து துவங்கி எங்கு நீங்கள் செல்ல வேண்டுமோ அங்குவரை எல்லா உயிர்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் வழி காட்டும் ஒரே வாழ்வியல் முறை ஆதி சைவம். ஆதி சைவத்தின் சரியை பாகத்தை இன்றிலிருந்து ஆராய்வோம் சரியை வாழ்க்கையை அனுசரிக்கும் முறை அனுசரிக்கும் முறை தான் சரியை. அனுசரித்தல் என்றால் தினந்தோறும் கடைபிடித்தல் தினந்தோறும் கடைபிடிக்க வேண்டிய அனுசரணை செய்ய வேண்டிய அனுசரிக்க வேண்டிய விதிகள் எண்ண ஓட்டங்கள் அனுசரிக்க வேண்டிய சிந்தனை ஓட்டங்கள் அனுசரிக்க வேண்டிய வாழ்க்கைமுறை. எங்கிட்ட பலபேர் வந்து கேக்கறதுண்டு இறைவனை அடையறதுக்கு எதாவது ளாழசவஉரவ இறைவனை அடையணும் எதாவது ஒரு வநஉரெஙைரந கொடுங்க இன்னைக்கு காலைல ஆனந்த யோகத்துக்காக வந்திருந்த மூன்று மாணவர்கள் நம்ம ஆனந்த யோகம் துறைக்கான பொறுப்பாளர் அத்வைதானந்தாவிடம் போய் சொல்லி இருக்கிறார்கள் ’’நாங்கள் இங்கு பாடங்கள் படிப்புபோல படிக்கதான் வந்தோம் த்யான நுட்பங்கள் ஸ்வாமியினுடைய சத்சங்கங்கள் கேட்டு மனம் என்றால் என்ன அது எப்படி கட்டுபடுத்துவது ஜீவன் முக்தி எப்படி அடைவது என்ற கருத்துக்களை எல்லாம் கேட்டு மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்து அதை வழ வேண்டும் என்று நினைத்தோம் அது சார்ந்த பாடங்களை படிக்க வகுப்பறை போல் அமர்ந்து அந்த நுட்பங்களை கற்றுக்கொள்ளதான் இங்கே வந்தோம் இங்கு ஆடல் பாடல் பக்தி என்று பல்வேறு விஷயங்கள் நடக்கின்றன எங்களுக்கு ஆடலை கற்றுக்கொள்ள விருப்பமில்லை பாடலை கற்று கொள்ள விருப்பமில்லை பக்தியை விக்ரஹ வழிபாட்டை கற்றுக்கொள்ள விருப்பமில்லை இதெல்லாம் எங்களுக்கு வேண்டாம் பாடங்கள் நுட்பங்கள் இவைகள் மட்டும் கற்று கொடுக்கிறார்போல் நிகழ்ச்சிதான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்’’ என்று சொன்னார்கள் அத்வைதானந்தர் வந்து என்னிடத்தில் சொன்னபோது முதல் வார்த்தைநான் சொன்னது அவர்களை திருப்பி அனுப்புங்கள்னு நான் சொன்னேன். ஆழ்ந்து புரிஞ்சுக்கோங்க ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் மனித மனம் நாகரிக காலத்தில் எல்லாவற்றையுமே குறுக்கு பாதை ளாழசவஉரவ குறுக்கு பாதை குறுக்கு வழி மூலமாக அடைந்துவிட துடிக்கிறது ஆனா ஒரு பெரிய பிரச்சனை குறுக்கு வழி மூலமா எல்லாத்தையும் வேக வேகமா அடைஞ்சப்புரம் அடையறதுக்கு ஒண்ணுமே இல்லாம ஆன வாழ்க்கை மட்டும் உங்கள் முன்னாடி வெறுமனே பறந்து விரிந்து கிடக்கும்போது என்ன செய்வீர்கள் செய்வதற்கு ஒன்றும் இல்லாமல் வாழ்க்கை முன்னால் இருக்கும் பொழுது நீங்கள் செய்வதுதான் மன உளைச்சல். செய்வதற்கு ஒன்றுமில்லை ஆனால் செயல் இனி வாழ்க்கை முன்னால் விரிந்து கிடக்கின்றது ஏன்னா எல்லாத்தையுமே குறுக்கு வழியில முடிச்சாச்சு. நல்லா புரிஞ்சுக்கோங்க குறிக்கோளும் குறியும் கோளும் அதை அனுசரிக்க வேண்டிய சரியையும் இருந்து வாழ்க்கையை வாழ்வீர்களானால் வாழ்க்கை, இனிக்கும், மணக்கும். மீண்டும் மீண்டும் மனம் திகைத்து, திகைந்து ஆனந்தத்திற்குள் தீஞ்சுவையாய் இனிக்கும். செய்வதற்கு சரியையும், அனுசரிக்க சரியையும், அது கட்டும் குறியும் கோளும் இல்லாமல் போனால், காலம், வாழ்கை, உங்கள் முன் விரிந்து கிடக்கும். அதை வாழத் தெரியாது என்கின்ற நேரத்தில் தான் தானாக உடலும் மனமும் ஒன்றோடு ஒன்று பொருந்தியிருக்க இயலாது நொடிந்து விழுவது தான் மன அழுத்தம், மன உளைச்சல், னநிசநளளழைெ என்று சொல்வோம். ஆழ்ந்து புரிஞ்சுக்கோங்க, குறிக்கோளும், அதை அடையும் சரியையும் வாழ்க்கையில் இருக்கும் வரை, நீங்கள் காலத்தின் தலைவனாய் இருப்பீர்கள். நேரம் கிடைக்க கிடைக்க வாழ்க்கை இனிக்கும். எத்துனை நாள் உங்களுக்கு கிடைக்கிறதோ அத்துணை நாளும் வாழ்க்கை ஆனந்தமாகவும் இனிப்பாகவும் இருப்பதாகத் தோன்றும். குறிக்கோளும் சரியையும் இல்லாமல் போனால், அதேக் காலம் உங்களைக் கொல்லும். இந்த உதாரணத்தை புரிந்து கொள்ளுங்கள். காலம் உங்களைக் கொல்லும். தினசரி அனுசரிக்க ஏதுமில்லை என்றால், அது காட்டும் உயர்ந்த குறிக்கோள் ஏதும் இல்லை என்றால், வாழ்கையை உங்கள் முன் வைத்துக்கொண்டு என்ன செய்வீர்கள்? ரெண்டு நாள் படுக்கையிலிருந்து எந்திரிக்காம தூங்கலாம், மூன்றாவது நாள் என்ன பண்ணுவீங்க? காலத்தை நகர்த்துவதே நரகமாக இருக்கும். காலத்தை நகர்த்துவதே நரகமாக இருத்தலைத் தான் மன உளைச்சல்ன்னு சொல்றோம். குறுக்கு வழி கண்டு பிடித்த சமுதாயம் எல்லாமே னநிசநளளழைெ ல இருக்கும். ஏனென்றால் குறிக்கோள் குறுக்கு வழியால் அடையப்படுவதனால் வாழ்கையின் பெரும் பகுதிக்கு நிரப்ப ஒன்றும் இல்லை. இந்த குறிக்கோளை குறுக்கு வழியில் அடைந்தே பழகிய மனிதர்கள், கடவுளுக்கும் குறுக்கு வழி உண்டான்னு தான் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். கடவுள் ஒன்னும் பொட்டிப்பாம்பில்ல, நீங்க எதாவது ஒரு மந்திரத்த பு, பு, பு ன்னு மகுடி மாதிரி ஊதுனா உடனே எந்திரிச்சு ஆடறதுக்கு! தௌிவாக சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். ஜீவன் சிவனாக மாறுவதற்கு தனியாக எந்த குறுக்கு வழியும் நுட்பமும் பிராணயாமமும் த்யானமும் எதுவுமே கிடையாது. வாழ்கைமுறை மட்டும்தான் வழி. வாழ்கை முறை அப்டிங்கறது நேர் வழி. அது தவிர வேறொரு வழி. கிடையாது. வாழ்கை முறையே பன்படுவதற்கு, மேன்படுவதற்கு, மேன்மைபடுவதற்கு யோகங்கள் பிராணயாமம் இதெல்லாம் உதவலாம். ஆனா, இந்த யோகம் பிராணயாமம் த்யானம் எல்லாவற்றினாலும் உங்கள் உடலையும் மனதையும் மேம்படுத்தி இறைவனை உணர்ந்தால்கூட உங்களுடைய சரியையின் மூலமாகத்தான் உணர்ந்த அனுபவத்தைக்கூட நிரந்தரமான நித்யானந்தமாக மாற்றிக்கொள்ள முடியும். ஆழ்ந்து கேளுங்கள் - என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்றேன் - பன்னிரண்டு வயதில் ஜீவன் முக்த அனுபவம் எனக்குள் மலர்ந்தாலும் கூட, பதினொரு வயதில் அருணகிரியோகீஸ்வரரோடு அத்வைத அனுபவம், பன்னிரண்டு வயதில் சுத்தாத்வைத அனுபவம், இது எல்லாம் நடந்திருந்தாலும் கூட, சரியை என்னும் வாழ்கை முறை மேம்பட்ட பிறகு தான் இருவத்திரண்டாம் வயதில் அந்த அநுபுதி இயற்கையான நித்யானந்தமாக நிலை பெற்றது. சரியை என்னும் வாழ்க்கை முறையை ஒதுக்கி வைத்து விட்டு ஏதோ சில பிராணாயாமம் தியானம் ஏதோவொரு ரகசிய நுட்பங்களை ரகசிய மந்திரங்களை கண்டுகொண்டு அதன்மூலமாக பாம்பாட்டி போல மகுடி ஊதி வளைத்துவிடலாம் என்றும் மந்திர தந்திரங்களால் மயக்கி நம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடலாம் என்றும் நினைப்பது குருடன் குருடனுக்கு வழி காட்டும் வழி மாதிரிதான் குருடன் குருடனக்கு வழி காட்டி குருட்டும் குருட்டும் குருட்டு ஆட்டமாடி குழியில்தான் விழும். குருடன் குருடனுக்கு வழி காட்ட குருடும் குருடும் குருட்டு ஆட்டமாடி குழியில்தான் விழும் நவீன யுகத்துல நவீன கால குருமார்கள் மனித இனத்தை பிடித்த பீடைகள் இந்த பீடைகள் செய்கிற மிக பெரிய பிழை விக்ரஹ வழிபாடு தினசரி அனுசரிக்க வேண்டிய சரியை வாழ்க்கை முறைகள் இதெல்லாம் தேவை இல்லை ஏன்னா நவீன கால மனிதனுக்கு என்னன்னாலும் தரஅிளவயசவ பண்ணனும் எந்த அயஉாநைெ வாங்கினாலும் அதை ளவநி டில ளவநி ஆகா கத்துகிட்டு ழிநசயவந பண்றதுக்கு எல்லாம் கூட பொறுமை இல்லை. கார் வாங்கினாலும் அந்த அயரெயட யாரும் படிச்சு பாக்கறது கிடையாது நேரா உக்காந்து தரஅிளவயசவ பண்ணி ஓட்ட கத்துக்கணும் ஒரு உடற்பயிற்சி செய்யற கருவி வாங்கினாகூட அதை எப்படி உபயோகிப்பது அப்படிங்கற புத்தகத்தை படிக்கறது இல்லை தரஅிளவயசவ உடனடியாக எப்படி ஆரம்பிப்பது உடனடியாக எப்படி பலனை அனுபவிப்பது இணையத்துல பாக்கலாம் மூன்று நிமிடத்தில் இறைவன் அருள் பெற த்யானம் இரண்டே நிமிடத்தில் இறை அருள் உடனே வாருங்கள். நவீன கால குருமார்களின் நாயகன்கள் நன்றாக புரிந்து கொள்ளுங்கள் சரியை வேண்டாம் என்று ஒதுக்கி ஏதோ ஒரு யோக நுட்பத்தாலோ தியான நுட்பத்தாலேயே மனிதன் முழுமை அடைந்து விட முடியும் ஜீவன் சிவத்தன்மை அடைந்து விட முடியும் என்று யாராவது முட்டாள்கள் உங்களுக்கு சொல்லிகொண்டிருந்தால் அல்லது புத்திசாலிகள் என்று சொல்லிகொள்பவர்கள் உங்களுக்கு சொல்லிகொண்டிருந்தால், ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் அவர்கள் ஆதி சிவனுக்கு எதிராய் பேசும் விரோதிகள் மட்டுமல்ல சில நேரத்தில் சிவனையே முன்னிறுத்தி சிவத்திற்கு எதிராய் செயல்படும் துரோகிகள். பெருமான் மிக தௌிவாக ஆகமத்தில் விளக்குகிறார்..., அவரே அருள் பொழிய ஆகமங்கள் அவர் கொடுத்த ஆகமங்கள் அதை உபயோகிப்பவர்கள் மட்டும் தயவு செய்து அவர் பெயரை உபயோகியுங்கள். இதுநான் எல்லாருக்கும் சொல்ற வேண்டுகோள். சில பேர் சொல்றதுண்டு இல்ல இல்ல இந்த ஆகமமெல்லாம் அவரேதான் சொன்னார்னு எப்படி தெரியும்? ஆழ்ந்து கேளுங்கள் இந்த அளவுக்கு ஆழமான சாத்தியங்களை வாழ்க்கையை பற்றிய நுட்பமான விவரங்களை சில நேரத்தில் இந்த ஆகமங்களை படித்து விட்டு யாரோ அறைந்ததுபோல அலண்டுபோய் அமர்ந்து இருக்கிறேன். ஏன்னா அந்த அளவுக்கு நுட்பத்தோடு பெருமான் ஒவ்வொன்றையும் தௌிவாக விளக்குகிறார். இந்த அளவுக்கு நுட்பத்தோடு யாரவது ஒருத்தர் சத்தியங்களை வாழ்க்கை முறையை உலகத்துக்கு விளக்கினாங்கன்னா அவரு சத்தியமா சிவன்தான் இல்ல சிவத்துவத்தை அடைந்த ஒரு நபராக இருக்கலாம். அதனால அது சிவனுடைய வாக்கியங்கள் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை. சிவ விரோதிகளைகூட அப்புறம் பாத்துக்களாம், முதல்ல சிவத்துரோகிகளுக்கு பதில் சொல்லாம். சிவன் உண்டு, சிவனுடைய முகத்தையும் படத்தையும் வணங்குவோம். ஆனா ஆகமத்தை மட்டும் வாழமாட்டும் என்கிற அவங்களுக்கு மட்டும் சில கேள்விகள்.. இவங்களுடைய முக்கியமான கேள்வி என்னன்னா இந்த ஆகமத்தை எல்லாம் சிவன்தான் சொன்னார்னு எப்படி தெரிஞ்சிக்கறது? அப்பா சிவனே ஒண்ணு சந்தேகப்பட்டா சிவன் ஒருத்தர் இருந்தாரான்னே சந்தேகப்படுங்க, ஓகே இரண்டையும் சந்தேகப்படுங்க அப்ப உங்களை அப்படியே பகுத்தறிவு கும்பலோட ஒதுக்கி வச்சுட்டு எங்க வேலையை கவனிக்கறோம். நீங்க விரோதிகள் அப்ப நேரடியா இருப்போம் சிவன் அப்படிங்கற அந்த பசயனெ யெசசயவைஎந டிசயனெ ஐ மட்டும் ரளந பண்ணுவோம் ஆனா அவர் வார்த்தைகளை கடைபிடிக்காம எங்கள் சொந்த வார்த்தைகளை எங்களுடைய சொந்த நோக்கங்களை சொந்த வார்த்தைகளை சுய லாபங்களை சுய நோக்கங்களை ிழிரடயச பண்றதுக்கு உபயோகம் பண்றதுக்கு சிவன் ஐ ஒரு டிசயனெ யஅடியளளயனழச ஆ யனஎநசவளைநஅநவெ யபநவெ ஆ மட்டும் உஸ் பண்ணிப்போம். இந்த உழஉழஉழடய பெப்சி ஏகப்பட்ட சாக்கடை எல்லாம் பாட்டில்ல ஊத்தி விக்கறாங்க இல்லையா அதுக்கெல்லாம் அந்தந்த ஊர்ல இருக்கிற பிரபலங்களை எல்லாம் பிடுச்சி விளம்பரதாரர் விளம்பரத்துக்காக உபயோகம் பண்ற மாதிரி இவங்களுக்கு உள்ள இருந்து வௌில வந்த சாக்கடை எல்லாம் பாட்டில்கள்ல ஊத்தி கருத்துகளாக சொல்லி அதுக்கு விளம்பரதாரா மட்டும் சிவனுடைய பெயரையும் வடிவத்தையும் உபயோகபடுதுகின்ற சிவத்ரோகிகளுக்கான சில கேள்விகள். இவங்க செய்ர மிகப்பெரிய பிரச்சினைங்கையா.. சரியை இல்லாமல் யோகத்தையும் தியானத்தையும் மட்டும் ளாழவஉரவ அப்படீங்கிற பெயரால உபயோகப்படுத்தறது மட்டுமில்லாம, சரியையும் கிரியையும் வாழ்பவர்களை மிகுந்த ஒரு தாழ்ந்த நிலையில் இருப்பவர்களைபோல ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி சரியை கிரியையின் முக்கியத்துவத்தை அழித்ததே இந்த நவீனகால சைவ துரோகிகள்தான். நவீன கால குருமார்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்ற மனித இனத்தை பிடித்த பீடைகள் அதனால்தான். மீண்டும் சொல்லுகின்றேன் சரியை கிரியை யோகம் ஞானம் எனும் நான்கும் நான்கு படிகள் அல்ல நான்கு பாகங்கள் பாகங்கள் எனும் வார்த்தைகூட குறைந்தது நான்கு அங்கங்கள் பாகங்கள் என்றால்கூட ஒரு பாகம் இல்லாமல் இன்னொரு பாகம் இருந்துவிட முடியும் அங்கம் என்ற வார்த்தையே சரி ஓர் அங்கம் இல்லாது மற்றோர் அங்கம் இயங்க இயலாத அங்கங்கள். வாநல யசந ழெவ ியசவள வாநல யசந ழசபயளெ பாகம் என்று சொன்னால் கூட நான்கில் ஒன்றோ இரண்டோ இல்லாமல் மற்ற மூன்றும் மற்ற இரண்டும் இருந்து விட வாய்ப்பு இருக்கிறது அங்கம் என்ற வார்த்தையே சரியானது ஏன் என்றால் ஓர் அங்கம் இல்லா விட்டாலும் மற்ற எந்த அங்கமும் இருக்ககூட இல்லாத அளவிற்கு மிகத்தௌிவாக ஒன்றோடு ஒன்று பின்னி பிணைக்கப்பட்ட அங்கங்கள் சரியையும் கிரியையையும் யோகமும் ஞானமும். ஒரு நவீன கால குரு ஓபன் ஆகவே குறுகுறுன்னு எழுதறாரு ’’கிரியை எல்லாம் செய்யற மக்கள் எல்லாம் வேற தொழில பாருங்க இதெல்லாம் பண்ண வேண்டாம்’’ சிவாச்சார்யார்களே சீறி எழுங்கள்! என்ன தைர்யம் இருக்கும் யோகத்தையும் ஞானத்தையும் சரியை கிரியை இடமிருந்து பிரித்து எடுப்பதற்கு இவர்களுக்கு அநுபுதி இலா குருடர்கள் மற்றவர்கள் வாழ்க்கையும் அழிக்கின்ற கலியின் கொடுமை கால காலனே கேட்க வேண்டும். ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள் சரியை கிரியை மாத்திரம் போதாது என்பது சத்தியம் சரியை கிரியை இல்லாமலும் போகாது என்பதே உத்தமம். சரியை கிரியை மாத்திரம் போதாது சத்தியம் சரியையும் கிரியையும் இருந்தால் மட்டுமே எல்லாம் சாத்தியம் வாழ்க்கை முறையை சரியையை அழித்தவர்களே சைவத்தை அழித்தவர்கள். இன்று உலகத்தில் இருக்கும் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் சரியை அழித்தவர்கள் கிரியை அழித்தவர்கள் சரியையும் கிரியையும் அழித்து விட்டால் யோகமும் ஞானமும் ஏதோ பாம்பு பிடிக்கும் குறுக்கு வழிபோல பகவானை பிடிப்பதற்கு உபயோகபடுத்தும் மூடர்கள். சிலபேர் எங்கிட்ட கேட்கரதுண்டு கண்ணப்பன் என்ன சரியை கிரியை தெரிஞ்சா சிவபதம் அடஞ்சான்? ஐயோ மூடர்களே.. கண்ணப்பன் உதாரணத்தை எடுக்காதீங்க அவன் என் சைடு உதாரணம், எந்த யோகம் ஞானம் தெரிந்து அவன் சிவபதம் அடைந்தான் அவர் செய்தது இரண்டுமே சரியை கிரியை- சிவலிங்க வழிபாடு, கண்மைப்பிடுங்கி வைத்த பக்தி அன்பு. கண்ணப்பன் என் சைடு விட்னஸ். மூடர்கள் எந்த யோகம் ஞானம் செஞ்சி.., கண்ணப்பன் எந்த சரியை கிரியை செஞ்சி சிவபதம் அடைஞ்சான். அட முட்டாள்களா அவன் செய்யாதது யோகமும் ஞானமும்தான். அவன் செய்தது சரியையும் கிரியையும். கண்ணப்பன் காலைல எழுந்திருச்சி மூக்க புடிச்சிருந்தாமாதிரி எதாவது புத்தகம் எழுதுதா? இல்ல சிவோகம்னு சொல்லி உக்காந்திருந்தார்னு புத்தகம் எழுதுதா? சிறுவயதில் எங்கோ வேட்டைக்குச் செல்லும்பொழுது ஒரு சிவலிங்கத்தை யாரோ ஒரு அந்தனர் நீரூற்றி வழிபடுவதைப் பார்த்திருக்கிறார். தானும் அதைச் செய்ய வேண்டும் என்ற சரியை அவனுக்குள் பொங்கியது. அனுவரிக்க வேண்டிய எண்ணம் பொங்கியது. தனக்கத் தெரிந்த விதத்திலே கிரியையாய் அதைச் செய்யத்துவங்கினான். ஆதனால் கொண்ட பேரன்பு பொங்கிய ஆனந்த பேரூற்றினாலே சரியை கிரியை இரண்டினுடைய ஆழுமான சுட்சுமமனா பக்தி என்ற உணர்வைப் பிடித்துவிட்டு அதுகாட்டிய வழிபடியே சரியையும் கிரியையும் செய்து சிவபதம் அடைந்தான் கண்ணப்பன். சில பீடைகள் சிவத்துரோகிகள் அவர்களுடைய மாய மூட வியாபார தந்திரக் கருத்துக்களை கண்ணப்பன் எனும் பாட்டில் உரையை உபயோகப்படுத்துகிறார்கள். கண்ணப்பன் என்ன யோகமும், ஞானமும், கண்ணப்பன் என்ன சரியையும் கிரியையும் இதெல்லாம் முறையாப் பண்ணியா ஞானமடைஞ்சாரு? அதுமட்டுமல்லாம் இந்த கண்ணப்பன் வழிபட்ட லிங்கத்தை தினந்தோறும் வழிபட்டுவந்த சிவாச்சாரியாரை வில்லனாகக் காட்ட முயற்சிக்கிறார்கள். கண்ணப்பனை நாயகனாக காட்டுவதற்காக அந்த லிங்கத்தை தினந்தோறும் ஆகமமுறைப்படி வழிபட்டு வந்த சிவாச்சாரியாரை பல கதைகளிலே வில்லனாகக் காட்டும் முயற்சியையும் செய்கிறார்கள். யோக ஞானம் தேவையில்லை என்று நான் சொல்லவில்லை. சரியை கிரியை தேவையில்லை என்று சொல்பவர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆழ்ந்து கண்ணப்பரின் வாழ்க்கையைப் பாருங்கள். சரியையும் கிரியையும் சிரத்தையோடு செய்யப்பட்டால், யோகத்தையும் ஞானத்தையும் தானாகவே அது ஒன்றுகூட்டி விடுவதை தானாகவே அது மலர்த்திவிடுவதை நேரடியாய் பார்க்கலாம். சரியை எனும் வாழ்க்கைமுறை தினந்தோறும் நாம் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கைமுறை. பெருமானே ஆகமத்தில் தௌிவாக சொல்லியிருக்கும் உணவு, உடை, உறையுள் வாழ்க்கைமுறை, ஜீவன்முக்த வாழ்கை முறை அங்கம் மாத்திரமல்ல, முக்கியமான அங்கம். அங்கம் மாத்திரமல்ல பங்கம் செய்யக்கூடாத தங்கமான முக்கிய அங்கம். இன்றைய ஆதிசை சத்சங்கத்தின் சாரம், சரியை சைவத்தின் வெறும் பாகம் மட்டும் அல்ல அங்கம். பங்கம் செய்யக்கூடாத அங்கம். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் சரியை சைவத்தின் தங்கமான அங்கம் என்பதை மாத்திரம் இன்றைய ஆதிசைவ சத்சங்கத்தின் சாரமாய் உங்களுக்குள் வாங்கிக்கொள்ளுங்கள். சரியைப் பற்றி மேலும் மேலும் ஆழ்ந்து விரிவாய், அதன் முக்கியத்துவம் செயல்முறை இயைபு-இயல்பு-இருப்பு இவைகளைத் தொடர்ந்து அடுத்தடுத்த சத்சங்கங்களில் காண்போம். இயைபு- என்றால் வாழும்பொழுதே எவ்வாறு அதை மேம்படுத்திக்கொள்வது. இயல்பு- என்றால் எப்படி அதை நம் வாழ்க்கையின் இயல்பாக மாற்றிக்கொள்வது. இருப்பு - என்றால் எப்படி அதை நாமாகவே மாற்றிக்கொள்வது இயைபு-இயல்பு-இருப்பு இருப்பு அப்படீன்னா -டிநபைெ நீங்களாகவே அதை மாற்றிக்கொள்வது. இயல்பு அப்படீன்னா ளநஉழனெ யெவரசந வாழ்வியல் இயல்பாக மாற்றிக்கொள்வது. இயைபு - அப்படீன்னா அதை வாழ்ந்துகொண்டே அதை ருினயவந பண்ணிக்கிற வைெநடடபைநெஉந அதை மேம்படுத்திக்கொள்கின்ற அறிவை உருவாக்கிக்கொள்வது. சரியையின் இயைபு-இயல்பு-இருப்பு மூன்றையும் தொடர்ந்துகாண்போம் அடுத்தடுத்த சத்சங்கங்களில். எல்லோரும் சரியை-கிரியை-யோக-ஞானத்தை வாழ்ந்து நித்யானந்தத்தில் நித்யானந்தத்தில் கரைந்து நித்யானந்தமாகி ஆசீர்வதித்து முடிக்கின்றோம். ஆனந்தமாக இருங்கள்.

Photos From The Day:



His Holiness at Vaidya Sarovar for Krama Brahmacharya initiation Kailaaya vadyam (musical instruments for divine) played by Nithyananda Gurukul sanths http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_6885_bnglr-adheenam-skandha-shasti-sannyas-initiation-initiates.JPG After a dip in the sacred waters of Vaidya Sarovar, each Being receives initiation directly from His Holiness Devotees around the world watch via video conferencing. http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7050_bnglr-adheenam-skandha-shasti-sannyas-initiation-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7068_bnglr-adheenam-skandha-shasti-sannyas-initiation-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7079_bnglr-adheenam-skandha-shasti-sannyas-initiation-swamiji.JPG All present chant Svasti mantra after the initiation http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7106_bnglr-adheenam-skandha-shasti-sannyas-initiation-ashramites.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7109_bnglr-adheenam-skandha-shasti-sannyas-initiation-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7114_bnglr-adheenam-skandha-shasti-sannyas-initiation-ashramites-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7391_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-temple-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7397_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-temple-swamiji.JPG Nithyanandeshwara and Nithyanandeshwari http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7312_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-temple-nithyanandeshwara.JPG Dakshinamurthy showing His glory in golden kavacham, which is hand made at Nithyananda Sacred Arts Muneshwara Shrine http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7398_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-temple-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7435_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-temple-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7436_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-temple-swamiji.JPG Lord Murugan http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7445_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-temple-murugan.JPG Nithyanandeshwara Brahmotsavam - Skandha Shasti Procession http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7462_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-procession-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7469_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-procession-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7472_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-procession-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7473_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-procession-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7475_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-procession-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7485_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-procession-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7487_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-procession-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7488_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-procession-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7492_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-procession-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7497_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-procession-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7505_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-procession-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7509_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-procession-swamiji.JPG Sura Samhara events Sura Samhara marks the defeat of the Demon Surapadman http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7545_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-event.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7546_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-event-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7560_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-event-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7572_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-event-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7579_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-event.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7590_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-event.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7593_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-event.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7594_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-event-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7602_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-event.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7616_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-event.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-17th-nithyananda-diary_IMG_7653_bnglr-adheenam-skandha-shasti-sura-samharam-event.JPG